“கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா ?

“கருட புராணம்” படிக்க  “அந்நியன்” வர வேண்டுமா ?

anniyan-2

பொதுத்துறை வங்கிகள் என்பவை இந்த நாட்டின்
மக்களது வங்கிகள்.
அதன் லாப நஷ்டங்களுக்கு இறுதிப் பொறுப்பு
ஏற்பது மத்திய அரசு என்பதால் –
நாம் தான் அதன் உண்மையான சொந்தக்காரர்கள்.

நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள்.
நெருங்கிய நண்பர் என்றாலும் கூட, கடன் என்று
வாங்கினால், அதை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று
தான் எதிர்பார்க்கிறீர்கள்.
அதையே தொழில்முறையில் கடனாகக் கொடுத்தால்,
கடன் கொடுத்த பணம் நிச்சயம் திரும்பக் கிடைக்க –
உரிய பாதுகாப்புகளை(indemnity, guaranty,
or security) செய்துக் கொண்டு தான்
கடன் கொடுப்பார்கள்.

வங்கிகள் செய்வது charity அல்ல -business !
தொழில் என்றால், அதற்குரிய
கட்டுப்பாடுகளை, நடைமுறைகளை, உத்தரவுகளை
கடைப்பிடித்தாக வேண்டும் அல்லவா ?

வங்கிகள் பொதுமக்களுக்கு கடன் கொடுக்கின்றன.
வாகனங்கள் வாங்க, நிலம் வாங்க, வீடு வாங்க –
இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக.
இத்தகைய கடன்களைக் கொடுக்கும்போது,
கடன் வாங்குபவரின் நிரந்தர வருமானம்,
அவர்களது திரும்பக் கொடுக்கும் சக்தி ஆகியவற்றை
கவனித்து உறுதி செய்து கொள்கின்றன.
வாங்கும் கடன் ஒழுங்காக திரும்பக் கொடுக்கப்படும்
என்பதை உறுதி செய்ய
தகுந்த ஜாமீன்தாரர்களின் ஒப்புதல் பெறப்படுகிறது.
அதற்கு மேலாக, வாங்கப்படும் பொருளும் –
வங்கிக்கு அடமானமாக எழுதி வாங்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்காக
தவணைகள் செலுத்தப்படவில்லை என்றால், அடமானம்
வைக்கப்பட்ட பொருள் ஜப்தி செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு,
வங்கி கொடுத்த கடன் பணம் வசூல் செய்யப்படுகிறது.

அடிக்கடி பத்திரிகைகளில்  பொதுத்துறை வங்கிகளின்
விளம்பரங்களைப் பார்க்கிறோம். கடன் வாங்கி, உரிய
காலத்தில் தவணைகளைச் செலுத்தாதவர்களின் -விலாசம்
மற்றும் புகைப்படங்களுடன் செய்யப்படும் விளம்பரம் !
வட்டியுடன் சேர்த்து உடனடியாகப் பணத்தை திரும்பச்
செலுத்தா விட்டால், விளம்பரத்தில் குறிப்பிடப்படும்,
அடமான சொத்து ஏலத்தில் விடப்படும் என்று.

ஐந்து லட்சம், பத்து லட்சம் கடன் வாங்கியவர்களுக்கே,
தகுந்த ஜாமீன் – அடமானம் உள்ளவர்களுக்கே –
இந்த ட்ரீட்மெண்ட் என்றால்

கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கி விட்டு, திரும்பக்
கொடுக்காமல் இருக்கும் கோடீஸ்வர – கடன்கார –
தொழிலதிபர்களை இந்த வங்கிகள் எப்படி நடத்த வேண்டும் ?
கடன் பணத்தை திரும்ப வசூலிக்க என்னவெல்லாம்
செய்திருக்க வேண்டும் ?

கீழ்க்காணும் விவரங்களைப் பாருங்கள் –  

மார்ச் 2011-ல் பொதுத்துறை வங்கிகளின்
திரும்ப வராத கடன்களின் அளவு –
71,080 கோடிகள் ( ஆமாம் கோடிகள்  !)

டிசம்பர் 2012-ல் இதே வங்கிகளின்
திரும்ப வராத கடன்களின் அளவு –
1,55,000 கோடிகள் !

இதில் 172 கம்பெனிகளின் மொத்தக் கடன் தொகை மட்டும் –
37,194 கோடிகள் !

இப்படிக் கடனாகக் கொடுக்கக்ப்பட்டது எல்லாம்
யார் பணம் ? நம் பணம் !!

இப்படி கடன் வாங்கி – உரிய காலத்தில் திரும்பக்
கொடுக்காத கம்பெனிகள் எவை எவை ?-
அவற்றின் மதிப்பிற்குரிய,
மேன்மை தாங்கிய – உரிமையாளர்கள் யார் யார் ?

– இந்தத் தகவலை வெளியிட வங்கிகளும் சரி,
மத்திய அரசும் சரி – – மறுக்கின்றன !

ஐந்து அல்லது பத்து லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கிவிட்டு
திரும்பச் செலுத்தாதவரின் விலாசம், புகைப்படங்களுடன்
(பெண்களாக இருந்தாலும் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் )

விளம்பரம் செய்யும் வங்கிகள் –
கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு  திரும்பக் கொடுக்காமல்
காலம் கழிக்கும் தொழில் அதிபர்களின்,
நிறுவனங்களின் – பட்டியலை வெளியிட மறுப்பது ஏன் ?

இத்தைகைய நிறுவனங்கள் மீது,
அவற்றின் அதிபர்களின் மீது –
எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?

அவர்களிடமிருந்து வாராக்கடனை -வரவழைக்க
என்னென்ன வழி முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?

சில மாதங்களுக்கு முன், அர்விந்த் கெஜ்ரிவால் –
HSBC வங்கி ஈடுபட்டிருக்கும் சட்டவிரோதமான
தொழில்கள் பற்றிய பல விவரங்களை வெளியிட்டார்.
அதில் சம்பந்தப்பட்டிருந்த, (அம்பானி உட்பட) சில
தொழில் அதிபர்களின் பெயர்களையும் வெளியிட்டிருந்தார்.

அந்தப் புகாரின் கதி என்ன ?
அதன் மீது எத்தகைய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன ?
அவற்றில் எத்தகைய மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன ?
சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் ?

சில நாட்களுக்கு முன்னர் “கோப்ரா போஸ்ட்”
வலைத்தளம்  மூலம் –
சட்டவிரோதமான பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுவதாக
3 தனியார் வங்கிகள் மீது ( ICICI, HDFC, Axis Bank)
விவரமான ஊழல் புகார்கள் வெளிவந்தனவே ?
இந்த வங்கிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?

Latest-ஆக சென்ற வாரம் வர்ஜின் தீவுகளில்
(British controlled Vergin Islands )

சட்டவிரோதமாக, கள்ளத்தனமாக –
உலகம் முழுவதிலும்  இருந்து பண முதலைகள் பணம்
பதுக்கிய விவகாரம்  வெளியாகி இருக்கிறது.
அதில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த
612 கோடீஸ்வரர்களின் பட்டியலும் International
Consortium of Investigative Journalists
புண்ணியத்தில் வெளியாகி இருக்கிறது.
(இதில் கிங் பிஷர்  விஜய் மால்யா,
பாரமவுண்ட் ஏர்வேஸ் தியாகராஜன்,
காங்கிரஸ் எம்.பி.விவேகானந்த் கதம்,
தொழிலதிபர் ரவிகாந்த் ரூயா,
சத்யம் கம்ப்யூட்டர் தேஜா ராஜூ,
எம் ஆர் எப் ராஹூல் மாம்மென் மாப்பிள்ளா
–  ஆகியோர் பெயர்களும் அடக்கம் !)

120 கோடி மக்களைக் கொண்ட, உலகிலேயே பெரிய
ஜனநாயக நாடு!
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக
சீக்கிரத்தில் உருவாகப்  போகிறோம்  என்று  பொறுப்பில்
உள்ளவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் !

சர்வ அதிகாரங்களும் கொண்ட ஒரு மத்திய அரசு –
அதன் கீழ் ஏகப்பட்ட அதிரடி ஏஜென்சிக்கள் –

செண்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் –
டைரெக்டொரேட் ஆப் ரெவெனியூ இண்டெலிஜென்ஸ் –
என்போர்ஸ்மெண்ட் டைரெக்டோரேட் –
சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் –

இத்தியாதி இத்தியாதி –

இவ்வளவு இருந்தும் நிர்வாகம் ஏன் இப்படி ?
இந்த சீர்கேடுகளைக் களைவது யார் பொறுப்பு ?

யாராவது “அந்நியன்” வந்து “கருடபுராணம்” படித்து தான்
இவை எல்லாம் சீராக வேண்டுமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to “கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா ?

 1. AAR சொல்கிறார்:

  CDR – Corporate Debt Restructuring – Banks give huge concessions to Business Groups if they do not repay the loans on time.
  Some of the concessions given:
  1. Stop interest payment for 2-3 years.
  2. Reduce the interest rate to 11% from 16% after that period.
  3. Infuse more loan amount in the name of capital infusion.
  4. Convert loan amount to equity.
  5. Write-off section of the loan.
  6. Giving loan on non-assets as surety like Goodwill, Brand name, Patents (junk ones), franchise agreements (worthless)…

  All Public Sector Banks like SBI, BoB, PNB, Canara Bank have given away huge amount like 40,000 crore in this fashion.

  What can we common man do?

 2. c.venkatasubramanian சொல்கிறார்:

  Pls recollect Mr Gopalakrishnan of Indian Bank

 3. Bkkk சொல்கிறார்:

  Yes we need Anniyan…..

  otherwise no use

 4. venkataramani சொல்கிறார்:

  தனி நபர் கடனுக்கும், தொழில் கடனுக்கும் பெரிய வித்தியாசம்
  இருக்கிறது. அதிலும் சிறு, குறு மற்றும் பெரும் தொழில் கடனுக்கு
  START WITH APPLICATION AND SANCTION TO REPAYMENT வரையில்
  ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் உள்ளன. DEFAULTERS LIST-ல்
  உள்ளவர்கள் மாபெரும் (MEGA?) தொழில் அதிபர்கள். எனவே,
  இவர்களுக்கான “விதி முறைகள்” முன்னதிலிருந்து இன்னமும்
  பெரிதும் வேறுபடுகின்றன.

  தனி நபர் கடனுக்கு கடன் வேண்டுபவர் வங்கியை தேடி ஓட,
  பெரும் மற்றும் மாபெரும் தொழில் அதிபர்களை நாடி வங்கி அதிகாரிகள்
  ஓடுவது முதலாவதும், முக்கியமானதுமான வித்தியாசம்.

  பெரும்பாலான மாபெரும் தொழிலதிபர்கள் அரசியல் கட்சிகளைச்
  சார்ந்தவர்களாகவோ, அல்லது அரசியல் கட்சிகளுக்கு “ஊட்டச்சத்து”
  அளிப்பவர்களாகவோ அல்லது அரசியல் நடத்துபவர்களாகவோ
  இருக்கிறார்கள்.

  பெரும் நஷ்டமடைந்த தொழிலை “உயிர்ப்பிக்க” கடன் கிடைக்கிறது.
  தனி நபர் default ஆனால் உயிர் எடுக்கிறது..

  வங்கி அதிகாரிகள் தொழிலதிபர்கள் NEXUS பற்றி ஒன்றும் சொல்லாமல்
  விடுவிடீர்களே.

  அது சரி. கடன் எதுவானாலும் வாங்கினால் கொடுக்க வேண்டும் என்பது
  “வாங்கியவனின்” வேலையா அல்லது “கொடுத்தவனின்” வேலையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.