சிக்கினார் திருவாளர் ப.சிதம்பரம் – தோண்டத் தோண்ட வெளி வரும் மர்மம் …. ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் !

சிக்கினார்  திருவாளர் ப.சிதம்பரம் –
தோண்டத் தோண்ட வெளி வரும் மர்மம் ….
ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் !

சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோ அடிகள்
அதில் வலியுறுத்திய  அடிப்படை விதிகளில்  ஒன்று-
“ஊழ் வினை உருத்து வந்து உருட்டும் ” என்பது.

இதன் பொருள் –
எத்தனை பிறவிகள் ஆனாலும், ஒருவர்
முந்திய பிறப்புகளில் செய்த பாவச்செயல்களின்
விளைவுகள்  அடுத்தடுத்த பிறப்புகளிலும்
தொடர்ந்து வந்து அதன் பலனைக் கொடுத்து
அவரை வதைக்கும் என்பதே.

இதனை இக்காலத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள்
வலியுறுத்தும்போது “இது கலி காலம். அடுத்த பிறவி
வரை காத்திருக்க வேண்டாம். செய்கின்ற பாவங்களின்    பலன்கள்
இந்த பிறப்பிலேயே – விளைவுகளைக்
கொடுக்கும்” என்று கூறுவது வழக்கம்.

-இது ஒரு புறம்  கிடக்கட்டும் –
ஆன்மிகத்தை யார் கேட்கிறார்கள்
இந்த காலத்தில் !

நாம்  விஷயத்திற்கு வருவோம்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
அமளிக்கு உள்ளான ஒரு விஷயம்.

ஆங்கில நாளிதழ் ஒன்றில், திருவாளர் ப.சிதம்பரம்,
டெல்லியில் கன்னாட் ப்ளெசில் உள்ள
சுனைர் ஹோட்டல்களின் அதிபர் எஸ்.பி. குப்தா
என்பவருக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ்
பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்றும்,
அவரது தலையீட்டின்பேரில் வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டன என்றும்

செய்தி வெளியானது.
உள்துறை அமைச்சர் பதவியை தவறாக,
சுயநல நோக்கோடு பயன்படுத்தினார் என்பது
  பாராளுமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டு !

உள்துறை அமைச்சர் தன் கடமையைச் செய்திருப்பார் –
அதில் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு –

ப.சிதம்பரம் அவர்கள்  1999 முதல் -2003 ம் ஆண்டு
வரை எஸ்.பி. குப்தாவுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.

எஸ்.பி. குப்தாவின் மீது அப்படி என்ன வழக்கு ?
-மோசடி வழக்கு.

என்ன மோசடி ? எத்தகைய மோசடி ?
எஸ்.பி.குப்தா, VLS பைனான்ஸ் என்கிற
நிதி நிறுவனம் ஒன்றிடம் நிறைய பொய்யான
ஆவணங்களைக் காட்டி மோசடி செய்து
கோடிக்கணக்கில் கடன் வாங்கினார்.

எத்தகைய ஆவணங்கள் ?
பல எம்.பிக்களின் பெயரில் போர்ஜரி கடிதங்களை
ஆதாரங்களாகத் தயாரித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின்
பெயரை தலைவராகக் காட்டும் ஒரு போலி
நிறுவனத்தின் லெட்டர் பேடிலும்  ஒரு கடிதத்தை
தயாரித்திருந்தார் !

விஎல் எஸ் நிதி நிறுவனம் கொடுத்த புகாரின்
அடிப்படையில் விவரமாக விசாரண செய்து, வழக்கு
தொடுக்குமாறு டெல்லி கோர்ட் ஒன்று உத்திரவிட்டதை
தொடர்ந்து, எஸ்.பி.குப்தா மீது 3 தனித்தனி
வழக்குகள் டெல்லி போலீசால் போடப்பட்டன.
கடந்த 10-15 வருடங்களாக, இவை விசாரணை
நிலையிலேயே இருந்தன !
(இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா ?)

இந்த குப்தாவுக்கு தான்,
இது தொடர்பான வழக்குகளில் தான் –
திரு ப.சி.அவர்கள் 1979 முதல் 1983 வரைக்கு
உட்பட்ட காலங்களில்  வழக்குரைஞராக
இருந்துள்ளார். இந்த வழக்குகள் நிலுவையில் இருந்த
கால கட்டத்தில்  திரு ப.சி. அவர்கள்
உள்துறை அமைச்சர் ஆகி விட்டார்.

வழக்குரைஞராக இருந்த போது முடிக்க முடியாமல்
இருந்த வழக்குகளை, உள்துறை அமைச்சராக ஆனதும்
அதிகாரத்தை பயன்படுத்தி வாபஸ்
வாங்கச் சொல்லி, டெல்லி நிர்வாகத்திற்கு
உத்திரவு அனுப்பப்பட்டது என்றும்,
அதன் விளைவாக வழக்குகள்  வாபஸ் பெறப்பட்டன
என்பதும் இப்போது எழுந்துள்ள புகார்.
சோனியா காந்தி அவர்களின் பெயரை
பயன்படுத்தி, அவரது லெட்டர் பேடிலேயே
போலி ஆவணம் தயாரிக்கும் அளவிற்கு போன
ஒருவரை  மாண்புமிகு ப.சி.
ஏன் காப்பாற்ற முயன்றார் என்பதே ஒரு மர்மம் !

மேலும்,  இந்த சுனைரா ஓட்டல் அதிபர் எஸ்.பி.குப்தாவின்
வழக்கை கொஞ்சம்  தோண்டிப் பார்த்ததில்
கிடைத்த விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன.

இன்னும் கொஞ்சம் விவரங்களுடன்
பின்னர் வருகிறேன்.

பின்குறிப்பு –
இளங்கோ அடிகள் இங்கு ஏன் வந்தார்
என்று கேட்கிறீர்களா ?
கொஞ்சம்  யோசியுங்களேன் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to சிக்கினார் திருவாளர் ப.சிதம்பரம் – தோண்டத் தோண்ட வெளி வரும் மர்மம் …. ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் !

  1. Ganpat சொல்கிறார்:

    மிகவும் தெளிவான விவரமான பதிவு.தமிழன் புகழ் கோடி கட்டிப்பறக்கிறது.150ஆண்டுகளில் நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் அடித்த கொள்ளை விட பல மடங்கு கடந்த 30ஆண்டுகளில் நம் அரசியல்வாதிகள அடித்துவிட்டனர்.

    விரைவில் நம் நாட்டில் அதிகம் தேவைப்படும் உபகரணம் Guillotine ஆகத்தான் இருக்கும்.இப்பொழுதே யாராவது சிறு தொழிலதிபர்கள்,கொடுக்கவேண்டியதை கொடுத்து Guillotine உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் டாட்டா/ பிர்லா /அம்பானி நிறுவன்ங்களை விட அதிக லாபம் சம்பாதிக்கலாம்.

    நேர்மையான இந்தியர்கள் கருப்பையிலும்,இடுகாட்டிலும்தான் உள்ளனர் போலும்!

  2. எழில் சொல்கிறார்:

    திருதராட்டினன் கருணாநிதியும் இளங்கோ அடிகள் கூற்றை இப்போதாவது நினைத்து பார்பாரா?!

  3. suryaprakash.p சொல்கிறார்:

    வாழ்க்கை ஒரு வட்டம் ங்கிறத ப சி நிருபிச்சுடார் …..

    ******* அரசியல்வாதிகள்

  4. செழியன் சொல்கிறார்:

    செய்த வினைகள் ஒன்றா இரண்டா ?
    செத்துப் போன தமிழர்கள் எத்துணை பேர் ?
    விதவைகளான பெண்கள் எத்துணை பேர் ?
    அநாதைகளாக அலைபவர்கள் எத்துணை பேர் ?
    13 வயதில் சிங்கள நாய்களின் கர்ப்பத்தை சுமந்து
    அலையும் அபலைகள் எத்துணை பேர் ?
    அலைக்கற்றையில் நிகழ்ந்தது என்ன ?
    முல்லைப் பெரியாறில் நிகழ்வது என்ன ?

    சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
    பலரை பல நாட்கள் ஏமாற்றலாம்.
    எல்லாரையும், எப்போதும், ஏமாற்ற முடியுமா ?

    மறுபிறவி இருக்கிறதோ இல்லையோ –
    ஊழ்வினை நிச்சயமாக உருத்து வந்து உருட்டும்.

    நான் நம்புகிறேன்.

  5. Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா,மை,

    இன்றைய துக்ளக் இதழில் முல்லைபெரியாறு ப்ரசினைப்பற்றி திரு.சோ எழுதியுள்ள தலையங்கத்தைப்படித்து திடுக்கிட்டேன்!
    Pedestrian,Mediocre, சவ சவ என்று எந்த அடைமொழி வேண்டுமானாலும் அதற்கு கொடுக்கலாம்.அன்னாரின் மூப்பும்,அதையொட்டிய சலிப்பும் அவர் எழுத்தில் நன்கு தெரிகிறது.நான் துக்ளக் வாங்குவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது.இருப்பினும் இந்த பிரச்சினையில் அவர் கருத்தை அறிய விரும்பினேன்,ரூ.பத்து தண்டம்!

    இந்த இடத்தில் இதைப்போல பிரச்சினைகளில் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும்,நேர்மையும்,வீரமும் கூட புகழ் பெற்ற பத்திரிகை குழுக்களுக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.

    நன்றி!

  6. Ponraj Mathialagan சொல்கிறார்:

    இளங்கோ(வன்) டம்மி பீசாச்சே…. அவர் இதுல ஈடுபட்டிருப்பார்னு எனக்கு தோனல? வேறெந்த வகையில் ‘இளங்கோ’ இதற்க்கு பொருந்துகிறார்?

  7. vdesikan சொல்கிறார்:

    “Arsiyal pizhaithorku Aram KoOtraakum” – Silappadikaram

  8. dhinakar சொல்கிறார்:

    hav u seen p.chidambaram face….bavyam…panivu…kanivu…saantham….

  9. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    நேர்மையான இந்தியர்கள் கருப்பையிலும்,இடுகாட்டிலும்தான் உள்ளனர் போலும்!

    துக்ளக் வாங்குவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது.இருப்பினும் இந்த பிரச்சினையில் அவர் கருத்தை அறிய விரும்பினேன்,ரூ.பத்து தண்டம்!

    துக்ளக் மட்டும் தானா? பெரும்பாலும் எல்லா பத்திரிக்கையும் இதே பாணியில் தான்.

  10. ramanans சொல்கிறார்:

    பசி வந்திட கீழ்கண்ட பத்தும் பறந்து போகுமாம்.

    ”மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தவம், உயர்வு, தொழில், முயற்சி, மோகம்”

    இந்த ப.சியினால் என்ன என்ன பறந்து போகிறது என்று லிஸ்ட் போட்டால்…

    வேண்டாம். பிபி தான் அதிகமாகிறது.

    ”அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று இளங்கோ சொன்னது வெறும் வாய்ப் பேச்சு அல்ல என்பது என்றாவது ஒரு நாள் தெரியாமலா போகும்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.