இந்த விளம்பரம் “துக்ளக்” பத்திரிகைக்கு மட்டுமல்ல – அதன் வாசகர்களுக்கு கூட ஒரு அவமானம் …

இந்த விளம்பரம் “துக்ளக்” பத்திரிகைக்கு மட்டுமல்ல –
அதன் வாசகர்களுக்கு கூட ஒரு அவமானம் …

சென்ற வார “துக்ளக்” இதழில் வெளிவந்துள்ள ஒரு
முழு பக்க விளம்பரம் இது –

thuglaq advt

இந்த விளம்பரம் துக்ளக் பத்திரிகைக்கே ஒரு கேவலம்.
பார்த்த மாத்திரத்திலேயே “மோசடி” என்று தெரிகிற
இத்தகைய விளம்பரம் ஒன்றை பணம் கொடுக்கிறார்கள்
என்கிற ஒரே காரணத்திற்காக துக்ளக்கில் போடலாமா?
விளம்பரத் தொகையை கொடுத்து விட்டால் –
எதை வேண்டுமானாலும் விளம்பரத்திற்கு
ஏற்றுக் கொள்ளலாமா ?

மற்ற பத்திரிகைகளை எல்லாம் விட்டு விட்டு –
இந்த விளம்பரதாரர் “துக்ளக்” பத்திரிகையை
தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன ?
துக்ளக் வாசகர்கள் இத்தகைய விஷயங்களை எளிதில்
நம்பி விடும் இளிச்சவாயர்கள் என்கிற எண்ணமா ?

இதன் முக்கிய பகுதியைப் பாருங்கள் –

“சித்தர் திருவிளையாடல் செய்யும் –
என்னை தரிசனம் செய்தாலோ,
எனது திருவடி உங்களது இல்லத்தில்,
வியாபார ஸ்தலத்தில் படுவது,
என்னிடம் ஆசீர்வாதம் வாங்குவதும்,
நான் உங்களை ஆசீர்வாதம் செய்த உடனே
உங்களது ஏழு, ஏழு, ஜென்ம பாவங்கள்,
கிரகப்பாதிப்பு, உடல்பிணி விலகி சுபிட்சம்
பெற்று ஐஸ்வரியம், சந்தோஷம்
கிடைக்கப்பெறுவீர்கள்.”

இந்த விளம்பரம் “சோ ராமஸ்வாமி” அவர்களின்
கவனத்திற்கு வராமலே கூட வெளிவந்திருக்க
வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் – ஆசிரியர் என்கிற முறையில்
துக்ளக் பத்திரிகை மற்றும் அதன் வாசகர்களின்
கௌரவத்திற்கு அவர் பொறுப்பு இல்லையா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இந்த விளம்பரம் “துக்ளக்” பத்திரிகைக்கு மட்டுமல்ல – அதன் வாசகர்களுக்கு கூட ஒரு அவமானம் …

 1. maduraitamilguy சொல்கிறார்:

  உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்

 2. எழில் சொல்கிறார்:

  ஐயா, எனக்கு என்னவோ நீங்கள் சோ ராமசாமியை மிகவும் உயரத்தில் தூக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. விட்டு விடுங்கள். அவர் அந்த அளவுக்கு உரித்தானவர் இல்லை!

 3. ராஜகோபாலன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,

  நீங்கள் கூறுவது மிகவும் சரியே.

  இந்த கேள்வியை ஆசிரியர் சோவிற்கு
  அனுப்பி வையுங்களேன். அவர் என்ன சொல்கிறார்
  என்பதையும் பார்ப்போம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அனுப்பலாம் தான்.

   ஆனால் அவர் எப்படி மழுப்புவார் என்பதையும்
   இப்போதே யூகிக்க முடிகிறதே !
   அவர் பதில் அநேகமாக இப்படி இருக்கலாம் –

   “துக்ளக் வாசகர்கள் நான் சொல்வதையே
   ஏற்றுக் கொள்வது இல்லை. இந்த விளம்பரதாரர்
   சொல்வதை மட்டும் ஏற்றுக் கொண்டு
   விடப்போகிறார்களா?
   துக்ளக் விளம்பரம் இல்லாமல் நஷ்டப்பட வேண்டும்
   என்று உங்களுக்கு அப்படி என்ன ஆசை ?”

   அல்லது இப்படிக்கூட இருக்கலாம் ! –

   “வயோதிக வாலிப அன்பர்களே என்று கூவி அழைத்து
   சிட்டுக்குருவி லேகியம் கூடத்தான் விளம்பரம்
   செய்கிறார்கள். அந்த மாதிரி விளம்பரங்களை
   எல்லாம் பரீட்சித்துப் பார்த்து
   விட்டா ஏற்றுக் கொள்ள முடியும் ?
   விளம்பரதாரர் கூறும் விஷயங்களுக்கு பத்திரிகை
   பொறுப்பு ஆகாது என்று தான் ஏற்கெனவே கூறியாகி
   விட்டதே!”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. amve11 சொல்கிறார்:

  திரு காவிரி மைந்தன் !

  உங்கள் யூகம் 100% சரியானதுதான். Smoking is injurious to health என்று அட்டை பெட்டி மீது அச்சடித்துவிட்டால் போதும். கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம். அரசு மதுபானக்கடைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் விற்பனை இலக்கு. இந்த மாதிரியான யுகத்தில் ஞான குருவின் விளம்பரம் ஒரு புள்ளியே ! மக்களாய் பார்த்து ஒதுக்(ங்)க வேண்டியதுதான் !!

 5. Sugan சொல்கிறார்:

  Very well said sir.

 6. Padmanabhan Potti L சொல்கிறார்:

  ஜெயலலிதா தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவர போகிறார் என்ற ஒரு செய்தி தங்களது விமர்சனம் பகுதியில் ஒருமுறை பார்த்தேன். அதற்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்தேன் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில்
  நிலவும் மின்சார பற்றாக்குறை காவேரி தண்ணீர் பிரச்சனை மத்திய அரசு அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை
  புறக்கணிக்கும் போக்கு மத்திய அரசில் தமிழ்நாட்டு அமைச்சர்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைக்காமை
  தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை பார்க்கும்போது இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கு கொண்டுவந்தால் ஒழிய வேறு எந்த மாநிலத்தில் மதுவிலக்கு இருந்தாலும் தமிழ்நாட்டில்இலவசங்கள் கொடுத்தாலும் அதை இங்கு மட்டும் அமுல் படுத்துவது அரசை மேலும் பலவீனமாக்கும் என்பது கருத்து .

 7. Padmanabhan Potti L சொல்கிறார்:

  சில ஆண்டுகளுக்கு முன்னர் துக்ளக்கில் ஒரு ஆபாசமான விளம்பரம் வந்தது . வாசகர்கள் அதனை சுட்டிக்காட்டிய போது சோ அவர்கள் அதற்காக மன்னிப்பு கோரினார்

  • கு.சாமி சொல்கிறார்:

   சரியாக சொல்வதென்றால் அது ஒரு shampoo விளம்பரம். சாதாரணமான லைன் டிராயிங் தான். அதற்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு கோரப்பட்டது. அது அந்தக் காலம் ! ஆனால் இன்று ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.