நன்றியும், வாழ்த்துக்களும் ….

நன்றியும், வாழ்த்துக்களும் ….
heaven-1

நண்பர்கள்  அனைவருக்கும் என் வணக்கமும்,
உளமார்ந்த நல் வாழ்த்துக்களும்.

மிக மிக நீண்ட நாட்களாகி விட்டன.
முழு அளவில் இல்லையென்றாலும்,
ஓரளவு தேறி விட்டேன்.
மீண்டும் பணிகளைத் துவக்கலாம் என்று
நம்பிக்கை வருகிறது.

அத்தனை மெயில்களையும் இப்போது தான்
பார்க்க  வசதிப்பட்டது.
(வலைத்தளத்திற்கு வந்ததும்,
எனக்கு தனியே வந்ததும் )
என் நலத்தில் அக்கரை கொண்டு விசாரித்த,
வாழ்த்துக்கூறிய  அத்தனை
நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இத்தனையும் இந்த வலைத்தளம் எனக்கு பெற்றுக் கொடுத்த
பெரும் புதையல். இந்த வலைத்தளம் அருமையான
பல நண்பர்களை எனக்கு அளித்திருக்கிறது. அதற்காக
இந்த வலைத்தள வசதிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

ஒன்றிரண்டு நாட்களில் பணிகளை மீண்டும்
துவக்கலாம். வழக்கம்போல் உங்களுடன் கருத்துக்களையும்,
எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்.
பல விஷயங்களில் உங்கள் கருத்துக்களை கேட்கவும்,
எண்ணங்களை அறியவும் ஆவலாக  உள்ளேன்.

மீண்டும் அனைவருக்கும் நன்றியுடன்,

காவிரிமைந்தன்

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to நன்றியும், வாழ்த்துக்களும் ….

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மீண்டும் அதே வேகத்தோடு மற்றும் விவேகம் & விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
  வாருங்கள் ஐயா!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பர் அஜீஸ்.

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. bandhu சொல்கிறார்:

  மீண்டு(ம்) வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  அன்பு நண்பரே தங்களது வருகை மிகுந்த மகிழ்வைத் தருகிறது.தங்களது

  எழுத்துக்களால் புதிய சகாப்தம் படைக்க வருக.
  அனைத்துக்கும் மேலாக தங்களது உடல் நலனையும் பேணவும்.
  வாழ்க வளமுடன்.
  கொச்சின் தேவதாஸ்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் வாழ்த்துதலுக்கும் நல்லெண்ணங்களுக்கும்
   மிக்க நன்றி நண்பர் தேவதாஸ்.

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Padmanabhan Potti சொல்கிறார்:

  நண்பருக்கு வணக்கம் . நீண்டநாள் நண்பரை பிரிந்து மீண்டும் சந்திக்கும் உணர்வு. தொடரட்டும் தங்கள் சமுதாய
  பணி . வாழ்க

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வாருங்கள் நண்பர் பத்மனாபன் போத்தி.
   அதே உணர்வு தான் எனக்கும்.
   உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. எழில் சொல்கிறார்:

  உங்கள் பதிவை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நீங்கள் முழு நலம் பெற வேண்டுகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வாருங்கள் நண்பர் எழில்.
   எப்படி இருக்கிறீர்கள் ?
   உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. prakash சொல்கிறார்:

  Wow..Great…Thanks my God….Get Well Soon Fulfilly….

 7. Ganpat சொல்கிறார்:

  வருக வருக நண்பரே..வாழ்த்துக்கள்..
  உங்கள “விஸ்வரூபத்தை”க்காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
  வழக்கம்போல உங்கள் பதிவுகள் DTH (Direct To Heart) ஆகவே இருக்கட்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் வாழ்த்துக்களுக்கு
   மிக்க நன்றி நண்பர் கண்பத்.
   நன்றாக இருக்கிறீர்களா ?

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. Siva சொல்கிறார்:

  நீங்கள் நீண்ட காலம் சிறந்த உடல் ஆரோக்யத்தோடு இருக்க எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறேன்.

  நாம் செய்யும் இந்த கூட்டு முயற்சியை இன்னும் விரைவு செய்ய வேண்டுகிறேன்

  அன்புடன், சிவா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.