ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..? உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ?

ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..?
உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ?

———–
செப்டம்பர் 13,14,15 தேதிகளில் சென்னை
மீனம்பாக்கத்தில் ஈஷா யோகா பயிற்சி முகாம்
மிகப்பெரிய அளவில் நடந்தது.

அதிக அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.

கலந்து கொள்ள அனுமதி எப்படி என்று
விசாரித்தேன் !

நுழைவுக் கட்டணம் என்று ஏதுமில்லை.
ஆனால் நன்கொடை கொடுக்க வேண்டும் என்றார்கள்.
நன்கொடை விவரமும் சொன்னார்கள் –

குறைந்த பட்சம் – ரூபாய் 1800/-
அடுத்தது – ரூபாய் 3000/-
அடுத்தது – ரூபாய் 5000/-
அடுத்தது – ரூபாய் 8000/-

ரூபாய் 1800/- என்றால், மேடையில் இருந்து
தொலை தூரத்தில் இருக்குமா – சரியாகத் தெரியுமா என்று
விசாரித்தேன். மைதானம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு
ஒவ்வொரு பகுதியிலும் LED screens வைக்கப்பட்டு
இருக்கும். எனவே கவலை வேண்டாம் -மைதானத்தில்
எங்கே இருந்தாலும் நன்றாகத் தெரியும் என்றார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு இது பற்றி – செய்தித்தாள்களில்
எதாவது விவரங்கள்  வருமென்று நினைத்தேன். ஆனால், எனக்குத் தெரிந்து எதிலும் விவரங்கள் வரவில்லை.

தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் கேட்கிறேன்.
இந்த வலைத்தளத்திற்கு வரும்
நண்பர்கள் யாராவது இந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்டீர்களா ? பயிற்சி முகாம் எப்படி இருந்தது ?
பலன் இருந்ததாக உணர்கிறீர்களா ?

உங்கள் அனுபவம் எத்தகையதாக இருந்தாலும் பரவாயில்லை.
தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..? உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ?

 1. balumahendran சொல்கிறார்:

  கட்டணத்தை நுழைவுக் கட்டணமாக வசூலித்தால் சேவை வரி கட்ட வேண்டி இருக்கும். அதே கட்டணத்தை நன்கொடையாக வசூலித்தால் வரி விலக்கு. எப்படி ஜிந்திக்கிறார்கள் பார்த்தீர்களா?

 2. செந்தில் சொல்கிறார்:

  ஊமை கண்ட கனவு.
  வெளியே சொல்வது இயலாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அன்புள்ள தனபாலன்,

   பார்த்தேன் …
   பயங்கரமான கற்பனை வளம் உங்களுக்கு…! !

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. venkataramani சொல்கிறார்:

  நான் கோவையில் இருந்த காலத்தில், எனது ஐயப்ப
  குருஸ்வாமி திரு.KSK-யின் உந்துதலால், பயிற்சியில்
  சேர்ந்தேன். அவர் அவரது மனைவியின் உந்துதலால்
  சேர்ந்து மூன்று கட்ட பயிற்சியினை முடித்திருந்தார்.
  பயிற்சி மேட்டுபாளையம் சாலையில் லக்ஷ்மி
  காம்ப்ள்க்ஸில் நடந்தது. பயிற்சி ஈஷா யோகா மையம்
  சார்பில் நடக்கவில்லை. ஒரு தொழிலதிபர் sponsor
  செய்திருந்தார். ஆனால், கட்டணமுண்டு. நான் ரூ.750
  கட்டினேன். பயிற்சி காலம் 15 நாட்கள்.
  முதல் நாள் அறிமுகம் (ஒருவருக்கொருவர் தான்) ஆன
  கையோடு பயிற்றுனர் சிலவற்றை விளக்கிவிட்டு, பல
  கேள்விகளைக் கேட்டு வைப்பார். அதற்கு பதிலும், நமக்குள்
  எழும் வேறு சிலவற்றையும் எழுதி கொண்டு மறுநாள்
  தொடங்கி தொடர்ந்து போக வேண்டும்.
  தீக்ஷைக்குப் பின் பயிற்சி. பிராணாயாமம் என்கிற விஷயத்தை
  அடிப்படையாகக் கொண்டதானாலும், வேறு சில டெக்னிகுகளை
  உள்ளடக்கியிருக்கும். (பயிற்சியின் போது எடுத்துக் கொண்ட
  நோன்பின் காரணம் அதை விவரிக்க முடியாது). ”பேச்சைக்
  குறை; மூச்சைக் கவனி” என்பது அடிப்படை. பதினான்கு நாள்
  கடந்த பின்னர், பயிற்சியாளர்கள் அத்துனை பேரும் (45-50),
  வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா மையத்துக்குப்
  போய், சத்குருவை (????) சந்தித்து உரையாடி அவரிடமும்
  தீக்ஷைப் பெற்று, சமைக்காத சமையலை (!!!!) சாப்பிட்டுவிட்டு
  அந்தி கழிந்த நேரம் வீடு திரும்பினோம். பின்னர் தொடர்ந்து,
  பயிற்சி செய்து வந்தேன். அக்காலங்களில், நினைத்த நேரத்தில்
  இடத்தில் மனதை அடக்கி தியானத்தில் உட்கார முடிந்தது.
  சூழ்நிலையெல்லாம் பொருட்டில்லை. பத்து மணியைத் தாண்டி
  நடக்கும் ஐயப்ப பஜனையின் போது கூட, தியானம் செய்ய
  முடியும்.மனம் நினைக்கும் இடத்தில் நிலைக்கும். இரண்டாவது
  கட்டமென்கிற நிலைக்கு போகும் முன்னரே, மாறுதல் வந்துவிட
  எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். இது பழைய கதை.
  —–
  இப்போது இந்த பயிற்சி முழுக்க முழுக்க வியாபாரம்
  ஆகிவிட்டது. பயிற்சி காலம் சுருங்கி மூன்று நாளாகி விட்டது.
  பயிற்சி கிட்டதட்ட TV monitors மூலம் நடக்கிறது.
  காட்சிகளைப் பார்த்து பயிற்சி செய்வது கொஞமல்ல நிறையவே
  கஷ்டம். இன்னதென்று தெரிந்து செய்ய முயற்சிக்கும் முன்னர்
  வேறு விஷயம் விவரிக்கப்படும். பெரும்பாலும் open ground-இல்
  நடப்பதால் கூச்சல் அதிகம். குழப்பமும் அதிகம். “புரியல சார்.
  கொஞ்சம் சொல்லுங்க” என்று சொன்னால் விரும்பி correct
  செய்ய volunteers முன் வருவதில்லை. புரியவில்லை
  என்பவர்களை ஒரே குழுவாக்கி மீண்டும் குழப்புகிறார்கள்.
  இவர்கள் செய்யும் விளம்பரத்தால்,
  என்னதான் இது என்கிற ஆர்வத்தால்,
  போவோமடா என்கிற இளைஞர்களால்,
  demand அதிகமாகிவிட்டது. நன்கொடை ஊருக்கு ஊர்
  வித்தியாசப்படுகின்றது.
  சில ஊர்களில், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
  என்கிற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கின்ற அன்பர்களால் பகுதி
  கட்டணம் sponsor செய்யப்படுகின்றது.
  —-
  அறுபதைத் தாண்டிய திரு.சந்திரசேகர், உடம்பு முன்ன மாதிரி
  இல்ல சார். போய் பார்க்கிறேன் என்றுவிட்டு, பயிற்சிக்கு
  போனார். ப்யிற்சி எப்படி என்றேன்.“போங்க சார். ஒன்னுக்கும்
  புண்ணியமில்ல. ஒரே தலைவலி” என்றார்.
  இல்ல சார். அமைதியா முறையா கத்துக்கிட்டா நல்லாத்தான்
  இருக்கு என்றேன்.
  கோயம்புத்தூர்க்கெல்லாம் என்னால போக முடியாதுன்னார்.

 4. இக்பால் செல்வன் சொல்கிறார்:

  வீணாக பணத்தை விரயமாக்க வேண்டாம், வெள்ளியங்கிரி மலை வாசஸ்தலத்தில் தங்கி பயின்ற யோகத்தை இந்தியாவின் பல இடங்களில் அதை விட உன்னதமான யோகங்களை இலவசமாகவே பலர் சொல்லித் தருகின்றார்கள். சொல்லப் போனால் ஈசா யோகா சுத்த யோகமில்லை,. வெறும் விளம்பரம் படுத்தப்பட்ட மசாலா தூவிய யோகா, அப்புறம் உங்க இஷ்டம், பணமுள்ளவர்கள் ஒரு முறை அங்கு போய் தலைவலி என காசை கரியாக்கிவிட்டு வருவது அவரவர் விருப்பம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் இக்பால் செல்வன்,

   தமிழ்நாட்டில் காசு வாங்காமல் சொல்லிக்கொடுக்கும் இடம் -அமைப்பு
   எதாவது உங்களுக்கு தெரியுமா ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Genes சொல்கிறார்:

    Sir, I was told that Simplified Kundalini Yoga program organized by Vethathiri Maharishi group is with no charge. However, I am not sure about the present situvation.

    • venkataramani சொல்கிறார்:

     I tried this one too @ Coimbatore Sanmarga Sangam (near
     Flower bazzar).
     both are designed to மூலாதாரத்து
     மூண்டெழும் கனலைக் காலால் எழுப்பும்…however,
     there are lot of differences between them (Simplified Kundalini
     Yoga and Sahaja Sthi Yoga).
     In the early days the SKY programme was also conducted
     for a week. and it was also cut down to 2-3 days. this SKY
     programmes are fully funded by Pollachi Mahalingam group
     and Erode Mayilsamy (SKM) Group. hence, though they
     too charge those who want to get initiated, it is very minimal
     (just rs.50).
     You will be initiated to this programme only after a dheeksha
     for without a guru’s d it will not bring desired results.
     —-
     Vedathiri is no more. The programmes are being carried out
     by his well trained disciples.
     —-
     Anybody can practices this. But cann’t leave just like that.
     (as there is a proper way out to come out of practice)

 5. manohar சொல்கிறார்:

  excellent . very usefull

 6. Ram சொல்கிறார்:

  I did the Inner Engineering and didn’t like it cos’ Guru Dheeksha is supposed to be direct initiation but since they are running a business, it was delivered via recorded video. It has become a commercialized and I hate it.

 7. Genes சொல்கிறார்:

  This is a total corporate spiritual service. There is no bakthi or vetha in this. It is a tailor made program that gives a quick fix to our distorted life. I am totally disgusted with their propaganda. It is not only waste of money but also time. In the end, they expect you to become the devotee of this cult group.

 8. Ram சொல்கிறார்:

  If you all want to know my 2 cents- Please buy a book on Pranayama and follow simple breathing exercises or even better just try to be a good person.

 9. venkataramani சொல்கிறார்:

  நண்பர்கள் கவனத்திற்கு,
  வேதாத்ரி மகரிஷியின் குண்டலினி யோகா மற்றும்
  ஜக்கியின் ஸகஜ ஸ்திதி இரண்டிலும் சொல்லித் தரப்படும்
  விஷயங்கள் பற்றி அதன் அடிப்படைகள் பற்றி,
  ”விநாயகர் அகவலிலும்” ”ஸ்கந்த குரு கவசத்திலும்” நன்கு
  விளக்கப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ள விழைவோருக்கு
  விளங்கும். ஆனால், பயிற்சிக்கு குருமுகம் மிக அவசியம்.
  —–
  SKY பயிற்சிக்கு செல்வோருக்கு வேதாத்ரி வடிவமைத்த
  படங்களுடன் கூடிய கையேடு தரப்படுகிறது

 10. Srini சொல்கிறார்:

  small is always beautiful. when he started, it was a small organization, he was able to focus personally on every incoming member. today it is not the case. he is flying in jets without time. whose fault is this. as a common man (mango man) of this banana republic, it is our fault. we as people are rushing mad to everything that is offered. we don’t sit for a minute and ask ourselves is it really needed in our life at this stage. it has become a matter of pride to tell others that we also do meditation. when jakki saw more incoming people, his core team is getting adjusted to it. they have money, so they have become more tech savvy. personally I feel I am still not ready for anything of this kind. so I didn’t attend any of these program. but 15 years back, my maternal uncle had problem related to breathing. he tried various medications. finally he went to ISHA and stayed for 15 days. he got relief. He is old now, but still he says that it helped him a lot. there was a need for him and that justifies his attendance to the program. I think one should not go to these kind of programs and spend money unless one is fully ready mentally, physically, spiritually. otherwise we will end up gaining nothing except funding their projects.

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்கள் பலரும் பல செய்திகளையும், தங்களது அனுபவத்தை
  பற்றிய தகவல்களையும் கொடுத்திருக்கிறீர்கள்.. நன்றி.

  நானும் – ஆன்மிகம்-யோகா துறைகளில் பல்வேறு அமைப்புகள்
  நிகழ்த்தும் நிகழ்வுகளில்

  (ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா,
  வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை,
  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை,
  சின்மயா மிஷன் நடத்தும் “வேதாந்தம்” உள்பட )

  கலந்து கொண்டு இந்த இந்த அமைப்புகள்
  அடிப்படையில் எப்படி வித்தியாசப்படுகின்றன என்பதை
  புரிந்து கொள்ள முயன்றேன் !!

  என் கருத்து என்னவென்றால் –

  இவர்களில் பெரும்பாலானோர் யோகாவையும், ஆன்மிகத்தையும் சேர்த்து
  தருவதாலும், வெகு குறுகிய காலத்திற்கே அவர்களது
  வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன என்பதாலும் –
  உருப்படியான பலன்கள் கிடைப்பதில்லை.

  ஒரு நண்பர் சுட்டிக் காட்டி இருப்பது போல் –
  அந்தந்த அமைப்புகளின் தீவிர ஆதரவாளர்களாக
  நம்மை மாற்றும் செயல் தான்
  இறுதியில் நிகழ்கிறது.

  “யோகா” கற்றுக் கொள்வதும், தொடர்ந்து செய்வதும்,
  உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது .
  இதில் எந்தவித சந்தேகமும் இல்லை..
  இதைச் செய்வதற்கு, ஜாதி-மத வேறுபாடோ,
  ஆண்-பெண் வித்தியாசமோ இல்லை.
  இதற்கு எந்தவித ஆன்மிக அடிப்படையும் தேவை இல்லை.
  -யோகா கற்றுக் கொள்ள நமக்கு-
  புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர்களோ,
  3 நாள், 6 நாள் முகாம்களோ தேவை இல்லை.

  முறைப்படி யோகாசனம் கற்றுத்தேர்ந்த ‘யோகா மாஸ்டர்’ களின்
  தொடர்ந்த வழிகாட்டுதலின்படி இதைச் செய்வதே சரியான பலன்
  கிட்ட உருப்படியான வழி..

  அவரவர் வயது, உடல்நிலை,
  ஏற்கெனவே இருக்கும் உடற்கோளாறுகள்,
  ஆசனம் செய்யத் தேவைப்படும் உடல் சக்தி –
  ஆகியவற்றை புரிந்து கொண்டு யோகா மாஸ்டர்கள் கொடுக்கும்
  அறிவுரைகளின்படி யோகாசனம் செய்வதே சரி.
  இது நமக்கு இருக்கும் சில நோய்களின் வீரியம் குறையவும்,
  மேற்கொண்டு நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ளவும்
  நிச்சயம் உதவும்.

  “ஆன்மிகம்” – என்பது தனி விஷயம்.
  இது அவரவர் அனுபவம், ஆர்வம், வயது,
  தேடுதலில் உள்ள தீவிரம் – ஆகியவற்றைப் பொறுத்தது.

  ஆனால் – ஒரு நல்ல மனிதராக உருவாக வேண்டுவது
  அனைவருக்கும் அவசியம். இதற்கு –
  ” நான் நல்லவனாக இருக்க வேண்டும்”
  என்கிற மன உறுதியைத்தவிர –
  வேறு எந்தவித அடிப்படைத் தகுதியும் தேவையில்லை.

  முதலில் – நல்ல புத்தகங்கள்,
  பிறகு ஒத்த ஆர்வம் உடைய நண்பர்களுடன் தேடல் –
  இப்படி – போய்க்கொண்டே இருந்தால் –
  நமக்குள்ளேயே ஒரு தெளிவு ஏற்படும் –
  நமக்கு எது தேவை என்பதை நாமே புரிந்து கொள்ளக்கூடிய
  ஒரு சூழல் நமக்கு ஏற்படும்.

  இந்த தலைப்பில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள உதவிய
  அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.

  வாருங்கள் -தொடர்ந்து பயணிப்போம்.
  தெரிந்ததை, நமக்குப் புரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 12. Genes சொல்கிறார்:

  காவிரிமைந்தன், Will you please eloborate this as a separate article? Your above thoughts should not vanish in the pinnuttam, it has to be projected as a separate article!

 13. reader சொல்கிறார்:

  Way back in 1997 use to go to Swami Sukabodanda’s (manase relax please fame) ashram in Bangalore where they taught Yoga and meditation for free. My room mates joined me and an experienced volunteer (he introduced himself working in pvt sector in senior management position). For 3 months we went there. He started with basic surya namaskar and move towards 15 to 20 asanas that is to cover almost all body parts. When I started liking this and thought that I seem to focus on meditation front, a disciple approached us inquired who are we and our profession. He suggested that they are conducting a paid power yoga/meditation course over the weekend that cost around 3000 or 5000 (don’t remember exactly). That was a big money at that time and we could sense what can be expected going forward and bid goodbye to the yoga classes.

 14. c.venkatasubramanian சொல்கிறார்:

  cheating everywhere in the names of GOD,religion,yoga,medicine etc

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.