துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களுக்கு சமர்ப்பணம்…

துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களுக்கு
சமர்ப்பணம்…


இரண்டு மாதங்களுக்கு முன்னர் துக்ளக் ஆசிரியர்
“சோ” அவர்கள் துக்ளக்கில் பணி புரியும் அவரது
உதவியாளர் “எஸ்.ஜே.இதயா” அவர்களை இலங்கை சென்று
நிலைமையை நேரடியாகக் கண்டு, “உண்மை” நிலையை
கட்டுரையாக வடித்துத் தரச்சொன்னார். இதயா அவர்களும்
சென்று-வந்து 5-6 வாரங்கள் துக்ளக்கில் “வடித்துத்”தந்தார்.

அவர் சொந்தமாகப் பார்த்ததையும் கேட்டதையும்
வடித்தாரா இல்லை அவற்றை வடிகட்டி, சம்பளம் தரும்
ஆசிரியர் சொன்னதை “வடித்துத் தந்தாரா” என்பது அப்போது
பலருக்கும் தெரியாது.(ஆனால் பாவம் இதயா என்ன
செய்வார் – that is His Master’s Voice.)

துக்ளக் ஆசிரியர்”சோ”சொல்வதை அப்படியே
வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் பல படித்த வாசகர்கள்
தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.சோ தவறாகச் சொல்ல
மாட்டார் என்பது அவர்களது நம்பிக்கை ! ஏன் -ஒரு
காலத்தில் நானும் அப்படித்தான் இருந்தேன் !

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்த துக்ளக்
வாசகர்களின் சிந்தனைகள் எல்லாம் இந்த கட்டுரைத்
தொடரின் மூலம் “brain wash” செய்யப்பட்டன.
இலங்கைத் தமிழர்களுக்கு பெரிய பிரச்சினைகள் ஏதும்
இப்போது இல்லை என்றும், அவர்கள் சுதந்திரமாக
வாழ்கிறார்கள் என்றும் –

பிரச்சினைகளை செயற்கையாக உண்டு பண்ணுவதே,
புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சினையை
பெரிதுபடுத்தி அரசியல் நடத்தும் தமிழகத் தலைவர்களும்
தான் என்று இந்த கட்டுரைகளின் மூலம் பிரகடனம்
செய்யப்பட்டது. துக்ளக் வாசகர்களில் பெரும்பாலானோர்
இந்த கட்டுரை வாசகங்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

 

ஈழத் தமிழர்களின் துயரத்தை, அவலத்தை –
தெரிந்துகொண்டே,
வேண்டுமென்றே,
தவறாகச் சித்தரிக்கும்
“சோ” அவர்களுக்கு,
நேற்றைய முன்தினம் சனிக்கிழமை (30/11/2013)
அன்று, வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்
அவர்கள் ஆற்றிய உரையை கீழே சமர்ப்பிக்கிறேன் –

பெருவாரியான தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள வடக்கு மாகாண முதல்வர் –
தாங்கள் எவ்வாறு எல்லாம் அவதிப்படுகிறோம் என்பதை,
ஆஸ்திரேலிய தூதரையும் அருகில் வைத்துக்கொண்டு,
வெளிப்படையாகக் கூறுகிறார் –

ஆனால் இலங்கைப் பக்கமே எட்டிக்கூடப் பார்க்காமல்
இங்கிருந்து கொண்டே,மனசாட்சியை
மறந்து, சற்றும் இரக்கமின்றி சோ சொல்கிறார்
அங்கு பெரிய பிரச்சினை ஏதுமில்லை என்று.

வடமாகாண முதல்வரின் உரை கீழே –

—————-

“என்னை அழித்தாலும் உண்மை ஜெனிவாவில்
நர்த்தனமாடும் – முதல்வர் விக்னேஸ்வரன்..
[ சனிக்கிழமை, 30 நவம்பர் 2013, 03:23 GMT ]

vigneswaran.2
என்னை அழித்தால் என்ன என்று இராணுவத்தினர்
எண்ணக்கூடும், ஆனால் உண்மை எங்கும் போகாது என்று
தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.
விக்னேஸ்வரன்.

விசுவமடுவில் நேற்று நடந்த நவீன அரிசி ஆலைத் திறப்பு
விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியத் தூதுவரின் பிரதிநிதியும் கலந்து கொண்ட
இந்த நிகழ்வில், முதல்வர் விக்னேஸ்வரன் மேலும்
தெரிவித்த்தாவது,

அவுஸ்ரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையில்
இருக்கும் மிகப்பெரிய பிணக்கு சட்டவிரோதமாக எங்கள்
மக்கள் அங்கு செல்வதே.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதை அவர்கள்
தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவது, எங்கள் வடக்கு மாகாணம் இராணுவக்
கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது.

அதாவது மக்களின் காணிகள் இராணுவத்தினரால்
பலாத்காரமாகக் கையேற்கப்பட்டு மண்ணின் சொந்தக்காரர்கள்
தமது மண்ணில் வாழ வழியில்லாமல் இராணுவக்
கெடுபிடிக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றனர்.

இரண்டாவது, களவாகப் பல வழிகளில் தெற்கிலிருந்து
சிங்கள மக்களைக் கொண்டு வந்து, வட மாகாணத்தில்
குடியேற்றி தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டுச்
செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இதற்கு இராணுவம் ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது.

மூன்றாவது, எமது மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
எமது பெண்கள் பலாத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு
ஆளாக்கப்படுகின்றார்கள்.

யாரால் இவை நடக்கின்றன என்று தெரிந்தும்,
காவல்துறையினர் நடவடிக்கையை எடுக்க முடியாத
நிலையில் இருக்கின்றனர்.

நான்காவது, தொழில்வாய்ப்பற்ற நிலை.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் எம் மக்களுக்கு
தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத
நிலையில் இதுவரை காலமும் இருந்து வந்துள்ளோம்.

எமது வீடுகளையும், காணிகளையும் இராணுவம்
எடுத்து வைத்திருக்கும் போது –
எமது மீனவர்களின் தொழில்களை இராணுவமும்,
கடற்படையும் செய்யும் போது
எமது வேளாண்மை நிலங்களை இராணுவத்தினர்
எடுத்துப் பயிரிடும் போது –
ஏ9 வீதி நெடுக எம்மால் செய்யக் கூடிய
தேநீர்க் கடை, உணவக வியாபாரங்களை
அவர்களே செய்யும்போது –
எமக்குத் தொழில் வாய்ப்புக்கள் எங்கிருந்து
கிடைக்கப் போகின்றன?

ஆகவே, வேலையில்லாமல், காணியில்லாமல்,
பாதுகாப்பு இல்லாமல், போகும் இடம் தெரியாமல் தான்
அவுஸ்ரேலியா செல்ல முடிவு எடுக்கிறார்கள் எம் மக்கள்.

போரின் கடைசி நாட்களில் இராணுவ பலத்தை மத்திய
அரசாங்கம் வெகுவாக அதிகரித்தது. சுமார் 3 இலட்சம்
வரையில் கூட்டியதாகக் கூறப்படுகிறது.

போர் முடிந்த பின்னர், வடக்கு மாகாணத்தில் அவர்களைத்
தரிக்க வைத்து, அவர்களின் குடும்பங்களையும் அங்கு
செல்லவிட்டால், வட மாகாணத்தைக் காலா காலத்தில்
சிங்கள மயமாக்கி விடலாம் என்ற எண்ணத்தில் தான்,
தொடர்ந்து போரின் பின்னர் சுமார் ஐந்து ஆண்டு காலம்
இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

இதனால் போரின் பின்னர் கூட எமது மக்களுக்கு
ஜனநாயகம் கிடைக்கவில்லை.

இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், ஐ.நா
அமைதிப்படையில் இங்கிருக்கும் இராணுவத்தினரை
அனுமதிக்கலாமா என்பதை ஆராய வேண்டும்.

அத்துடன், அவர்களில் பெரும்பாலானோர் சிவில்
வாழ்க்கைக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டும்.

அது நடக்கும் வரையில் எமது வட இலங்கை மக்களுக்கு
விடிவே கிடையாது.

இவ்வாறு நான் கூறுவதால் என்னை அழித்தால் என்ன
என்று இராணுவத்தினர் எண்ணக்கூடும்.

ஆனால் உண்மை எங்கும் போகாது.
இங்கு தான் இருக்கும்.
அந்த உண்மைகள் தான் இன்று ஜெனிவாவில் நர்த்தனம்
ஆடுகின்றன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.”

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களுக்கு சமர்ப்பணம்…

 1. c.venkatasubramanian சொல்கிறார்:

  if u want u can visit &appraise,why should we support srilankan Tamils? srilankan Tamils should obey the law of the land ,.srilanka tamil problem is exclusively for the politicians &not for me/us
  ondavnda pidari oor pidariyei padam paarkkakoodadhu

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.வெங்கடசுப்ரமணியன்,

   மன்னிக்கவும்.
   இந்த இடுகை உங்களுக்கானது அல்ல.
   அது மனதில் ஈரம், இரக்கம், கருணை
   உள்ள மனிதர்களுக்கானது.

   இலங்கையின் சரித்திரம் தெரிந்தவர்களுக்கானது.

   நீங்கள் இந்த இடுகையை மறந்து விட்டு,
   உங்கள் வழக்கம் போல், சாப்பிட்டு, தூங்கி
   உங்களுக்கான மற்ற பொழுதுபோக்குகளைத்
   தொடரலாம்.

   -வாழ்த்துக்களுடன்,

   காவிரிமைந்தன்

 2. vinoth சொல்கிறார்:

  @c.venkatasubramanian
  ondavnda pidari oor pidariyei padam paarkkakoodadhu…
  வெங்கடேஷ் சுப்பிரமனியண்..
  http://deviyar-illam.blogspot.in/2013/03/01.html
  இதை கொஞ்சம் படிச்சு பார்த்துட்டு… அப்புரம் முடிஞ்சா.இதே கருத்த சொல்லுங்க..

 3. BC சொல்கிறார்:

  வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் உங்கள் தமிழ்நாட்டின் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஒருவரே.அவர்களுக்கு உள்ள தகுதிகள் கூட இவருக்கு கிடையாது. இலங்கையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக, தமிழ்நாட்டில் உள்ள புலிகள் வார்த்தையில் சொல்வதானால் சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின் நிறைந்த அரசு ஒய்வூதிய பணத்தை பெற்று கொண்டு அரசியலுக்கு வந்தவர். அவர் தன்னை வீரனாக காட்டி கொள்ள என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்.
  சோ, எஸ்.ஜே.இதயா அவர்கள் இலங்கையை பற்றி சொன்னது உண்மையை தவிர வேறு இல்லை.

  • எழில் சொல்கிறார்:

   //தமிழ்நாட்டின் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஒருவரே.அவர்களுக்கு உள்ள தகுதிகள் கூட இவருக்கு கிடையாது.//

   எந்த விதத்தில் என்று கூற முடியுமா? அவரை விட உங்கள் கணிப்பில், அங்கு தகுதியானவர்கள் யார் இருக்கிறார்கள்? டக்லஸ்? கருணா?? பிள்ளையான்???

   //இலங்கையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக, தமிழ்நாட்டில் உள்ள புலிகள் வார்த்தையில் சொல்வதானால் சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின் நிறைந்த அரசு ஒய்வூதிய பணத்தை பெற்று கொண்டு அரசியலுக்கு வந்தவர். //

   அவர் முறைப்படி படித்து, சட்ட வல்லுனாராகி பின் நீதிபதியானவர். ஓய்வு பெரும் வயதில் ஓய்வு பெற்று இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் சாதித்தது அவரின் கடின உழைப்பினால் வந்தது. இதில் என்ன குறையை கண்டீர்? அவர் சிங்கள அரசுடன் கூட்டு சேர்ந்து இயங்கினார் என்பதற்கு அதாரம் என்ன?

   விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் சரளமாக பேச எழுத தெரிந்தவர். கண்ணியத்திர்க்காக சர்வதேச ரீதியில் மதிக்கப்படுபவர். . சம்பந்தன் போன்றோர் முதலமைச்சராக வந்தால் அவர்கள் மீது புலி முத்திரை குத்தலாம் என (உங்களை போலவே) காத்திருந்த சிங்கள அரசுக்கு TNA முன்னெடுத்த ‘Master Stroke ‘ தான் விக்னேஸ்வரனை முதலமைச்சராக நியமித்ததது. விக்னேஸ்வரன் எந்த இயக்கங்களிலும் சாராது, வாழ் நாள் முழுவதும் அரசு பணியில் இருந்து வந்ததால் அவர் மீது சிங்கள அரசு ‘character assasination ‘ செய்து பிரச்சனைகளை திசை திருப்ப முடியாமல் திணறுகிறது. நீங்களும் ராஜபக்சே போன்ற எண்ணமுடையவராக இருப்பதால் தான் என்னவோ உங்கள் எழுத்திலும் ஏமாற்றம் விரக்தி தெரிகிறது.

   சரி எனக்கு பதில் எழுதும் போது, முடிந்தால் தயவு செய்து விக்னேஸ்வரன் உரையில் எங்கெல்லாம் உண்மைக்கு புறம்பானது இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதுங்கள்.
   எமது தலைவர் கட்டுமரம் அடிக்கடி சொல்வது போல் ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று கருத்து எழுதாதீர்கள். நன்றி!

 4. janakiraman சொல்கிறார்:

  Vigneshwaran yaar enbathiikaattilum, pesiyathu enna,, athil unmaiyum niyayamum ullathaa yenbathai paarungal. Angulla thamizharkalai onda vanthavargalaha neengal paarpathilirunthu ungal mana ottam purigirathu..

 5. nparamasivam1951 சொல்கிறார்:

  இலங்கை பற்றிய பதிவுகளுக்கு நமது மறுமொழி எழுத மிகவும் தயக்கமாக உள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.