இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2)

இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே
(part-2)

———————
செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் பகத் சிங் வக்கீல்
யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை.
தானே வாதாடினான்.
இறுதியில் இருவருக்கும் 14 வருட கடுங்காவல்
தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் லாகூரில் இவர்களது குண்டு தயாரிக்கும்
தொழிற்சாலை போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.
இயக்கத்தின் பல உறுப்பினர்களும் இதில் பிடிபட்டனர்.
சாண்டர்ஸ் கொலைக்குற்றமும் சேர்ந்து கொண்டது.
பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மூன்று பேர் மீதும் –
சாண்டர்ஸ் மற்றும் சனன் சிங்கை கொன்றதாக –
கொலை வழக்கு நடந்தது.

பகத் சிங் இந்த வழக்கு விசாரணையை இந்தியாவின்
சுதந்திர கோரிக்கை வலுப்பட பயன்படுத்திக் கொள்ள
தீர்மானித்து, அதற்கேற்ப தானே வழக்காடினான்.

வழக்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.
நாடு முழுவதும் ஒரு போராட்ட சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையில் மியன்வாலி சிறையில் பிரிட்டிஷாருக்கும்
இந்தியர்களுக்கும் இடையே காட்டப்பட்ட பாரபட்சமான
அணுகுமுறைகளையும்,
இந்திய கைதிகள் மிக மோசமாக நடத்தப்பட்டதையும்
எதிர்த்து, மற்ற கைதிகளையும் சேர்த்துக் கொண்டு பகத்சிங்
சிறையிலேயே உண்ணாவிரதம் துவங்கினான்.

அரசியல் கைதிகளுக்கும், மற்ற கைதிகளுக்கும்
வேறுபாடு உண்டு என்றும் அரசியல் கைதிகளுக்கு
செய்தித்தாள்களும், புத்தகங்களும் படிக்க அனுமதி
கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கைகளில் ஒன்று.

அசெம்பிளியில் இது குறித்து விவாதம் எழுப்பப்பட்டது.
முகம்மது அலி ஜின்னா இவர்களின் கோரிக்கைகளை
ஆதரித்துப் பேசினார்.
விஷயம் லண்டனில் உள்துறைச் செயலகம் வரை சென்றது.

நேரு இவர்கள் செயல் முறைகளை நியாயப்படுத்தா
விட்டாலும், கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினார்.
இவர்களது தியாகம் வீண் போகாது என்றும் எழுதினார்.

காந்திஜியையும் மீறி, மக்களிடம் இவர்கள் செல்வாக்கு
வளர்ந்தது. நாடு முழுவதும் இது குறித்தே பேச்சு.
வட இந்தியா முழுவதும் பகதிசிங் குழுவினரை
மக்கள் போற்றினர். பல ஊர்களில் சுதந்திர உணர்வுடன்
இவர்களைப் பற்றிய பல பாடல்கள் பரவின.

பிரிட்டிஷ் அதிகாரிகள் இவர்களது உண்ணாவிரதத்தை
முறிக்க சகல விதத்திலும் முயற்சி செய்தனர்.
வலுக்கட்டாயமாக கூட உணவூட்ட முயற்சி செய்தனர்.
ஆனால் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

மக்களிடையே பெருத்த கிளர்ச்சி எழுந்ததால்,
பிரிட்டிஷ் அரசு விசாரணையை துரிதப்படுத்தி
முடித்து விட நினைத்தது.
பகத்சிங் லாகூரில் உள்ள போர்ஸ்டல் சிறைக்கு மாற்றப்
பட்டான். ஜூலை 10, 1929
அன்று கொலைக் குற்றத்துடன் கூடவே பிரிட்டிஷ் அரசுக்கு
எதிரான ராஜத்துரோக குற்றமும் சேர்ந்து கொள்ள,
வழக்கு விசாரணை துவங்கியது. பகத் சிங்கும் அவனது
நண்பர்களும் இன்னமும் உண்ணாவிரதத்திலேயே இருந்ததால்,
கைகளில் விலங்கிடப்பட்டு, ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டு,
பகத்சிங் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இதற்குள், சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த
ஜதீன்திரநாத் தாஸின் உடல்நிலை மிக மோசமாகியது.
உண்ணாவிரதமிருந்த 63 வது நாள் ஜதீன்திரநாத் தாஸ்
சிறையிலேயே மரணமடைந்தான்.

நாடு கொதிப்படைந்தது. மோதிலால் நேரு அசெம்பிளியில்
லாகூர் சிறையில் அரசியல் கைதிகள் மோசமாக
நடத்தப்படுவதைக் கண்டித்து ஒரு ஒத்திவைப்பு தீர்மானம்
கொண்டு வந்தார்.

இறுதியில் அக்டோபர் 5, 1929 அன்று அகில இந்திய
காங்கிரஸ் கட்சி மற்றும் தன் தந்தையின்
வேண்டுகோளை ஏற்று 116 வது நாளில் பகத்சிங் தன்
உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தான்.
கைதிகள் கைவிலங்கோடு கோர்ட் விசாரணைக்கு
கொண்டு செல்லப்படுவதை பகத்சிங் ஏற்றுக் கொள்ள
மறுத்ததால், கொடுமையான அடி, உதை, சித்ரவதைகளை
சந்திக்க நேர்ந்தது. இவற்றை எல்லாம் எதிர்த்து,
விசாரணைக்காக கோர்ட்டுக்கு செல்ல அவர்கள் அனைவரும்
மறுத்தனர். தங்கள் தரப்பு நியாயங்களை விளக்கி
பகத்சிங் கோர்ட்டுக்கும் கடிதம் எழுதினான். ஆனால் கோர்ட்
இந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து,
கைதிகள் வராவிட்டாலும் கூட- விசாரணை தொடரும்
என்று தீர்மானித்தது.

வழக்கு நீண்ட காலத்திற்கு தொடர்வதால்
பொது மக்களிடையே ஏற்படும் கொந்தளிப்பைத் தவிர்க்க
பிரிட்டிஷ் அரசு ஒரு குறுக்கு வழியை நடைமுறைக்கு
கொண்டு வந்தது. அவசர சட்டம் ஒன்றின் மூலம்
இந்த வழக்கை விசாரிக்கவென்றே
மூன்று உறுப்பினர் டிரைபியூனல் ஒன்றை நியமித்தது.
விளைவு, வழக்கு சீக்கிரம் முடியும். அதன் பிறகு
லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலில் மட்டுமே
அப்பீல் செய்ய முடியும். கைதிகள் இல்லாமலே
விசாரணை தொடரவும், அவசர சட்டத்தில் விதிமுறை
கொண்டு வரப்பட்டது.

மே 5, 1930 அன்று வழக்கு விசாரணை துவங்கியது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின்
தரப்பில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.
ஆனால் – அந்த மனுவும் நிராகரிக்கப்படவே, வழக்கு
விசாரணை துரிதகதியில் தொடர்ந்தது.

வழக்கில் பகத்சிங் சார்ந்த இயக்கத்தில் அவனுடன் சேர்ந்து
பங்காற்றிய சில நண்பர்களே, பிரிட்டிஷ் போலீசின்
சித்ரவதை தாங்க முடியாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
எதிராக சாட்சியம் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 18 பேர்களில், அரசுடன் ஒத்துழைத்த
3 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள்
மீது மே 5, 1930 அன்று துவங்கிய விசாரண தொடர்ந்து
நடத்தப்பட்டு, செப்டம்பர் 10, 1930-ல் முடிவுக்கு
கொண்டு வரப்பட்டது.

அக்டோபர் 7, 1930 – 300 பக்கங்கள் அடங்கிய
தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேருக்கும்
தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ப்ரிவி கவுன்சிலில் அப்பீல் செய்ய தண்டிக்கப்பட்டவர்களின்
சார்பில் ஒரு குழு அமைக்க பொதுமக்களால் ஒரு முயற்சி
முன்னெடுக்கப்பட்டது. பகத் சிங் முதலில் இதற்கு
ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால் -யோசனைக்குப் பிறகு, இந்த வழக்கின் அப்பீல்
லண்டனில் விசாரிக்கப்பட்டால், இந்திய சுதந்திர
போராட்டங்களின் பின்னணியை இன்னும் பெரிய அளவில்
கொண்டு செல்ல அது உதவும் என்று நினைத்து அப்பீலுக்கு
ஒப்புக்கொண்டான்.

ஆனால் – இந்த அப்பீல் மனு ப்ரிவி கவுன்சிலால்
நிராகரிக்கப்பட்டது.

அப்பீல் மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, அகில இந்திய
காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் மாளவியா
இர்வின் பிரபுவுக்கு ஒரு கருணை மனு சமர்ப்பித்தார்.
இதுவும் நிராகரிக்கப்பட்டது.

மார்ச் 24, 1931 -தூக்கு தண்டனைக்கு -ஒரு மாவீரனின்
மரணத்திற்கு – நாள் குறிக்கப்பட்டது.

இதற்கிடையில், இவர்களை சிறையில் இருந்து மீட்க,
இயக்கத்தோழர் பகவதி சரண் வோரா (லாகூரில்
பகத் சிங் போலீசில் சிக்காமல் தப்ப உதவிய துர்காவதி
தேவியின் கணவன் ) முயற்சி ஒன்றினை மேற்கொண்டார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக் -சிறையில் தாக்குதல் நடத்தத்
தேவையான கையெறி குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில்,
அவர் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு உயிர் இழக்க
நேர்ந்தது.

சிறையில் இருந்தபோது, பகத்சிங் ஒரு நாட்குறிப்பை
எழுதிக் கொண்டிருந்தான். 404 பக்கங்கள் அடங்கிய
இந்த நோட்டுப் புத்தகங்களில், தன் லட்சியங்களையும்,
கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் சிந்தனைகளைப்
பற்றியும் எழுதி இருக்கிறான்.(அவை இன்றும் பகத்சிங்
சம்பந்தப்பட்ட ஒரு நினைவகத்தில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கின்றன )

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேருக்கும்
மார்ச் 24, 1931 அன்று லாகூர் சிறை வளாகத்தில்
தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் – சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய
பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி நாளில் தண்டனையை
11 மணி நேரங்களுக்கு முன்னதாக –
அதாவது முன்தினம் மார்ச் 23ந்தேதியே
இரவு 7.30 மணிக்கு லாகூர் சிறையில் நிறைவேற்றி
விட்டனர். தோழர்கள் மூவரும் ஒன்றாகவே,
ஒரே சிறையில், ஒரே நேரத்தில் – வீர மரணம் எய்தினர்.
இந்திய சரித்திரத்தில், இப்படி இரவு நேரத்தில்
தூக்குப் போடப்பட்டவர்கள் இவர்கள் மட்டுமே !

சட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றலை மேற்பார்வையிட
ஹானரரி மாஜிஸ்டிரேட்கள் யாரும் முன்வராத நிலையில்,
ஒரு வெள்ளைக்கார நீதிபதியின் முன்னிலையில் தண்டனை
நிறைவேற்றப்பட்டது.

BhagatSingh_DeathCertificate

தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவசர அவசரமாக –
சிறையின் பின்பக்க சுவர் ஒன்று உடைக்கப்பட்டு,
பின்பக்கமாக, ரகசியமாக உடல்கள் வெளிக் கொண்டு
செல்லப்பட்டன.
சிறையை அடுத்து இருந்த கண்டாசிங் வாலா கிராமத்தை
ஒட்டிய வனாந்திரப் பிரதேசத்தில், உடல்கள்
சிறை ஊழியர்களாலேயே எரியூட்டப்பட்டு, அவர்களது
அஸ்தி(சாம்பல்) அருகில் ஓடிக்கொண்டிருக்கும்
சட்லெஜ் ஆற்றில் உடனடியாகக் கரைக்கப்பட்டது.

800px-Statues_of_Bhagat_Singh,_Rajguru_and_Sukhdev

      (தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று    மூவருக்கும் சிலைகள்)

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் –
மிக மிகச் சிறிய வயதில் – நிச்சயமாக இது தான் முடிவு
என்று தெரிந்தே, எந்தவித சலனமோ,கலக்கமோ,
வருத்தமோ இன்றிதைரியமாக சாவை எதிர்கொண்ட
வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர்.

இவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டதையொட்டிய
நாட்களில், கராச்சியில் அகில இந்திய காங்கிரஸ்
மகாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த
காந்திஜிக்கு கோபக்கார இளைஞர்களால் கருப்புக் கொடி
காட்டப்பட்டது. காந்திஜியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களும்
நடைபெற்றன.

Bhagat_Singh's_execution_Lahore_Tribune_Front_page (1)

 (தூக்கிலிடப்பட்ட மறுநாள் காலை பத்திரிகைச் செய்தி )

இந்த காங்கிரஸ் மகாநாட்டில் – இந்த மூன்று இளைஞர்களும்
போராடிய விதத்தைத் தான் ஏற்கவில்லையே தவிர,
அவர்களது நோக்கம் புனிதமானது. அவர்களது தியாகம்
விலைமதிப்பற்றது. அவர்களுக்கு வீர அஞ்சலி
செலுத்துகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், தண்டனை குறைக்கப்பட்டு
உயிர் வாழக்கூடிய வாய்ப்புகள்- பகத் சிங்கிற்கு இருந்தன.
ஆனால், அவன் அப்படி உயிர் பிழைக்க விரும்பவில்லை.
தன் உயிரை இந்த நாட்டு மக்களின் உணர்வைக் கிளர்ச்சியுறச்
செய்ய பயன்படுத்தவே அவன் விரும்பினான். விரும்பியே
தூக்குமரம் ஏறினான்.
சாவதற்கு முன் இறுதியாக அவன் எழுதி வைத்த
வார்த்தைகள் –

“நீங்கள் உயிரைக் கொல்லலாம்.
லட்சியங்களைக் கொல்ல முடியாது.
சாம்ராஜ்ஜியங்கள் ஒரு நாள் அழியும்.
ஆனால் லட்சியங்கள் என்றும் நிலைக்கும்.”

அவனது லட்சியங்கள் என்றும் நிலைக்கும் என்று கூறி
வீரன் பகத்சிங் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக
தன் உயிரைத் தியாகம் செய்தான்.

ஆனால் – அந்த சுதந்திரம் இந்த நாட்டில் இன்று –
எப்படி, எந்த கோலத்தில் இருக்கிறது …?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2)

 1. GOPALASAMY சொல்கிறார்:

  EVENTHOUGH I READ A LITTLE ABOUT BAGATSINGH EARLIER, I COULD NOT CONTROL MY TEARS WHILE READING SECOND PART. STILL WE ARE RULED BY FOREIGNER.
  OUR PM AND FM ARE DOING EVERYTHING TO STRENTHEN AMERICAN ECONOMY. VERY SHAMEFUL SITUATION.

  PLEASE WRITE ABOUT SAVARKAR ALSO. SO MANY PEOPLE LOST THEIR LIVES.
  BUT CREDIT WENT TO MAHATMA ONLY FOR FREEEDOM. BENEFIT WENT TO NEHRU FAMILY.

 2. separa சொல்கிறார்:

  வாழ்வின் வசந்த காலத்தில், உயிரிழந்த பெருமைக்குரிய, பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய இந்த மூன்று இளைஞர்களையும் (அவர்கள் போராடிய விதத்தைத் தான் நாம் ஏற்கவில்லையே தவிர), அவர்களது தியாகம் விலைமதிப்பற்றது என்பதால், அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்.
  ஆனால் இந்த இளைஞர்களும், திரு நேதாஜியைப் போலவே திசை மாறிய பறவைகள்; இவர்கள் நோக்கம் புனிதமானது ஆனால் தீர்மானித்த வழி சரியல்ல. வன்முறை எந்த ஒரு போராட்டத்திற்கும் தீர்வல்ல என்பது எந்த காலத்திற்கும் பொதுவான உண்மை.. இன்று ஒரு குழு வன்முறையைக் கையிலெடுத்து ஒரு குழு வெற்றி பெற்றால் பாதிக்கப்பட்ட எதிர்க்குழு நாளை அவர்களுக்கெதிராக வன்முறை வழியினையே தேர்ந்தெடுப்பர். இதற்கு முடிவே கிடையாது இது ஒரு தொடர் போராட்டமாகிவிடும். எனவே இவர்களின் தியாகத்தைப் பாராட்டுவோம் கூடவே இது சரியான வழியல்ல வருங்கால சந்ததியினர் ஏற்க ஒண்ணாத ஒன்று என்பதனையும் பதிவு செய்வோம் அதுவே வருங்கால இந்தியாவிற்கு நலம் தரும்.
  எந்த ஒரு தீமையையும் எதிர்கொள்ள “அஹிம்சை” “ஒத்துழையாமை” வழிகளெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். வன்முறையே சரியான தீர்வு என்பது அறிவீனம். அவரவர் கொள்கைக்காக அவரவர் போராடுகிறார்கள் அதனை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இப்படித் தவறாக வழி நடத்தப்படுபவர்கள் தங்கள் செய்கையால் பொதுமக்களையே துன்புறுத்துகிறார்கள் என்பது இதுவரை நாமறிந்த ஒன்று. எந்த ஒரு குண்டு வெடிப்பிலாவது இவர்கள் எதிர்க்கும் மாற்றுக் கொள்கையினர் அழிக்கப்படுகிறார்களா? அப்படி அவர்கள் அழிக்கப்பட்டிருந்தாலாவது, இப்போராட்டக்காரர்கள் குறிப்பிடும், (அவர்களால் உருவாக்கப்பட்ட) மக்கள் விரோதக் கொள்கைகள், நடைமுறைப்படுத்தாமல் போயிருக்குமல்லவா? ஆனால் ஒன்றுமறியாத (சில சமயங்களில் இப்போராட்டம் எதற்கென்று கூட அறியாத) அப்பாவி மக்களல்லவா துன்பப்படுகிறார்கள்; இறக்கிறார்கள்.
  பொதுவாக எந்த ஒரு புரட்சியாளருக்கும், அவர்களது நோக்கம் புனிதமானது. ஆனால் அதை அடைய எந்த காலத்திலும் எவரும் வன்முறையைக் கடைப்பிடிப்பது ஊக்குவிக்கப்படக்கூடாது. நம்மவர் செய்தால் சரி மற்றவர்கள் (காஷ்மீர விடுதலைக்காக இந்தியாவில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து பல அப்பாவி இந்தியர்களின் உயிரைப் பலிவாங்கும் பாகிஸ்தானியரோ நம் மண்ணிலேயே திரு ராஜீவ் காந்தியை திட்டமிட்டு, வெடிகுண்டு வைத்து அழித்த ஈழப்புலிகளோ) செய்தால் தவறு என்பதுவும் சற்றும் சரியல்ல. திட்டமிட்டுச் செய்யப்படும் உயிர்க்கொலை, எவர் எந்தக் காரணத்திற்காகச் செய்தாலும் தவறே.
  “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி” என்று வீரத்தையே முன்னிறுத்தும் சமுதாயமாகவே நம் தமிழ்ச்சமுதாயமும் குறிப்பிடப்பட்டது. (ஆனால் “வாளொடு முன்தோன்றிய” என்றால் பழைய கற்காலம்,புதிய கற்காலம், இவற்றைத் தாண்டி, உலோகக் காலம் என்ற வகையில், அது கனிமத்தைக் கண்டறிந்த காலம். அதிலும், 4700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி மக்கள் அறியாத இரும்பு என்ற உலோகத்தைக் உருக்கிக் மிக நுண்ணிய தொழில் நுணுக்கம் தேவைப்படும் வாட்கருவிகளாகச் செய்யத் தெரிந்த, முன்னேறிய சமுதாயம் என்று ஏன் கொள்ளக்கூடாது என்று இதுவரை எவரும் சொல்லவில்லை எனப்து எம் மனக்குறையே.) இவ்வாறு பொதுவாக, காதலைவிட வீரம், தியாகம் என்பவை நம்மால் பெரிதும் போற்றப்படும் ஒன்றாகவே இருக்கிறது. காலங்காலமாக நாம் விரும்பியோ விரும்பாமலோ போராட்டம் நம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நாம் ஈர்க்கப்படுவது இயல்பே எனினும், வன்முறை எந்த விதத்திலும், ஆதரிக்கப்படக்கூடாது
  இறுதியாக “இந்த சமுதாயத்து இழிநிலை, என்றாவதொரு நாள் மாறும்” என்ற நல்ல நம்பிக்கையில் திரு காவேரி மைந்தன் எழுதுவதனைக் கூட வேடிக்கையாகவும், நீர்த்துப் போகச்செய்யுமளவிற்கும் பின்னூட்டம் எழுதும் மன்நிலை குறித்து மனவருத்தம் அடைகிறேன்

 3. venkataramani சொல்கிறார்:

  ஆரம்பம் முதல் இறுதி வரை “உள்ளதை உள்ளவாறு”
  கொஞ்சம் உங்கள் எண்ணத்தில் உதித்தையும் சேர்த்து
  பதிந்து உள்ளீர்கள். நன்றி. ”பக்கத்து வீட்டுக்காரனோடு
  ச்ண்டை போட்டு உயிர் நீத்தான்” என்று .எழுதாமைக்கு
  கூடுதல் நன்றி.
  அர்த்தமுள்ள பின்னூட்டங்களைத் தொடர்ந்து எழுதி,
  உங்கள் பதிவுகளைச் செம்மையாக்கும் அன்பர்கள்
  அவர்களது அந்த பணியினைத் தொடர்ந்து செய்யவும்,
  மனவருத்தம் (???) ஏதுமின்றி தொடர்ந்து “னாய் வாலைக்
  குழலில் இட்டு னிமிர்த்த முடியுமென” நம்பிக்கைக்
  கொள்ள வேண்டாமெனவும் கோருகிறேன்.

 4. Srini சொல்கிறார்:

  historic ordinance passed by cabinet today to undo SC order to save convicted netas.

  Congratulations to Soniaji, MMS Ji and Rahul Ji. Except you Trimurthies nobody can do this for the country. I am sure this will take India at least 20 years backwards. Your service to this great nation will ever be remembered. your every act is taking us backwards.

  Please do more like this and take this great country backwards by 67 years. we will fight for another independence again from you people. let another mahatma, another savarkar, bagat singh be born to free us…free us from congress, free us from Italy mafia, free us from this corrupt politicians…

  but please remember, next time if given a chance, we will not kill mahatma, we will not partition india, we will abolish congress imme after independence

 5. Genes சொல்கிறார்:

  Your article has specifically avoided Mohan’s contribution in this case. Mohan was very much shaken with the papularity gain of Bagath and his team.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear friend,

   I have not avoided any truth.
   I recognize, respect and have great admiration towards
   the sacrifices made by every freedom fighter of this Great Nation
   whether it is Mohan (!) and Nehru, OR Nethaji, Bhagat singh,
   vanjinathan, Vir Savarkar and others !

   Probably – you will accept my statement if and when I write about
   the supreme sacritice made by young Jatindranath Das
   after 63 days fast in jail and his martyr being was taken from
   Lahore to Calcutta.

   with all best wishes,
   Kavirimainthan

   • Genes சொல்கிறார்:

    I am not blaming…. in fact, I have expected more deeper insight of this article (in your style) Mohan felt insecured with the fame of Bagath and British people have used Mohan to distract the replusion of the people. Mohan has written a lot on this issue directly and indirectly justifying British’s stand and the death sentance. Mohan has deep rooted his ahimsa concept of the corpse of Bagat.

    I have read and researched a lot on this issue, hence said this, although it is only my opinion.

 6. anzmeera சொல்கிறார்:

  There is truth behind Mr. Genes comments.

 7. மிக அற்புதமான கட்டுரை.மகாத்மா காந்தியின் பிடிவாதம் இந்தியாவுக்கு பல பின்னடைவுகளை இன்று வரை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒன்று நேரு குடும்பத்தின் இந்தியா மீதான ஆளுமை. நாம் ஏதோ ஒரு வகையில் வெளிநாட்டவருக்கு அடிமையாகத் தான் இருக்கிறோம்.
  நேதாஜி மீதான காந்தியின் வெறுப்பு அரசியல் வரலாற்றில் சகிக்க இயலாத பக்கங்களாய் இருக்கிறது.
  வீரசாவர்க்கர் போன்ற உன்னத தலைவர்களின் தியாகங்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு காந்தியும் நேருவும் நேரே இங்கிலாந்து போய் சுதந்திரம் வாங்கி வந்தது போல ஒரு சரித்திர பாடத்தை இளைய தலைமுறைப் படித்தால் எங்கிருந்து வரும் தேசபக்தி.
  ஆனாலும் இன்றும் இந்த இந்தியா நம்பிக்கையோடு இருக்க காரணம் பக்த்சிங்குகள் இன்றும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில் லட்சியத்திற்கு ஏது மரணம்! அது அமரத்துவமானது

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Thank you Genes.

  I always welcome such lively comments which
  help healthy discussions. I am happy that this blog is strengthened
  by well read /informed people through their contributions
  in the ‘Pinnoottams’.

  With all best wishes,
  Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.