துக்ளக் + ஹிந்து + திருமதி சோனியா – சில செய்திகள் + சில கேள்விகள் ….!!

துக்ளக் + ஹிந்து + திருமதி சோனியா –
சில செய்திகள் + சில கேள்விகள் ….!!

—————-
இரண்டு வாரங்களுக்கு முன் – திருமதி சோனியா காந்தி
உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ளவும்,
சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்றிருப்பதாக –
(அவர் சென்ற பிறகு) இந்தியாவில் அதிகாரபூர்வமாக
செய்தி வெளியிடப்பட்டது.

நாலைந்து நாட்கள் முன்பாக, சண்டிகரிலிருந்து
ஹிந்து நாளிதழில் ஒரு செய்தி வந்தது. அமெரிக்காவில்
திருமதி சோனியா காந்தி தங்கி இருக்கும்
மருத்துவமனையிலேயே அவருக்கு அமெரிக்க கோர்ட்
ஒன்றிலிருந்து ஒரு சம்மன் கொடுக்கப்பட்டதாக..!
மற்றபடி – எனக்குத் தெரிந்து வேறு எந்த பத்திரிகைகளும்
இது குறித்து மூச் .. விடவில்லை !

இது குறித்து ஒரு இடுகை எழுதிக்கொண்டிருந்த போது,
இந்த வார துக்ளக் கைக்கு வந்தது. அதில் பல
கூடுதல் தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. துக்ளக்+ஹிந்து
இதழ்களில் வெளியான சில தகவல்களை முதலில்
சுருக்கமாகக் கீழே தருகிறேன்.

அதன் பிறகு – நாம் யோசிக்க சில கேள்விகள் …!
(நாமே யோசித்துக் கொண்டிருக்க வேண்டியது தான் –
நமக்கெல்லாம் யார் பதில் சொல்லப்போகிறார்கள்…!)

(அமெரிக்க கோர்ட் திருமதி சோனியா காந்திக்கு
கொடுத்த சம்மனின் ஒளி நகல் கீழே )

summons
வெளிவந்திருக்கும் செய்தி –

1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதன்
தொடர்ச்சியாக நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு, தற்போது
அமெரிக்காவிலுள்ள – சீக்கிய குடும்பங்கள் ஒன்றிணைந்து
(‘Siks for Justice’)
‘நீதி கேட்கும் சீக்கியர்கள்’ என்கிற அமைப்பை துவக்கின.
இவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மீதும்
மத்திய அமைச்சர்கள் கமல்நாத், சஜ்ஜன்குமார்,
ஜெகதீஷ் டைட்லர் ஆகியோர் மீதும்
நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களின் வழக்கறிஞர் குர்பட்வந்த் சிங் பன்னூன்.

பாதிக்கப்பட்டவர்கள், தற்போது அமெரிக்க குடிமக்களாகி
விட்டதால், அவர்களுக்கு கொடுமை இழைத்தவர்கள் –
அமெரிக்கர் அல்லாதவர்களாக இருப்பினும்,
அமெரிக்காவை விட்டு வெளியே மற்ற நாடுகளில் வசித்தாலும்,
அவர்கள் மீது வழக்குத் தொடர Alien Tort Claims Act
மற்றும் Torture Victims Protection Act ஆகிய
அமெரிக்க சட்டங்களின் கீழ் இடம் இருக்கிறது.

இந்த முறை திருமதி சோனியா காந்தி அமெரிக்காவிற்கு
வருவதை அறிந்த சீக்கியர்கள் அவசரமாக நீதிமன்றத்தில்
அவர் மீது ‘குற்றவாளிகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவி என்கிற முறையில் அவருக்கு
தார்மீகப் பொறுப்பு உண்டு. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதால்
இவரும் உடந்தையாகிறார்’ என்று வக்கீல் பன்னூன் வாதாடி
வெற்றி பெற்றார். நீதிபதி கோகன்.ஜே.- சோனியா காந்திக்கு
சம்மன் வழங்க ஆர்டர் செய்து தீர்ப்பு வழங்கினார்.

திருமதி சோனியா அதற்கு முன் தினம் தான் –
தனி விமானத்தில் –
பலத்த செக்யூரிட்டியுடன்,
நியூயார்க் வந்தடைந்து, பிரபலமான
‘ஸ்டோன் கேட்டரிங்’ மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

ஒரு நாட்டின் பிரதமருக்குரிய 5 அடுக்கு செக்யூரிட்டி
அவருக்கு தரப்பட்டது. அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ்
(அமெரிக்க ஜனாதிபதியை பாதுகாக்கும் குழு),
FBI-யின் அதிரடிப்படை, அடுத்து இந்திய SPG
(Special Protection Group), நியூயார்க் போலீஸ்,
மற்றும் மருத்துவ மனையின் தேர்ந்த காவலர்கள் அடங்கிய
இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு புழு பூச்சி கூட
திருமதி சோனியாவின் அருகில் நெருங்க முடியாத சூழ்நிலை.

சம்மன் விவகாரம் பற்றி கேள்விப்பட்டதும், இந்திய அரசு
அமெரிக்க அரசைத் தொடர்பு கொள்ள’இது கோர்ட் விவகாரம் –
நாங்கள் தலையிடுவதற்கில்லை’ என்று அமெரிக்க அரசு
ஒதுங்கிக் கொண்டது.

மருத்துவமனை ‘அலர்ட்’செய்யப்பட்டது. அங்கு வரும்
இந்தியர்கள் அனைவரும், விசேஷமாக “சலிக்கப்”பட்டனர்.
வக்கீல் பன்னூன் உடனடியாக கோர்ட்டில் இன்னொரு
மனுவைப் போட்டார்.‘சம்மனை திருமதி சோனியாவிற்கு
வழங்க முடியவில்லை- போலீஸ் ஒத்துழைக்க மறுக்கிறது’
என்று கோர்ட்டில் புகார் செய்தார்.

நீதிபதி கோகன் உடனடியாக, ‘ஸ்லோன் கேட்டரிங்
மருத்துவமனையின் அதிகாரிகள் அல்லது பாதுகாவலர்கள் –
சம்மனை வாங்கித்தான் ஆக வேண்டும். அதை சோனியாவிடம்
சேர்ப்பிப்பது அவர்கள் பொறுப்பு’ என்று உத்தரவு போட்டார்.

மத்திய அரசின் தலைசிறந்த வழக்கறிஞர்கள், தங்கள்
அமெரிக்க சகாக்களுடன் பேசி உபாயம் கேட்டனர். இந்திய
தூதரகமும் போர்க்கால அடிப்படையில் வேலை செய்து
இந்த சம்மனை உடைக்கப் பார்த்தது.

வக்கீல் பன்னூன், தனது பாதுகாவலர்களுடன், ‘ஸ்லோன்
கேட்டரிங் மருத்துவமனை’க்கு சென்று நீதிபதியின் லேடஸ்ட்
உத்திரவைக் காண்பித்து உதவி கேட்டிருக்கிறார்.
மருத்துவமனை நிர்வாகம் அவரை உள்ளேயே விடவில்லை.
‘உடனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவேன்’ என்று
அவர் மிரட்டிய பிறகு, மருத்துவமனை அதிகாரிகள் பணிந்து,
தலைமை செவிலியர் மற்றும் பாதுகாப்பு அலுவலரிடம்
சம்மனைக் கொடுத்து கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

திருமதி சோனியா காந்தி, இந்த மருத்துவ மனையில்
தனது பாஸ்போர்ட்டில் உள்ள ஆன்டோனியோ எட்விஜ்
அல்பினா மெய்னோ (Antonia Edvige Albina Maino)
என்கிற பெயரில் அட்மிட் ஆகியிருப்பதால் –
(நான் அவனில்லை ஸ்டைலில்…?) இவர் அவரில்லை
என்று வாதாடிப் பார்த்தனர். கடும் வாக்குவாதங்களுக்குப்
பிறகுதான் சம்மன் வாங்கப்பட்டது !!

15 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வந்த திருமதி சோனியா-
அடுத்த நாள் அதிகாலையிலேயே தனி விமானம் மூலம் கிளம்பி
டெல்லிக்கு வந்து விட்டார்..!

சம்மன் பெறப்பட்ட 21 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும்
என்பது சட்டம்.

உடம்பு சரியில்லாமல் சிகிச்சைக்கு வந்திருப்பவரை
தொந்திரவு செய்யலாமா என்று வக்கீல் பன்னூனை
கேட்டிருக்கிறார்கள்.
30 ஆண்டுகளாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
இந்திய நீதிமன்றங்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை
போய் விட்டது. தவறு செய்தவர்கள் இன்றைக்கும்
தைரியமாக நடமாடுகிறார்கள். கொல்லப்பட்ட அப்பாவி
சீக்கிய குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
புதுடில்லி திலக் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கிய
விதவைப் பெண்கள் இன்னும் அநாதைகளாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அங்கு எட்டிக்கூடப்
பார்ப்பதில்லை – என்று சொல்கிறார் வக்கீல் பனூன்.

——————-

செய்தி முடிந்து விட்டது.
சில கேள்விகள் –

1) 1984-ல் டெல்லியில் நிகழ்ந்த சுமார்
3000 சீக்கியர்களின் படுகொலையில்
திருமதி சோனியாவிற்கு கொஞ்சம் கூட
சம்பந்தம் இல்லை என்பது சரியே.

ஆனால், அதில் முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ்
தலைவர்கள் சிலர் இன்னும் மத்திய அமைச்சர்களாக
இருப்பதற்கு – யார் பொறுப்பு ..?

2)அவர்களைப் பாதுகாப்பது யார் …?
கட்சியிலும் அவர்கள் தொடர்ந்து முக்கிய பதவிகளில்
இருக்க யார் காரணம் …?

3)கடந்த வருடம் திருமதி சோனியா காந்தி அமெரிகாவில்
மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டபோது நிகழ்ந்த
செலவுகள் குறித்து சர்ச்சை எழுந்தபோது, இதற்கான
செலவுகளை மத்திய அரசு செய்யவில்லை என்று
பதில் வந்தது. தற்போது – போகும்போதும், திரும்ப
வரும்போதும் தனி விமானத்தில் சென்றார் என்று
தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு
தனி விமானத்தில் சென்று வர ஆகும் செலவை
யார் மேற்கொண்டது என்கிற விவரம் வெளியிடப்படுமா ?

4)அவருடன் மகள், மகன், உறவினர்கள்
மற்றும் நிறைய உதவியாளர்களும்
சென்றிருப்பது தெரிகிறது. இவர்கள் செலவெல்லாம்
எந்த காந்தி கணக்கில் வரும் ..?

5) அவருடன் கூடவே SPG (Special Protection
Group) காவலர்களும் சென்றிருப்பதாக இப்போது தகவல்
வெளியாகி இருக்கிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி
கொடுத்திருக்கிறதா ? அவர்கள் போய் வருவதற்கும்,
அங்கு தங்கி இருப்பதற்குமான செலவுகளை யார்
மேற்கொள்கிறார்கள் ..?

6) திருமதி சோனியா காந்தியின் பாஸ்போர்ட்டில்
இன்னும் – ஆன்டோனியோ எட்விஜ்
அல்பினா மெய்னோ (Antonia Edvige Albina
Maino) என்கிற பெயர் தான் இருப்பதாக செய்தி சொல்கிறது.

உரிய சம்பிரதாயங்களை மேற்கொண்டு,
யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், புதிய பெயரை ஏற்றுக் கொண்ட பிறகு –
பழைய பெயரையும் கூடவே தொடர எந்த சட்டமும்
இடம் கொடுக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினராக ஒரு பெயரும்,
பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெயரும் – ஆக ஒருவர்
ஒரே சமயத்தில் இரண்டு பெயர்களில் செயல்பட
எந்த சட்டம் அனுமதிக்கிறது என்று
யாராவது விளக்குவார்களா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to துக்ளக் + ஹிந்து + திருமதி சோனியா – சில செய்திகள் + சில கேள்விகள் ….!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு பெயர்களில் செயல்பட எந்த சட்டம் அனுமதிக்கிறது என்று யாராவது விளக்குவார்களா ?//
  வாட் ஈஸ் திஸ்?
  மேரா பாரத் மஹான்!
  இந்தியா ஒளிர்கிறது.

 2. பிரகாஷ் சொல்கிறார்:

  ohhh ithu than Ganthi kanakkoooo???

 3. venkataramani சொல்கிறார்:

  கெக்கே. அரசியல்ல இது சாதாரணமப்பா.
  (சொல்ல் நிறைய இருக்கு கா.மைக்கு கோபம் வரும்).

 4. நாராயணன் சொல்கிறார்:

  இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் எல்லாம் என்ன செய்கின்றன
  என்றே தெரியவில்லை. சும்மா டிவியில் மூஞ்சியைக்
  காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர
  இந்த மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை.
  சும்மா சும்மா மோடியின் பெயரைச் சொல்லி விட்டால்
  போதுமா ? இதை எல்லாம் டீம் போட்டு தனித்தனியே
  கவனிக்க வேச்ண்டாமா ?
  ஒருதனி மனிதராக நீங்கள் கேட்கும் கேள்வியை எந்த
  கட்சிக்காரனும் கேட்க மாட்டெனென்கிறார்களே ?
  RTI சட்டத்தில் இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்களா ?
  தனி விமானம் எல்லாம் அம்பானி தொம்பானி எவனாவது
  ஸ்பான்சர் செய்திருப்பான்கள்.

  • bandhu சொல்கிறார்:

   //ஒருதனி மனிதராக நீங்கள் கேட்கும் கேள்வியை எந்த
   கட்சிக்காரனும் கேட்க மாட்டெனென்கிறார்களே ?//
   இதிலேயே நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை உள்ளது. யாரும் யாரையும் முழுதாக காட்டிக் கொடுக்கவே மாட்டார்கள். ஜெயிப்பதற்கும் குறைந்த அளவு தேவை. வெறும் உணர்ச்சியை தூண்டும் வேற்று போராட்டங்கள் அதற்க்கு போதும். ரொம்ப கிளறினால், அவர்கள் திருடும்போது இவர்கள் கிளறுவார்கள்!

   எல்லா அரசியல்வாதிகளும் கூட்டாளிகளே!

  • reader சொல்கிறார்:

   //இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் எல்லாம் என்ன செய்கின்றன
   என்றே தெரியவில்லை. சும்மா டிவியில் மூஞ்சியைக்
   காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர
   இந்த மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை.//

   எப்படிச் செய்வார்கள்? இப்போதைக்கு விசாவுக்கே திண்டாட்டம். அப்படியே விசா வாங்கிட்டு அங்க போய் அவங்களுக்கும் சம்மன் கொடுத்தா அதையும் வாங்கி வருவதா? அடக்கி வாசிப்பதன் மர்மம் தெரியாதா பாஸ்?

 5. Ganpat சொல்கிறார்:

  எல்லா அரசியல்வாதிகளும் கூட்டாளிகளே!
  you said it Mr.Bandhu..
  The game going on in India is..
  Sonia,Advani,Modi,Mulayam,Karuna,Jaya etc etc
  Vs
  The citizens of Indian Republic.
  While the first team is ably supported by IPC,Indian Constitution,Judicial,Police,Corporate,staff
  and Party goons
  the second team is helpless and depends on God only.
  And God will definitely help at the right time.
  It may be tomorrow or 100 years hence..

  • venkataramani சொல்கிறார்:

   We are not helpless. WE are HAPLESS.

   கடவுள்தான் காப்பாற்றுவார் என்கிற உங்கள்
   நம்பிக்கை எனக்கும் பிடித்திருக்கிறது. ஆனால்,
   முக்கிய பிரார்த்தனையாளர், முன்னர்
   பழித்துரைத்தவர் மீதே நம்பிக்கை வைத்து
   விடுகிறாரே. என்ன செய்ய? இந்நிலையில்
   கடவுள்தான் என்ன செய்வார்? பாவம் குழம்பிவிட
   மாட்டாரா?

  • M Nithil சொல்கிறார்:

   Ganpat sir, The people in Egypt, Philippines are very religious and god fearing. But those people did not wait for the ‘right time’. Instead, they came to streets and protested against their autocrat governments and removed. But this will never happen in India, because we Indians are divided based on language, religion, caste, south, north etc etc. Unless we unite and protest, change will not happen even after 100 years or the so called ‘right time’ will never come. So sad……

 6. Ganpat சொல்கிறார்:

  Thank you dear Ka.mai for this wonderful compilation.Was very informative.I salute the American Judicial system after reading this.As Mr.Bandhu rightly said,this incident exposes the opposition more than it does the ruling party.Let us not pin too much hopes on Mr.Modi.
  “ரசத்தில் P;தெளிவா ஊத்து!” கதைதான்.

  • venkataramani சொல்கிறார்:

   குறைந்த பட்ச ஆதாரங்களுடன் மனு போட்டால், இந்திய
   கோர்ட்டுகளும் கூட ‘சம்மன்’ அனுப்புகின்றன. ஆனால்,
   இந்திய அரசியல் கட்சிகளிலுள்ளோர் யாரும் அதை “ச்ட்டை”
   செய்வதில்லை. ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, எதிர் கட்சி,
   வளர்ந்த கட்சி, வள்ரும் கட்சி, லெட்டர் பேட் கட்சி என்ற
   பேதமெல்லாம் இவ்விஷயத்தில் இல்லை.
   கட்சி என்றவுடன் ஊருக்கு ஊர் சட்டப் பிரிவுகள் வந்து
   விடுகின்றன. வாய்தாவுக்கு மேல் வாய்தா வங்க
   “நன்கு பயின்ற” வழக்குரைஞர்கள் வழ்க்கினை “நீர்த்துப்
   போகச்” செய்துவிடுவர். பின்னர், சம்மன்களும் ஆஜர்களும்
   தலைமையால் கணக்கில் கொள்ளப்பட்டு, ”உரிய
   மரியாதை” தரப்படும். எனவே, தெளிவாக இல்லை
   கலக்கியே ஊத்தச் சொல்லுகிறார்கள் (ரசத்தைத்தான்).
   —-
   ஒரு வினா: மேடைதோறும் செந்தமிழன் பேச்சும்,
   செயல்பாடும், இந்திய தண்டனை சட்டத்திற்கு
   உட்பட்டதா? அப்பாற்பட்டதா?

   • reader சொல்கிறார்:

    //வாய்தாவுக்கு மேல் வாய்தா வங்க
    “நன்கு பயின்ற” வழக்குரைஞர்கள் வழ்க்கினை “நீர்த்துப்
    போகச்” செய்துவிடுவர். //

    தேவைப்பட்டால் பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் (மன்னிக்க) பவானி சிங் தான் அரசு வழக்குரைஞராக வர வேணும்னு உச்ச நீதீமன்றத்திலும் வினோத வழக்குப் போடலாம். குற்றம் சாட்டப்பட்டவரை ‘யார் அரசு தரப்பு வழக்குரைஞராயிருந்தால் உனக்கென்ன? ‘ என்று நீதிமன்றமும் கேட்காது. புதிய புதிய சட்ட நுணுக்கங்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதில் அம்மாவுக்கு இணை அம்மாவே தான்.

 7. venkataramani சொல்கிறார்:

  எந்தக் கட்சிக்காரனும் கேட்கமாட்டெனென்கிறானே என்று
  அன்பர்கள் ஆதங்கப்படுவது, சரிதான். கேள்வி கேட்கப் போய்
  வரும் எதிர் கேள்வி(களு)க்கு என்ன பதில் சொல்வது? என்று
  யோசிப்பார்களோ என்னவோ?
  இந்த (அமெரிக்காவில் வாழும்) sikhs rights group தொடுத்துள்ள
  மனுவே அபத்தமானது (என கருத வேண்டியுள்ளது).
  1984-ல் நடந்த வெறியாட்டத்தை காங்கிரஸ் கட்சியோ அல்லது
  தலைமையோ முன்னின்று நடத்தவில்லை. கட்சியின்
  பொறுப்புகளில் இருந்த சில முக்கியஸ்தர்கள் நடத்தியதாக
  குற்றச்சாட்டு. அதன் பேரில் வழக்குகள் புனையப்பட்டு, பல
  காலம் நடந்து, டைட்லர், குமார் இன்ன பிறரின் “ஈடுபாடு”
  உறுதியாகி, 2008-ல் தண்டனை வழங்கப்பட்டு, 2009-ல் CBI அளித்த
  cleanchit-ன் காரணமாக மேற்படி டைட்லரும் குமாரும் வெளியாகி
  விட்டனர். இந்த நிலையில் தான், திரு.சிதம்பரத்தைக் குறி
  வைத்து, சீக்கிய பத்திரிகையாளர் ஒருவர் செருப்பு வீசினார்.
  சிதம்பரம் அப்போது உள்துறை அமைச்சர்.
  இதற்கிடைப்பட்ட காலத்திலே ப்ல்வேறு கமிஷன்கள்,
  கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அத்துயர சம்பவங்கள் வறையறை
  எதுவுமின்றி எல்லாவற்றையும் ஆராய்ந்து, தங்களது முடிவுகளை
  வழங்கின. அவை குறித்து, இடையில் ஒன்பதாண்டு காலமிருந்த
  பிஜெபி அரசு உட்பட, எந்த உறுதியான நடவடிக்கைகளும்
  மேற்கொள்ளவில்லை.
  —-
  சோனியா அம்மையாருக்கு வழங்கப்பட்ட இந்த சம்மன் குறித்த
  செய்தி almost எல்லா பத்திரிக்கையிலும் சேனல்களிலும் வந்து
  விட்டது. new york-லிருந்து வந்துள்ள இந்த செய்தி agency செய்தி.
  இவ்விஷயம் குரித்து, அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் இதை “சட்ட
  ரீதியாக” சந்திக்குமென கருத்து தெரிவித்துள்ளார்.
  முன்னமே சொல்லியுள்ள வண்ணம், செய்தியை பிரசுரிப்பதும்,
  உரிய இடம் அளிப்பதும், மறுப்பதும் மறைப்பதும் அந்தந்த
  ப்த்திரிக்கை ஆசிரியரின் (உரிமையாளர் என வாசிக்கவும்)
  உரிமை.
  தமிழர்கள் அறியாத விஷயத்தைத்தான் நீங்கள் சொல்ல
  விரும்புவது போல், தமிழர்கள் அறிந்து கொள்ளவே வேண்டாம்
  என அவர்கள் விரும்புவதும் நியாயம் தானே?
  —-
  கலைஞருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்
  அளித்ததை எதிர்த்து நடந்த போராட்டத்தில், பூலாவரி சுகுமாறன்
  மாண்டு போனது நினைவிருக்கிறதா? அதற்கு காரணமானவர்கள்
  யார்?
  ஊழல் வழக்கில் அம்மாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு
  மனம் வருந்தி, கோவை விவசாய பல்கலை மாணவர்கள் வந்த
  பேருந்தை எறித்து, மூன்று மாணவிகளைக் கொன்றவர்களை
  அவ்விதம் செய்ய சொன்னவர்கள் யார்? பின்னர் துணை போனது
  யார்?
  இப்போது பா.ம.க-விடம் நஷ்ட ஈடு கேட்கத் துணிபவர்கள்,
  அப்போது செய்தது என்ன?
  —-
  எதிர்க்கட்சிக்காரர்கள் மீது தினந்தோறும் வழக்கொன்று புனைந்து,
  நாள் தவறாமல், நீதிமன்றங்களிலே ஆஜராக சொன்னால்,
  அதை விடுத்து அவர்களால் வேறென்ன செய்ய முடியும்? இதில்
  கைது வாரண்டு வேறு.
  —-
  மோடியை விடுங்கள். உமா பாரதி, மம்தா, கல்யான்சிங், முலயாம்
  மாயாவதி போன்றோர் மீது நேரிடையாக உள்ள வழக்குகளின்
  இன்றைய நிலை என்ன? தெரிந்தால் சொல்லவும்.
  குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கட்சியில் இருந்தால், அவர்களின்
  ச்ட்ட விரோத செயல்களுக்கு, கட்சி பொறுப்பா? தனி நபர் பொறுப்பா?
  முன்னர் நடந்தவைகளுக்கு இப்போதைய தலைமை பொறுப்பு
  என்பது எந்த ச்ட்டத்தின் கீழ் நியாயம்?
  alias வைத்துக் கொள்வது எந்த சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு
  உள்ளது்?
  —-
  பதவியில் இருந்தாலும் இல்லாது போனாலும், அம்மாவுக்கும்
  கலைஞருக்கும் ஸ்டாலினிக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு
  படையினரின் செலவினங்கள் யார் கணக்கில் வருமோ, அதே
  கணக்கில் தான் சோனியாவின் பாதுகாப்பு செலவும் வரும்.
  அம்மா ஸ்ரீரங்கத்துக்கும், கொடநாட்டுக்கும் தனி விமானம் மூலம்
  போகலாமென்றால், அன்னை ஏன் அமெரிக்காவுக்குப் போகக்
  கூடாது?
  —-
  கெக்கேகே. இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா!

 8. GOPALASAMY சொல்கிறார்:

  IN CHIDAMBARAM, UDAYAKUMARAN DIED. POOLAVARI SUKUMARAN CASE WAS DIFFERENT. IT WAS AIDMK VS DMK.
  EVERYBODY HAS THE RIGHT TO SUPPORT ANY BODY FOR THEIR OWN REASONS.
  HOW SOKKA THANGAM ANNAI IS HAVING TWO OFFICIAL NAMES? IS IT NOT CRIMINAL MISTAKE?
  GARMAPURI BUS CASE, NOBODY GAVE DIRECTION TO KILL THREE STUDENTS.
  THEN WHY THEY LEFT THE REMAINING STUDENTS IN THAT BUS?
  I THINK Mr. VENKATRAMANI MIGHT HAVE KNOWN TAMILNADU.
  FOR ANY PROTESTS, PARTY CADRES, MISCRENTS, GOONDAS FIRST TARGET WAS THE BUSES ONLY.
  KM TOLD CORRECTLY VIDANDAVATHAM AND DISTRACTING THE MAIN ISSUE!!

  • venkataramani சொல்கிறார்:

   Mr Gopalasamy,

   Thanks for correcting. Yes it is Udayakumaran.
   If the Congress President can find fault and issued
   summons, why not others for similar issues?

   If congress leadership is responsible for 1984
   delhi riots, BJP is solely responsible for Ayodhya
   and Gujarat riots.

   Do you really think that my Qs are lacking logic?

 9. venkataramani சொல்கிறார்:

  Of course nobody has issued orders to torch the
  bus in Dharmapuri. It was handiwork of known AIDMK men
  not unknown miscreants, who targetted that bus and
  reduced it to ashes.
  Do you know that the government is not even permitting
  the (present) students of TNAU to observe the D-day in
  their campus. Why?

 10. separa54 சொல்கிறார்:

  Leave all this come to the latest news courtesy The Hindu.
  With accident-liability protection constituting another layer of state subsidy to foreign reactor vendors, the spectre of dozens of Enrons in the nuclear-energy sector is real.
  The controversial Indo-U.S. nuclear deal was pushed through without building “the broadest possible national consensus” that the prime minister had promised. Certain give-and-take is inevitable in any deal. But this deal has picked up such onerous conditions that it now threatens to cast a perpetual political albatross around India’s neck. To implement the deal, the government is now seeking to burden the Indian taxpayer on multiple counts — from state subsidy in the form of liability protection and acquisition of land on behalf of foreign vendors to guaranteeing subsidised price of electricity from the high-cost foreign reactors to be imported. The result is likely to saddle India with dozens of Enrons in the nuclear-energy sector.
  The deal’s energy benefits, in fact, are years away and will come with heavy economic costs. One reminder of the costs is the proposed nuclear-accident liability legislation. The revised bill that has emerged from the parliamentary standing committee increases, not lessens, the load on the taxpayer. The bill actually seeks to enshrine a new principle in international law: Profits are private, accident-related liabilities are all public.
  While U.S. law permits “economic channelling,” but not “legal channelling,” of liability, thereby allowing criminal proceedings and other lawsuits against any party in courts, the revised Indian bill channels all financial and legal liability to the Indian state operator, effectively indemnifying foreign reactor vendors. Nuclear safety can hardly be enhanced by freeing foreign suppliers upfront from responsibility for accidents caused by design flaws, pinning liability singly on the state operator, and vesting the right of recourse only with the operator by shutting out victims of accident.
  Nuclear park
  A bigger indicator of the energy-related costs, however, has completely escaped public attention. The government has earmarked a nuclear park exclusively for each of the four favoured foreign vendors. GE-Hitachi is to build six reactors at Kovvada (Andhra Pradesh), Westinghouse another six at Mithi Virdi (Gujarat), Areva a further six at Jaitapur (Maharashtra), and Russia’s Atomstroyexport six more at Kudankulam (Tamil Nadu) and an additional four later at Hirapur (West Bengal).
  The reservation of a nuclear park for each foreign vendor even before the terms of a reactor contract have been negotiated is anti-competitive and unparalleled. To add to the pampering, India is also acquiring land on behalf of these firms.
  Despite an inherently anti-market process, the government contends the contracts will be based on competitive pricing. But by reserving a park solely for each foreign vendor, it has undercut its own bargaining leverage. Just like the arms deals of recent years, the reactor contracts are all set to be signed without open bidding. Indeed, since the deal was unveiled in 2005, India has signed billions of dollars worth of arms contracts with America on a government-to-government basis, although the U.S. has no public sector.
  Worse yet, foreign firms are being freed from the task of producing electricity at marketable rates. The reactors will be run by the state operator, with the Indian taxpayer subsidising the high-priced electricity generated. It may take nearly a decade before the first foreign reactor under the nuclear deal comes on line, if one goes by Areva’s record in Finland and Atomstroy export’s at Kundankulam, where completion of a twin-reactor station is years behind schedule.
  Technology penalties
  Yet another jarring aspect is that despite the deal being in force internationally, India continues to battle major technology sanctions. The deal has not lifted all technology controls even in the civilian nuclear field: In late June, the G-8 countries renewed their ban on sale of civilian enrichment and reprocessing (ENR) technology and equipment, even under international safeguards, to a non-NPT state like India. The Indian foreign secretary has described as “anachronistic” the continuing U.S. export controls against India that extend beyond the nuclear realm to cover advanced technologies and target civilian entities like ISRO. The PM, however, had triumphantly announced in 2008 that the deal “marks the end … of the technology-denial regime against India.”
  The idea to build energy “security” by importing foreign fuel-dependent power reactors is nothing but a money-spending boondoggle likely to leave India insecure and buffeted by outside pressures. That spectre has been underscored by the four big “No”s for India embedded in the final deal: No binding fuel-supply guarantee to avert a Tarapur-style fuel cut-off; no irrevocable reprocessing consent; no right to withdraw from its obligations; and no right to conduct a nuclear test ever again.
  The government has shied away from discussing even the economics of producing electricity from foreign reactors. India’s heavily-subsidised indigenous nuclear-energy industry is supplying electricity at between 2.70 and 2.90 rupees per kilowatt hour from the reactors built since the 1990s. That price is far higher than the cost of electricity from coal-fired plants. But electricity from foreign-built nuclear reactors will be even dearer. That, in effect, will increase the burden of subsidies on the Indian taxpayer, even as the reactor imports lock India into an external-fuel dependency.
  The revised accident-liability bill does well to double the permissible time period for filing accident-related claims against the state operator. Increasing the compensation fund is also welcome, although there is no need realistically for minimum or maximum cap on liability when the Indian state is making itself wholly responsible for damages from an accident. But most other changes that have emerged from the standing committee’s deliberations or from the government’s disingenuous deal-making with the BJP do not address the fundamental concerns, which centre on relieving foreign vendors of direct liability for any accident and abridging the legal rights of victims.
  Indemnifying foreign suppliers helps to significantly lower their costs and risks of doing business in India. But in extending such protection, the bill aims to overturn the doctrine of “absolute liability” laid down by the Supreme Court that prevents “enterprises” (including the operator, supplier, builder and owner) from wriggling out of their liability by claiming exemptions, such as alleged sabotage. The Supreme Court held after the Bhopal gas disaster that, “The enterprise is strictly and absolutely liable to compensate all those who are affected by the accident and such liability is not subject to any of the exceptions which operate vis-à-vis the tortious principle of strict liability.” By that standard, foreign reactor vendors would be fully liable for any wilful act or gross negligence that causes a nuclear accident.
  The bill, however, casts all liability on the state operator and the federal government. The liability bill thus is a major liability for the Indian taxpayer.
  A way out
  The sensible course of action in nuclear energy would be for the government to let foreign vendors acquire land on their own at designated sites, build and operate reactors, and sell electricity to distribution companies without the Indian taxpayer in any way being burdened. If foreign firms produce nuclear energy at competitive prices, the benefits for India will be real. Even the cap on accident liability can be arranged by emulating the U.S. example so that the Indian taxpayer is the insurer of last resort, not of first resort. For each major radioactive release, America’s Price-Anderson liability system provides more than $10 billion in total potential compensation through a complex formula that includes insurance coverage carried by the reactor that suffered the accident, “retrospective premiums” from each of the covered reactors in operation in the U.S., and a five per cent surcharge. The liability burden thus falls on the private sector.
  The Indian government, however, has no intention to create an open, competitive field because that would unmask and obstruct the generous state subsidies it is offering for nuclear-generated power. It thus told Parliament categorically on August 12 that it “does not intend to change the related provision of the Atomic Energy Act, 1962, for private participation” in nuclear energy.
  Creating an artificial market with no-strings subsidies and electricity supply at state-supported rates is no prudent way to meet energy needs. The proposed arrangements actually seek to create a win-win situation for foreign vendors by ensuring there is no downside to their business. By rigging commercial terms in favour of select foreign suppliers, the arrangements, in effect, promote unfair business practices and cartelisation. – Brahma Chellaney is the author, among others, of Nuclear Proliferation: The U.S.-India Conflict) – let us discuss this and its implication

 11. nparamasivam சொல்கிறார்:

  Mr.Venkatramani is distracting the issue with improper arguments. if he is not able to answer the valid questions of Mr.K.M., he should admit and not divert the subject. This is like the arguments of Mr.Sanjay Jha and Mr.Mani S Iyer in TV discussions

 12. nparamasivam சொல்கிறார்:

  Mr.Venkatramani is unable to respond the queries of Mr.K.M. Hence he divert the topic of discussion as being done by Sanjay Jha and Mani sankarphoto Iyer in TV debates

 13. Ganpat சொல்கிறார்:

  நண்பர்கள் நித்தில்,வெங்கடரமணி மற்றும் ஏனையோர்களுக்கு,
  =ஒரு ஜனநாயக நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல்கள்தான் புரட்சி நிகழ்வாகும்.மக்கள் ஒன்றிணைந்து தீய சக்திகளை
  புறக்கணிக்க ஒரு வாய்ப்பு.அதை ஒரு 35 சதவிகத பேர் பயன்படுத்துவதேயில்லை.
  =இந்தியா என்பது ஒரு நாடல்ல ..பலவற்றின் கூட்டணி.
  =நம் நாட்டின் எதிர்காலத்தை பொறுத்தவரை நான் மிக அசுப எதிர்பார்ப்புகள்/ எண்ணங்கள் உடையவன்.(pessimist).இந்த இறையாண்மையும் குற்றவியல் சட்டத்தையும் தேர்தல் விதிமுறைகளையும் வைத்துக்கொண்டு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
  =கேவலம் ஒரு நகரத்தின் ஆட்டோ ஓட்டுனர்களை வழிக்கு கொண்டுவரமுடியாத
  நம் மாநில அரசாங்கம் , உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த ஒரு மாநில அரசை கட்டுப்படுத்த முடியாத மைய அரசும் ,எப்படி வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க முடியும்.??
  =முடிவாக பிதற்றல் ,அசட்டுத்தனம்,சுயநலம்,ஊழல்,திமிர் சோம்பேறித்தனம் ஆகிய “வற்றாத” செல்வங்களை குறைவின்றி பெற்ற நாடு நம்முடையது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.