கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

கமலின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் …!
காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி –

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்,
“கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது.
இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது
தேசப்பற்றாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால்
ஆபத்தாகி விடும் என்றும்
அவர் சொன்னார்.

காந்தியின் ரசிகனாக இருந்தும்,காந்தியை “மஹாத்மா”
என்று அழைப்பதைத் தான் விரும்புவதில்லை என்றும்,
சாதாரண மனிதனாக இருந்து தேச நலனை
முன்னிறுத்திய காந்தியை சாமியாராக, முனிவராக
ஆக்கிவிடக் கூடாது என்றும் சொன்ன கமல் –

2000ஆவது ஆண்டு தான் “ஹே ராம்” படத்தை
எடுத்ததன் காரணமே “மஹாத்மா”வைச் சுற்றியுள்ள
மர்மத்தை விலக்கத்தான். அவரைப் பற்றி மோசமாக
விமரிசனம் செய்வது போன்ற தோற்றத்தை அது உண்டு
பண்ணினாலும் –

உண்மையில் அவர் என்னவாக இருந்தாரோ அதை
அப்படியே பிரதிபலிக்கும் பார்வை தான் அது !”

விஸ்வரூபம்- 2 படத்திற்கு நல்ல விளம்பரம்
துவக்கம் …. ??? !!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இணையதளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சமூகம், சினிமா, தமிழ், பொது, பொதுவானவை, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

 1. ரிஷி சொல்கிறார்:

  எனக்கென்னவோ இது பற்றி மேலும் மேலும் பேசுவதன்மூலம் கமல் நினைப்பது ஏதோ ஒரு வகையில் சாத்தியமடைந்து விடுகிறது எனக் கருதுகிறேன். அவரது கருத்துகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது!

 2. srini சொல்கிறார்:

  கமலிடம் மாட்டிய மகாத்மா …படம் ரிலீஸ் ஆகும் வரை என்னும் என்ன உளரல்களை கேட்க வேண்டுமோ தெரியாது பார்ட் 1 படத்துக்கு வீட்டை அடகு வைத்தேன் சொன்னாரு இதுக்கு கௌதமி தாலிய அடகு வெச்சேன் சொல்ல முடியாது ஏனென்றால் அவருக்கு தாலி மீது நம்பிக்கை கிடயாது

  படத்தில் கண்டிப்பாக சில கமல் அக்மார்க் முத்திரை இருக்கும் … கடவுள் மறுப்பு, இந்து மத எதிர்ப்பு, திருமனதிருக்கு முன்பு நடிகையுடன் உறவு, சில பல முத்த காட்சிகள், குளித்து விட்டு வந்து ஜட்டி போடற மாதிரி ஒரு சீன், இதுஎல்லாம் சேர்த்து இப்ப நீங்க சொல்றத வெச்சு பார்த்தா, கண்டிப்பா மகாத்மாவும் இருப்பார் போல இருக்கு….

  பாவம் மகாத்மா …. கமல் மாதிரி ஆட்கள் கிட்ட எல்லாம் மாட்டிக வேண்டி இருக்கு

 3. GOPALASAMY சொல்கிறார்:

  WE HAVE TO IGNORE KAMALA HASSAN’S WORDS. HE CAN TELL HIS OPINION ABOUT VARIOUS HEROINES WITH WHOM HE ACTED AND WHAT WAS THEIR SPECIAL QUALITIES.
  HE CAN GIVE INTERVIEW ABOUT THESE TYPE OF THINGS TO AV AND KUMUDAM.
  OTHER THAN THAT, WHATEVER HE TALKS, WE CAN IGNORE. NOT WORTH FOR ANY COMMENTS.

 4. GOPALASAMY சொல்கிறார்:

  RA. SU. NALLAPERMUMAL’S KALLUKUL EERAM IS A FAMOUS NOVEL. IT GOT SECOND PRIZE DURING KALKI’S 25th YEAR. ( FIRST PRIZE TO MULLUM MALRUM UMA CHANDRAN)
  HAY RAM STORY BASED ON THAT NOVEL ONLY. BUT “INTELLUCTUAL” KAMALAHASSAN TOLD HE NEVER HEARD ABOUT THAT NOVEL. THIS IS THE RESPECT HE IS GIVING TO WRITERS!

  • எழில் சொல்கிறார்:

   ‘மன்மதன் அம்பு’ படம் பாத்திருப்பீங்க. அதில ஆரம்ப எழுத்தோட்டத்தில் கதை – திரைக்கதை -வசனம் கமலஹாசன்னு வரும். இப்போ கூகுளுக்கு போய் ‘Romance on High Seas’ ன்னு தேடி, முதலாவதோ இரண்டாவதோ சுட்டிய சொடுக்கி பாருங்க.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Hats Off to Ezhil.
    எப்படித்தான் இந்த “தொடர்பு”களை எல்லாம்
    கண்டு பிடித்தீர்களோ ..!

    அட்லீஸ்ட் – இன்ஸ்பைரேஷன் –
    ‘Romance on High Seas – 1948′
    என்றாவது போட்டிருக்கலாம் “உலகநாயகன்” !
    அந்தப் படத்தை எலலாம் பார்த்தவர்கள் இப்போது
    எங்கே இருக்கப்போகிறார்கள் என்கிற தைரியம் தான் போலிருக்கிறது !

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • எழில் சொல்கிறார்:

     ஐயா, உண்மையில் இதை நான் கண்டுபிடிக்கல. இணையத்தில் எங்கயோ படித்தது. சரியாக ஞாபகம் வரவில்லை. வந்திருந்தால் அதற்கான சுட்டியை குறிப்பிட்டிருந்திருப்பேன்.

 5. Red சொல்கிறார்:

  ennamo ponka. kamala thitalanna unkalukku ellam thookam varathu pola irukke.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.