கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….

கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள
தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம்
படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….

-அண்மைக் காலத்தில், எனக்குத் தெரிந்து தமிழில்
இவ்வளவு அற்புதமான ஒரு விமரிசனக் கட்டுரை 
வெளிவந்ததில்லை !

ஆசிரியர்  ப.திருமாவேலன்ஈழத்தமிழர் விஷயத்தில்
முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு. கருணாநிதி
அவர்களின் செயல்பாடு குறித்து மிக ஆழமாக அலசி,
ஆராய்ந்து எழுதி இருக்கிறார். ஆனந்த விகடனில்
வெளிவந்துள்ள  இந்த கட்டுரை – இந்த விஷயம் குறித்து
நன்கு தெரிந்தவர்கள் கூட அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
படிக்க வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக கீழே தந்துள்ளேன்.
நன்றி – ஆனந்த விகடனுக்கு. பாராட்டுக்களும்,
வாழ்த்துக்களும் – ப.திருமாவேலனுக்கு !

pt on k-1

pt on k-2

pt on k-3

pt on k-4

pt on ki-5

pt on k-6

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பகிர்வு.

 2. Chandrasekaran சொல்கிறார்:

  Dear Sir,
  I agreed

 3. sivakumaran சொல்கிறார்:

  whu u ppl worry about karunanaithy only.why dont u ppl write some blogs about MGR and JJ??why always condemning karunanaithy.

  • எழில் சொல்கிறார்:

   Simple Sivakumaram. One can only compare apples with apples. It is a shame that you still couldn’t comprehend that Karunanidhi had the power and means to stop or attempt to stop the genocide of Eelam Tamils. He probably has the dubious distinction of the only Tamil ruler who kept blind eyes on when his own community were massacred in the history of Tamils.

 4. எழில் சொல்கிறார்:

  ஐயா, கருணாநிதி வாழ்க்கையில் முதல் தடவையாக அவரது கணிப்புகளும், அதீத புத்திசாலித்தனமும் so called அரசியல் சாணக்கியத்தனமும் அவரை கைவிட்டு போவது போல உணர்வார் என்று எண்ணுகிறேன். தமிழக மக்களின் ஞாபக சக்தியும், அரசியலை புரிந்து கொள்ளும் தன்மையும், அவர் எதிர் பார்த்ததை விட அதிகாமாக இருப்பது அவரை ஆச்சரியமடைய வைத்திருக்கும். அவர் வைத்திருக்கும் கடைசி ஆயுதம் காங்கிரசை காறி உமிழ்ந்து, அவர்கள் தான் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று வசை பாடி, தமிழர்களே என்னை மன்னித்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து டில்லிக்கு அனுப்பினால் நான் உங்களுக்கு செருப்பாக இருப்பேன் என்று வாக்கு வேண்டி வருவது. அவர் ஒரு வேளை இதில் வெற்றி கூட பெறலாம் ஆனால் லட்சக்கணக்கான தமிழர்களை குடும்பத்துக்காக காவு கொடுத்த சரித்திர பழி அவரை விட்டு என்றும் அகலாது.

 5. ramanans சொல்கிறார்:

  மக்கள் முட்டாள்கள் என்றே சிலர் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கணிப்பு தவறும் போது மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று வசை பாடுகிறார்கள்.

  ஊர்சுற்றப் போன மனசாட்சி இனி ஒருக்காலும் விழிக்காது.

  ”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
  அல்லது செய்தல் ஓம்புமின்”- இது ஏனோ பலரது நினைவுக்கு வருவதில்லை.

  காலம் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளது.

 6. Ganpat சொல்கிறார்:

  வணககம்.நண்பர் எழில்.
  3-6-1924 முதல் திரு கருணாநிதி ஒரே மாதிரி தான் இருக்கிறார்.
  அவருடைய ஒரே குறிக்கோள் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்து தன குடும்பத்தாருக்கு சொத்து சேர்ப்பது.
  ஆனால் அவரைப்பற்றி எல்லாம் தெரிந்தும் மக்கள் அவருக்கே ஒட்டு போடுகிறார்கள் என்றால் அது அவர் பிழையா?
  இது ஜனநாயக நாடு பெரும்பாலானோர் யாரை தேர்ந் தெடுக்கிறார்களோ அவரே நம்மை ஆள்வர்.

  கருணாநிதி செய்த,செய்கின்ற செய்யப்போகிற அத்தனை குற்றங்களுக்கும் துணை நின்றது,நிற்பது நிறகப்போவது மத்திய காங்கிரஸ் அரசு.

  முதல் முறை முதல் அமைச்சர் 1969-76..மத்தியில் காங்கிரஸ்

  இரண்டாம் முறை 1989-91 மத்தியில் Non-காங்கிரஸ்

  மூன்றாம் முறை 1996-2001 மத்தியில் BJP

  நான்காம் முறை 2006-11 மத்தியில் காங்கிரஸ்

  கருணாநிதியின் ஊழல உச்சத்தில் இருந்தது
  அவருடைய முதல் மற்றும் நான்காம் முறையில்…

  கருணாநிதி just exploited the situation
  அவர் வெற்றிக்கு நேர்முகமாகவோ,மறைமுகமாகவோ உதவியோர்..

  MGR
  +இந்திரா காந்தி
  +ஜெயலலிதா
  +நரசிம்மராவ்
  +ஜி.கே மூப்பனார்
  +வாஜ்பாய்
  +சோனியா
  +மன்மோகன்சிங்
  +பல நீதிபதிகள்,போலீஸ்,நிர்வாகத்துறை அதிகாரிகள்
  +ரஜினிகாந்த்
  +தமிழ் மக்களின் சுயநலம்,அடிமனதில் இழையோடி கொண்டிருக்கும் பார்பன துவேஷம்
  +இறைவன்

  எனவே மேலே உள்ள அனைவரும் ஒருவகையில் குற்றவாளிகளே

  • எழில் சொல்கிறார்:

   Ganpat ஐயா, நீங்கள் கூறுவது உண்மைதான். அப்போது காங்கிரசுடன் கபட நாடகம் போட்டதும் குடும்பத்துக்காக தான். இப்போது டெசோ நாடகம் போடுவதும் குடும்பத்தக்காக தான். இல்லை எனில் ‘பந்த் வெற்றி’ என்று அறிக்கை விட அவர் எவ்வளவு தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும். எதில் வெற்றி? சாதித்தது என்ன? இவரின் செய்கையை மேலே உள்ள கட்டுரையின் கடைசி வரிகளை விட பொருத்தமாக எவரும் கூற முடியாது என்று எண்ணுகிறேன்.

   நிற்க, இங்கு என் மனதில் உள்ள ஒரு சுமையை இறக்கி வைக்க விரும்புகிறேன். எனது கல்லூரி காலங்களில் எனக்கு அரசியல் ஆர்வம் சுத்தமாக இல்லாவிட்டாலும் தமிழ் ஆர்வம் ஓரளவு இருந்தது. இதனால் இவரை நான் தமிழின் authority என்று நம்பி இருந்தேன் . இவர் எனது கல்லூரிக்கு வருகிறார் என்றவுடன் இவர் கையால் எப்படியும் பரிசு வாங்க வேண்டும் என்று முடிவு கட்டி முதல் முறையாக ஒரு பேச்சை எழுதி மனனம் செய்து தமிழ் துறையை சார்ந்த மாணவர்களுடம் போட்டி இட்டு இவருடன் கை குலுக்கி இரண்டாம் பரிசு வாங்கினேன். அந்த புகைப்படத்தை பெருமையாக என் நாட்குறிப்பில் வைத்து திரிந்த காலமும் இருந்தது. இப்போது நினைக்கையில் அந்த ஈழ மக்களின் குருதி தோய்ந்த அந்த கரத்தையா அன்று பற்றி குலுக்கினோம் என்ற குற்ற உணர்வில் குறுகி போகிறேன். மேலும் நான் இன்றும் வியக்கும் ஒரு அதிசயமும் உண்டு. – என் வாழ்க்கையில் இவர் கரத்தை விட மென்மையான ஒரு ஆணின் கரத்தை நான் இது வரை பற்றி குலுக்கியதே இல்லை. படைப்புகளில் தான் எவ்வளவு வித்தியாசம்; பேதம் (Contrast )!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் எழில்,

    மிகவும் வித்தியாசமான ஒரு மனிதரை
    உங்களில் நான் காண்கிறேன். இளம் வயதிலிருந்தே
    திமுக வைச் சேர்ந்த பலர் எனக்கு நண்பர்களாக
    இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவர் கூட,
    தாங்கள் ஏற்றுக் கொண்டவர்கள், கொண்டாடியவர்கள் –
    அதற்குத் தகுதியானவர்கள் அல்ல என்று தெரிந்தும்,
    தங்கள் நிலையிலிருந்து மாற விரும்புவதில்லை.
    அது ஒரு வித ஈகோ. தாங்கள் தவறாகக் கணித்து
    விட்டோம் என்பதை அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளத்
    தயாராக இல்லை.

    நானும் ஒரு காலத்தில், இவரைப் பார்த்து பிரமித்தவன்
    தான் – இவரது வசனங்களுக்காகவும் சிவாஜியின்
    உச்சரிப்புக்காகவும் திரைப்படங்கள் ஓடிய காலம் அது !!

    நீங்கள் இவ்வளவு வெளிப்படையாக எழுதியது
    உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

    உங்கள் மனதில் இருந்த சுமை இறங்கிட இந்த இடம்
    உதவியது குறித்து எனக்கு மகிழ்ச்சி.

    இந்த வலைத்தளம் – உங்களைப்போல்,
    கண்பத் போல் – இன்னும் பல நண்பர்களுக்கு –
    (எனக்கும் கூடத்தான் )
    ஒரு வெண்டிலேஷன் !! மன அழுத்தத்தை குறைத்துக்
    கொள்ள ஒரு இடம் !!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 7. mbjahangeer சொல்கிறார்:

  ஐயா, கருணாநிதி வாழ்க்கையில் முதல் தடவையாக அவரது கணிப்புகளும், அதீத புத்திசாலித்தனமும் so called அரசியல் சாணக்கியத்தனமும் அவரை கைவிட்டு போவது போல உணர்வார் என்று எண்ணுகிறேன். தமிழக மக்களின் ஞாபக சக்தியும், அரசியலை புரிந்து கொள்ளும் தன்மையும், அவர் எதிர் பார்த்ததை விட அதிகாமாக இருப்பது அவரை ஆச்சரியமடைய வைத்திருக்கும். அவர் வைத்திருக்கும் கடைசி ஆயுதம் காங்கிரசை காறி உமிழ்ந்து, அவர்கள் தான் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று வசை பாடி, தமிழர்களே என்னை மன்னித்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து டில்லிக்கு அனுப்பினால் நான் உங்களுக்கு செருப்பாக இருப்பேன் என்று வாக்கு வேண்டி வருவது. அவர் ஒரு வேளை இதில் வெற்றி கூட பெறலாம் ஆனால் லட்சக்கணக்கான தமிழர்களை குடும்பத்துக்காக காவு கொடுத்த சரித்திர பழி அவரை விட்டு என்றும் அகலாது.

 8. Ganpat சொல்கிறார்:

  வணக்கம் நண்பர் எழில்.
  உங்கள் பதிலை நான் மிகவும் ரசித்தேன்.
  அதுவும் அவர் கரங்கள் பற்றிய உங்கள் பார்வை அற்புதம்.
  எழுதாத பல விஷயங்களை, பல பரிமாணங்களை, அது சொல்கிறது.
  சாமுத்ரிகா லக்ஷணப்படி மிகவும் மென்மையான உள்ளங்கை உடைய ஆண் மற்றும் அவன் குடும்பத்தாருக்கும் அவனுடன் இருப்பவர்களுக்கும் உணவு தட்டுப்பாடே வராது…உண்மைதான் போலும்
  நண்பர் கா.மை.இன்னொரு genuine person.நம் கருத்தொப்பவர்.
  எனவே இங்கு நீங்கள் நிறைய எழுதக் கோருகிறேன்.
  நன்றி

  • mu.murugan சொல்கிறார்:

   intha padu pavi enraikku sakirano anruthaan thamilanukku nimmathi

   • Ganpat சொல்கிறார்:

    வேண்டாம் முருகன்.சொறிந்து சொறிந்து உடல் ரணமாகி விட்டது இனி சொறி யாமல் இருக்க நகத்தை வெட்டினால் போதும்,விரல்களையோ கரங்களை யோ வெ ட்டத்தேவையில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  விகடன் ஏன் இப்படி தரம் கெட்டுப் போனது ?
  ….ஏற்கெனவே இலக்கியத் தரம் வாய்ந்த இதழாகத் தன்னை
  கூறிக்கொண்டே, அட்டைப்படங்களில் சினிமா நடிகைகளின்
  கவர்ச்சிப் படங்களை தொடர்ந்து போடுவது
  விகடனுக்கு வழக்கமாகி விட்டது.
  ….அந்தரங்க வக்கிரங்கள் அத்தனைக்கும் தீனி போட்டு
  வளர்க்கவென்றே தமிழில் ஒரு புதிய புறப்பாடு !

  மேலே உள்ளவை தங்களின் அக்டோபர் 2012ல் வெளிவந்த இடுக்கையிலிருந்து எடுத்தது. அதில் உள்ள கடைசி வாசகமான,
  “சீ – இத்தனையும் எதற்காக ?”
  என்பது கருணாநிதிக்கும் பொருந்தும் விகடனுக்கும் பொருந்தும்.
  மீன் விற்ற காசு நாரவாப்போகுது என்பதில் கவனமாக இருப்பவர்களைப்பற்றி பேசி என்ன பிரயோஜனம், காவிரி சார்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சைதை அஜீஸ்,

   நீங்கள் கூறுவது போல் –
   விகடனைப் பற்றிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
   அவர்கள் எதைச்செய்தாலும் அதில் நிச்சயம் வியாபார நோக்கு
   இருக்கும்.

   ஆனால் கட்டுரையை எழுதிய திருமாவேலன் விஷயத்தை
   மிகப்பிரமாதமாக அலசி இருக்கிறார்.
   எனவே திருமாவேலன் பாராட்டுதலுக்கு உரியவர் !

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. venkataramani r சொல்கிறார்:

  நானறிந்த வரையிலே (கொஞ்சம்தான். ஆனாலும்..)
  தமிழகத்திலே மட்டும் தான், அம்மக்களுக்கான அரசியல்
  (கட்சி?!) தலைமையும், மொழி, இன தலைமையும் ஓரே
  மனிதரிடம் இருக்கிறது. அல்லது அவ்வாறு நம்ப அல்லது
  நம்ப வைக்கப்படுகிறது. எனவே தான், அம்மனிதர்
  அரசியல் சூழலுக்கு தக்க நிலையை எடுக்கும் போதும், இன
  மற்றும் மொழிக்கான் நிலையை எடுக்கும் போதும் விமர்சனங்கள்
  எழுகின்றன.
  அரசியல் தலைமையில் உள்ள எவரும், எந்த கட்சியும் இன நலம்
  சார்ந்த முடிவுகளை எடுக்கவோ, நடைமுறை படுத்தவோ முடியவே
  முடியாது. இன நலம் சார்ந்த முடிவுகள் “பொது நலம்” பயப்பதாக
  இருக்காது. மேலும் வெகுஜன விரோதத்தை வள்ர்த்துக் கொள்வது
  அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும்.

  அரசியல்வாதிகள் ஒரு வகையில் கயக்கூத்தாடிகள் தான். கயிற்றின்
  மேல் நடப்பதற்கு தேவையான சாதூர்யத்தைக் காட்டிலும் “அதிகப்
  படியான” சாதூர்யமும் சாமர்த்தியமும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

  ஒத்துக் கொண்டாலும், மறுத்தாலும் தலைவர் கலைஞர், “வித்தை
  அறிந்தவர்தான்”.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் வெங்கட்ரமணி,

   சந்தேகமே இல்லை – கலைஞர் “வித்தை”
   தெரிந்தவர் என்பதில்.
   நம் எரிச்சலுக்குக் காரணமே அந்த “வித்தை”தானே –
   அதைக் காட்டி திரும்ப திரும்ப எல்லாரையும்
   ஏமாற்ற முயல்வது தானே !
   அது வெறும் “வித்தை” தான் என்பது இன்னும் பலருக்கு
   புரியவில்லையே என்பது தான் நம் வருத்தம் !

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. todayandme சொல்கிறார்:

  பிணந் தின்னிக் கழுகுகள் !
  கொஞ்சம் நாகரிகமா சொல்லணுமுன்னா “SURVIVAL OF THE FITTEST”

  உண்மை சுடும்.

  தமிழ்-தமிழர் எனும் ஊருக்குத் தெரிந்த உண்மையை இன்டர்நெட் உலகத்துடன் பகிர்ந்த கா .மை . அவர்களுக்கு நன்றி.

  +++++++++++++++++

  ஆமா
  நான் திரும்பவும் சி.எம். சீட்டுக்கு வரமாட்டேன்னு ஆனந்த விகடனுக்கு தெகிரியமா போச்சா
  இல்ல
  ப.திருமாவேலனுக்கு மதுரை டிவி அலுவலகத்துல நடந்த (த்தின) து மறந்து போச்சா

  ++++++++++++++++

  ஓவியர் கண்ணா – வுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  கட்டுரையின் கதாநாயகன், கட்டுரை வெளியீட்டாளர் , ஆசிரியர் மற்றும் படிக்கிற நாம் என அனைவரையும் அவரவர் எண்ண ஓட்டத்தில் அதிகம் சென்று BP ஏறிவிடாமல் கட்டுக்குள் வைத்துக் காக்கிறார்.

 12. சங்கப்பலகை அறிவன் சொல்கிறார்:

  அருமையான மீள் பதிவு.
  ஆனால் திருமாவேலன் இவ்வளவு ஆணித்தரமாக எழுதிய ஒரு கட்டுரையை விகடன் வெளியிட்டிருப்பதுதான் இனிய ஆச்சரியம்.
  ஓ பக்கங்களையே முடக்கியவர்களுக்கு, இந்தக் கட்டுரை டூ மச்..ஆனால் மிகத் தேவையான கட்டுரை.

 13. Mauroof, Dubai சொல்கிறார்:

  தங்களது வலைத்தளத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் “இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா” என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மக்கள் மனதில் மறைந்த பிறகும் பலர் வாழ்வதுண்டு. அது அவர்கள் செய்திட்ட செயல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். திரு & திருமதி முத்துவேலர் அவர்களது மகன் கருணாநிதியும் அவ்வாறே தமிழக மற்றும் தமிழ் கூறும் நல்லுலகின் மக்கள் மனதில் இன்னும் சில நூற்றாண்டு காலமேனும் நீங்காது இடம் பெற்றிருப்பார். ஆனால், எவ்வாறு என்பதுதான் கேள்வி. ஆம்! நன்கு விடை தெரிந்த கேள்வி. நானு(மு)ம் இவர் இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறுவார் அல்லவா என நினைத்ததுண்டு. அந்த நினைப்பு வீண் போகவும் இல்லை. ஆனால், நான்(ம்) எதிர்பார்த்த மாற்றம் இல்லை. அதற்கு மாற்றமான மாற்றமே நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது, இனியும் நிகழும். ஆம், அவரது மரணம் வரை நிகழும். இன்றில்லாவிட்டாலும் நாளையாவது நாம் மாறுவோமா என மாற்றி சிந்திக்க வேண்டியது பொதுமக்களாகிய நாம்தானே தவிர அவரில்லை. இக்கட்டுரையை நீங்கள் மீள்பதிவாக தங்களது வளையில் தந்திருக்காது போனால் என் போன்றோர் அதை படிக்கும் வாய்ப்பை பெற்றிருப்போமா என தெரியவில்லை. திரு. மு. கருணாநிதியின் வார்த்தை ஜாலங்களை, புரண்டு புரண்டு பேசியவைகளை தொகுப்பாக தர வேண்டுமெனில் அவர் எழுதிய “நெஞ்சுக்குள் நீதி” பாகங்களை விட அதிகம் எழுதிவிடலாம். இப்படியான வார்த்தை ஜாலங்களுக்குத் தானே தமிழக மக்கள் பெரிதும் மயங்கினார்கள்/இன்றும் மயங்குகின்றார்கள் என்றால் மிகை ஆகாது. நான் கூறியது போல் மாற்றம் மக்களாகிய நம்மிடம் வர வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. மீண்டும் “இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா” என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன். ஆனால், சத்தியமாக அந்த மாற்றத்தை மு.க. விடம் எதிர்பார்த்து அல்ல. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். நன்றி.

 14. priyan சொல்கிறார்:

  arputham ayya

 15. priyan சொல்கிறார்:

  first time uannkal vallai thallathil irukken nanrii

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.