மோடி ஆட்சியில் முதல் ஏமாற்றம் ……

நரேந்திர மோடி ஆட்சியில் மகிழ்ச்சிகரமான செய்தி எதாவது
வருமென்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்போது,
ஏமாற்றமும், கோபமும் தரும் செய்தி முதலாவதாக வருகிறது ….

—————————————————————————————–

இன்றைய மாலை -தினமணி செய்தி –

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே
By Web Dinamani, கொழும்பு
First Published : 21 May 2014 07:43 PM IST

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர்
ராஐபக்சே பங்கேற்பார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

mahinda-rajapaksa

வரும் 26 ஆம் தேதி புது தில்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள
திறந்தவெளி மைதாளத்தில் மோடி பிரதமராக பதவியேற்கிறார்.
இதனையடுத்து இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட பல்வேறு
நாட்டு தலைவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

———————————————————————-

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இந்த கொலைகாரன் வர வேண்டுமா …?
இதென்ன கேவலம் ……
இவனுக்கு ஏன் அழைப்பு…?
தமிழக பாஜக தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்….?
யாரும் எடுத்துச் சொல்லவில்லையா ….?

 

 

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

51 Responses to மோடி ஆட்சியில் முதல் ஏமாற்றம் ……

 1. கொம்பன் சொல்கிறார்:

  டெல்லி சென்று மோடியை சந்தித்து வந்த வைகோ மற்றும் விஜயகாந்து அங்கு என்ன ராஜபக்சே பற்றியா பேசி இருப்பார்கள் தங்களுக்கு வர வேண்டிய ராஜ்ய சபா சீட்டு பற்றி தான் பேசி இருப்பார்

  • ரிஷி சொல்கிறார்:

   வைகோ மற்றும் விஜயகாந்த் சொல்லித்தான் மோடிக்கு ராஜபக்சே பற்றித் தெரிய வேண்டுமா என்ன? நாளை பிரதமராகப் போகிறவருக்கு கடந்த சில பத்தாண்டுகளின் வரலாறு தெரியாதா என்ன? அப்படித் தெரிந்திருந்தும் இந்திய அரசியல்வாதிகள் இவ்வாறுதான் செய்வார்கள் எனில் என்ன அர்த்தம்?

 2. ரிஷி சொல்கிறார்:

  ஐயா, சர்வதே அளவில் ராஜபக்சேக்கு பெரிய நெருக்கடி ஒன்றும் இல்லை. ஆகவே இந்தியா இலங்கையுடன் நட்புறவு பாராட்டவே எண்ணும். இதில் ஏமாற்றமடைய ஒன்றுமில்லை. இது தெரிந்ததுதான்!

  “இந்த உலகம் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையென்றால்.. நான் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால்.. ஆச்சரியம் மட்டுமல்ல.. வருத்தமும் அடைவேன்!” – நன்றி : ஜோதிஜி வலைதளம்.

 3. காசிம் சொல்கிறார்:

  எனக்கு என்னமோ இதில் கோபப்படுவதற்கோ, வருத்தப்படுவதற்கோ எதுவும் இல்லை என்றே படுகிறது. பக்கத்து வீட்டுகாரர்களை, நம் வீட்டு விசேஷத்திற்கு அழைக்கும் போது அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் நியாயமாக் நடந்து கொள்பவரா? மாமியார் / மருமகளை கொடுமைப் படுத்துபவரா, கணவர் / மனைவி, மகன், மகள் இவர்களுடன் சுபமாக வாழ்பவரா என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை. அது போல் தான் இதுவும்.

  • Elangovan சொல்கிறார்:

   பக்கத்து வீட்டில் ஒரு விலைமகள் இருந்தால், உங்கள் வீட்டுக்கு
   விசெஷத்திற்கு அவளை அழைப்பீர்களா காசிம் ?

   • ரிஷி சொல்கிறார்:

    பட்டவர்த்தனமாகத் தெரிவதால் விலைமகளை ஏசுகிறீர்கள். அதே விலைமகளிடம் சென்ற வந்த எத்தனையோ ஆண்கள் நம் குடும்பங்களில் இருக்கவே செய்வர். நமக்குத் தெரியாது என்பதால் மட்டுமே அந்த ஆண்கள் உத்தமர்களும் அல்ல; தெரிந்துவிட்டபடியால் மட்டுமே அந்த so called விலைமகளும் மோசமானவள் அல்ல!

    (பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். ‘விலைமகளை’ ஏளனம் செய்ததால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை)

   • காசிம் சொல்கிறார்:

    நிச்சயமாக அழைப்பேன். அவர் கேரக்டரை முடிவு செய்யும் இடமல்ல என் வீட்டு கிரகப்பிரவேசம். மற்ற அண்டை வீட்டாரைப் போலவே அவரும் ஒருவர் அவ்வளவே. இதில் கலந்து கொள்வதால் அவர் விலைமகளா இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை என்றே கருதுகிறேன்

  • M.Panneerselvam சொல்கிறார்:

   ஏன் – நவாப் ஜெரீபையும் அழைத்திருக்கிறார்களே
   அதனால் வக்காலத்து வாங்குகிறீரோ மிஸ்டர் காசிம் ?

   • காசிம் சொல்கிறார்:

    அதுமட்டுமல்ல, வங்கதேச பிரதமர் ஷேக்ஹஷீனாவையும் அழைத்திருக்கிறார்கள். அதனால் தான் வக்காலத்து :))

  • BC சொல்கிறார்:

   அன்பின் காசிம், இங்கு பலர் புலிகளின் பரப்புரைகளினால் உருவாக்கபட்ட கனவு உலகில் வாழ்கிறார்கள். உலகம் தங்களுக்காகவே செயல்படுவதாக நம்புகிறார்கள்.

   • காசிம் சொல்கிறார்:

    அதுவும் ஒரு காரணம் என்றாலும் ராஜபக்‌ஷே ஒன்றும் யோக்கியன் இல்லையே

  • todayandme சொல்கிறார்:

   மகளைக் கற்பழித்துக் கொடூரமாகக் கொலையும் செய்தவன் பக்கத்துவீட்டில் குடியிருக்கும் ஒரு பொறுக்கி என்று வைத்துக்கொண்டால், வேறொருநாள் அவன் தன் இருப்பிடத்தையே அபகரிப்பான் என்ற பயத்தினால் பக்கத்துவீட்டுக்காரனைக் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று அவனையும் அழைத்து பாயசம் போடுவார் போல காசிம்.

   //இதில் கோபப்படுவதற்கோ, வருத்தப்படுவதற்கோ எதுவும் இல்லை//
   கோபம் இல்லாவிட்டால்கூட பரவாயில்லை, ஏனென்றால் சாமானிய மக்கள் தங்கள் கோபத்தை, மக்கள் பிரதிநிதிகளிடம் காட்ட வழியில்லை, தேர்தலைத் தவிர. அதுவும் இப்போது முடிந்துவிட்டது.

   வருத்தமும் இல்லை என்றால் …………தானா என்ற சந்தேகம் வருகிறது.

   • காசிம் சொல்கிறார்:

    மிகவும் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை

    • todayandme சொல்கிறார்:

     உணர்ச்சி இருப்பதால்தான் உயிரோடு இருக்கிறேன்.
     உயிரோடு இருக்கும்போதே சவமாய்க் கிடக்க சம்மதமில்லை.

 4. Srini சொல்கிறார்:

  Dear KM sir

  I feel there is nothing wrong in inviting all SAARC leaders. he has invited every one and not only rajapakshe or sharif… let us give some time for modi.. he is yet to officlly even be the PM.

  regards
  Srini

 5. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  தயவுசெய்து கொஞ்சம் பொருங்கள்.
  காங்கிரஸ் இலங்கை உடன் நட்புறவு கொண்டதற்கும்,பிஜெிபிக்கு உள்ள நட்புறவுக்கு ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.
  சிலரது பகையை உறவாடித்தான் கணக்கு தீர்க்கவேண்டும்.
  இந்தியாவைச் சுற்றியுள்ள சார்க் நாடுகளைிடம் நான் நட்புறவாகவே இருக்க விரும்புகிறேன் இந்தியாவைப் பாதிக்கும் எந்த விசயத்தையும் நீங்கள் எடுக்காதவரை என்பதாகவும் இருக்கலாம்.
  மோடி பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பாகவே இலங்கை ”எங்களது மீன் வளத்தை இந்தியா பறிக்குமானால் சர்வதேச நாடுகளிடம் முறையிடுவோம்” என கதறியதே அதை முதலில் தக்கவைத்துகொள்வோம்.
  முதலில் நமது நாட்டின் விலைவாசி,பொருளாதார சீர்குலைவு,மின்சாரத்தேவை இதையும் கவனிக்க வேண்டுமே.

 6. siva சொல்கிறார்:

  Ohh what a pathetic ammaaa??? she passed a resolution that MR should be declared as a war criminal and tried before the ICJ what is she going to do??? Will amma request the same demand to Modi????It look like Modi is another Manmohansingh?????

 7. khalilirrahman சொல்கிறார்:

  கொலைகாரன் பதவி ஏற்புக்கு கொலைகாரன் வருவது பொருத்தம் தானே. இதில் என்ன பிழை இருக்கிறது .

 8. bala சொல்கிறார்:

  pagaimai unarvudan nadanthukondal melum pagaithan valarum. pakisthanai azhaikkumpodhu ilangaiyaiyum azhaiththiruppadhuthan muraiyana seyalagum

 9. ரிஷி சொல்கிறார்:

  எல்லாக் கோட்டையும் அழிங்க… மறுபடியும் மொதல்லேருந்து போடுங்க.. 🙂

 10. reader சொல்கிறார்:

  இலங்கை விவகாரத்தில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடு இருக்கப் போவதில்லை என்றே எண்ணுகிறேன். பிடிக்குதோ இல்லையோ, இந்த விவகாரத்தில் வைகோவின் குரலைவிட, சு.சாமியின் குரலுக்கே செல்வாக்கு அதிகம். ஏனென்றால் அது அரசுவர்க்க, பார்ப்பணீய எண்ணப் போக்குடன் ஒத்து இருக்கிறது.

  எதிர்காலத்தில் சீனா இலங்கையை தன் இரும்புப் பிடிக்குள் கொண்டு வருவதை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஆளும் அரசு வர்க்கத்துக்கு சுத்தமாக ஒரு நீண்டகாலத் திட்டமோ, ஐடியாவோ எதுவம் இல்லை. அதைத் தடுக்க ராஜபக்சே பூச்சாண்டி காட்டுவதை (தமிழர்கள் இந்தியாவிலிருந்து பிரிவார்கள் என்ற பயம், நான் சீனாவிடம் போகிறேன், அவர்கள் தளம் அமைக்க உதவுவேன்) நம்பி அவர் கேட்பவற்றுக்கெல்லாம் ஆமாம் போடுவதையே பொழைப்பாக வைத்திருக்கிறார்கள். இந்த குறுகிய சிந்தனையைத் தாண்டி big pictureஐ பார்க்கும் சிந்தனை பாஜகவிலோ, அதனைச் சார்ந்த சிந்தனையாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை. சு.சாமியை வைத்திருப்பதே பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பதைப் போல.

  சரி, நாளை அமெரிக்காவோ, ரஷ்யாவோ தமிழகத்தில் பிரிவினையைத் தூண்டினால், ஈழத்தை ஆதரித்தால் என்ன செய்வார்கள்?

 11. D. Chandramouli சொல்கிறார்:

  It is just a protocol to invite neighboring countries’ leaders for the inauguration of new Indian PM. There is no need to mix politics in this. At times, it would be better to engage with adversaries rather than escalating a war on words. Modi should first post a highly competent ambassador who can handle the relations with tact and diplomacy so that Indian interests in the region, protection of livelihood for Indian fishermen and equal rights for SL Tamils could be obtained over a time. We have to be patient but consistently firm.

  • Tbr Joseph சொல்கிறார்:

   Well said. India can achieve a lot for the srilankan tamil by engaging Rajapakse. Nothing can be achieved by treating him as an enemy.

  • reader சொல்கிறார்:

   //It is just a protocol to invite neighboring countries’ leaders for the inauguration of new Indian PM.//

   There is no protocol like that Sirji.
   It is just a sweet (or wicked) gesture by Modiji.

 12. ரிஷி சொல்கிறார்:

  பதவியேற்பு விழாவில் மோடி பேசும்போது அண்டை நாடுகளுடன் தான் கொள்ளப்போகும் உறவு பற்றிப் பேசும்போது, இலங்கைத் தமிழர் நலன் குறித்தான தனது விருப்பங்களைப் பதிவு செய்யலாம். அதை ராஜ்பக்சேக்கு வேண்டுகோளாகவும் வைக்கலாம். இதைத்தாண்டிய வேறு நடவடிக்கைகள் சரியாக வராது.

  • k.gopaalan சொல்கிறார்:

   நண்பரே,
   தமிழர்களுக்கு வெளியுலகச் சிந்தனை குறைவு. உங்கள் பேச்சு இங்கே எடுபடாது.
   கோபாலன்

  • reader சொல்கிறார்:

   //அதை ராஜ்பக்சேக்கு வேண்டுகோளாகவும் வைக்கலாம். இதைத்தாண்டிய வேறு நடவடிக்கைகள் சரியாக வராது.//

   ராஜபக்சே சகோதரர்கள் ‘போடா வெண்ணை’ன்னு போய்ட்டே இருப்பாங்க. புலிகளைத் தோற்கடித்தபின் சிங்கள மனநிலையில் உண்டான பெருமித மாற்றம் பற்றி தமிழகத் தமிழர்களுக்கு ஒன்றும் தெரியாது.

   • ரிஷி சொல்கிறார்:

    அது புரிகிறது ரீடர். சிங்களவர்களின் கொண்டாட்ட மனநிலை இங்கு யாருக்கும் புரியாமல் இல்லை. பிரச்சினை என்னவெனில் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் இனம் எதுவும் செய்துவிட முடியாது. இந்தியா என்றைக்கும் இலங்கையும் நட்புறவு பேணவே எண்ணும். ராஜபக்சேவை தூக்கிலிட அதனால் முடியாது. தமிழர்களின் நலன் காக்க எவ்வகை பங்களிப்பையும் நிகழ்த்திவிட முடியாது. தமிழக மீனவர்கள் குண்டடி படும்போதெல்லாம் தமிழக மீனவர்கள் என்றுதானே சொல்கிறோம். யாராவது ‘இந்திய மீனவர்கள்’ என்று சொல்கிறோமா, பத்திரிகைகள் தான் அவ்வாறு சொல்கின்றனவா.. இல்லையே!!

    இந்திய வல்லாதிக்கத்திற்கு தமிழக மக்களின் வலிமையைக் காட்ட வேண்டுமென்றால் எம்பி தேர்தலில் ஒருவர் கூட வோட்டு போட்டிருக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை காங், பிஜெபி ரெண்டும் ஒன்றுதான். ஆனால் மக்களுக்குப் புரிந்தாலும் புரட்சிகர எண்ணங்கள் தலைதூக்கி அது செயலுக்கு வர ஐம்பது நூறு வருஷங்கள் பிடிக்கும். அவ்வளவே!!

 13. kvln சொல்கிறார்:

  Running a government is not writing a blog sir… don’t be too emotional….

 14. Ganpat சொல்கிறார்:

  பொறுமை பொறுமை கா.மை.ஜி.

 15. Gopalasamy சொல்கிறார்:

  What Modi did, is a correct thing. We can not wipe out Sri lanka. Rajapakshe is srilanka’s elected leader. Thousands of srilankan tamils were killed. Nobody could refute it. But so many indians were killed by pakistan’s cross border terrorism. We lost 3000 soldiers in Kargil war. Still infiltrators are intruding from Bangladesh.More than 3000 indian soldiers were killed in srilanka?
  Is it OK for you?
  Dear sri KM, if Nawaz sherif is ok for you, Rajapakshe is ok for me.
  Even if we want to talk something, we have to talk to Rajapakshe and Nawaz sherif only.
  Or we want to talk to them thro’ third country?
  We have to maintain relationship with our neighboring countries.
  We have to talk to china also..
  PM is having a very big responsibility to shape our foreign policy in proper direction.
  I am having high regard for you, That is why i want to contradict.

  • Tbr Joseph சொல்கிறார்:

   Even though Pakistan can never be compared with Srilanka there is nothing wrong in inviting them to India. A lot can be achieved by maintaining a friendly relationship with out neighbours.

  • reader சொல்கிறார்:

   //Is it OK for you?
   Dear sri KM, if Nawaz sherif is ok for you, Rajapakshe is ok for me.//

   At least Nawaz is controlled by Army/ISI and they can veto his travel.
   It is catch-22 moment for Nawaz if attend or decline the invite.

   In case of pakse brothers, they are the emperors in Srilanka. They have no shame on their crime and has all backing from delhi bureaucracy. And happy to join the inauguration party. They have friends cutting across party lines; Sonia & Co in congress, Swamy, Sushma in BJP, Lanka-Ratna N.Ram for CPM.

   They already decimated partner in crime, army commander Sarath Fonseka. They always use China bogey to make India kneel to them. This is not understood by Indian public. They are all carried over by *perceived* “big-brother” attitude, In today’s South asia, except for Bhutan, no other neighbour care or bother about India.

   Wake up guys.

   • reader சொல்கிறார்:

    Let us hope Pak army won’t play mischief bombing along the border when Nawaz is in the capital.
    I won’t be surprised if that happens,

 16. Gopalasamy சொல்கிறார்:

  I endorse what Sr. Chandramouli says.

 17. todayandme சொல்கிறார்:

  சார்க் நாடுகளின் தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்தே ஆகவேண்டும் என்ற protocol இருக்கிறதா என்ன? அப்படியென்றால் கடந்த 60வருட சுதந்திர இந்தியாவின் பல்வேறு பிரதமர்பதவிப்பிரமாணங்களின்போது இந்த ப்ரோட்டோகால் மீறப்பட்டதா?

  போரின்போது இராணுவத்தில் உயிரிழந்த வீரர்களைக் குறித்தான வடமாநில விசயமானாலும் சரி, முறையில்லாத அந்நியக் குடியேற்றத்தின் மூலம் பாதிக்கப்படும் வடமேற்கு மாநிலங்கள் விசயமானாலும் சரி, மீனவர்பிரச்சினை நீர்எல்லை மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை இவற்றால் பாதிக்கப்படும் தென் தமிழக மாநில விசயமானாலும் சரி, நக்ஸல் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்கள் விசயமானாலும் சரி — முதலில் தனது நாட்டுமக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும் மோடி. தன் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தலைவனை மக்கள் ஏற்பார்களா என்பது கவலைக்குரிய விசயமே. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க. சிறுபான்மையின மக்களுக்கு பாரபட்சமான ஆட்சியை நடத்தக்கூடும் என்ற எண்ணம் போய், அண்டைநாடுகள் விவகாரத்தில் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதேமேல், அப்படி விழுந்தாவது 5வருட ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு பாஜக வந்திருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

  அடுத்த சட்டசபைத் தேர்தலின்போது பாஜக தமிழகத்தில் ஏதோ கொஞ்சம் சீட்டுக்களைப் பெற்றுவிடுமோ என எண்ணியது இனி நடக்காது.
  இவர்களுடன் கூட்டணி அமைத்து இந்தப் பாராளுமன்ற தேர்தலில் மதிமுக ஜெயிக்காதது நல்லதாகப் போயிற்று. அதனால்தான் எதிர்ப்பை எதிர்ப்பாக இல்லாமல் கெஞ்சியாவது சொல்லியாயிற்று. ஒருவேளை ஜெயித்திருந்தால் எதிர்ப்பை என்னசொல்லிக் காட்டமுடியும், ஒரு அமைச்சர் பதவிகொடுத்துவிட்டால்.

  தே.மு.தி.க.விற்கு தமிழகத்தைக் குறித்தோ இலங்கையைக் குறித்தோ எந்தவித கொள்கையோ புண்ணாக்கோ கிடையாது. சின்ன ஐயா கட்சியும் தேமுதிகவிற்கு இணையே. இவர்கள் இருவருமே தன்குடும்பம், தன்ஜாதி மட்டுமே பிரதானம். திமுக மற்றும் திக இந்த சீன்லயே கிடையாது.

  பாஜக மற்றும் மோடியைப் பொறுத்தவரை ஸ்டண்ட்மாஸ்டர்போல நீங்க மட்டும் பி.எம். இல்ல, நானும் பி.எம்.தான் என்று அண்டைநாடுகளிடம் மற்றும் காங்கிரஸிடம் சீன்போடுவதாகத் தெரிகிறது.

  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். நாம் அழைத்தால் அவர் அழைப்பை ஏற்று வரத்தானே செய்வார். அழைப்பை எதிர்பார்த்தே இருந்ததைப் போல உடனே இலங்கை அதிபர் வருகையை ஒப்புக்கொண்டுள்ளதைப் பார்த்தால் பாஜகவுக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள உறவு காங்கிரசை விடக் குறைந்ததல்ல என்ற கருதத்தோன்றுகிறது.

  37 எம்பிக்களை வைத்திருக்கும் அதிமுக-வாவது தமிழக மக்களுக்கு நன்மையை மத்தியிலிருந்து கொண்டுவர முயற்சிக்கவேண்டும். தற்போதுள்ள சூழலில் அது முடியுமா எனவும் கேள்விக்குறியே. ஆனால் தமிழ்மக்களின் எண்ணத்தை-உணர்வுகளை பாராளுமன்றத்தில் குறிப்பாக கோடாகோடி (வட) இந்தியமக்களின் பிரதிநிதிகளுக்காவது புரியவைக்க முயலவேண்டும். அதற்கு அட்லீஸ்ட் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வரக்கூடிய முயற்சிகளை அதிமுக ஆரம்பிக்கவேண்டும்.

  தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து வாழடா என்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைமாறி, தலைநிமிர்ந்து வாழும் நிலை முதலில் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு வரவேண்டும். பிறகுதானே உலகஅரங்கில்…

  இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

  • kuttipisasu சொல்கிறார்:

   சரியாக சொன்னீர்கள். என் கருத்தும் இதுவே. பாஜக எல்லோரையும் அழைத்து ஓவராத்தான் சீன் போடுகிறது. பதவியேற்பு தானே என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன் பிரதமராக பதவியேற்புகள் இப்படியா நடைபெற்றன.

   முதலில் அதிமுக மற்றகட்சிகளுடன் இணைந்து பாஜகவிற்கு எதிர்கட்சியாக முயற்சிக்காது என்று நினைத்தேன். ஆனால் தற்போது, அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக தென்படுகின்றன. ராஜ்யசபாவில் ஏற்கனவே பலகீனமாக இருக்கும் பாஜக அரசு, ஒவ்வொரு நட்பு சக்திகளையும் இழந்து வருகிறது.

 18. புது வசந்தம் சொல்கிறார்:

  “ஆட்சி மாறினாலும் இங்கு காட்சிகள் மாறப்போவதில்லையோ” எனத் தோன்றுகிறது.பார்க்கலாம் 5 வருடம் என்ன நடக்கிறது என ?.

 19. Sanmath சொல்கிறார்:

  Dear KM,

  Nothing is going to change in India’s view towards Sri Lanka. North India sees Sri Lankan Tamil issue as Sri Lanka’s internal issue. Also Indian business community sees Sri Lanka as a potential market for them.

  As far as China is concerned, they see Sri Lanka as a strategic partner rather than a trade partner. To exercise its control all over Asia and also to threaten India, presence in Sri Lanka is very important for China. In this scenario India will NEVER handle Sri Lanka as an enemy basis Sri Lankan Tamil issue.

  Handling Sri Lanka is also a big challenge to Modi’s external affairs administration.

  We should note onething here – Presently, India’s external affairs is very much controlled by the bureaucrats rather than leaders. A Mallu group of bureaucrats played a major role for India’s straining relationship with Sri Lanka and also especially in handling Sri Lankan Tamils issue. Nirupama, ShivShankar Menon, Rangarajan etc. Modi’s present right hand IAS officer is also a mallu. I dont think we cud expect anything big for our brothers and sisters in Sri Lanka. Only god should help them.

 20. todayandme சொல்கிறார்:

  இந்தியாவில் தனிமனித கருத்துசுதந்திரம் வாழ்க.

  ட்வீட்டியிருக்கிறார் கருத்து கந்தசாமி.

  I am in favour of President’s Rule for four months followed by elections to Assembly if JJ govt doesn’t accept Namo swearing-in invitation-Subramanian Swamy @Swamy39-twitter.com

 21. kinarruthavalai சொல்கிறார்:

  I Agree with Mr Sampath. On the first hand, we need a strong and effective Ambassodar for Srilanka who can do things with good intentions. A few years ago the Indian ambassadors to most of the countries were so effective and were well aligned with the foreign policies of the Indian Government. Even during Nehru’s period, a playboy V.M Krishna Menon was sincere when in duty. After that, all the ambassadors worked for Congress Prime Ministers. They only helped in transaction of their huge black money to other country’s bank. Examples are Mani Sankar Ayer, Dhevayaani, etc. etc. Though they were not ambassadors, they worked under the so called bureaucrats.

  • reader சொல்கிறார்:

   //A few years ago the Indian ambassadors to most of the countries were so effective and were well aligned with the foreign policies of the Indian Government. Even during Nehru’s period, a playboy V.M Krishna Menon was sincere when in duty. //

   I hope you wrote a satirical piece Mr. Kinatru thavalai,
   Please read Kushwant Singh’s memoir for the deeds of VK Menon.

   The types of Romesh Bhandari, JN Dixit, and whole gang of Mallu IFS officers served best for the nation!

   Please read the following article.

   http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm

   Shoot Prabhakaran… shoor Mathaiah…!
   Who said this? JN Dixit, ambassador to Sri Lanka when IPKF was there.

 22. சாமானியன் சொல்கிறார்:

  இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இலங்கை கண்ணீர் தேர்தல் வேட்டைக்கான இரை என்பது மட்டுமே என்பதை நிங்களும் புரிந்துகொள்ளவில்லையா அய்யா ?!!!

  ” பட்டவர்த்தனமாகத் தெரிவதால் விலைமகளை ஏசுகிறீர்கள். அதே விலைமகளிடம் சென்ற வந்த எத்தனையோ ஆண்கள் நம் குடும்பங்களில் இருக்கவே செய்வர். நமக்குத் தெரியாது என்பதால் மட்டுமே அந்த ஆண்கள் உத்தமர்களும் அல்ல; தெரிந்துவிட்டபடியால் மட்டுமே அந்த so called விலைமகளும் மோசமானவள் அல்ல! ”

  (பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். ‘விலைமகளை’ ஏளனம் செய்ததால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை)

  நேர்மையான, துணிச்சலான வார்த்தைகள் ரிஷி !

  நன்றி
  சாமானியன்

 23. Varadhan சொல்கிறார்:

  kasim, would you say the same if congress has invited Rajapakesha?

  • காசிம் சொல்கிறார்:

   நிச்சயமாக இல்லை !
   காரணம் இலங்கையில் தமிழர் இன ஒழிப்பிற்கு கூட்டுக் களவாணியாக இந்தியாவை ஆக்கியது சோனியா தலைமையிலான காங்கிரஸே. அதனால் ராஜபக்‌ஷேவை காங்கிரஸ் அழைத்திருந்தால்னைவருக்கும் தவறாகவே பட்டிருக்கும். தவிர போன முறை பதவி ஏற்பு விழாவிற்கு யாரையும் அழைக்காமல் இந்த முறை மற்ற அண்டை நாட்டின் அதிபர்களோடு ராஜபக்‌ஷேயையும் அழைத்திருந்தால் நானும் தவறு என்றே சொல்லியிருப்பேன். மோடி இப்பொழுது தான் முதல் முறை பதவி ஏற்பதால், இந்த அண்டை நாட்டினரோடு ராஜபக்‌ஷேவையும் அழைப்பது ஒரு சாதாரண சடங்காகத் தான் எனக்கு தெரிகிறது. மற்றபடி தமிழர் பிரச்சினையில் இந்தியா இனி எப்படி நடந்து கொள்ள போகிறது என்று பார்ப்பதற்கு அனைவரையும் போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்

 24. Sabareesan சொல்கிறார்:

  It is easy to show anger in blogs. That is the reason for these irresponsible blog posts.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr. Sabareesan,

   Blogs are meant for free and fearless expression of thoughts.
   This is the basic and fundamental requirement for a healthy democracy.
   Probably you are upset because I write criticising a step taken
   by your favourite person/party.

   You are free to express your point of views also in the ‘pinnoottam’
   instead of just condemning the article/blog.
   You are welcome to point out on what grounds you disagree with
   my article.

   with best wishes,
   Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.