5 வருடங்களில் 1000 சதவீதம் சொத்து உயர்வு… தகவல் தெரிந்த பிறகும் சும்மா இருக்கலாமா …?

தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து,
மக்களவைத் தேர்தல்களையும், பல மாநில
தேர்தல்களையும் நடத்தி விட்டு, ஓய்வு பெற்றவர்
திரு என்.கோபாலஸ்வாமி அவர்கள். தேர்தல் கமிஷனராக
பொறுப்பு ஏற்கும் முன்னர் மத்திய அரசில்,
மிக முக்கியமான உள்துறைச் செயலாளராக பொறுப்பு
வகித்தவர். எனவே, அரசின் பல்வேறு அமைப்புகள்
எப்படிச் செயல்படுகின்றன – அவை எதற்காக உள்ளன
என்பதைக் குறித்த நல்ல அனுபவம்,ஞானம் உள்ளவர்.

n.gopalaswamy, ceo

அண்மைக்காலங்களாக, அவர் பல பொது நிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டு, கருத்துரை ஆற்றி வருவதைப் பார்க்கிறேன்.
ஈரோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்
பேசும்போது அவர் வெளியிட்ட சில தகவல்கள் கீழே

——–

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து
விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய உச்ச நீதி மன்றம்
உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவுப்படி,
தேர்தல் ஆணையம் கணக்கீடு செய்ததில் –

2004ஆம் ஆண்டு தேர்தலில் 62,847
வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
போட்டியிட்ட வேட்பாளரின் சராசரி
சொத்து மதிப்பு, 1 கோடியாக இருந்தது.
தேர்வுசெய்யப்பட்ட எம்.பி.-எம்.எல்.ஏ -க்களின்
சொத்து மதிப்பு சராசரியாக, 3.83 கோடியாக இருந்தது.
ஐந்தாண்டுகளுக்குப் பின் 2009-ல்,
மீண்டும் நடந்த தேர்தலில், இரண்டாவது முறையாக
4,181 பேர் மீண்டும் போட்டியிட்டனர்.

இதில்,1615 பேரின் சொத்து மதிப்பு- 200 சதவீதமாகவும்,
684 பேரின் சொத்து மதிப்பு – 500 சதவீதமாகவும்,
420 பேரின் சொத்து மதிப்பு – 800 சதவீதமாகவும்
317 பேரின் சொத்து மதிப்பு – 1000 சதவீதமாகவும்
உயர்ந்திருந்தது.

தமிழ்நாடு முதல் இடம் –

தமிழ்நாட்டில் கடந்த முறை நடந்த சட்டசபை
தேர்தலில் 36 கோடியே 60 லட்சம் ரூபாய் தேர்தல்
ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேச சட்டசபை
தேர்தலில் 34 கோடி ரூபாய் தேர்தல் ஆணையத்தால்
பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர்கள் எண்ணிக்கை,
தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து –நாட்டிலேயே முதலிடம்
பிடித்தது தமிழ்நாடுதான்.

———-

புள்ளி விவரங்களோடு தகவல்களைக் கொடுத்த வரையில்
அவருக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை…!

ஆனால் – இங்கு சில கேள்விகள் எழுகின்றன..!

– தனக்கு கிடைத்த தகவல்கள் அதிகாரபூர்வமாக
உண்மையானவை என்றால் – பொது மேடைகளில் இந்த
தகவல்களை பரபரப்பாக வெளியிடுவதுடன் அவரது
கடமை முடிந்து விடுகிறதா ?

– 317 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின்
சொத்து மதிப்பு 5 வருடங்களில் 1000 சதவீதம்
உயர்ந்திருப்பது சாதாரண விஷயமா ? இதில்
சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களையும், கட்சி
விவரங்களையும் ஊடகங்களில் வெளியிடுவதோடு
மட்டுமல்லாமல், Central Vigilance Commission,
Enforcement Directorate, Income Tax
Department,CBI –
ஆகிய அமைப்புக்களுக்கு மேலதிக விசாரணைகளுக்காக
இதைத் தெரிவித்திருக்க வேண்டாமா ?

– அல்லது உயர்நீதிமன்றம்/உச்சநீதிமன்றம் எதாவதொன்றில்
உரிய விசாரணை நடத்தக்கோரி ஒரு பொதுநல மனு
(Public Interest Litigation) போட்டிருக்க
வேண்டாமா ? எப்போது அவர்கள் இந்தப் பணத்தை
நியாயமான முறையில் சம்பாதித்திருக்க முடியாது என்று
தோன்றுகிறதோ, அப்போது அது குறித்த விசாரணையை
கோரி இருக்க வேண்டாமா ?

.
– தேர்தலின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பறிமுதல்
செய்யப்பட்ட பணத்தின் கதி (தமிழ் நாடு – 36.6 கோடி,
உ.பி.-34 கோடி etc.) என்ன ஆனது ? பிற்பாடு
அவற்றிற்கு யாராவது உரிமை கோரினார்களா அல்லது
அவை அரசு கஜானாவிற்கு போய் விட்டதா ?

– யார் யாரிடமிருந்து -எந்தெந்த கட்சியைச்
சேர்ந்தவர்களிடமிருந்து – எவ்வளவு தொகை,
எந்தெந்த இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது
ஆகிய விவரங்களையும் அவர் பொது நலன் கருதி
வெளியிடலாமே ! அவை ஆதாரபூர்வமானவை என்றால்,
வெளியிடத்தடை எதுவும் இருக்காதே.

இத்தகையதொரு உயர் பதவி/பொறுப்பில் இருந்தவர்
வெறுமனே தகவல்களை மட்டும் வெளியிடுவதால்,
பரபரப்பை வேண்டுமானால் உண்டு பண்ணலாமே தவிர,
உரிய விளைவுகளை உண்டு பண்ணாதே…!
தவறு செய்தவர்களை தண்டிக்க முடியாதே …!

திரு கோபாலஸ்வாமி அவர்கள் இது குறித்து
மேல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இப்போதாவது
யோசிப்பாரா …? அனுபவம் மிக்க அவர் நினைத்தால்,
முயன்றால் -பெரிய அளவில் கொண்டு செல்லலாம்.

செய்ய வேண்டும் என்பது நம் விருப்பமும்,
வேண்டுகோளும்…!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to 5 வருடங்களில் 1000 சதவீதம் சொத்து உயர்வு… தகவல் தெரிந்த பிறகும் சும்மா இருக்கலாமா …?

 1. kinarruthavalai சொல்கிறார்:

  இதைதான் இதைதான் நானும் நமது நாட்டின் பல யோக்கியர்களிடம் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் இன்று யோக்கியமாக பேசுபவர்கள் மறு நாள் நமது மக்களுக்கு எதிரான கருத்தல்லவா தெரிவிக்கிறார்கள்? நமக்கு, யாரைதான் நம்புவதோ பேதை நெஞ்சம் என பாட வைத்துவிடுகிறார்களே!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஆச்சரியமாக இருக்கிறது…

   800 பேருக்கு மேல் படித்து விட்டார்கள் –
   இந்த இடுகைக்கு மட்டும் பின்னூட்டங்களையே
   காணோமே… …! விஷயம் மலைக்க வைக்கிறதா ..?

   நண்பர்கள் யாராவது காரணத்தைக்
   கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா .. ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஐயா இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை!
    மிகச்சிறந்த சட்டங்களை கொண்ட நாடுதான் நம்நாடு.
    ஆனால் அதில் பல ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டனர்.
    நீங்கள் கூறிய விளக்கங்கள் அனைவருக்கும் தெரிந்ததே!
    ஆனாலும் சட்டங்களை சட்டப்படி அமல்படுத்த ஒரு ஆண்மையான அதிகாரி தேவைப்படுகிறார் இங்கே! முதலில் IAS/IPS முடித்து வரும் அனைவரும் நேர்மையாகவே இருக்க விரும்புகின்றனர். பின்னர் மக்களே, அதாவது நாமே, குறுக்குவழியில் சலுகைகளை பெற முண்டியடித்து நேர்மையானவரையும் கெடுத்துவிடுகின்றோம்.
    நமக்கு பரபரப்பான செய்திதானே முக்கியம்.
    ஒரு சட்டக்கல்லூரி மாணவி சாராயத்துக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் என்று கிளம்பிச்சே, பாவம் இப்ப எப்படி இருக்கோ?
    அதே போலத்தான் எல்லா விஷயங்களிலும் வெறும் புள்ளிவிவரங்களோடு நாம் நம் knowledge-ஐ வளர்த்துக்கொள்கிறோம். அந்த knowledge-ஐ வைத்துக்கொண்டு நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேருவதில்லை என்பதே அப்பட்டமான உண்மை.
    பூனைக்கு மணி கட்டுவது யாரு என்பதிலேயே எல்லாக்காலமும் ஓடிவிடுகிறது. எல்லோரும் தயாராகத்தான் இருக்கின்றோம். ஆனால் யாரும் முன்வருவதில்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி!

 2. GOPALASAMY சொல்கிறார்:

  THE INABILITY OF OUR ADMINISTRATIVE SYSTEM IS KNOWN TO US. MOST OF THE OFFICERS ARE EXCEPTING FAVOUR FROM GOVT AFTER RETIREMENT ALSO. EVEN IF SOMEBODY ARE READY TO PUT PUBLIC DOMAIN, IT IS APPAREBT, THEY ARE AFRAID TO TAKE IT FURTHER.
  WHY SO MANY OF US DID NOT COMMENT? IT IS DUE TO DEJECTION.
  WE NEVER EXPECTED THAT OUR SYSTEM WILL BE CORRECTED BY EITHER IN SERVICE OR RETIRED OFFICERS.

 3. GOPALASAMY சொல்கிறார்:

  ALWAYS SOME SPELLING MISTAKES IN MY COMMENTS. PLEASE BEAR WITH IT.
  I DONT KNOW TO TYPE IN TAMIL ALSO.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   No problem Mr. Gopalasamy.

   I am happy about the interest and initiative
   you are taking. That is much enough.

   With all best wishes,
   Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.