தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம்…..
தமிழ்நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் …
ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று –
சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன் ….!!!
சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும்,
இந்த ரீ யூனியன் என்கிற தீவு,
ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே –
இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள,
உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு.
(வரைபடம் கீழே தந்திருக்கிறேன் )
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட
இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப் பகுதி.
உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில்ஒன்று – இந்த ரீயூனியன் தீவு…!!!
சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45 கிலோமீட்டர் அகலமும் உள்ள –
மொத்தமாக 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவே உள்ள –
இந்த தீவின் மொத்த மக்கள் தொகை – சுமார் எட்டரை லட்சம்.
அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே –
ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு – சுமார் ஒன்றரை லட்சம்….!!!
இன்றைக்கு 170-180 ஆண்டுகளுக்கு முன்னால் –
பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற
தமிழர்களின் சந்ததியினர் இவர்கள்.
உலகில் – தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும்
மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்றும்
வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!!
பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது –
1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25 வருடங்கள் தொடர்ச்சியாக,
பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் –
அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த
ரீ யூனியன் தீவில் – கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக
ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள்.
இரண்டும் பிரெஞ்சுப்பிரதேசங்களாக இருந்ததால் –
விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!!
சிலர் இலங்கையில் (ஜாப்னா) இருந்தும் குடியேறினார்கள்.
இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர்.
ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும்,
பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும்
பிரெஞ்சு குடியுரிமை அளித்து
கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது.
இவர்கள் அனைவரும் இன்று சம உரிமை பெற்று மகிழ்ச்சியான
பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள்.
பிரெஞ்சுத் தமிழர்கள் என்று பெருமையுடன்
கூறிக்கொள்கிறார்கள்….!
ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும்,
இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில்,
தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்.
தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம்,
காளியம்மன், முருகன், சிவன் எல்லாம் இவர்களை இன்னமும்
தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றன (ர்)…! அத்தனையையும்
இப்போதும் விடாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும்,
வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது.
தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள்
எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள
ஒரே வேண்டுகோள் –
அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும்
கற்றுத்தர தாய்த்தமிழகம் உதவ வேண்டும் என்பது தான் !!
————————————————————————–
(கடல்களை கடந்து பழைய தொடர்புகள் –
பகுதி 1 மற்றும் 2 – காம்போஜம்,
பகுதி -3 தென்னாப்பிரிக்கா,
பகுதி -4 சாவகம் (இந்தோனேஷியா – 3 பகுதிகளில்)
பகுதி -5 ரீ யூனியன் )
————————————————————————-
அற்புதமான இயற்கை வளம் நிரம்பிய ரீ யூனியனின்
அழகான காட்சிகள் பலவற்றை கீழே புகைப்படங்களாக தொகுத்து
கொடுத்திருக்கிறேன்.
இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள
இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம்-
ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது
மற்றொன்று 3200 மீட்டர் உயரமுள்ளது.
இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன.
ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் –
அதன் மழை வளம்….!
1966 ஜனவரி 7 மற்றும் 8ந்தேதிக்கு இடைப்பட்ட 24 மணிநேரங்களில்,
இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6 இஞ்ச் ) மழை பெய்தது
ஒரு உலக ரிக்கார்டு -இதுவரை முறியடிக்கப்படவில்லை…..!!!
மற்ற புகைப்படங்கள் – விமான நிலையம்,
இயற்கைக் காட்சிகள், தமிழர் திருவிழாக்கள் – காவடி, கரகாட்டம்,
தமிழ் முகங்கள், உள்ளூர் மக்களின் -ப்ரெஞ்ச்+ஆப்பிரிக்க
கோலாகல நடனங்கள், கொண்டாட்டங்கள்…… குறித்தவை….!!
அற்புதம்.
நான் இதுவரை கேள்விப்படாத இடம் .
இந்த மாதிரி ஒரு இடம் இருப்பதும் அதிங்கே இவ்வளவு தமிழர்கள்
இருப்பதும் எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு தெரியாது தான்.
நல்ல பணி தொடருங்கள் காவிரிமைந்தன்.
I am happy that Tamilians are happily settled in a far off country though I am aware of the historical background of their migration.
மலேசியா தமிழர்கள் இங்கே 16 லட்சம் பேர் இருகிறோம், ஆனால் சந்தோசமா இல்லை .. ரீயூனியன் பத்தி கேள்விபட்டவுடன் ரொம்ப சந்தோசமா இருக்கு . உங்க முயற்சிக்கு ரொம்ப நன்றி
என பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படும் இந்த பிரதேசம் இன்று DOMTOM என்று பிரெஞ்சு அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் அதன் தளங்களில் ஒன்று.
நீங்கள் குறிப்பிட்டதை போல தமிழ் மொழியை மறந்துவிட்டாலும் கூட இந்த மக்கள் தமிழ் பண்பாட்டினை போற்றி வருகிறார்கள். இவர்கள் பலரின் குடும்ப பெயர்கள் இன்றளவும் தமிழ் பெயர்களாகவே உள்ளன. தங்களின் பூர்வீகம் தமிழ் என இன்றும் பெருமையாக கூறிக்கொள்ளும் மக்கள் இவர்கள் !
நன்றி
சாமானியன்
Yesterday i met one temple priest (koil kurukkal). He informed his son (MA sanscrit) is working as a temple priest in Reunion. at that time i did not know about Reunion. he told his son is happily living there with good salary.
அருமையான, அரிய தகவல்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். = ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி …!! (கடல்களைக் கடந்து ..பகுதி – 5 ) =
நன்றி திரு காவிரி மைந்தன்.
அற்புதமான தகவலுக்கு நன்றி பெருமையாய் இருக்கிறது