ஜக்கி – “அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள்.

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக
வாசிகள் ! விசேஷமானவர்கள்.
கும்பல் கும்பலாக
தான் வருகிறார்கள் !

சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில
பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் –
அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான்  சில
விஷயங்களின் கனபரிமாணம்  புரியும் –

கைலாச யாத்திரை ஏன் மேற்கொள்ள வேண்டும் ?

பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால்
அதன் விடை கைலாஷில் தான் இருக்கிறது !

வேற்று உலக டிராபிக் இந்த இடத்தில்
நடந்துகொண்டிருக்கிறது.
வேற்று கிரக மனிதர்கள்
(தேவர்கள் ?) இங்கே தினமும் வருகிறார்கள் !


ஜாக்கிரதை –  நான் சொல்லும் வரை நீரில் காலை
வைக்காதே. சிவன் இங்கே படுத்திருக்கலாம் !

பிள்ளையார் இங்கே தான் விளையாடிக்கொண்டிருக்கிறார் !

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக
வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக
தான் வருகிறார்கள் !

நான் ஒருவாரம் இங்கே தங்கினால் போதும்.
அவர்களில் ஒருவனை (வேற்று கிரக வாசியை )
கோயம்புத்தூருக்கு (வெள்ளியங்கிரி ஆசிரமத்திற்கு)
தூக்கிக்கொண்டு போய் விடுவேன் !


பக்த கோடிகளே (இளிச்சவாயர்களே ?)
இத்தனையும்  இதற்குத் தான்  புரிகிறதா ?

கைலாஷ் -மானசரோவர் யாத்திரைக்கு
ஈஷா அமைப்பு விடுத்துள்ள விளம்பரம் !
இந்த விளம்பரம் -குமுதத்தில்,
சம்போ, சிவ சம்போ
கட்டுரை வெளியாகும் அதே பக்கத்தில்
வெளியிடப்பட்டு  இருக்கிறது.

6 மாதங்களாக குமுதத்தில் வெளிவந்த
இந்தக் கட்டுரையே ஒரு ப்ரொமோஷனல்
முயற்சி
என்பது வெட்ட வெளிச்சமாகத்
தெரியவில்லை ?

“சற்குரு”வுடன் கைலாசத்திற்கு போக
இவர்கள் வசூலிக்கும் கட்டணம்   (மன்னிக்கவும் –
நன்கொடை)    எவ்வளவு தெரியுமா ?

— தொடர்கிறேன்

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ஜக்கி – “அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள்.

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  எழுதுங்கள்.

 2. புரட்சிதமிழன் சொல்கிறார்:

  பாதரசத்தில் வைப்ரேசன் வருது மிளகு ரசத்தில் மிளகாய் வருதுனு ஏமாத்திட்டு இருக்கான் எல்லாம் கூட்டமா கோயமுத்தூருக்கு ஓடுறாங்க என்ன செய்வது.

 3. venkataramani சொல்கிறார்:

  “குருமார்கள்” தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகவும்
  வருமானத்திற்காகவும் செய்யும் தந்திர உத்திகள் விசித்திரமானவை
  தான் என்பதில் ஐயமில்லை.

  அவற்றில் ஒன்றுதான், மத நம்பிக்கை சார்ந்த இட விசேஷங்கள்
  (க்ஷேத்ர மஹான்மியம் அல்லது ம்ஹாத்மியம்) குறித்த தகவல்கள்.
  சில நேரங்களில், “உண்மை” தகவல்கள் இருந்தாலும், பல பொய்யான
  அதிர (அசர) வைக்கும் விஷயங்களாக இருக்கும். பிள்ளையார்
  இங்கே தான் விளையாடிக் கொண்டிருப்பார் அதில் ஒன்று..

  கயிலை என்றில்லை இப்புவியும் அதற்கப்பாலும் நிறைந்து
  நிற்பவர் “ஈஸ்வரன்” என்பது சைவம் போற்றுபவர்களின் திடமான
  நம்பிக்கை. என்வே தான், ஈஸ்வர தரிசனத்திற்காக காத்திருந்த
  திலகவதிக்கு, ஈஸ்வரன் அழைப்பு விடுத்ததும், தனது கரங்களை
  பூமியில் பதித்து நடந்து, கைலாயம் என்று தரிசித்து, பின்னர்
  திருவலாங்காடு திரும்பினார். அதன் பின்னரே “காரைக்கால்
  அம்மையார்” ஆனார்.

  பக்தியை, அது சார்ந்த நம்பிக்கைகளை தன்னலத்திற்காக பயன்
  படுத்துவோர் “பலரும்” இம்மாதிரி கதைகளைத் திரித்து, மாற்றி,
  பரப்பி வரூகிறார்கள். கொஞ்சமாய் அறிந்திருப்பவர்களும், மனம்
  குழம்பி, அடித்து உரைக்கிறாரே உண்மையாய்த் தானிருக்கும்
  என ஒதுங்க, பக்தி பிரதேசத்தில் புதிதாய் புகுந்தோர் “பயந்து”
  பொய்யுரையை ஏற்கிறார்கள்.

  அந்த வேற்று கிரகவாசிகள் வந்தால், சிறைப் பிடிக்கவே, பல
  சீரிளம் பருவ கன்னியரும், காளையரும், படித்த படிப்பு, பார்த்த
  உத்யோகம் எல்லாவற்றையும் “விட்டுவிட்டு” வெள்ளியங்கிரி
  அடிவார யோக மையத்தில் இரவும் பகலும் விழிப்புடன்
  இருக்கிறார்கள். ஆகவே, விரைவில் பிடிபடவும் வாய்ப்பு உண்டு.

  என்ன சொல்லி என்ன?

 4. Chandru சொல்கிறார்:

  எனக்கு நீண்ட நாட்களாக இவர் உண்மையானவராக இருக்க முடியாது என்ற எண்ணம் உண்டு. அது உங்கள் பதிவின் மூலம் அத நிரூபணம் ஆகி இருக்கிறது. என் நண்பர் ஒருவர் கருத்து என்னவென்றால் எல்லோரும் கொள்ளை அடிக்கிறார்கள். இவர் கொள்ளை அடித்தாலும் மக்களிடம் யோகவாவது சென்றடைகிற வரையில் சந்தோசம் என்றார். இதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு விதத்தில் சேரி என்றும் தோன்றுகிறது .

  வேலூர் பொற்கோவிலுக்கு சென்று இருக்கிறேர்கலா . அங்கு அம்மா என்றால் அது கோவில் கட்டிய அந்த சாமியாராம் :-). அம்மனின் உருவத்தை விட அவரின் போட்டோ தன எங்கும் இருக்கிறது. பேருந்தில் வந்து கொண்டு இருந்த பொது அந்த ஊரை சேர்ந்த ஒருவர் கூறியது ” அந்த சாமியார் 10 வருடங்களுக்கு முன் 20 ரூபாய்க்கு குறி கூறி கொண்டு இருந்தாராம். “

  • புரட்சிதமிழன் சொல்கிறார்:

   முந்தா நாள் இந்த ஆள் பேசுவத தூர்தர்சனில் பார்த்தேன் இன்னும் இருபது வருசம் கழித்து இப்ப இருக்கிற மனிதன் சுவாசிக்கும் காற்றில் 4ல் ஒரு பங்குதான் கிடைக்குமாம் அதுனால 4 மூச்சுக்கு ஒரு மூச்சுவிட்டு பழகிக்கனுமாம். இந்த ஆள் பேசுர அரைகுறை தமிழ், சொல்லும் கருத்துக்களில் உள்ள குறைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.