பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே
இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?

1)டெல்லியில் மிக மிக முக்கியமான,
விலைமதிப்பு கூடிய  இடமான கன்னாட் ப்ளேசில்
இருக்கும் நட்சத்திர ஓட்டலான
சுனேர் ஓட்டலின் அதிபர் எஸ்.பி.குப்தா –
என்கிற மோசடி பேர்வழி –

வி.எல்.எஸ். பைனான்ஸ் என்கிற தனியார்
நிதி நிறுவனத்திடம் ஓட்டல் கட்டுவதாக,
கோடிக்கணக்கில்  ஏமாற்றி
பணம் வாங்கி, மோசடி செய்கிறார்.

2) நிதி நிறுவனத்திடமிருந்து பணம் பெறுவதற்கு
அத்தாட்சியாக, ஆதாரமாக சில ஆவணங்களை
கொடுக்கிறார். அவை சில காங்கிரஸ் எம்.பிக்கள்
பெயரில்,அவர்களது லெட்டர் ஹெட்டில் – உள்ளன.

(இந்த லெட்டெர் ஹெட் பேப்பரும், அதில்
போடப்பட்டுள்ள கையெழுத்துக்களும் போலியானவை,
போர்ஜரி என்பது பின்னால் ஒரு வழக்கு ஆகிறது !)

3) இதைத்தவிர, மறைந்த முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தியின் பெயரில் –
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தலைவராக
கொண்டு இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்தும்
ஆவணம் கொடுக்கிறார்.

(ராஜீவ் காந்தியின் பெயரில்,
சோனியா காந்தியை நிறுவனராகக் கொண்டு ஏகப்பட்ட
தொண்டு(?) நிறுவனங்கள் இருப்பதால் இதில் முதலில்
யாருக்கும் சந்தேகம் வரவில்லை )

(இப்படி ஒரு நிறுவனமே இல்லை என்றும் இந்த கடிதம்
போலியானது என்றும் அடுத்த வழக்கு !)

4) கம்பெனிகள் (லா) சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப்
பயன்படுத்திக்கொண்டு –
மோசடியாக, உரிய ஷேர் பணம் செலுத்தாமலே,
தன் மனைவி, மக்கள் போன்ற உறவினர்களை எல்லாம்
ஓட்டலில் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்கிறார் குப்தா.
மார்க்கெட்டில் – ஓட்டலின் மதிப்பு 85 கோடி
வரை போகிறது.

5) இந்த ஓட்டல் இருப்பது டெல்லியில் மிக
முக்கியமான வர்த்தக பிரதேசமான கன்னாட் ப்ளேஸில்.
இங்கு ஒருவர் நட்சத்திர ஓட்டல் கட்டும் அளவிற்கு
நிலம் வாங்கவே எவ்வளவோ சாமர்த்தியமும்,
செல்வாக்கும், பணமும் வேண்டும். ஆனால் –
இந்த  நிலத்தை டெல்லி அரசிடமிருந்து குப்தா
சுலபமாகப் பெறுகிறார்.
அந்த அளவிற்கு அவருக்கு அரசியல் செல்வாக்கு
இருக்கிறது !

(பின்னாளில், அவர் மோசடி ஆவணங்களை
பயன்படுத்தி இந்த நிலத்தை பெற்றதாக டெல்லி
நிர்வாகமே அவர் மீது வழக்கு போடுகிறது !)

6) மோசடி ஆவணங்களை கொடுத்து தங்களை ஏமாற்றி
பணம் வாங்கி விட்டார் என்றும், ஓட்டலில் தங்களுக்கு
பங்குகள் கொடுத்த வகையிலும் மோசடிகள்
நிகழ்ந்திருக்கிறது என்றும் வி.எல்.எஸ். நிதி நிறுவனம்
குப்தாவின் மீது புகார் கொடுத்து ஒரு வழக்கு தொடுக்கிறது.
இதை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை
எடுக்கும்படி கோர்ட் – டெல்லி நிர்வாகத்திற்கு உத்திரவு
போடுகிறது.

7) டெல்லி அரசும் இதை விசாரிக்கிறது – விசாரிக்கிறது
விசாரித்துக் கொண்டே இருக்கிறது.10 ஆண்டுகளுக்கு
பிறகு ஒரு வழியாக 3 வழக்குகள் போடப்படுகின்றன.
ஒரு வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது.

8) இந்த வழக்குகள் போடப்பட்டதும், மோசடி மன்னன்
குப்தா மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு
விண்ணப்பம் போடுகிறார். வி.எல்.எஸ். நிதி
நிறுவனத்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தன் மீது
அநியாயமாக விசாரணை நடக்கிறது /அபாண்டமாக
வழக்கு தொடுக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சகம் கருணை கூர்ந்து, தலையிட்டு
இந்த வழக்குகளை வாபஸ் பெற உத்திரவு இட
வேண்டும் என்று.

9) வருடக்கணக்காக பெட்டிஷன் போட்டுக் கொண்டே
இருந்த குப்தாவிற்கு – உள்துறையில் புதிய அமைச்சர்
பொறுப்பு ஏற்ற பிறகு திடீரென்று விடிவு காலம் பிறக்கிறது.

10) கருணை உள்ளம் கொண்ட புதிய தலைமை,
உடனடியாக, விறுவிறுப்பாக, டெல்லி நிர்வாகத்துடன்
தொடர்பு கொண்டு வழக்குகள் பற்றிய சகல
லேடஸ்ட் விவரங்களையும் அதிகாரபூர்வமாகக் கேட்டு,
விவரமான அறிக்கையை பெறுகிறது.

11) உடனடியாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு எழுதி,
அவர்களது கருத்துக்களைப்  பெற உள்துறை அமைச்சர்
உத்திரவு போடுகிறார்.

ஆனால் சட்ட அமைச்சகம் அவ்வளவு சுலபமாக
இந்த வலையில் சிக்குமா ?

இரண்டு தனிப்பட்ட நிறுவனங்களிடையே நிலவும்
பிரச்சினை காரணமாக போடப்பட்டுள்ள இந்த வழக்குகளில்
மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் ஏதும்
இருப்பதாகத் தோன்றவில்லை.

அப்படி அவசியம் என்று தோன்றினால் -டெல்லி
நிர்வாகமே கிரிமினல் வழக்கு சட்டம்,
பிரிவு 321 ல் கீழ் நடவடிக்கை எடுப்பதைப்
பற்றி யோசிக்கலாம்.

(பிரிவு 321 – பொது நலன் கருதி,அரசே கோர்ட்டில்
மனு கொடுத்து, ஒரு வழக்கை திரும்பப் பெற்றுக்
கொள்ள,மூடி விட – வழி வகை செய்கிறது )

12) இது போதாதா உள்துறையின் கருணை உள்ளத்திற்கு.
உடனே உத்திரவு பறக்கிறது டெல்லி நிர்வாகத்திற்கு –
“இது குறித்து, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை
பெறப்பட்டுள்ளது. பிரிவு 321ன் கீழ் இந்த வழக்குகளை
வாபஸ் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்”

13) “இரு தனிப்பட்ட நபர்களிடையே தோன்றியுள்ள
இந்த பிரச்சினையில் அரசு தலையிட வேண்டிய அவசியம்
இருப்பதாகத் தெரியவில்லை ” என்று சட்ட அமைச்சகம்
சொல்லியது  சாமர்த்தியமாக !

ஆனால் “சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை
பெறப்பட்டுள்ளது –
வழக்கை உடனடியாக வாபஸ் பெறவும்” என்கிற ரீதியில்
உள்துறை அதை பயன்படுத்திக் கொண்டது அதை விட
சாமர்த்தியமாக.

14) இதன் பிறகு இந்த உத்திரவின் அடிப்படையில்
வழக்குகள் வாபஸ் பெறப்பட டெல்லி நிர்வாகத்தினரால்
“உடனடி” நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

15) இதற்கிடையில் ஓட்டல்காரர் எஸ்.பி.குப்தா –
உள் துறை அமைச்சகத்தில்  தன் செல்வாக்கைப்
பயன்படுத்தி, வழக்குகளை செல்லாக்காசாக்க
முயற்சிகள் செய்வதை அறிந்த
வி.எல்.எஸ். நிதி நிறுவனம் அலறி அடித்துக்
கொண்டு சிபிஐ க்கு புகார் கொடுக்கிறது.

“சுதந்திரமான” சிபிஐ நிறுவனம், உள்துறையுடன்
மோத முடியுமா ? விளைவு – அரசு அலுவலகங்களில்
எவ்வளவு குப்பைத்தொட்டிகள்  இருக்கின்றன ! இந்த
புகாருக்கு தானா இடம் இல்லாமல் போய் விடும் ?

16) நொந்து போன வி.எல்.எஸ். நிதி நிறுவனம்
மீண்டும் ஜூன் 7, 2011 அன்று பிரதமர்
மன்மோகன் சிங் அவர்களுக்கு ஒரு புகார் கொடுக்கிறது.

பிரதமருக்கு எவ்வளவோ பொறுப்புகள் –
அவர் எதைத்தான் கவனிப்பார்.
இடையில் ஆப்பிரிக்காவிற்கும் சிங்கப்பூருக்கும்,
ஜப்பானுக்கும், ரஷ்யாவிற்கும் வேறு செல்ல வேண்டி
இருந்தது. அய்யோ பாவம் பிரதமர்!

17) வெறுத்துப் போன வி.எல்.எஸ். நிறுவனம்
இறுதியாக சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யஸ்வீர்  சிங்
என்பவரிடம்  சரணடைய,  

அவர் தெரிந்தோ, தெரியாமலோ –
அறிந்தோ, அறியாமலோ – “அய்யா
இந்த விஷயம் எந்த கதியில் இருக்கிறது ?” என்று
பிரதமர் அலுவலகத்தில் – (செய்தியாளர்கள் காதிலும்
விழும்படி சிறிது சத்தமாக)  கேட்க

இப்போது எல்லா இடங்களிலும்,
எல்லார் வாயிலும் – மியாவ் மியாவ் !!!!

பின்குறிப்பு –
இந்தக் கதையை எழுதுவதற்கு நான் பட்ட பாடு
எக்கச்சக்கம்.
ஒவ்வொரு வழக்காக தேடிக் கண்டு பிடித்து,
முழுவதுமாகப் படித்து,
நமக்கு தேவையானதை மட்டும் எடுத்து,
வடித்து இங்கு கொடுத்து ….
ஊஹூம் – எனக்கு இன்னும் திருப்தி இல்லை…
இன்னும் சில விஷயங்கள் விடுபட்டு விட்டது
போல் தோன்றுகிறது.

முக்கியமாக – காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும்
திருமதி சோனியா காந்தி ஆகியோரது போலி
லெட்டெர் பேடில் போர்ஜரி செய்த இந்த மோசடிப்
பேர்வழி குப்தாவை “உள்ளே” தள்ள அல்லவோ முயற்சி
நடந்திருக்க வேண்டும் ?
மாறாக – படாத பாடு பட்டு அவர் வழக்கை
முடிக்க /வாபஸ் வாங்க அல்லவா முயற்சி
நடந்திருக்கிறது !

இதன் பின்னல் உள்ள்  மர்மத்தை –
இதற்கான காரணத்தை என்னால் கண்டு பிடிக்க
முடியவில்லை.
(டாக்டர் சுப்ரமணிய) சாமியே சரணமப்பா !!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?

 1. நித்தில் சொல்கிறார்:

  கா.மை அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகள். ஹார்வோடில் படித்தவர், திறமைசாலி, வேட்டி சட்டையுடனே பாராளுமண்றத்தில் பதில் தருவது இவை எல்லாம் ப.சி யின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் மதிப்புமிக்க நல்லெண்ணங்கள். ஆனால் அவரும் களவானி காங்கிரஸின் அங்கம் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. காங்கிரஸில் 95 சதவிகிதம் தலைவர்கள் களவானிகள் என்பது எனது கருத்து. அப்ப 5 சதவிகிதமாவது சுத்தமானவர்கள்தானே என்று கேட்டால், அவர்கள் நாடு சதந்திரம் அடைந்து சில வருடங்களிலே இறந்துவிட்டனர்.

 2. Ganpat சொல்கிறார்:

  உங்கள் சீரிய முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது.நன்றி.
  ஒரு விஷயம்..
  உண்மையாக தூங்குபவர்களை தொட்டு எழுப்பலாம்.
  தூங்குவது போல நடிப்பவர்களை அடித்து எழுப்பவேண்டும்.
  நம் அரசியல்வாதிகளுக்கு தேவை அறிவுரை அல்ல அடி உதை!!
  Blood cancer ஐ Vicks Vaporub தடவி குணப்படுத்த முடியாது.
  நாட்டில் எவ்வளவோ பேர் தற்கொலை செய்துகொள்ளுகிறார்கள்..வருந்துகிறேன்..அவர்கள் தங்கள் பயணத்திற்கு ஒரு அரசியல்வாதியையும் துணைக்கு அழைத்து சென்றால் ஒரு தேச சேவையாகவும் இருக்குமே!

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வேண்டாம் கண்பத்,

  அரசியல்வாதிகள் எல்லாரும்
  நீண்ட ஆயுளுடன் இருக்கட்டும்..

  இல்லையெனறால் எல்லாரும் தியாகிகள்
  ஆகி விடுவார்கள் !!

  உடனே அனுதாப அலையில் அவர்கள் இடத்தில்
  வாரிசுகள் வந்து விடுவார்கள் !
  நமக்கு இரட்டை தண்டனை ஆகி விடும் .

  என்னைக் கேட்டால் – அவர்களுக்கு
  நீண்ண்ண்ண்ட ஆயுளே (?) நல்லது.!
  சரி தானே ?

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 4. Ponraj Mathialagan சொல்கிறார்:

  மலையாளத்தானை பாருங்க… நாயர்,மேனன்,நம்பூதிரி,பிள்ளை என்று நம்மை காட்டிலும் மிக மிக பிற்போக்கான,நாகரீகமற்ற கலாச்சாரத்தை கொண்ட அவர்களே இன்று முல்லை பெரியாரு பிரச்சனையில் ‘மலையாளி’ என்ற ஒற்றை குடையின் கீழ் திரண்டுள்ளனர். நமக்கு என்ன கேடு? நாம் என்ன தான் செய்யவேண்டும்? பேராசான் ‘காரல் மார்க்ஸ்’ சொன்னதை உங்கள் முன் வைக்கிறேன்.

  1. ஒரே இனத்திற்குள் உள்ள சண்டைகள்,பிரச்சனை. 2.இருவேறு இனங்களுக்குள்ளே உள்ள சண்டைகள்,பிரச்சனை…. இவற்றில் முதலில் தீர்க்க வேண்டியது ‘இருவேறு இனங்களுக்குடைய உள்ள பிரச்சனை தான்’.

  எனவே நமக்குள்ளான,தமிழர்களுக்குள்ளான,சண்டைகளை அப்புறம் வைத்துகொள்வோம். இப்போது செய்ய வேண்டியது நாம் ‘தமிழன்’ என்ற ஒற்றைகுடையில் கீழ் திரள்வதும்,சிந்திப்பதும்,இயங்குவதுமே ஆகும்…!!! இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் வரை வன்னியன்,நாடார்,தேவர்,பிராமணன்,பள்ளன்,சக்கிலியன்,முதலியார்,பிள்ளைமார்,இந்து,முஸ்லீம்,கிருத்துவன் இந்த பாகுபாடு மறப்போம்… மலையாளத்தானை நேரடியாகவும்,மறைமுகமாகவும் இருக்கும் அனைத்து வழிகளிலும்,வாய்ப்புகளிலும் சுளுக்கெடுப்போம்…!!!

 5. Ponraj Mathialagan சொல்கிறார்:

  சசிகலா – ஜெயா நட்பு பிரிந்தது. ஒட்டுமொத்த மன்னார்குடி கூட்டமும் அதிமுகவில் இருந்து நீக்கம். ஜெ அதிரடி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.