சில தகவல்களைத் தேடி வலைத்தளங்களில்
அலைந்து கொண்டிருந்தேன்.பாகிஸ்தான் நாட்டின்
பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஒரு வலைத்தளத்தை
பார்த்தபோது, எதேச்சையாக அதில் ஒரு விளம்பரத்தைப்
பார்த்து அதிர்ந்தேன் – அந்த விளம்பரத்தைப்
பின் தொடர்ந்ததன் விளைவே இந்த இடுகை.
லிங்க பைரவியின் அருளைப் பெற்றவர்கள்
வாழ்வு,
மரணம்,
ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து
வருத்தமோ அல்லது அச்சமோ
கொள்ளத் தேவையில்லை.
பைரவியின் அருளைப் பெற்றால், எவையெல்லாம்
நல்வாழ்வு என ஒரு மனிதர் கருதுகிறாரோ,
அவையனைத்தும் அவருக்குக் கிடைக்கும்.
பிள்ளைப் பேறு ஆகட்டும்,
பிள்ளைகளுக்கான வித்யாரம்பம் ஆகட்டும்,
நடக்காத திருமணம் ஆகட்டும்,
தீராத வியாதி ஆகட்டும்,
இறுதிக் கடன்களான காலபைரவ கர்மா ஆகட்டும்,
வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை
அத்தனை அம்சங்களுக்கும் விடை சொல்லும்
அற்புத தேவி – லிங்கபைரவி.
இந்த செயல்முறையை செய்வதன் மூலம்,
லிங்கபைரவி மற்றுமொரு வடிவில், உங்கள்
இல்லங்களில் குடியிருப்பாள்.
புதுவீட்டில் கிரஹப்பிரவேசம் செய்யும்போதோ,
அல்லது ஏற்கனவே குடியிருக்கும் இல்லங்கள் மற்றும்
அலுவலங்களிலோ இதை செய்து கொள்ள முடியும்.
உங்கள் பெயர், தொலைபேசி எண், விலாசம்
போன்ற விவரங்களை பதிவு செய்யுங்கள்.
தகுந்த நபர் ஒருவர் உங்களை நேரில் வந்து
தொடர்பு கொள்வார்.
இந்த செயல்முறை முழுவதுமே லிங்கபைரவி
கோவிலை பராமரிக்கும் பைராகினி மா ஒருவர்
நேரடியாக வந்து செய்வார்.
இதைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த லிங்கபைரவி மந்திர
உச்சாடனங்கள் செய்யப்படுகின்றன. இதன் மூலம்
தேவியின் இருப்பும் (Presence) அருளும்
அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.
அதன் பிறகு தேவிக்கு விசேஷ அபிஷேகங்கள்
செய்யப்படும். சக்தியூட்டப்பட்ட பைரவியின் வடிவங்களை
வீட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வைக்கப்பட்டு தேவி
ஆலயத்தில் இருக்கக்கூடிய திரிசூலத்தில் மட்டுமே
கட்டப்படும் சூத்திரம் இந்த வீட்டிலும் கட்டப்படும்.
இப்பூஜையின் விளைவால் ஏற்பட்ட தீவிரமான சக்தியால்
இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டிலுள்ள அனைவரும்
தேவியோடு தொடர்பு கொள்வதைக் காண முடிகிறது.
உங்கள் இல்லங்களிலும் இந்த பூஜை நடைபெற…
2013,டிசம்பர் 16ந்தேதி, பவுர்ணமி இரவு நடக்கும்
புனித யந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
நேரிடையாக யந்திரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வீடுகளிலோ –
அலுவலகங்களிலோ –
கடைகளிலோ –
தொழில் செய்யும் இடங்களிலோ –
சிறிதாகவோ, பெரிதாகவோ – இடத்தின் தன்மைக்கேற்ப
எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். அதன் பலனைப்
பெறலாம்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை -வாழ்வின் ஒவ்வொரு
நிலையிலும் உங்களுக்கு லிங்கபைரவியின்
அருள் பாலிக்க விசேஷ சடங்குகள் உண்டு.தேவியின்
யந்திரம் அதற்குத் தகுந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தேவியை அலட்சியம் செய்தாலோ,
பராமரிக்கத்தவறினாலோ, அவள் உங்கள் இடத்தை விட்டு
அகன்று விடுவாள். அப்படி வெளியேறும்போது – மிகக்
கோபத்துடன் வெளியேறுவாள். அப்போது நான் உங்களுக்கு
துணை இருக்க மாட்டேன். அந்த கோபத்தின் விளைவுகளை
நீங்கள் தான் அனுபவிக்க வேண்டி இருக்கும். எனவே
அவளை பூஜிப்பதில் சிறிதும் அலட்சியம் கூடாது.
காலபைரவ கர்மா என்பது இறந்து போன ஒருவருக்கு
லிங்கபைரவி தேவியின் அருள் கிடைக்கும்
பொருட்டு செய்ய வேண்டிய சடங்குகள்.
இயற்கையாகவோ, துர்மரணமாகவோ இறந்து போனவர்கள்
நல்லபடியாக பயணிக்க தேவியின் கருணை தேவை.
இயற்கை மரணமாக இருந்தால் –
50 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் –14 நாட்களுக்குள்
50 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் –48 நாட்களுக்குள்
துர்மரணமாக இருந்தால் -(விபத்து, தற்கொலை
போன்றவை) –
33 வயதிற்கு மேற்பட்டவர் – 48 நாட்களுக்குள்
33 வயதிற்கு உட்பட்டவர் – 90 நாட்களுக்குள்
ஒருவேளை இந்த குறிப்பிட்ட கால கட்டத்திற்குள்
செய்ய முடியாவிட்டால் – இறந்த ஒருவருக்கு
எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய சடங்கு
ஒன்று இருக்கிறது –
காலபைரவ சாந்தி !
எந்த மாதமாக இருந்தாலும் சரி -செய்யலாம்.
அமாவாசையன்று செய்ய வேண்டும்.
இதைச் செய்ய தேவையானவ –
இறந்து போனவரின் புகைப்படம்,
பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி
———-
கோயம்புத்தூர், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்,
இருக்கும் லிங்கபைரவி கோவிலில்
கீழ்க்கண்ட சடங்குகளை நிகழ்த்தலாம் –
தஹ நிவாரணம் (நினைத்தவை நடக்க )-
சர்ப்ப சேவா (திருமண உறவு பலப்படவும்,
பிள்ளைப்பேற்றிற்காகவும்) –
க்லேச நஷக்ரியா (சுய பாதுகாப்பிற்காக) –
விளக்கு சேவா ( வாழ்வில் வளமும்
வற்றாத செல்வமும்பெற )-
கர்ண வேதா (குறிப்பிட்ட சக்தி இடங்களில் துளையிட)-
திருமண நிகழ்வுகள் ( விரும்பும் முறைப்படி
திருமணங்கள் நிகழ்த்த, அறுபதாம் கல்யாணம் உட்பட ) –
—-
லிங்க தேவிக்கு என்ன காணிக்கை கொடுக்கலாம் ?
பவுர்ணமி தினத்தன்று, மேள, நாட்டிய, இசை
நிகழ்வுடன் தேவிக்கு ஊர்வலம் நடத்தலாம் –
தேவியின் அருளையும், கருணையையும் வேண்டி,
பசுக்களை தானமாகக் கொடுக்கலாம் –
குடும்ப நலத்துக்காக தாலி அர்ப்பணம் செய்யலாம் –
நல்ல ஆரோக்கியம் வேண்டி – முடி இறக்கலாம்.
தேவி அபய சூத்ரம் – பூஜித்த மங்கல நூலை
ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும்
40 நாட்கள் கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர்
அவற்றை கழற்றி எரித்து விட வேண்டும் (அறுக்கக்கூடாது)-
தேவி நேத்ர அர்ப்பணா – செம்பிலோ, வெள்ளியிலோ
கண் வாங்கி தேவிக்கு சமர்ப்பித்தல்
லிங்க பைரவி வஸ்த்ர அர்ப்பணம் – தேவிக்கு
அணிவித்த ஆடையை பணம் கொடுத்து வாங்கி
விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளலாம். வீட்டில்
வைத்திருந்தால் நல்லது நடக்கும்.
————–
காவிரிமைந்தனுக்கு என்ன ஆயிற்று –
இதெல்லாம் ஏன் இந்த வலைத்தளத்தில்
எழுத வேண்டும் என்று கேட்கிறீர்களா …?
இடுகை மிகவும் நீண்டு விட்டது – எனவே,
அடுத்த பகுதியில் மீண்டும் வருகிறேன் -விவரமாக.
அதற்குள் நீங்களும் தான் கொஞ்சம் இதைப்பற்றி
யோசித்து வையுங்களேன் !!
இது போன்ற விஷயங்கள்தான் நாட்டில் காலங்காலமாக நடந்து வருகின்றவே ஐயா.. புதிதாக இதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. பக்தி, ஆன்மிகம், கடவுள், நேர்மை, பயம், உண்மை, அறிவு, பிரபஞ்ச சக்திகள் என எல்லாவற்றையுமே மக்கள் குழப்பியடித்துவிட்டனரே!! புதிய மொந்தைகளில் இது போன்ற ஆறிப்போன சரக்குகளை சுட வைத்து கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். இதில் நாம் பேச என்ன இருக்கிறதெனப் புரியவில்லை. இருந்தாலும் வழக்கம்போல் தங்கள் அடுத்த பதிவைக் காணக் காத்திருக்கிறேன்.
அட என்னசார் இப்படி த்ரில் கிளப்பி புதிர் போடுறீங்க.
கோவை, வெள்ளியங்கிரி….
நான் ஊகிப்பது சரியாக இருந்தால்…
”இதன்” பின்னால் இருப்பவர் அந்த ஸர்வ சக்தி படைத்தவர் தான்.
ஸத்குருவே சரணம் சரணம் சர சரணம் ரணம்…
ஜக்கி வாசுதேவைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார் கா.மை. ஆனால் என்ன சொல்ல வருகிறார் என்றுதான் தெரியவில்லை.
ஒரு கும்பல் தண்ணீரை, சக்தி லேகியம் என்று விற்று சம்பாதிக்கும் போது, இவர்கள் கடையிலும் ஏதாவது போட்டி வேடிக்கை செய்தாகவேண்டுமே?
சிசிய கோடிகள் தெளிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது குருவின் கடமை அல்லவா?
பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப் பட்ட ஒரு வலைத்தளத்தில் இந்த விளம்பரம் இருப்பது நிறைய சந்தேகத்தை கிளப்புகிறது. ஏதாவது கோட் ஆக இருக்குமோ?
எனக்கு புரிந்துவிட்டது.இதில் …
ராபர்ட் வோத்ரா
ப.சிதம்பரம்.
ஜக்கி.வாசுதேவ்
ஏதேனும்
உயர் போலீஸ் அதிகாரி.(IG level)
உயர்நீதின்மன்ற நீதிபதி
அல்லது
இந்திய மாநில முதலமைச்சர்களில் யாரேனும்
சம்பந்தபட்டிருக்கவேண்டும்.
இதில் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது..
சந்தன கடத்தல் வீரப்பன்
மற்றும்
ஒசாமா பின் லேடன்
ஆக இருக்கவேண்டும்.
This is ISHA MNC Company Advertisement