நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்கள் …!!

நான்கு நூற்றாண்டுக்கால அரிய
இந்திய நாணயங்கள் …!!

தம்படி, காலணா, அரையணா, ஒரணா, இரண்டணா,
நாலணா, எட்டணா, அரை ரூபாய் – இதெல்லாம்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பார்த்திருக்கிறீர்களா ?
இன்றைய தலைமுறையினர் பலபேர் இவற்றை
எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

என் பேத்திக்கு இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்
சொல்லிக் கொடுக்கலாம் என்றெண்ணி
வலைத்தளத்தில் புகைப்படங்களுக்காகத் தேடினேன்.
கூடவே கிடைத்தது அருமையான புதையலாக, கிழக்கிந்திய
கம்பெனியில் துவங்கி பல அரிய நாணயங்களின்
புகைப்படங்கள்.

கொஞ்சம் extra efforts ..! இங்கே போட்டால் –
நீங்களும், உங்கள் வீட்டுக்குழந்தைகளும் கூட அவற்றை
பார்க்கலாமே என்று இங்கேயும் பதிவிடுகிறேன்.

இன்றைய இந்திய நாணயங்கள் – ஒரு ரசனையற்ற,
உணர்வற்ற அதிகார வர்க்கத்தின் அலட்சியப் படைப்பு.
நாணயங்களுக்கிடையே வித்தியாசமே இல்லாமல்
யந்திரத்தனமாக அச்சிடுகிறார்கள். அரை ரூபாயா
ஐந்து ரூபாயா, ஒரு ரூபாயா இரண்டு ரூபாயா என்று
மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள
வேண்டியிருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனிக்கும், பிரிட்டிஷ் இந்திய அரசுக்கும்
இருந்த கலை உணர்வோ, ரசனையோ – நிகழ்கால
அரசுகளுக்கு இல்லை என்பதை இந்த நாணயங்கள்
நன்கு உணர்த்துகின்றன.

இனி நாணயங்கள் உங்கள் பார்வைக்கு –

முதலில் தம்படி –

thambadi-1
தொண்டி காலணா –

thondi kaalana-2
காலணா –

1835 kaalana.-3

kaalana-back-4

அரையணா –

1942 araiyana-5 both sides
ஓரணா –

1915 one anna-6 front

1939 one anna back side-7
இரண்டணா –

two anna front-8

two anna back-9
ஒரு ரூபாய் –

one rupee 1840- 10

 

ஹைதராபாத் சமஸ்தான நாணயம்

hyderabad state four annas

கிழக்கிந்திய கம்பெனி ஆப்பிரிக்க வியாபாரத்திற்காக
அச்சடித்த 22 காரட் தங்கக் காசு (மொஹர் )

one mohur -back

one mohur -eicompany
கிழக்கிந்திய கம்பெனி காலத்திய நாணயங்கள் –

 1616 one anna east india company

east india company-1

east india company-2

1818 half anna ram darbar front

ராமர்,சீதை,லட்சுமணன், அனுமார் அடங்கிய
1818 -வருடத்து நாணயம்

1818 ram darbar east india company back1818 ram darbar east india company coin

அனுமார் நாணயம்

hanuman eicompany-front half annahanuman eicompany- backside half anna 1818

ராதா கிருஷ்ணர் நாணயம்

radha krishna -eic -1818 frontRadhe Krishna1818 eic - half anna back

லட்சுமி நாராயணர் நாணயம்

lakshmi narayana -1616

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்கள் …!!

 1. Paramasivam சொல்கிறார்:

  Nice collection of coins display.

 2. Srini சொல்கிறார்:

  Dear Sir

  Very good collections. East India company was better in printing coins that spoke about our culture and Gods. There was no SICKULARISM issues…. See the coins that the present Indian govt is making, I request you to upload few coins minted recently that says nothing about the period, the country or even its rulers… very sad state of affairs.

  regards
  Srini

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தம்டிக்கு பிரயோஜனமில்லாத பதிவு என்று அறவே கூறிவிட முடியாத மிகவும் பொக்கிஷமான ஒரு பதிவு!
  இந்த அரையணா தான் பிற்காலத்தில் ஐந்து பைசா நாணய வடிவமும்
  ஒரு அணா தான் பத்து பைசா நாணய வடிவமும் பெற்றுள்ளன போல!
  இன்றைய தலமுறையினற்கு 1, 2, 3, 5, 10, 20 பைசா நாணயங்கள் எல்லாம் தெரியுமா என்றும் தெரியவில்லை.
  அது போகட்டும், அடுத்த தலைமுறையினர் பணம் என்றால் என்னவென்றே அறிய வாய்ப்பில்லாமல் போகப்போகிறது. அதற்கு காரணம், credit/debit cards & online banking and other money transfer means!

 4. johan paariS சொல்கிறார்:

  அரிய தொகுப்பு படங்களுக்கு நன்றி!
  இறையுருவிலும் நாணயங்கள் இருந்துள்ளன.மிக ஆச்சரியலமாக உள்ளது.அஜீஸ் அவர்கள் சொல்வது போல் வருங்காலம் இவை தேவையற்றவை. நான் காசைத் தொட்டு 1 மாதமாகிறது. கடனட்டை யாவும் செய்கிறது.

 5. வணக்கம்
  ஐயா

  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானதிற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.முகவரி
  http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_10.html?showComment=1386637420483#c1146577820726854657

  தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 6. துரை செல்வராஜூ சொல்கிறார்:

  அன்புடையீர்.. தங்கள் பதிவினை வலைச்சரம் அறிமுகம் வாயிலாகக் கண்டு வந்தேன். பழங்கால நாணயங்களின் அணிவகுப்பினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

 7. chollukireenchollukireen சொல்கிறார்:

  தம்பிடி,காலணா,அரையணாஒரு அணா,2அணா, கால்ரூபா,அரைரூபா, பொத்த காலணா, வெள்ளி ரூபா, என செலவழித்தும், ஸ்கூலில் கணக்கும் போட்டுப் பிறகுதான் நயா பைஸாவுக்கு வந்தோம். அந்தக் கணக்கும் போட்டோம். போட்டுக்கொண்டும் இருக்கிறோம்். நான் அடிக்கடி வருபவள்தான்.
  வலைச்சரத்தில் பார்த்து இன்றும் வந்தேன். பாராட்டுகள். அன்புடன் சொல்லுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.