கடிதம் எழுதுவதில் நான் ஒரு கத்துக்குட்டி.
உங்கள் மாதிரி எல்லாம் என்னால் எழுத முடியாது.
இருந்தாலும் மனதில் தோன்றுவதை, உள்ளதை உள்ளபடி
எழுதி விடுவேன்..!
எனக்கு உங்களையும், உங்கள் எழுத்தையும்
நீண்ட நாட்களாகத் தெரியும்…
சில பொது நிகழ்ச்சிகளின் போது நான்
உங்கள் அருகிலேயே கூட இருந்திருக்கிறேன்.
(ஆனால் – உங்களுக்கு என்னைத் தெரியாது !)
பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில்
தேர்தலில் போட்டியிட உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்
ஆவலைக் குறித்தது தான் இந்த மடல்.
மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய ஆசை
உங்களுக்கு வந்து விட்டது என்று தோன்றுகிறது..!
நாடகத் துறையிலும், திரைப்படத் துறையிலும்
உங்களுக்கு இருக்கும் அனுபவம் காரணமாக,
உங்கள் ஆசையை, மிக அழகாக, படிப்படியாக,
வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்கள்..!
————–
உங்களிடமிருந்து முதலில் வெளிவந்தது
ஒரு ‘டீசர்’ -( மார்ச்-1 :உரத்த சிந்தனை-1 )
“மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க,
அ.இ.அ.தி.மு.க ஆகிய நான்கு கட்சிகளையும் நிச்சயம்
ஆதரிக்க முடியாது. கூடாது. தமிழகத்தில் தி.மு.க,
அ.இ.அ.தி.மு.கதான் பிரதானம் என்றாலும் இருவரில்
யாரை ஆதரித்தாலும், அவர்கள் தேர்தலுக்குப் பின்
காங்கிரசுடனோ, பி.ஜேபியுடனோ செல்லும் வாய்ப்பே
அதிகம் என்பதால் அவர்களை ஆதரிக்க முடியாது. மீதி
எல்லா கட்சிகளின் கதியும் இதேதான். இந்த சூழலில்
இந்தியாவிலேயே பிஜே.பி, காங்கிரஸ் இரு கட்சிகளையும்
ஆதரிக்காமல் இருக்கக்கூடிய ஒரே கட்சியாக ஆம் ஆத்மி
மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் 40
தொகுதிகளிலும் சரியான வேட்பாளர்களை நிறுத்தினால்
அவர்களை ஆதரிப்பது பற்றி யோசிப்பேன்.”
———
உடனேயே, அதே நாளே, இரண்டாவது ‘டீசர்’
( மார்ச்-1:உரத்த சிந்தனை-2)
“தேர்தலில் நிற்கலாமா என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.
இதற்கு முன்பு எப்போதெல்லாம் இப்படி தேர்தலில் நிற்கலாமா
என்ற யோசனை வந்தது என்பதையும், அப்போதெல்லாம் ஏன்
நிற்கவில்லை என்பதையும் கூடவே சேர்த்து யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.
நான் தேர்தலில் நிற்பதாலோ, நின்று ஜெயிப்பதாலோ,
நின்று தோற்பதாலோ, நிற்காமலே இருப்பதாலோவெல்லாம்
என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்றெல்லாம்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”
—
முதல் டீசரில் “ஆதரிப்பது” பற்றி கூறிய நீங்கள்,
அன்றே, அதே நாளில் – அடுத்த டீசரிலேயே –
“தேர்தலில் நிற்கலாமா என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன்”
என்று கூறி விட்டீர்கள். இன்னும் 4 நாட்கள்
கழித்துச் சொல்லி இருந்தால் பொருத்தமாக
இருந்திருக்கும்…!
ம்ம் – அடக்க முடியவில்லை – அவ்வளவு ஆவல்..!
——-
அடுத்த நாளே மெயின் ஸ்டோரிக்கு வந்து விட்டீர்கள்.
(மார்ச்-2 : உரத்த சிந்தனை-3)
“நானும் அரசியலும்” என்கிற தலைப்பிலிருந்து –
(சுருக்கமாக சில பகுதிகள் மட்டும் ) –
“நான் எப்போதும் அரசியலில் இருந்து வருகிறேன்
என்றுதான் சொல்லவேண்டும்.
எல்லா தளங்களிலும், துறைகளிலும் நடப்பவை, நடந்தவை,
நடக்கவேண்டியவை பற்றி எல்லாம் கருத்துகளை மக்கள்
முன்னால் தொடர்ந்து வைப்பதும் ஓர் அரசியல்
செயல்பாடுதான்.எழுத்தாளனாக நான் எப்போதும் அதைத்தான்
செய்துவந்திருக்கிறேன்.
இப்போது நடக்கப் போகும் மக்களவை தேர்தலில்
போட்டியிட்டு மறுபடி நேரடி அரசியலில் ஈடுபடலாமா என்ற
சிந்தனை தோன்றியிருக்கிறது. இந்தியாவில் காங்கிரஸ்,
பா.ஜ.க, தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க
ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான்
இந்திய தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள்
வரமுடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இன்றைய
சூழலில் இப்படிப்பட்ட மாற்றுக்கான அறிகுறிகள் தென்படும்
காலமாக இது எனக்குத் தோன்றுகிறது. அதற்கான என்
பங்களிப்பாக, அந்த மாற்றத்தை நோக்கி இன்னும் பலரையும்
உந்த உற்சாகப்படுத்தும் சக்தியாக இருப்பதற்காகவே நான்
தேர்தல் களத்தில் இறங்குவது பற்றி யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.
சிலர் சொன்னார்கள் – தேர்தலில் நின்று ஜெயித்தால் சரி.
அடுத்த மக்களவையில் சில முன்மாதிரிகளுக்கு உழைக்கும்
வாய்ப்பு சில வருடங்கள் இருக்கலாம். தோற்றால் ?
தோற்றால் என்ன ? எப்போதும் செய்யும் வேலைகள் இருந்து
கொண்டே தானே இருக்கின்றன – எழுதுவதும், பேசுவதும்,
நாடகமும் படங்களும் தயாரிப்பதும். கடைசி வரை எப்படியும்
அதை செய்யத்தானே போகிறேன் ?!”
——————————-
முதலில் உங்கள் எழுத்துக்களில் இருக்கும் சில
முரண்பாடுகளை (contradictions) சுட்டிக் காட்டி
விட்டு, பின்னர் மற்ற விஷயங்களுக்குப் போகலாமென்று
தோன்றுகிறது.
டீசர் -1 :”இந்தியாவிலேயே பி.ஜே.பி, காங்கிரஸ் இரு
கட்சிகளையும் ஆதரிக்காமல் இருக்கக்கூடிய ஒரே கட்சியாக
ஆம் ஆத்மி மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது.”
இந்த ஸ்டேட்மெண்ட் தவறு என்பது உங்களுக்கே தெரியும்.
இவை இரண்டையும் ஆதரிக்காத கட்சிகள் நிறைய
இருக்கின்றன.
ஆனால், அவையெல்லாம் ‘ஆப்’ அளவிற்கு பாப்புலர்
ஆகவில்லை!
——-
ஆம் ஆத்மி இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றை ஆதரிக்காது
என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இரண்டு
நாட்களுக்கு முன்னர் கெஜ்ரிவால் கொடுத்த லேடஸ்ட்
ஸ்டேட்மெண்ட் –
“350 தொகுதிகளில் ஆப் நிற்கும்.குறைந்த பட்சம் 100
பாராளுமன்ற தொகுதிகளில் நாங்கள் ஜெயிப்போம்.
எந்த ஆட்சி அமைந்தாலும், அது எங்கள் ஒத்துழைப்பு இன்றி
நடக்காது ….!”
(விஜய்காந்தை நினைவுபடுத்தவில்லை ….?)
———–
“தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் சரியான வேட்பாளர்களை
நிறுத்தினால் அவர்களை ஆதரிப்பது பற்றி யோசிப்பேன்.”
40 தொகுதிகளிலும் ‘ஆப்’ நிற்காது. சில பெரிய
நகரங்களில் மட்டுமே நிற்கும் என்பதும் உங்களுக்கு
ஏற்கெனவே தெரியும். எனவே இதைச் சொல்லும்போதே
இது நடக்காது என்று தெரிந்தே சொல்கிறீர்கள்.
——–
தேர்தலில் நிற்பது என்று தீர்மானித்து விட்டீர்கள். எனவே,
அடுத்து அதற்கான நியாயங்களை தயார்படுத்துகிறீர்கள்…
“தேர்தலில் நின்று ஜெயித்தால் சரி.
தோற்றால் ? தோற்றால் என்ன ? எப்போதும் செய்யும்
வேலைகள் இருந்து கொண்டே தானே இருக்கின்றன –
எழுதுவதும், பேசுவதும், நாடகமும் படங்களும்
தயாரிப்பதும். கடைசி வரை எப்படியும் அதை செய்யத்தானே
போகிறேன் ?!”
தோற்றால் ஒன்றுமில்லை தான் – ஆனால்,
திருமதி குஷ்புவிற்கு
கிடைக்கும் வாக்குகளுடன் நீங்கள் பெறும் வாக்குகளை
ஒப்பீடு செய்து பேசுவார்களே –
அது பரவாயில்லையா.. ?
—————————-
அடுத்தபடியாக நீங்கள் ஆதரிக்கும் ஆம் ஆத்மி
கட்சி பற்றியும்,
அந்த கட்சியில் நீங்கள் சேர்ந்தால்,
உங்களுக்கு தலைவர்களாக
விளங்கப்போகிற சில ஆதர்ச புருஷர்களைப் பற்றியும்..
—
40 வருடங்களாக நீங்கள் வலியுறுத்தி வரும்
இலட்சியங்கள், இலக்கணங்கள்
இந்த கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் எந்த அளவிற்கு
பொருந்தும் என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.
இலவசங்களை எதிர்ப்பவர் நீங்கள் –
கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சிக்கு வந்ததே,
தினமும் 700 லிட்டர் இலவச குடிதண்ணீர்,
பாதி விலையில் மின்சாரம் ஆகியவற்றை
டெல்லி மக்களுக்கு ஆசை காட்டி தான்…!
டெல்லி யூனியன் டெர்ரிடரிக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது
என்பது கெஜ்ரிவாலுக்கு முதல்வராகப் பதவி ஏற்கும் முன்னர்
தெரியாதா ? பின் ஏன் நடுத்தெருவில் இறங்கி,
போலீஸ் அதிகாரம் கேட்டுப் போராட்டம்..?
இரண்டு போலீஸ்காரர்களை சம்பளத்தோடு 3 நாட்களுக்கு
விடுமுறையில் அனுப்புவதற்காக, ஒரு முதலமைச்சர்
இரண்டு நாட்கள் டெல்லி தெருக்களில் போக்குவரத்தை
ஸ்தம்பிக்கச் செய்து போராட்டம் நடத்தியது உங்களுக்கு
ஏற்புடையதா ?
கெஜ்ரிவால் –அமெரிக்காவின் Ford Foundation-லிருந்து
தான் நடத்தும் “கபீர் அறக்கட்டளை”க்காக நன்கொடை
பெற்றதாக ஆதாரத்தோடு செய்தி வெளியான பிறகு,
மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
Ford Foundation-ன் பிரதிநிதி, கெஜ்ரிவால்
அறக்கட்டளைக்கு
2005-ல் $ 1,72,000 (அமெரிக்க டாலர்)-உம்
2008-ல் $1,97,000 (அமெரிக்க டாலர்)-உம்
கொடுத்திருப்பதாக உறுதி செய்து Business Standard
இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார்.( இவற்றின் இந்திய
மதிப்பு – சுமார் இரண்டரை கோடி ரூபாய் ….!)
ஏன் – நன்கொடை வாங்கினால் என்ன ? என்று நீங்கள்
கேட்டாலும் கேட்பீர்கள். நன்கொடை கொடுக்கப்பட்டது
எதற்காக என்பதையும் அதே நபர் கூறி இருக்கிறார்.
“Both were exclusively for work on Right
to Information Act”
சமூக நல ஆர்வலர்களின் இடைவிடாத முயற்சியாலும்,
காங்கிரஸ் இளவரசர் திருவாளர் ராகுல் காந்தியின்
ஆதரவாலும் தான் “தகவல் பெறும் உரிமைச் சட்டம்”
நிறைவேற்றப்பட்டதாக இந்த நாட்டின் மக்கள் நினைத்துக்
கொண்டிருக்கையில், இந்த சட்டத்தைக் கொண்டு வர
அமெரிக்க நிறுவனம் பணம் கொடுத்ததாகச் சொல்கிறதே.
இதைக் கேட்கவே அவமானமாக இல்லை …?
இந்த கெஜ்ரிவாலைத் தான் நீங்கள் தலைவராக ஏற்றுக்
கொள்ளப்போகிறீர்களா ?
அல்லது ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு விட்டீர்களா ?
கெஜ்ரிவாலின் நம்பர் -2வான மணீஸ் சிசோதியாவின்
அமெரிக்க கம்பெனிகள் நிகழ்த்திய இரண்டு கோடி ரூபாய்
ஆன்லைன் மோசடி பற்றி Headlines
தொலைக்காட்சி விலாவாரியாகக் கொடுத்த விவரங்களை
நீங்கள் பார்க்கவில்லையா …? அதைப்பற்றி எல்லாம்
உங்கள் மனசாட்சி ஒன்றும் கூறவில்லையா ..?
கெஜ்ரிவாலின் நம்பர்-3யான, சட்ட அமைச்சர்
சோம்நாத் பாரதி – நள்ளிரவில் ஆப்பிரிக்கப் பெண்களை
துரத்திச் சென்று பிடித்து, அவமானப்படுத்தியதையும்,
அவர்களை நடுத்தெருவில், காருக்கு பின்புறம் சென்று
“மூத்திரம்” சாம்பிள்
எடுக்க வைத்ததையும் உங்கள் மனம் சரி என்று ஏற்றுக்
கொள்கிறதா?
கேரளத்தைச் சேர்ந்த நர்சுகளின் தோலின் நிறம் காரணமாக,
அவர்களை “ஸிஸ்டர்” என்பதைத் தவிர வேறு எந்த
உறவையும் சொல்லி அழைக்க முடியவில்லை
என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் கிண்டல் செய்த
கெஜ்ரிவாலின் உத்தமத்தோழன் குமார் விஷ்வாஸ் இனி
உங்கள் தலைவர் – அப்படித் தானே ?
ஜூனியர் கல்லூரி ஒன்றில்,ப்ளஸ்-2 வகுப்பில்
இந்தி மொழிப் பாடம் எடுக்கும்
குமார் விஷ்வாஸின், ஆபாசம் நிறைந்த உரை எதையாவது
நீங்கள் கேட்டிருக்கிறீர்களா ?
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்,
இன்னும் தொடர்ந்து பதவியில் இருந்தால் சாயம்
வெளுத்து விடும் என்று “சாக்கு-போக்கு”
தேடி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு,
இப்போது பாராளுமன்றத்தில் “கலக்கப் போகிற”
அர்விந்த் கெஜ்ரிவால் தான் இனி உங்கள் தலைவர் –
அப்படித் தானே ?
இன்னுமொரு முக்கியமான கேள்வி –
உங்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!
அவர்களோ இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும்
(தெரிந்திருந்தலும் கூட) பேச மாட்டார்கள்.
எப்படி உங்கள் தலைவர்களை சமாளிக்கப்போகிறீர்கள் …?
(மனுஷ்ய புத்திரனுக்கு இந்தப் பிரச்சினை இல்லை…!)
ஆமாம் – தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைப் போலவே
ஏகப்பட்ட ஆம் ஆத்மி கட்சி ‘க்ரூப்’கள் இருக்கின்றனவே –
நீங்கள் எந்த ‘க்ரூப்’பில் சேரப்போகிறீர்கள் …?
கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள்,
வெளியுறவுக் கொள்கைகள், இன்னபிற லட்சியங்களைப்
பற்றியெல்லாம் படித்துப் பார்த்து விட்டீர்களா ?
அவை எல்லாம் உங்கள் லட்சியத்திற்கு எதிராக இல்லாமல்
இருக்கின்றனவா ?
உங்களுக்கு ஏற்புடையவை தானா ?
(எங்களுக்குத் தான் அவற்றை தெரிந்து கொள்ளும்
பாக்கியமே இன்னும் கிட்டவில்லை …!)
“தேர்தலில் நிற்பதாலோ,
நின்று ஜெயிப்பதாலோ,
நின்று தோற்பதாலோ,
நிற்காமலே இருப்பதாலோவெல்லாம்
என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது”
– என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன் –
என்று எழுதியிருக்கிறீர்கள் அல்லவா ?
(உரத்த சிந்தனை-2 )
நல்லதோ, கெட்டதோ – உங்களுக்கென்று சில
லட்சியங்களை வைத்துக் கொண்டு, இத்தனை
வருடங்களாக அதன் வழியே போய்க் கொண்டிருந்த
உங்களுக்கு –
இந்த வயதில் இப்படி ஒரு
வேண்டாத ஆசை வருவானேன் …?
ஆதங்கம் காரணமாக நான் எழுதியுள்ள கடிதத்தில்,
எனக்குத் தெரிந்து நான் மேலேகூறிய கருத்துக்களில்
தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.
இருந்தாலும், நான் எதையாவது தவறாகக் கூறி இருந்தால்,
அதை நீங்கள் சுட்டிக் காட்டினால்,
திருத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.
என்றும் உங்கள் நலன் விரும்பும் –
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அம்மாடி!! எவ்வளவோ பெரிய கடிதம்!.கருணா,ஜெயா,சோனியாவிற்கு கூட கிடைக்காத கெளரவம் இது.ஞாநி ரொம்ப லக்கி தான்.
சரி, ஒரு சீட்டை வைத்துக்கொண்டு இவர் என்ன செய்யப்போகிறார்?ஆப்பு ஒருவேளை இருநூறு சீட் ஜெயித்து விட்டால் கூட இன்னும் ஒரு ஒரு எழுபது சீட் காங் உதவியுடன் பெற்று,கெஜ்ரி பிரதமராகி உடனே “அமெரிக்கா இன்னும் ஒரு வாரத்தில் சீனா மீது படையெடுக்க வேண்டும் இல்லையெனில் நான் பதவியை ராஜினாமா செய்து விட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” என சூளுரைத்து எண்ணி பதினைந்தாம் நாள் ராஜினாமா செய்து விடுவார்.
பாவம் ஞாநி.இவர் டெல்லி போகும் அதே விமானத்தில் சென்னை திரும்ப வேண்டியதுதான்.
காமெடி பண்ணாம பா.ஜ.க.விற்கு ஒட்டு போடுங்க மக்களே!நாடு இப்போ உள்ள நிலையில் இதை விட சிறந்த தேர்வு நமக்கு இல்லை.
கலக்குறீங்க கண்பத் 🙂
KEJRI VAAL’S AIM IS POWER ONLY. SO, IF HETS A FEW SEATS, HE WILL TRY TO FORM GOVT WITH CONGRESS’ SUPPORT. PM IS HIS ULTIMATE AIM. HE WILL NOT RESIGN FROM THAT POST. BUT “AAPPU” (THANKS TO GANPAT) WILL NOT HAVE THE CHANCE TO COME TO POWER.
FOR 2014 ELECTION MODI IS THE ONLY BEST CHOICE.
REGARDING GNANI, HE IS AN INDIRECT SUPPORTER OF CONGRESS ONLY. I NEVER SAW ANY OF HIS ARTICLES ABOUT SONIA.
GNANI WILL NOT GET DEPOSIT, EVEN IF THE ELECTION IS HELD FOR ONLY PUDHIYA THALAI MURAI VIEWERS. I APPRECIATE GNANI ONLY FOR HIS VIEWS ABOUT TOTAL PROHIBITION, WHICH IS NOT PRACTICALLY POSSIBLE.
I AM SORRY TO SAY WHETHER IT IS GNANI, KARUNA OR JAYA, THEIR PERSONAL LIFE INDIRECTLY FORCES THEM TO TAKE SOME STAND ON POLITICS. GNANI WANTS NOW RECOGNITION.
அப்பா!. மிக நீண்ட, தெளிவான, மடல். இவர் ரேவதி, குஷ்பூ, அளவில் புகழ் பெற விரும்புகிறார் என எண்ணுகிறேன். நானும் அவர் எழுத்துகளை விரும்பியவன் தான். ஆனால், இப்படி ஒரு கும்பலின் கீழ் இவர் ……..சே. சே. (இப்போது தான் மனிஷ் சிசோடியா பற்றி அறிகிறேன், மற்ற இரண்டும் தெரியும். சிசோடியா பற்றி Headlines Today You Tube தேட போகிறேன். இந்தியாவின் சாபக்கேடு… கட்சித் தலைவர் எந்த ஒரு கொள்கை இன்றி 100 சீட் வாங்கி BJP/Cong ஆதரிப்பேன் என்கிறார். அனால் தொண்டர் (?) 273 சீட் வென்று உத்தம ஆட்சி கொடுக்க இருக்கிறார். ம் ம் இவர், இன்னும் என்ன என்ன தெரிவிக்க இருக்கிறாரோ……
நேர்பட பேசு மற்றும் தந்திடிவியில் வரும் விவாத நிகழ்ச்சிகளில் அனைவரும் அவரவர்களுடைய வாதங்களை எடுத்து வைத்துவிட்டு அடுத்தவர்களுடைய வாதங்களைக் கேட்பார்கள்.
ஆனால் ஞானி அவர்கள் தனது வாதத்தை யாருக்கு எதிராக ,ஆதரவாக பேசுகிறாரோ அவர்களுடைய முகத்தை பேசி முடித்துவிட்டு பார்ப்பார்
இது அவருடைய வாதத்தில் உள்ள நம்பகத்தன்மையின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுவதாகத் தெரிகிறது.
இந்தியாவிலேயே அவர் மட்டும்தான் உத்தமர் என்ப்து போல பேசுவார்.
இவருடைய அணுகுமுறையால்தான் திரையுலகத்தினர் துரத்திவிட்டார்கள் போல.
இவரைவிட மனுஷ்யபுத்திரன் ஆயிரம் மடங்கு பெட்டர்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Kavirimainthan,
I accept all the points you have mentioned. Clearly we know Jnani is a better person and can think unlike other many so called “politicians”. If the issue is which party he is choosing, I can understand anyone who wants to join would go for a recognized party so that his thinking can be heard. In India there are currently three major parties – Congress, BJP & AAP (ok, ok – not a major but has potential to be in next 10 years). You did list the issue with AAP’s party and their frauds… But, is this list big enough in comparison to what BJP and Congress did to India. No way!!! I would at least like to see a party growing with full of educated folks (MP, MLA…) to manage other educated folks (IAS, IPS)…
The issue with AAP is they lack experience to manage the country, and they are very much learning. And due to that fact, they are very much exposed. I am sure they will learn. Just that they need more people to represent the party than just Kejri or Sisodia.
Gnani can be considered with the thought… இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா?
P.S: I am not expecting AAP to get more than 50 seats in forthcoming elections… but wont mind some people representing from each state who can talk in assembly than to throw acids, pepper spray, and worse than that.
இன்று இந்தியாவில் நடக்கும் கேலிகூத்துக்களை கண்டு எனக்கு ஒன்று தெளிவாகியது.
உலகில் சர்வாதிகாரிகளால் ஆளப்பட்ட பல நாடுகள், சர்வாதிகார ஆட்சி முறையால் வரும் கொடுமைகள்/தீங்கு பற்றி உலக நாடுகளுக்கு புரிய வைத்துள்ளன.
ஆனால் நம் நாடு ஒன்றுதான் அப்பேர்பட்ட சர்வாதிகார ஆட்சி முறையை விட கொடுமையானது/தீங்கானது ,”மூடர்களும், சுயநலவாதிகளும் நிறைந்த ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சி முறை” என உலக நாடுகளுக்கு புரிய வைத்துக்கொண்டு இருக்கிறது
Dear Ganpat:
I like your delivery, amazing.
Sella
I have told this manytimes in the past..!
with best wishes,
Kavirimainthan
Thank you very much sella and Ka.Mai ji
ஞாநி அரசியலுக்கு வருவது தவறா அல்லது “ஆப்”பில் பிணைத்துக்கொள்வது தவறா? எதுவென்றாலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து.
//இந்த வயதில் இப்படி ஒரு வேண்டாத ஆசை வருவானேன் …?// என்ற கேள்வியே தவறாக உள்ளதே காவிரி சார்.
நீங்களும் அவரை மற்ற அரைவேக்காடுகளை போலவே //திருமதி குஷ்புவிற்கு கிடைக்கும் வாக்குகளுடன் நீங்கள் பெறும் வாக்குகளை ஒப்பீடு செய்து பேசுவார்களே// என்பது நமது வாக்குரிமையையே கேவலப்படுத்துவதாக அல்லவா உள்ளது.
நீங்கள் கூறுவது போல பல வஷயங்களை பிஜேபி-யை பற்றியும் கூறமுடியும். இலங்கை தமிழர்களை மட்டுமே வைத்து கடை நடத்தும் வைகோ அதற்கு ஆதரவளித்தது சரிதானா அல்லது தமிழருவி மணியன் பேசிக்கொண்டிருப்பது சரியாக இருப்பதாக எண்ணுகிறீர்களா? இப்போது ஓட்டு மட்டுமே குறிக்கோளாகிவிட்டபடியால் “நாங்கள் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று கூறியது சரியாகிவிடுமா?
அன்னை முதல் தொண்டர் (?) வரை…
அம்மா முதல் தாத்தா வரை…
இப்படி எல்லோருமே ஓட்டு அரசியல் செய்யும்போது பாவம் ஞாநிக்கு அந்த ஆசை வரக்கூடாதா?
அஜீஸ்,
நீங்கள் ஏன் எந்த விஷயத்தையும் பிஜேபி யுடன்
இணைத்துப் பேசுகிறீர்கள் ? பிஜேபி உங்களுக்கு
அலர்ஜி என்பது புரிகிறது. அதை விட்டு விடுங்கள்.
இந்த இடுகை ஞாநி அவர்களது நிலை, மற்றும்
ஆம் ஆத்மி கட்சி பற்றித்தான். பிஜேபி குறித்து அல்ல.
//இந்த வயதில் இப்படி ஒரு வேண்டாத ஆசை வருவானேன் …?// என்ற கேள்வியே தவறாக உள்ளதே காவிரி சார்.//
கேள்வியில் எந்த தவறும் இல்லை நண்பரே.
ஞாநி அறுபதைக் கடந்து விட்டார். இத்தனை ஆண்டுகளாக
அவர் எந்த கட்சியிலும் சேராமல், சுதந்திரமாக தனக்கு
சரி/தவறு என்று தோன்றியதை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்சியில் சேர்ந்து, அதன் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகி விட்டால், இப்படி சுதந்திரமாகவும், எந்த சார்புணர்வும் இல்லாமல் நடுநிலையோடு கருத்து கூற முடியுமா ?
அதைதான் நான் சொன்னேன்.உங்களுக்கு தவறாகத்
தோன்றக் காரணம் -நீங்கள் வேறு கண்ணோட்டத்தில் இதைப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
//நீங்களும் அவரை மற்ற அரைவேக்காடுகளை போலவே //திருமதி குஷ்புவிற்கு கிடைக்கும் வாக்குகளுடன் நீங்கள் பெறும் வாக்குகளை ஒப்பீடு செய்து பேசுவார்களே// என்பது நமது வாக்குரிமையையே கேவலப்படுத்துவதாக அல்லவா உள்ளது.//
இது எந்த விதத்தில் வாக்குரிமையை கேவலப்படுத்துவதாக
உள்ளது என்பதைக் கொஞ்சம் விளக்க முடியுமா உங்களால் ?
40 ஆண்டுக்காலம் பொது வாழ்விலும், சமூக நலம்
சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், பணியாற்றி அதன்
காரணமாக புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர்,
அரசியலுக்கு வந்து 5 ஆண்டுகள் கூட
ஆகாத, சினிமா புகழ்/கவர்ச்சி காரணமாகவே கட்சியில் ‘சீட்’ கொடுக்கப்பட்டு, தேர்தலில் நிற்கும் ஒரு
நடிகையுடன் போட்டியிட்டு தோற்றுப் போனால்,
அது அவருக்கு பெருமையையா கொடுக்கும் …?
நண்பர் அஜீஸ், இன்று வரை நான் எந்த கட்சியையும்
சேராதவன் தான். எடுத்துக் கொள்ளும் விஷயத்திற்கேற்ப,
என் பார்வையில் தெரிவதை வைத்து,
ஆதரித்தோ, குறைகூறியோ எழுதுகிறேன். இன்னுமா
நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை..?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அப்படியெனில் ‘ஞாநி’ அவர்கள் இனிமேல் தனிக்கட்சி ஆரம்பித்தால்தான் உண்டு 🙂
இனி என் தனிப்பட்ட கருத்து :
================================
மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் மக்களில் இருந்தே வரவேண்டும்; அவர்களுடன் தினந்தோறும் உறவாடுபவர்களாக இருக்க வேண்டும்; எல்லாத் தரப்பினரின் மனநிலையையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். பிராண்டிங் முறையில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை.
ஆனால் அத்தகையோர் நம் ம(மா?)க்களால் புறந்தள்ளப்படுவார்கள் என்பது உறுதி 🙂
very good!!
நேற்று மாலை டெல்லி தொலைக்காட்சிகளில்
“லைவ்” ரிலே பார்த்தோம்.
மற்ற கட்சிகளை விட தாங்கள் எந்தவிதத்திலும்
குறைந்தவர் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின்
‘பொறுக்கிகள்’ நிரூபித்துக் கொண்டிருந்தனர்.
அதில் உச்சம் ‘அசுதோஷ்’ மற்றும் ‘ஷஜியா இல்மி’.
இந்த கேவலமான கட்சியில் இணைந்து தேர்தலில்
போட்டியிடவா ‘ஞாநி’ இத்தனைக் காலமாக
தவமிருந்தார் ?
‘ஞாநி’அவர்களே இது உங்களுக்கென்றுள்ள
மரியாதையைக் கெடுத்து விடும்.தய்வு செய்து
இந்த முயற்சியை விட்டு விடுங்கள்.
Awesome 🙂
Ithukku peyarthan NETHI ADI
“ஞாநி” அவர்கள் உண்மையான “அரசியல்ஞாநி”
ஆகி விட்டார் என்பதை “தகுந்த” முறையில்
facebook entry போட்டு நிரூபித்து விட்டார்.
கீழே – (இது துவக்கம் தான் – போகப்போக
…… முற்றும் !)
—
ஞாநி சங்கரன்
about an hour ago
இந்தத் தேர்தலின் வடிவேலுவாக பிரசாரம் தொடங்காமலே ஆகிவிட்டவர்- தமிழருவி மணியன் !
—
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மூத்த பத்திரிகையாளர் /அனுபவஸ்தர் என்ற பெயரில் எல்லா டிவி சானல்களிலும் தோன்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் பதிலடி கொடுத்து உயர்ந்த மனிதராக இருந்த திரு ஞாநி ஆம் ஆத்மி யை பற்றி தெளிவின்மை கொண்டது ஒரு துரதிஷ்டம்தான் ………தோற்று விட்டால் மறுபடியும் பேட்டா வாங்க எல்லா சானல்களுக்கும் போய் விடுவாரா? ஒரு கட்சி சார்புடைய உங்களை யார் வரவேற்பர் ?