கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது ….(last episode – இப்போதைக்கு)

கடந்த 3 ஜென்மங்களின்  நினைவு
எனக்கு இன்னும் இருக்கிறது ….(last episode –  இப்போதைக்கு)

(இந்த episode -உடன் இப்போதைக்கு ஈஷா பற்றிய
இடுகைகள் நிறைவு பெறுகிறது. “உணர்தலும்” – “உணர வைத்தலும்” நமது பணி. விதைத்துக் கொண்டே போய்க் கொண்டிருப்போம். விளைவது விளையட்டும் !)

——————————–

(முந்தைய இடுகைகளின் தொடர்ச்சி )

சென்னையிலும், டெல்லியிலும் கைலாசம்-மானசரோவர்
யாத்திரைக்கு வழக்கமாக அழைத்துச்செல்லும் யாத்திரைக்
குழுக்கள் நிறைய இருக்கின்றன. இவை வர்த்தக
ரீதியில் செயல்படுகின்றன.
அதை விளம்பரம்
கொடுத்தும் செய்கின்றன.

இவை சாதாரணமாக அனைத்துச் செலவுகளும் உட்பட
வசூலிக்கும் கட்டணம் –

ரூபாய் 61,000/-  முதல் 65,000 வரை.
இத்தகைய விளம்பரங்களின் மாதிரி ஒன்றை கீழே
தந்திருக்கிறேன்.

இதே யாத்திரைக்கு “சற்குரு” வாங்குவது எவ்வளவு
தெரியுமா ?
( நான் கீழே தருவது 3 வருடத்திற்கு முந்தைய
கட்டணம் !)

வெளிநாட்டினராக இருந்தால –
அமெரிக்க டாலரில் கட்டணம் 4500 டாலர்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக  இருந்தால் –
ரூபாய் 1,80,000/-

இந்தியாவில் வசிக்கும் இந்தியராக இருந்தால் –
ரூபாய் 1,50,000/-

இதைத்தவிர கைச்செலவுக்கு சில்லரையாக (?)
ரூபாய் 20,000/
-(அனைவருக்கும் பொருந்தும்)
தனியாகக் கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு தேதியிலும் சுமார் 500 பேர் வரை
அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில்
எவ்வளவு  தேதிகளில் பாட்சுகள் செல்கின்றன என்று
அவர்களின்  விளம்பரத்தில் பார்க்கவும்.

ஆக மொத்தம் இந்த கைலாச யாத்திரையில்
அடிக்க்கப்படும் கொள்ளை எவ்வளவு இருக்கும்
என்பதை படிப்பவர்களே தோராயமாகக் கணக்கு
போட்டுப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டுக்கொள்ளவும் !

இந்தத் தொடரை ஒட்டி சில கேள்விகளை
எழுப்ப விரும்புகிறேன்.
இதற்கான பதில்களை
என்னால் இப்போதைக்கு கொடுக்க முடியா விட்டாலும்,
இந்த கேள்விகளே இதைப் படிப்பவர்களிடம் தேவையான
எண்ண ஓட்டங்களை உருவாக்கும் என்று
நம்புகிறேன்.

1 இது அவர்களின் வலைத்தளத்திலேயே
உள்ள அறிவிப்பு –
Isha Foundation is registered as a
Charitable Trust in India.
Donations to Isha Foundation are
exempt from Income Tax under
Section 80G of the Income Tax Act.

இந்தப் பிரிவின் கீழ் இந்த நிறுவனம் இதுவரை
பெற்றுள்ள  மொத்த தொகை
எவ்வளவு கோடி  இருக்கும் ?

அவர்களின் குறிக்கோள்களாக அவர்களது
வலைத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளவை –

2)human upliftment to more than
2,500 destitute villages in
rural southern India.

ஆதரவற்ற், கவனிப்பாறின்றி கிடக்கும்
2500 கிராமங்களை     
( கவனிக்கவும் 2500
கிராமங்களை)      தத்தெடுத்து  வளப்படுத்தவும்,

3) aiming to plant 114 million
trees, restoring
33% green cover in Tamil Nadu,

11 கோடியே, 40 லட்சம் மரங்களை நட்டு
தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிய பசுமையாக
ஆக்கவும்,

4)206 new village schools in
rural southern India

தென்னிந்தியாவில் 206 புதிய கிராமப்புற
பள்ளிக்கூடங்களை நிறுவவும் –

5) ஆக தனது வலைத்தளத்திலேயே கூறியுள்ள
மேற்கூறிய 2,3,4 ஆகிய 3 லட்சியங்களுக்காக
மட்டும் இந்த ஈஷா நிறுவனம் உள் நாட்டிலும்,
வெளிநாடுகளிலும்  கடந்த 15- 20 வருடங்களாக
பெற்றுள்ள மொத்த நன்கொடை எவ்வளவு ?

அவற்றில் இதுவரை இந்த காரணங்களுக்காக
செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு ?
மீதி இருப்பது எவ்வளவு ?

6)மேற்கூறிய லட்சியங்களில் இதுவரை
அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு ?
எவ்வளவு பணிகள் பூர்த்தியாகி இருக்கின்றன ?
இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவு ?

7)இந்த நிறுவனத்தின் சொத்துக்கள், பணம
அனைத்தையும் நிர்வகிப்பது யார் ?
“சற்குரு” எந்த அளவிற்கு நிதி நிர்வாகத்தில்
பொறுப்பு ஏற்கிறார் ?
இதன் பொறுப்பில் உள்ள மற்ற நிர்வாகிகள்
(டிரஸ்டு  டைரெக்டர்கள்) யார் யார் ?

8) கடந்த 5 ஆண்டுகளாக, சராசரியாக
வருடத்திற்கு 210 விமானப்பயணங்களை
“சற்குரு”மேற்கொண்டிருக்கிறார் என்பது
சரியான  தகவலா ?

9)இவருக்கு ஒரு மகள் இருந்தாரே –
அவர் இப்போது இவர் கூடத்தான், இவர் ஆதரவில்
தான் இருக்கிறாரா ? அல்லது வேறு எங்கே ?
அதற்கும் இந்த தலைப்பிற்கும் தொடர்பு
இருப்பதால் மட்டுமே  இந்தக் கேள்வி.

10) கடந்த 3 ஜென்மங்களின் நினைவு தனக்கு
இருப்பதாகக் கூறும் இவர்
அவற்றைப் பற்றிய
விவரங்கள்  எதையாவது
ஆதாரத்துடன்  நம்பும் விதமாகக் கூற முடியுமா ?

11)இவர் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான photo
pose களில் சில கீழே –


இவ்வாறு விதம் விதமாக கவர்ச்சிகரமாகக்
காட்சி அளிக்க, கவர்ச்சிகரமான
உடைகளைத் தேர்ந்தெடுக்கவும்
, தைக்க
ஏற்பாடு செய்யவும், அவற்றை இவர் செல்லும்
நாடுகளுக்கு எல்லாம் உடன் எடுத்துச்செல்லவும்
இவருக்கு எவ்வளவு நேரமும், பணமும்
செலவழியும் ?

“சற்குரு”வான இவருக்கு
இது எல்லாம் ஒத்து வருகிறதா ?

இதற்கான செலவுகள் எல்லாம் எதிலிருந்து
செய்யப்படுகின்றன ?
ஈஷாவின் லட்சியங்களாக
மேலே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவைகளை
நிறைவேற்றும் பொருட்டு பெறப்படும்,
வருமான வரியிலிருந்து இந்திய அரசால்
விலக்கு அளிக்கப்பட்ட,
நன்கொடைகளிலிருந்தா ?

இனி –

பிரமிக்க வைக்கும் பணவசதிகளும்,
அளவு கடந்த அரசியல் செல்வாக்கும்,
பிரம்மாண்டமான கட்டமைப்பும்,
லட்சக்கணக்கான சீடர்களையும்
கொண்டுள்ள இந்த  நபரை -நம்மால்
சுட்டு விரலளவு கூட  அசைக்கக்கூட முடியாது.

நமது எழுத்துக்கள் எந்த விதத்திலும்
அவரை  பாதிக்காது
என்பது நிதரிசனமாக
எனக்குத் தெரிந்தாலும் –

இந்த இடுகைகளுக்கான  காரணம் –
சொல்லுவதைச் சொல்லி வைப்போமே !
இன்றில்லா விட்டாலும்  நாளையாவது
நிலைமை மாறலாம்  அல்லவா ?

என்கிற நம்பிக்கையில் தான்.

சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம்.  ஆனால் –
எல்லாரையும், எப்போதும் ஏமாற்றி விட முடியாது
என்பது உண்மை தானே ?

(First posted on  11 /04/2010 in Vimarisanam Blog by Kavirimainthan)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது ….(last episode – இப்போதைக்கு)

 1. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  தொடர்ந்து படித்தேன். எனக்கு பெரிதான ஆச்சரியமோ வருத்தமோ இல்லை. கோபம் கூட வரவில்லை. திருப்பூரில் திருமுருகன் பூண்டி என்றொரு இடம் உள்ளது. அங்கே சாமி சிலைகள் செய்து கொடுக்கும் தொழில் செய்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஈஷா யோக மையம் வாங்கும் விலை (சிவலிங்கம்) 450 முதல் 600 வரை. ஆனால் அங்கே மையத்தில் விற்பது 1500.

  இரண்டு வருடங்களுக்கு முன்பே யோசித்து வைத்து இருந்தேன். இப்போது ஒவ்வொன்றாக வெளி வருகின்றது.

  நன்றி.

 2. venkataramani சொல்கிறார்:

  ஈஷா பவுண்டேஷன் முதலில் கோவை சிங்கநல்லூரில் இயங்கி
  வந்தது. (இப்பவும் இருக்கிறது). பின்னர், “நகருக்குள் இருந்தால்
  நல்லாயிருக்கும்” என்கிற அடிப்படை தொழில் இலக்கணப் படி
  டாடாபாத்-தில் வந்தது. ஆடி மூல செயல்பாடுகள் நடந்த செட்டி
  பாளையத்தில் ஒன்றும் இல்லை இப்போது.

  “எல்லாம்” வியாபாரம் தான். இவர்கள் மையத்தில் “லட்டு” தொடங்கி
  வேர்க்கலை, ருத்திராக்ஷம் வரை எல்லாம் விற்கிறார்கள். விரும்பு
  வோர் வாங்குகிறார்கள். லட்டு “நல்லா” வேற இருக்கும். இங்கு
  கிடக்கும் கடலை மாதிரி நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் கூட வாங்க
  முடியாது. கிடக்கட்டும் விடுங்கள்.

  தங்களின் இடுகை ஈஷா, மேற்கு தொடர்ச்சி மலைச்சார்ந்த வனப்பகுதியை
  வன பாதுகாப்பு சட்ட திட்டங்களையெல்லாம் மீறி கான்கிரீட் காடுகளாக
  மாற்றிவிட்டது என்பதில் தொடங்கி, கைலாஷ் யாத்திரை டிக்கெட் விபரத்தில்
  முடிந்திருக்கிறது. அவர்கள் செய்யும் வியாபாரம் தான் பெரிதும் உங்களை
  பாதித்து இருக்கிறது போலும்.

  ஈஷா உள்ள இடம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் யானைகளுக்கான
  முக்கிய வழித்தடத்தில் உள்ளது. கர்நாடக பண்டிப்பூரில் தொடங்கும் காட்டு
  யானைகளின் இரை தேடும் யாத்திரை இவ்வழியே தான் கேரளத்தை
  அடைந்து, பின் மீண்டும் “எதா ஸ்தானத்தை” அடைகின்றது. பல நேரங்களில்
  இயல்பான யாத்திரை தடைப்பட்டு, தடம் மாறிப் போய் விடுகின்றன.
  மதுக்கரை, வாளையார் ஆகிய இடங்களில் விபத்துகளில் சிக்கி உயிர்
  இழக்கின்றன. இதுபற்றியெல்லாம் எதாவது வரும் என எதிர்பார்த்தேன். ஆனால்
  “வியாபார” விஷயத்தோடு முடிந்து விட்டது.

  இதே ஏரியாவில், அதாவது ஆலாந்துறை செம்மேடு சிறுவாணி பகுதியை
  கான்கிரீட் மண்டலமாக மாற்றி வியாபாரத்தை செய்துவரும் “காருண்யா”
  பற்றியும் கூட எழுத வேண்டும். செய்வீர்களா?

  காருண்யாவில் தான் 24-மணி நேர ஜெப கோபுரம் நடக்கிறது. உங்கள்
  அழுகைக்காக “அவர்கள்” விரார்த்திக்கிறார்கள்.

  காருண்யாவின் FOUNDER சகோதரர் D G S தினகரன் SBI-யில் பணியாற்றி,
  கோடானகோடி மக்களின் அழுகுரல் கேட்டு, அவர்களுக்காக இயேசுவிட
  “இரைஞ்ச” பார்த்துக் கொண்டிருந்த பணியை உதறியவர். அவருக்கு
  காருண்யா தொடங்க விட்டமின் “ப” வந்தது எப்படி?

  தசமான பங்க்குகள் சொத்துகளான கதை.

  எல்லாம் வியாபாரம் தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி வெங்கட் ரமணி.

   1)நான் இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதாலும், எனக்கும் பொதுவாக ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு உண்டு என்பதாலும்,
   இந்த ஏமாற்று வேலைகளை கண்டறிவது
   சுலபமாக இருந்தது. “காருண்யா” குறித்த
   விவரங்கள் முழுவதுமாக எனக்குத் தெரியவில்லை என்பதால் இப்போதைக்கு
   அதைக்குறித்து எழுத முடியவில்லை. இருந்தாலும்
   விவரம் தெரிந்தவர்கள் எழுதினால் இந்த வலைத்தளத்தில்
   அதற்கும் நிச்சயம் இடம் உண்டு.

   2) இந்த இடுகைத் தொடரின் துவக்கத்திலேயே
   நான் கூறி இருந்தேன். “சவுக்கு” தளத்தில்
   யானைத்தடங்களை மறித்து ஆக்கிரமித்துக்
   கொண்டது பற்றி விவரமாக ஆதாரங்களுடன்
   எழுதி இருக்கிறார்கள் – எனவே நான்
   தனியாக அது குறித்து எழுதப் போவதில்லை என்று.

   3) இந்த தொடரில் கூட நான் எழுதியதைத்
   தவிர பின்னூட்டங்களின் மூலம் நிறைய
   தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே என்
   இடுகைகள் பின்னூட்டங்களின் மூலம் தான்
   முழுமை பெறுகின்றன என்பதை நான்
   இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும்.

   முக்கியமான பல தகவல்களையும் தங்கள் பின்னூட்டங்களின் மூலம் சேர்த்துக்கொடுத்த
   நண்பர்களுக்கு என் நன்றிகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்
   கொடுத்த

   • venkataramani சொல்கிறார்:

    ஆன்மீகத்திற்கும் இவர்களின் செயல்பாட்டிற்கும் வெகு தூரம்.
    ஆனால், அவ்வப்போது இவர்கள் “இறை” பற்றியும் பேசுவார்கள்.
    ஆன்மீகத் தேடல் மிக்கவர்கள் பலரும் தாங்கள் வகித்த பதவி.
    சொத்து சுகத்தையெல்லாம் “உதறிய” பின் “மெய்”ஞானம்
    அடைந்தார்கள்.

    ஆதிசங்கரர், மாணிக்கவாசகர், தாயுமானவர் பட்டினத்தார்…இப்படி பல
    உதாரணங்கள் உள. சங்கரர் காலடியில் பெரும்பணக்கார குடும்பத்தில்
    ஒரே பிள்ளையாக பிறந்தவர். “தேடல்” ஆட்கொண்ட பின், தன்
    சீரிளம் பருவத்திலேயே, விதவைத் தாயாரையும், சொத்துக்களையும்
    “துறந்தார்”.

    மாணிக்கவாசகருக்காக பாண்டிய மன்னனிடம் ஈசன் நிகழ்த்திய
    “நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கிய” திருவிளையாடல் மிகவும்
    பிரபலம். மா.வா மந்திரியாக இருந்தார். அவர் நிமாணித்த பெருங்கோவில்
    தான் “ஆவுடையார் கோவில்” (திருப்பெருந்துறை).

    தாயுமானவர், மெளனகுருவிடம் “உபதேசம்” பெருவதற்கு முன்னர்,
    நிதி அமைச்சராக இருந்தவர்.

    பட்டினத்தார் “ஞானம்” அடைந்தவுடன் தன் சொந்த ஊரை விட்டே
    அக்ன்றார். அவர் பெரும் பண்க்காரர்.

    இவர்களில் யாரும் “ஆன்மீகம்” பேசிக் கொண்டு “சொத்துக்களை”
    சேர்க்கவில்லை. மாறாக உலக வாழ்வு மாயைகளால் சூழ்ந்திருக்கிறது
    என்பதை உணர்ந்து, “ஆசை”களுக்குக் காரணமான செளகரியங்களைத்
    துறந்தனர்.

    சற்குருக்களும், ப்ரம்மஸ்ரீக்களும் ஊர் ஊராய் வந்து மக்களை
    வேறொரு வகையான மாயைக்கு ஆட்படுத்தி “வளம்” பெருகிறார்கள்.

    நித்தியானந்தாக்களும், ஸ்ரீ ஸ்ரீக்களும், சற்குருக்களும் ஆசிரமம் அமைத்து
    பெரும் பணம் சேர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். அவர்களை
    முதலீடாகக் கொண்டு அல்லது அவர்களுக்கு முதலீடு செய்து “தன்”
    சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளும் தந்திரம் கற்றவர்கள்தான்
    பின்னணியில் இயங்குகிறார்கள்.

    எல்லாவற்றையும் விட்டவனுக்கு “பணமும் பொருளும்” எதற்கு?

    சமீபத்திய உதாரணம்: “விசிறி” சாமியாருக்கு அவரது “விசிறிகள்”
    அமைத்துள்ள ஆசிரமம்.

    இத்தகைய “காருண்யம்” மிக்கவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்
    என்றே எண்ணுகிறேன்.

    • புரட்சிதமிழன் சொல்கிறார்:

     விசிரியை சொல்லி என் பழைய நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள். 2000 மாவது ஆண்டில் திருவண்ணாமலை த நா மி வா வில் அப்ரண்டீசாக இருக்கும்போது அலுவலகம் முழுவதும் இண்டர்காம் EPABX வசதி இருந்ததால் விசிரி சாமியார் என்று முக்கிய தொ பே எண்பட்டியலில் எழுதிவைத்திருந்ததால் உடனே நான் அந்த எண்ணுக்கு போன்செய்தேன் மரு முனையில் ஹலோ விசிறி என்று குரல்கேட்டது உடனே நான் காத்தே வரமாட்டேன்குதுன்னேன் உடனே அந்த நபர் அதுக்கு நான் என்ன பன்னட்டும் என்றார் நான் கொஞ்சம் விசிரிவிட்டால் நல்லாயிருக்கும் என்றேன் மறுமுனையில் டொக் என்று சத்தம் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

 3. T.N.MURALIDHARAN சொல்கிறார்:

  அதிர்ச்சி செய்தியாகத்தான் உள்ளது ஏமாறுபவர்கள் இருக்கிற வரையில் இது போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி திரு காவிரி மைந்தன்.

 5. Ganpat சொல்கிறார்:

  காவிரி மைந்தன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும்,என் விஜய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.
   நண்பர்கள் அனைவருக்கும்
   தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   -காவிரிமைந்தன்

 6. c.venkatasubramanian சொல்கிறார்:

  vandhorkkellam vazhvu alikkum kovai enna seiyya?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.