ராஜீவ் காந்தி வழக்கு -கருத்துக்கள்.. அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா.. ?

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று,

23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர்களை
விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்திருக்கும்
முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி பெருந்தலைகள்
சில கருத்து வெளியிட்டிருக்கின்றன.

முதலில் சட்ட அமைச்சர் கபில் சிபலின்
பொறுப்பான (!) கருத்து –

“ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித
சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி
ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது
நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது.

விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை
மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்ச
நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்.”

கபில் சிபல் அவசரப்பட்டு, ராகுல் காந்திக்கு முன்னதாக
தன் கருத்தைக் கூறி விட்டார். நாளையே
தன் கருத்துக்களை அவர் மாற்றிக் கொள்ள
வேண்டியிருக்கும். இல்லையேல் –
அவரே மாற்றப்படுவார்…!

தமிழக அரசின் முடிவு குறித்து கேட்டதற்கு, அவருக்குப் பின்
கருத்து கூறிய காங்கிரஸ்
துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறி இருப்பது –

rahul latest

“முன்னாள் பிரதமரும், என்னுடைய தந்தையுமான
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை
விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு,
எனக்கு கவலை அளிக்கிறது.
பிரதமரைக் கொலை செய்த சில நபர்களே விடுதலை
செய்யப்படுகிறார்கள் என்றால், சாமானிய மனிதர்களுக்கு
எப்படி நீதி கிடைக்கும்?
இந்த நாட்டில், பிரதமருக்குக் கூட நீதி கிடைக்கவில்லை.
இது என் மனதின் குரல்.

நான் மரண தண்டனை மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
அது, என் தந்தையை மீண்டும் கொண்டுவந்து கொடுக்காது.
ஆனால், இது என் தந்தையோ அல்லது குடும்பமோ
சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இது, ஒரு நாட்டின்
விவகாரம்” .

முன்னுக்குப் பின் முரணான ஒரு அபத்தமான கருத்து இது.
காரணம் அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா
என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில், அவர் தந்தை பிரதமர் அல்ல முன்னாள் பிரதமர்
என்பதை அவர் மறக்கக்கூடாது.

சாமானிய மனிதர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்
என்று கவலைப்படுகிறாரே – இவர் தந்தை காரணமாகவும்
தாய் காரணமாகவும் ஆயிரக்கணக்கான –
ஏன் லட்சக்கணக்கான தமிழர்கள்
அநாதைகள் ஆயினரே – அவர்களுக்கு நியாயம்
கிடைத்ததா என்று இவர் ஏன் கவலைப்படவில்லை ..?

இங்கு சில விஷயங்கள் விளக்கப்பட்டாக வேண்டும்.

வடக்கே மீடியாக்கள் கூட அலறுகின்றன –
“ராஜீவ் கொலைகாரர்கள் விடுதலை” என்று.
நாம் தெரிந்து கொண்ட அளவிற்கு புரிந்து கொள்ள
அவர்களுக்குப் பொறுமை இல்லை.

முதல் விஷயம் –

இவர்களில் யாரும் கொலைகாரர் கிடையாது.
தெரிந்தோ, தெரியாமலோ –
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு விட்டார்கள் –
அவ்வளவு தான். 8 ரூபாய்க்கு பேட்டரி செல் வாங்கிக்
கொடுத்தவர், பென்சில் வாங்கிக் கொடுத்தவர், ரப்பர்
வாங்கிக் கொடுத்தவர் எல்லாம் கூட இந்த வழக்கைப்
பொறுத்த வரை கொலைகாரர் என்று கூறப்படுகிறார்கள்.

நேரடியாக சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும்
ஏற்கெனவே குண்டுவெடிப்பிலோ, போலீசால் சுடப்பட்டோ,
தற்கொலை செய்து கொண்டோ மரணமடைந்து விட்டார்கள்.

எனவே இங்கு கொலைகாரர்களை விடுவிப்பது என்கிற
பேச்சே வராது.

இரண்டாவது –

இவரது அப்பாவைக் கொன்றவர்கள் ஏதோ தண்டிக்கப்படாமல்
விடுதலை செய்யப்படுவது போல் சித்தரிக்கிறார்.
அத்தனை பேரும் 23 வருடங்கள் தனிமைச் சிறையில்
வெந்திருக்கிறார்கள் என்பதை சுகமாக இவர் மறைத்து
அல்லது மறந்து விடுகிறார்.யாரும் தண்டனையிலிருந்து
தப்பவில்லை –கொடும் தண்டனையை ஏற்கெனவே
அனுபவித்து விட்டவர்கள் இவர்கள் அத்தனை பேரும்.

மூன்றாவது –

ஏதோ தமிழ்நாடு அரசு சட்ட விதிகளை மீறி இவர்களை
விடுவிப்பது போல் இவர் கருத்து கூறுகிறார்.
Criminal Procedure Code-ல் கூறப்பட்டு இருக்கும்
சட்ட விதிமுறைகளின்படி தான் இவர்கள் விடுதலை
செய்யப்படுகிறார்கள்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு,
14 ஆண்டுக்கால சிறைத்தண்டனையை அனுபவித்தவர்களை
விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்கும்
சட்டப்பிரிவுகளின் கீழ் தான் இவர்கள் விடுதலை
செய்யப்படுகிறார்கள்.
எனவே இதில் சட்டவிரோதம் எதுவுமே இல்லை.

நான்காவது –

உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில்,
Criminal Procedure Code விதிகளைப் பின்பற்றி
இவர்களை விடுதலை செய்வது பற்றி மாநில அரசு
முடிவெடுக்கலாம் என்று கூறி இருக்கிறது. எனவே
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தான் தமிழக அரசு இந்த
முடிவை எடுத்திருக்கிறது. இதில் சட்ட விரோதம்
எங்கிருந்து வந்தது ..?

உச்சநீதிமன்றம் இன்னமும் கூறுகிறது –
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும்
சிறையில் எவ்வித துன்பத்திற்கும், சித்ரவதைக்கும்
ஆளாகவில்லை என்றும், மகிழ்ச்சியாக ( ?)
இருந்தார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில்
கூறும் வாதத்தை ( எப்பேற்பட்ட அயோக்கியத்தனமான
வாதம் ..?) நாங்கள் ஏற்கவில்லை. 23 ஆண்டுகளாக
சிறையில் இருப்பவர்களின் மனம் எந்த அளவிற்கு
வேதனைப்படும் என்பதும், அவர்களுக்கு ஏற்படும்
துன்பமும் அனைவருக்கும் தெரியும்.

தங்கள் கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு
குடியரசுத் தலைவருக்கு மீண்டும் மீண்டும்,பல முறை
கைதிகள் கடிதம் எழுதியுள்ளனர். இதிலிருந்தே அவர்கள் பட்ட
வேதனை புரிகிறது.”

ஐந்தாவது –

மாநில அரசுக்கே அதிகாரம் உண்டென்றால் – மத்திய
அரசிடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும் என்று சிலர்
கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒன்றை இங்கு விளக்கியாக வேண்டும்.

Cr.P.C.section-435 ஒரு நடைமுறையை
வலியுறுத்துகிறது. மத்திய அரசின் புலன் விசாரணை
அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில்,
சம்பந்தப்பட்ட சிறைவாசிகளின் தண்டனையை
குறைப்பதாக இருந்தால், மாநில அரசு – மத்திய அரசை
கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சட்ட விதி கூறுகிறது.

இந்த வழக்குகள் அந்தப் பிரிவின் கீழ் வருகின்றன.
எனவே இவற்றைப்பற்றி மத்திய அரசுடன் கலந்து
ஆலோசிக்க வேண்டியது சட்டப்படி அவசியமாகிறது.

கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுகிற சட்டப்பிரிவு,
அதே சமயத்தில், மத்திய அரசு கூறுவதை மாநில அரசு
ஏற்று அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பதை
எங்கும் வலியுறுத்தவில்லை…!

கலந்தாலோசிக்க வேண்டும் அவ்வளவு தானே ?
“இன்ன மாதிரி முடிவெடுத்திருக்கிறோம்,
உங்களுக்கு இதைப்பற்றி எதாவது சொல்ல வேண்டி
இருக்கிறதா ?”
– என்று கேட்டு தகவல் அனுப்பியாகி விட்டது.

“பதில் அனுப்பியாக வேண்டுமே என்கிற
கவலை கூட உங்களுக்கு வேண்டாம். 3 நாட்களில்
உங்களிடமிருந்து பதிலேதும் வரவில்லையென்றால்,
உங்களுக்கு இதைப்பற்றி கூற ஏதுமில்லை என்று
எடுத்துக்கொண்டு, நாங்கள் மேற்கொண்டு
ஆக வேண்டியதைப் பார்க்கிறோம்” –
-என்றும் மத்திய அரசுக்கு சொல்லியாகி விட்டது.
இதில் எங்கே வருகிறது சட்டவிரோதம் …?

மத்திய அரசின் கருத்துக்கள் –
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று
மேலே போய்க்கொண்டே இருக்கலாம்
முதுகெலும்புள்ள மாநிலமாக இருந்தால்…!
அதைத்தான் முதலமைச்சர் சட்டமன்றத்தில் –
சொல்லில் காட்டி இருக்கிறார்.
சட்டம் ஒரு இருட்டறை. தெளிவான வாதங்கள்
தான் விளக்கு வெளிச்சம்.
இத்தகைய வாதங்களின் துணையோடு தான் தமிழக அரசு
மேற்கொண்டு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ்
தலைவர்கள் யாராவது பேசினால் – அது அறியாமை என்று
எடுத்துக் கொள்ளலாம்..!

ஆனால் தெரிந்து கொண்டே யாராவது பேசினால்,
அது ….. அயோக்கியத்தனம் –
கண்டிக்கப்பட வேண்டும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ராஜீவ் காந்தி வழக்கு -கருத்துக்கள்.. அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா.. ?

 1. GOPALASAMY சொல்கிறார்:

  you have written all points. 100 % you are correct. Moreover court is understood to have told this not a case of terrorism and it is case of revenge. ZERO LOSS Kapil unnecessarily brought afzal kuru’s case here. this is only ” seeds of poison”.

 2. todayandme சொல்கிறார்:

  வழக்கில் சம்பந்தப்பட்டுவிட்டதற்காகவே 23 வருட தனிமைச்சிறை தண்டனையை அனுபவித்த இவர்களுக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி சட்டவிதிகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யும் அதிகாரத்தை, இருக்கின்ற சட்டப்பிரிவுகளை பிரயோகப்படுத்தி நன்மையான செயலைச் செய்வதை

  ஊடகங்கள் (வடஇந்தியாவானாலும் சரி, தென்னிந்தியாவானாலும் சரி ஊடகங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்) மட்டுமல்ல, நன்குபடித்து நல்ல பதவியில் உள்ள மந்திரிகள், எம்பிக்கள் போன்றோர் தவறான தொனியில் சித்தரிப்பது அறியாமையினால் அல்ல, தெரிந்தே தான் பேசுகிறார்கள்.

  இது தமிழனுக்கு செய்யும் அயோக்கியத்தனம். (அவர்களைப் பொறுத்தவரை தமிழன் என்பவன் இந்தியன் இல்லை).

  என்ன செய்வது? பிறந்த இடத்திலும் புகுந்த இடத்திலும் காங்கிரஸின் கை. அவர்களுக்கு சாதகமாக அழுதே ஆகவேண்டும்..
  * * *
  ஆனால் கபில்சிபல் கதி இன்றைக்கு என்னவோ?
  * * *
  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், எம்.எல்.ஏ. எம்.பி. மந்திரிகள் நிலை என்னவோ?

  இங்க இருந்தால் கட்சித்தலைமைக்குக் கட்டுப்பட்டு எலக்சன் கேம்பைன்க்கு போகணும், மக்கள்கிட்ட என்னத்த சொல்லி ஓட்டுக்கேக்கறது?

  பேசாம பாராளுமன்ற தேர்தல் முடியும்வரை இவர்களை எல்லாம் பாரினுக்கு மெடிக்கல் டூர் போகச்சொல்லவேண்டியதுதான்.

 3. naren சொல்கிறார்:

  I accept Ragul statement.

 4. nparamasivam1951 சொல்கிறார்:

  நமது நிதி அமைச்சர் இது பற்றி சொல்லி இருப்பது சூப்பர்.

 5. Genes சொல்கிறார்:

  Perfect! Your Touch!

 6. Ganpat சொல்கிறார்:

  இந்த பதிவிற்கும் முந்தய பதிவிற்கும் நன்றி கா.மை.

  நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக அலசுவோமா?

  #ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கி ஆண்டுகள் பலவாகினும்,தீர்ப்பை நிறைவேற்றாமல் வைத்திருந்தது காங் அரசு.இதற்கு ஒரு காரணமும் கிடையாது.
  சிறையிலுள்ள நளினியை பிரியங்கா சென்று பார்த்து பேசினார்.இதற்கும் காரணம் இல்லை,

  #இவர்கள் தூக்கு தண்டனை காலதாமதம் ஆகி விட்டதை சுட்டிக்காட்டி அந்த தண்டனையை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றம் தூக்கு தணடனையை ரத்து செய்து ,மேலும் இவர்களுக்கு விடுதலை அளிக்கவும் மாநில அரசிற்கு அதிகாரம் இருப்பதாக தீர்ப்பு அளித்தது.

  #ஒரு வேளை ஜெயலலிதா தாமதித்து இருந்தால் ,கருணா “இவர்களை விடுதலை செய்ய வேண்டுகிறேன்” என ஒரு கடிதத்தை ஜெயாவிற்கு அனுப்பி, நகலை சோனியாவிற்கு அனுப்பியிருப்பார்.உடனே சோனியா “இதில் மத்திய அரசிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று மன்மோகன் மூலம் அறிவித்திருப்பார்.

  #இது ஜெயாவை இக்காட்டான நிலைக்கு தள்ளியிருக்கும்.விடுதலை செய்தால் இதற்கு மூல காரணம் கருணாவும் சோனியாவுமே என்ற பிரசாரம் நாடு முழுவதும் பரவியிருக்கும்.ஒரு வேளை விடுதலை செய்ய மறுத்திருந்தால் இவர் தமிழர்கள் விரோதி,பார்ப்பன பெண்,திராவிட துரோகி என கூவி தீர்த்திருப்பார்கள்

  #இப்போ ஜெயா முந்திக்கொண்டதால் (என்ன ஒரு சாமர்த்தியம்!)கருணாவும் சோனியாவும் திருடனுக்கு தேள் கொட்டியது போல முழிக்கின்றனர்.இந்த முடிவிற்கு மீண்டும் தடை உத்தரவு வாங்கியுள்ளனர்.

  அப்படிஎன்றால் நாம் செய்ய வேண்டியது..
  “கழுதைக்குப்போட்டாலும் காங்கிரசிற்கு(அதன் கூட்டணிக்கு) போடாதீர்!”

 7. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  மேற்கண்ட 7 நபர்களையும் விடுதலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.
  ஆனால் தங்கள் பதிவில் தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளில். உள்ள நியாயம் யோசிக்கவைக்கிறது.

 8. commonsense@gmail.com சொல்கிறார்:

  Your understanding of the whole situation is moronic.Try to use your brain and stop writing nonsense like this.

  Once a Prime minister,Always a Prime minister.

  It does not matter whether one is a fellow Tamilan or not not,

  these terrorists are responsible for killing our Prime minister.

  There ends all the hue and cry.

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில்,
  Criminal Procedure Code விதிகளைப் பின்பற்றி
  இவர்களை விடுதலை செய்வது பற்றி மாநில அரசு
  முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பளித்திருப்பதால், அதை விமர்சிப்பதே தவறான நடைமுறையல்லவா காவிரி சார்?
  இவனெல்லாம் நம் நாட்டுக்கு பிரதமராகி,… விளங்கிடும்!!!

 10. govindasamy சொல்கிறார்:

  புரியாமல் கேட்கிறேன் சார்.
  1.இந்த ஈழ அரசியல் இலங்கையில் அல்லாது இங்கு தமிழ்நாட்டில் ஏன்?
  2. அப்சல் குருவைப் பற்றிச் சொன்னது எந்த வகையில் irrelevant?
  3. terrorism அல்ல இது பழி வாங்குதல் தான் என்றாலும் இதை ராஜ பக்ஷெ விடம் காட்டாமல் இந்தியாவில் இந்தியத் தலைவரிடம் இவர்கள் காட்டியது சரியா?
  4.நேற்றைய ஹிந்துவில் பெரும் பத்திரிக்கையாளர்களே திரு. மோடியை பிரதம வேட்பாளராக ஆதரிப்பது ஆபத்து என முடிவெடுக்கும் நிலை இந்தியாவில் இருக்கும் போது ஒரு மதச்சார்பற்ற கட்சியின் தலைவரை போட்டுத் தள்ளினால் ஒரு ஆல்டர்னேட் இல்லாத நிலை ஏற்படுத்தி நாட்டை அபாயகரமான நிலைக்குத் தள்ளாதா? இந்த நிலையை நம்மை வைத்தே நமக்கு குழிபறிக்கும் நய வஞ்சகம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?
  5. நாட்டை இழந்தவர்கள் தீவிரவாதம் வரை செல்ல தயாராய் இருக்கும் போது நாட்டைக் காப்பாற்ற குறைந்தது நம் சிந்தனையையாவது காப்பற்றிக் கொள்ள வேண்டாமா?
  6. முதலில் நம் மண்ணில் நம் தலைவரை பயங்கரவாதம் செய்து கொன்ற ஒரு அமைப்பிற்கு நாம் வரிந்து கட்டிக் கொண்டு பேசலாமா?
  7. தமிழன் என்ற முறையில் நீதியைக் கடந்த நம் வாதம் சரியென்றால் சாதியைச் சார்ந்தவர் என்ற முறையில் ராமதாஸ் மாதையனை விடுதலை செய்யுங்கள் என்று கூறுவதையும் ஏற்றுக் கொள்ளலாமா?

  8. எல்லா வாதங்களையும் ஏற்றுத்தானே குற்றமிழைத்தவர்களையும் தண்டனையையும் நீதி மன்றம் முடிவு செய்தது. அதை மறுபடியும் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா? தீப்பெட்டி வாங்கினவன் தீவைத்தவன் இந்த வாதங்களை கணக்கில் கொண்டுதானே தீர்வு வெளியானது.
  9. கூடவே இறந்த பணியில் இருந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு என்ன பதில்.
  10. ராகுல் காந்தியை விடுங்க சார். குண்டு வெடிப்பில் இறந்த மற்ற தமிழர்களுக்கு யார் குரல் கொடுப்பது?
  11. ஈழத்தை பிரிக்க முயற்சி செய்து முடியாமல் இப்போது தமிழ் நாட்டைப் பிரிக்க சூது நடக்கிறது சார். இது கூடவா புரியவில்லை.
  12. இவர்களது அரசியல் ஞானத்தையும் பழி வாங்கும் வீரத்தையும் இலங்கையில் காட்டச் சொல்லுங்க சார். இங்க வந்து எல்லொரும் தூங்குவது போலவும் இவர்கள் தான் விழிப்புடன் இருப்ப்து பொலவும் கூக்குரலிடுகிறார்கள்.
  13 எல்லாத் தமிழனும் தெளிவாய் இருக்கான். பின்னூட்டமோ பதிவோ போடுவதில்லை அவ்வளவுதான்.

  முடிஞ்சா கொஞ்சம் விளங்க சொல்லுங்க சார். நான் தமிழின துரொகின்னு மட்டும் சொல்லாதீங்க.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கோவிந்தசாமி,

   சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசு எதுவும்
   செய்து விடவில்லை. உச்சநீதிமன்றமே தான்
   தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக
   மாற்றியது.

   சாதாரணமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட
   எந்த கைதியாக இருந்தாலும், 14 வருடங்கள்
   தண்டனை அனுபவிக்கப்பட்டபின், அவரது
   சிறைக்கால நடத்தையை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட
   மாநில அரசு விடுதலை செய்யலாம்
   என்பது சட்டம் சொல்வது தான்.

   தன்னுடைய தீர்ப்பின் ஒரு பகுதியாக, உச்சநீதிமன்றமே
   தான், தமிழக அரசு தண்டனைக் குறைப்பை
   சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றும்
   கூறி இருக்கிறது.

   தமிழகம் செய்யத் தவறியதாக மத்திய அரசு குற்றம்
   சொல்ல வேண்டுமேயானால், “உரிய முறை”யில்
   தங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று மட்டுமே
   குறை கூற முடியும்.

   கலந்து ஆலோசித்தால் மட்டும் என்ன – மத்திய அரசு
   “சரி” என்றா சொல்லப்போகிறது ? ஏற்கெனவே
   11 வருடங்கள் கருணை மனு மீது தூங்கியவர்கள்
   மீண்டும் பதிலே சொல்லாமல் இழுத்தடிப்பார்கள்.

   ஆமாம் – எல்லாரும்,வட இந்திய தொலைக்காட்சிகள்
   உட்பட – தமிழ் நாட்டு மக்களையும், தமிழக அரசையும்
   குறை சொல்கிறார்களே –

   கடந்த 11 வருடங்களாக தூக்கு தண்டனை மீதான கருணை மனுவை வைத்துக்கொண்டு,
   குறட்டை விட்டுத் தூங்கிய அல்லது வேண்டுமென்றே
   எந்த முடிவையும் தெரிவிக்காமல் சம்பந்தப்பட்ட கைதிகளை
   பரிதவிக்க விட்ட,மத்திய உள்துறை அமைச்சர்கள்
   அத்தனை பேரின் பெயரையும் வெளியிட்டு,
   வெளுத்து வாங்க வேண்டியது தானே ?

   “அவர்கள்” முன்னதாகவே தங்கள் “முடிவை”
   தெரிவித்திருந்தால், இவர்கள் அனைவரும் திருப்திப்படும்
   வண்ணம் இந்தக் கைதிகளும் தூக்கில்”தொங்கி”
   இருப்பார்களே. இவர்களின் ஆசைக்கு விரோதமாக
   செயல்பட்ட அந்த உள்துறை மந்திரிகளை அல்லவா
   இவர்கள் எல்லாரும் சாட வேண்டும்…?

   நண்பரே, இது குறித்து கடந்த 3 நாட்களாக
   இங்கு வெளிவந்திருக்கும் இடுகைகளை மீண்டும்
   ஒருமுறை பொறுமையாகப் படித்து விட்டு யோசியுங்கள்.
   உங்கள் சந்தேகங்களுக்கான எல்லா விளக்கங்களும்
   கிடைத்திருக்கும்.

   நான் சொல்வதை நீங்கள் ஏற்காவிட்டாலும்,ஓய்வு பெற்ற
   உயர்நீதிமன்ற நீதிபதி திரு கே.சந்துரு அவர்கள்
   சொல்லி இருப்பதைப் பாருங்கள்.

   நிச்சயம் நீங்களும் மனம் மாறி விடுவீர்கள் ..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • govindasamy சொல்கிறார்:

    Thank you.
    I agree with you about the technicalities. But the ideology of supporting someone who never acted with any conscience and thinking of the consequences for his people only because of caste, race, or any other else is making me feel low. These people may be innocent. But as I said arguments about that would have been taken care of before giing the judgement.
    Ony you replied with relevancy of my question and pointed out where I lack the sense of technicalities. But others are twisting the matter as though the killing in our soil and the uprise of anti nationalism is justified. THIS I CANNOT AGREE AT ANY COST. OUR LAND IS WORTH OUR LIFE. BUT THESE SKEWED ARGUMENTS TRY TO DRAG PEPOLE LIKE THE PIED PIPER. TIGERS HAVE THEIR OWN DARK SIDE. BUT NO BODY TALKS ABOUT IT. TIGERS ARE EXPERT IN FALSE PROBAGANDA LIKE GOYABEL.
    Any way. thank you for your decent response. I am not for any party, race or cast. but I am against terrorism and nothing could justify the killing in our soil. They could have taken a strategy that could be accepted by anyone at any time. But they have not. Finally their aggression destroyed them. It is still in my mind causing disturbance.
    Thank you sir, thank you very much for your relevant reply.

 11. Ganpat சொல்கிறார்:

  நண்பர் கோவிந்தசாமி,
  உணர்ச்சி வசப்படாமல் இந்த சிறு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
  1)குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இந்திய உச்ச நீதி மன்றத்தால் 1999 மே மாதம் 11 ஆம் நாள் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேர்களுக்கு, 2011 செப் 9 ஆம் நாள் அதாவது சுமார் 4500 நாட்களுக்குப்பிறகு அதை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது ஏன்?
  2)IPKF இந்திய அமைதிப்படை 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்ப கூறப்பட்ட காரணம் என்ன? ஆனால் 1990 வரை அங்கு அவர்கள் உண்மையில் செய்தது என்ன?

 12. nparamasivam1951 சொல்கிறார்:

  நண்பர் கோவிந்தசாமி சார், உணர்ச்சி வசப்படாதீர்கள். சிறிது அமைதி ஆகி, பதில் கூறுங்கள்
  IPKF இலங்கை செல்ல யார் வேண்டிக் கொண்டார்கள்! அங்கு அவர்கள் செய்தது என்ன? ஒரு கோர்ப்படேக்கு கொதித்து எழுந்த அரசு, படுகொலை நடந்த போது செய்தது என்ன? நேற்றைய ஹிண்டுவில் சொல்லி இருப்பவர்கள் பெரும் பத்திரிக்கையாளர்களா? தமிழகம் மேல் உண்மையில் மத்திய அரசு அக்கரை இருக்குமானால், காவிரி மற்றும் முல்லைப் பெரியாரில் இன்றும் தமிழன் கையேந்தி இருப்பது ஏன்? இரு வெவ்வேறு மாநில முதல்வர்கள் புரிந்து கொண்டு ஏற்படுத்திய கிருஷ்ணா நீர் திட்டம் இன்றளவும் அமைதியாக வெற்றிகரமாக உள்ள போது, மத்திய அரசால் உண்மையில் அக்கரை இருந்திருந்தால் முல்லை என்ன காவிரி என்ன? நமது பிரதமர் கொல்லப் பட்டதில் முழு தமிழகமும் கொதித்து எழுந்தது உங்களுக்கு தெரியாதா? தமிழர்கள் எப்போதும் நான் முதலில் இந்தியன், பின் தான் தமிழன் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளான். ஆனால் தமிழனை ஒதுக்கி வைப்புத் காங். தான். இப்போது வரை மத்தியில் காங். தானே ஆட்சியில் உள்ளது. தண்டனையை ஏன் நிறைவேற்றவில்லை? தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டும் என்றா? ராஜபக்சேவிற்கு ராடார் முதற்கொண்டு கொடுத்து, அந்த ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து, என்ன இது? நான் முன்பே கூறியபடி, நாம் இந்தியர்முதலில், தமிழர் பின்பே எனினும் நடப்பவைகளை பார்த்து அறியாத / அறிந்து கொள்ள முடியாத மூடர்கள் அல்ல.

 13. GOPALASAMY சொல்கிறார்:

  janab. govindasamy.

  There is point in talking about Modi in this issue. In India, people who are getting 30 % of the people’s mandate are ruling. some journalists view is important for some people. Not for all.
  Where was Rrajapkashe in 1991. to show revenge.
  Secular Rajiv had given crores of rupees to Prabakaran for accepting his peace formula.
  Why he should consider Prabakaran? Secular indra only gave training to LTTE and other groups. Why? Srilankan matter was complicated by Indra family for their own end.
  In your opinion Rajiv should not have been killed since there was no alternative for Rajiv and he was secular. if anybody is not secular in your yardstick and if there was alternative will you accept that killing?
  rajiv’s special qualities does not come into account. we can not support any sort of killing.
  Here in this blog also nobody supported Rajiv’s killing. The people who actively paricipated in that plot were already killed or died.
  in this connection i want to say about the photographer (from GK Vale studio) who was killed in bomb blast. Do you want to say he is also involved in the plot? If he is alive, he also would have
  been behind bars.
  Even if these seven persons involved indirectly in rajiv’s killing, they suffered already 23 years in jail.
  when Rajiv was killed, whole tamilnadu mourned his death. in immediate election also, cong/aidmk
  won landslide victory. Now majority of tamil people want these seven people’s release on mercy ground

  noe

  • Govindasamy சொல்கிறார்:

   Gopalsamy ji,
   Sir,
   With due respect, I agree the 1991 year could not be connected with Rajapakshe. But think it over. If these people are paying their enemies with bullets, Rajapakshe was not getting any till the death of tigers. I am just questioning their ideology and nothing else. Because of their wrong approach many innocent people have to face the consequences that could not be rectified at any cost. Think of them. They themselves have different opinions.
   Second, if these people want their own land, which is quite natural and justified, don’t we have a common sense to protect our land and our unity since we are in the middle of a situation where we get hostile responses from every where to snub our growth?
   Third, if this issue is a fight on the human rights angle, naturally every one should be protected from such sentences including kasab, absal guru and so many others. Right ? Then we need not have any judiciary system to judge and provide punishment. That is the conclusion to be drawn ultimately.
   Finally, what I am trying to say is , whatever you want to say, or support, do in with open mind and never have a myopic view over Race, caste etc.,
   Thank you sir,

 14. govindasamy சொல்கிறார்:

  Gopalsami ji,
  Sir,
  To add on, I never brought Modi here. What I am trying to say is former PM Rajive’s Murder had caused political situations and I think it was intended to also. Naturally as you had pointed out the 30 percent mandate are ruling and we are even questioning the legitimate 30 percent mandate, naturally we cannot allow someone who don’t have any right to influence the mandate at any ways either by voting or by murdering the candidates, right? That is what. That is what makes me disturbed. These people could not make any change in their own country on either ways but are causing political disturbance to a great country in the name of Race. How could you agree with that? These people are like counterfeit notes which at surface seems harmless but determined to ruin the nations economy like cancer. We fail to see the Bigger picture. In the emotional upheaval which is unduly utilised by them, we forget to see the consequences. That is bad. Because preset generation are much more carried away by these things rather than realising the consequences.
  Thank you sir.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.