பெட்ரோல் விலை பாதியாக குறைய ……

பெட்ரோல் விலை பாதியாக குறைய ……

ஜூன் 20ந்தேதி இந்த வலைத்தளத்தில் எத்தனாலை
பயன்படுத்தி பெட்ரோல் விலையை குறைக்க
தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி
ஒரு இடுகை போடப்பட்டிருந்தது.

——————————–

யார் நிற்கிறார்கள் குறுக்கே ? கண்டு பிடித்து தூக்கி
எறிய முடியாதா ?
Posted on ஜூன் 20, 2012 by vimarisanam –

kavirimainthan

பெட்ரோல் விலை கணிசமாக குறைய வாய்ப்பு !
அந்நியச் செலாவணி எக்கச்சக்கமாக மிச்சமாக வாய்ப்பு !
ரூபாயின் மதிப்பு உயரவும் வாய்ப்பு !

———————————

அரசாங்கம் செவி சாய்க்கிறதோ இல்லையோ –
இந்த விஷயத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்ல
விவசாயிகள் தீர்மானித்து விட்டார்கள் என்று
இன்றைய பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பற்றிய செய்தியை
மகிழ்வுடன் கீழே பிரசுரிக்கிறேன் –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பெட்ரோல் விலை பாதியாக குறைய ……

 1. Ganpat சொல்கிறார்:

  நண்பர்கள் கவனத்திற்கு சில தகவல்கள்:

  தற்போது எத்தனாலிற்கு அரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை:
  ரூ 27 /லிட்டர்
  ஆனால் இந்த விலைக்கு விற்க விவசாயிகள் தயாராக இல்லை.
  அவர்கள் கேட்பது ரூ 35/லிட்டர்.
  இதை பிரதமர் அலுவலகம் ஒரு வருடத்திற்கும் மேலாக கிடைப்பில் போட்டு வைத்துள்ளது..அதனால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  பெட்ரோல் விலை ரூ 75 என வைத்துக்கொண்டு அதிகபட்சம் 20சதவிகிதம் எத்தனாலை கலக்கிறோம் என வைத்துக்கொண்டால் அடக்கவிலை 75*.8+35*.2=ரூ 67/லிட்டர் என ஆகிறது.இதற்கு வண்டிகளின் என்ஜின்களை மாற்றி அமைக்கவேண்டிய ஒரு முறை செலவு தனி.

  நம் நாட்டில் கரும்பு lobby படு ஸ்ட்ராங்.இதன் தலைவர் சரத் பவார்.அவருக்கு ஏனோ இந்த திட்டத்தில் ஆர்வம இல்லையென ஒரு வதந்தியும் இருக்கிறது.

  நம் நாட்டில் எல்லா திட்டங்களும் அரசால்.நான்கு விதங்களில் நிறுத்திவைக்கப்படும்.

  சரியான திட்டம், சரியான காரணங்களுக்காக..

  சரியான திட்டம், தவறான காரணங்களுக்காக

  தவறான திட்டம்,சரியான காரணங்களுக்காக..

  தவறான திட்டம், தவறான காரணங்களுக்காக..

  இதைத்தவிர பிரதமருக்கு, எந்த காரணமும் சொல்லாமலும்
  திட்டத்தை மறுக்க உரிமையிருக்கிறது.

  அதை அங்கீகரிக்கவும் செய்யாமல் மறுக்கவும் செய்யாமல்
  அப்படியே வருடக்கணக்கில் வைத்திருக்கவும் உரிமையிருக்கிறது.

  ஆனால் ஒன்று நிச்சயம்..

  நம் அரசு ஒரு முடிவெடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குள்,
  உலக விஞ்ஞானிகள் கடல் நீரில் இயங்கும் என்ஜினை கண்டுபிடித்து விடுவர்.

  ஏதோ… எத்தனாலால் இல்லாவிட்டாலும், எதனாலாவது நன்மை வந்தால் சந்தோஷம்தானே.?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நான் முன்வைத்த மற்ற சில பயன்கள் –

  சர்க்கரை விலை குறையும் –
  கரும்பு சாகுபடி செய்யும் நிலப்பரப்பு அதிகமாகும் –
  அதிக விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் –
  எண்ணை நிறுவனங்களில் புதிய வேலைகள் உருவாகும் –
  காய்கறி, மளிகை, பால் – விலை குறையும்,
  ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும் –

  எல்லாவற்றிற்கும் மேலாக –
  இறக்குமதி அளவு குறைவதால்,
  அந்நியச்செலாவணி மிச்சமாகும் –
  அதன் விளைவாக ரூபாயின் மதிப்பு கூடும்.

  எத்தனால் பயன்பாடு கொஞ்சம்
  கொஞ்சமாக உயர்ந்து பிரேசிலை போல 80-90 % ஐ
  தொடும்போது இன்னும் நிறைய பலன்களை
  எதிர்பார்க்கலாம்.

  எதற்குமே, முதலில் துவக்கம் என்று
  ஒன்று வேண்டுமல்லவா ?
  அதற்காகத் தான் இத்தனையும் !

  முதல் அடியை எடுத்து வைத்தால் தானே
  தொடர்ந்து பயணிக்க முடியும் ?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. Ganpat சொல்கிறார்:

  நிச்சயமாக ,நண்பர்.கா.மை.
  To begin with இதை சில மாநிலங்களாவது செயல்படுத்துவதில் என்ன பிரச்சினை என்றும் தெரியவில்லை!
  நன்றி.

 4. vinoth சொல்கிறார்:

  பதில்

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  என்ன கண்பத் சார் இப்படி கேட்டுட்டீங்க?
  ஹெல்மெட் அணிய, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு, தோல் தொழிற்சாலை/சாய பட்டறை கழிவு மேலாண்மை ETC இவற்றிற்கெல்லாம் போடும் உத்தரவுகளால் எவ்வளவு கமிஷன் வரும் என்பதற்கேற்ப ஒவ்வொரு முறையும் அரசாணைகள் மாறும் என்பது தெரிந்ததே. அதைபோலத்தான் “எத்தனால்” மற்றும் சூரிய மின்சாரத்திற்கும் யாராவது lumpஆ கொடுத்தால் உடனடியாக அரசாணை “கண்டிப்புடன்” செயல்படுத்தப்பட்டுவிடும்

  • Ganpat சொல்கிறார்:

   மிகவும் உண்மை அஜீஸ் ஸார்..
   ஆனால் பிரச்சினை என்னவென்றால்.“எத்தனால்” மற்றும் சூரிய மின்சாரத்தை நடைமுறை படுத்தாமல் இருக்க இப்போ கிடைக்கிற LUMP
   விட “எத்தனால்” மற்றும் சூரிய மின்சாரத்தை நடைமுறை படுத்த offer செய்யப்படும் lump குறைவாக இருக்கே!! சட்டப்படி Highest Bidder க்குத்தானே tender வழங்கப்படவேண்டும்!!அதைத்தான் நம் அரசும் செய்கிறது.
   ஆச்சு! எத்தனாலாவது ,சூரிய மின்சாரமாவது..அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தியர்களின் நேரம் முழுவதும்
   “ஜனாதிபதி தேர்தல்” எனும் புதிய ஸர்கஸ்ஸை பார்ப்பதிலும் அதைப்பற்றி பேசுவதிலும் தானே கழியும்.

 6. prakash சொல்கிறார்:

  Find out which cars can run on ethanol and biodiesel
  By Kate Sheppard
  Going bio with your auto doesn’t mean you have to invest in some strange contraption your neighbors will stare at. In fact, upward of 4 million cars currently on the road in the United States are already compatible with E85, a blend of 85 percent ethanol and 15 percent gasoline. More automakers are making new E85-ready models — known as flex-fuel vehicles — every year. To top that off, so to speak, any gasoline-powered car can run on a 10 percent ethanol/90 percent gasoline blend — in fact, the state of Minnesota requires that all gasoline sold there is of that balance. Some folks even elect to run their regular ol’ cars on blends as high as 30 percent, but most auto manufacturers only guarantee their warranty services on non-flex-fuel cars for up to 10 percent blends.

  Put that in your tank and combust it.
  If you’d rather have your fly ride be fry-powered, just about any diesel carriage can use biodiesel. For the more ambitious, diesel cars can also be converted to run on straight vegetable oil. (See Umbra Fisk’s advice for converting your car to run on veggie oil.)

  Fuel of Choice: Ethanol

  The National Ethanol Vehicle Coalition and the U.S. Department of Energy have handy, searchable lists of cars and trucks that can run on E85, and the American Lung Association’s Clean Air Choice campaign lists ‘em too.

  They’re roughly the same lists, from different perspectives, but one thing is clear: the cars that are best equipped for E85 — which has caught on in a major way with industry and politicians in the U.S. — are made in the U.S.A. Coincidence? Discuss.

  Companies with models that can use ethanol: DaimlerChrysler, Ford, General Motors, Isuzu, Mazda, Mercedes, Mercury, Nissan.

  Fuel of Choice: Biodiesel

  Check out Biodiesel America for a listing of new diesel cars in the U.S. Grassolean offers a list of biodiesel-ready autos as well, though it’s reader-built and somewhat scattered.

  Although biodiesel doesn’t have the heavy backing in the U.S. that ethanol does, any diesel engine can use biodiesel, making the options somewhat broader.

  Companies with models that can use biodiesel: Audi, BMW, Chevrolet, DaimlerChrysler, Ford, General Motors, Isuzu, Land Rover, Mazda, Mercedes, Mitsubishi, Nissan, Peugeot, Saab, Toyota, Volkswagen, Volvo.

  Kate Sheppard was Grist’s political reporter until August 2009. She now covers energy and environmental politics for Mother Jones. Read her work and follow her on Twitter.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.