சரத் பவாரை கன்னத்தில் அறைந்த சீக்கிய வாலிபர் ….

சரத் பவாரை கன்னத்தில் அறைந்த
சீக்கிய  வாலிபர் ….

சற்று நேரத்திற்கு முன்னர் டெல்லியில் நிகழ்ந்த
சம்பவம் பற்றிய சூடான செய்தி  ஒன்றை
இந்த வலைத்தள நண்பர்களிடையே பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன் –

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு
வெளியே வந்த மத்திய உணவு அமைச்சர்
சரத் பவாரை ஹர்வீந்தர் சிங் என்கிற சீக்கிய
வாலிபர் ஒருவர் – பளாரென்று கன்னத்தில்
அறைந்தார்.

பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள்
முன்னிலையில் இந்த சம்பவம்
நடந்தது. ஏன் இப்படிச் செய்தாய் என்று
ஒருவர் அந்த வாலிபரிடம் கேட்டதற்கு –

“இவர்கள்  திருடர்கள்  –
உங்களால் செய்ய முடியாததை,
உங்களுக்கும் சேர்த்து தான் நான் செய்தேன்.
விலைவாசி எங்கு போய்க்
கொண்டிருக்கிறது ? அதில் இவரது
பங்கு என்ன ?” என்று மீடியா
முன்னிலையில் கேட்டார்.

டெல்லி – பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது !

பின்னால் வந்த செய்தி  –  
4 நாட்களுக்கு முன்னதாக முன்னாள்
மத்திய அமைச்சர் சுக்ராம்
ஊழல் வழக்கு சம்பந்தமாக கோர்ட்டுக்கு
வந்தபோது அவருக்கு அறை விட்டவரும்
இதே வாலிபர் தானாம் !

பின்குறிப்பு –  இன்னும் யார் யாருக்கு
அறை விட வேண்டும் என்று யோசித்து,
தயாரித்து வைத்திருக்கும் லிஸ்ட்
எதாவது அவர் வசம் இருக்கிறதா என்று போலீஸ்
சோதனையிட்டுக் கொண்டிருக்கிறதாம் !!

——————————————————————————-
“கீதோபதேசம்”

கீதை வாசகங்களைப் படிப்பது –
மனதுக்கு மகிழ்வை, நிறைவைக் கொடுக்கிறது.

பகவத் கீதையில் கண்ணன்  அர்ஜுனனிடம் கூறுகிறார் –
“எது நடந்ததோ –
அது நன்றாகவே நடந்தது !
எது நடக்க இருக்கிறதோ –
அதுவும் நன்றாகவே நடக்கும் !”

————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to சரத் பவாரை கன்னத்தில் அறைந்த சீக்கிய வாலிபர் ….

 1. yatrigan சொல்கிறார்:

  சீக்கியர்கள் – உணர்ச்சி வசப்படுபவர்கள்…
  வீரர்கள். வீரம் அவர்கள் ரத்தத்திலேயே
  கலந்திருக்கும்.

  தமிழர்களைப் போல …
  என்ன ..
  தமிழர்கள் கொஞ்சம் நிதானமானவர்கள்.
  கொஞ்சம் நேரம் ஆகும் …

 2. Ganpat சொல்கிறார்:

  //சீக்கியர்கள் – உணர்ச்சி வசப்படுபவர்கள்…
  வீரர்கள். வீரம் அவர்கள் ரத்தத்திலேயே
  கலந்திருக்கும்.//
  அப்போ நம்ம பிரதமர்.????
  அவர் h இல்லாத singh ஆ?

 3. ரிஷி சொல்கிறார்:

  Yes Ganpat. He is not singh!
  He is sing chak.. sing chak.. sing chak..!!!

 4. pidithavan சொல்கிறார்:

  பிரமாதம் -1

  “எது நடந்ததோ – அது நனறாகவே நடந்தது ! ”

  பிரமாதம் -2

  h இல்லாத singh ஆ ?

  பிரமாதம் -3

  sing chak – sing chak – sing chak !!!

  ரொம்ப interesting ஆன மறுமொழிகள் !

 5. ramanans சொல்கிறார்:

  //“எது நடந்ததோ –
  அது நன்றாகவே நடந்தது !
  எது நடக்க இருக்கிறதோ –
  அதுவும் நன்றாகவே நடக்கும் !”//

  ஆமாம். நாளை ”உள்ளே” இருப்பவர் ”வெளியே” வரப் போகிறார். எல்லாமே நன்றாக நடந்தது. இனி எல்லாமே நன்றாக நடக்கப் போகிறது.

  சீக்கிய வாலிபர் போல் காவிரி மைந்தனும் உணர்ச்சி வசப்படுபவர் போல.

  அந்த சீக்கியரை யாராவது இங்கே அனுப்பி வைத்தால் நல்லது. ஒவ்வொருவரிடமும் பெரிய லிஸ்ட் இருக்கிறது.

  நம்மால் முடியாததை அவரைப் போன்றவர்கள் தானே செய்ய முடியும்? 😦

 6. Ganpat சொல்கிறார்:

  >>அந்த சீக்கியரை யாராவது இங்கே அனுப்பி வைத்தால் நல்லது.<<

  ramanans சார்!,

  காலையில் செய்தி படித்ததும் நான் செய்த முதல்வேலை அவரை தொலைபேசியில் அழைத்து உடன் அடியாக ( 😉 ) தமிழ்நாட்டிற்கு வரமுடியுமா என கேட்டதுதான் .

  ஆனால் அவர் ஏற்கனவே 12 மாநிலங்கள் அவரை அழைத்திருப்பதால் நம் மாநிலத்திற்கு இந்த appointments எல்லாம் முடித்துவிட்டுதான் வர இயலும் என கூறிவிட்டார்!!

  காத்திருப்போம்!!

 7. vijayan சொல்கிறார்:

  என்ன வெறும் ஒரு அரை தானா? அன்னா ஹசாரே கேட்டது.இது எப்படி இருக்குது.

 8. ramanans சொல்கிறார்:

  //என்ன வெறும் ஒரு அரை தானா? அன்னா ஹசாரே கேட்டது.இது எப்படி இருக்குது.//

  பின்னே.. ஹசாராவின் பாணியில் மரத்தில் கட்டி வைத்து உதைக்காமல் விட்டால் எப்படி?

  தேசத் துரோகிகளுக்கு குடிகாரர்களே தேவலாம்!

 9. Muthu Kumar சொல்கிறார்:

  //இவர்கள் திருடர்கள் –
  உங்களால் செய்ய முடியாததை,
  உங்களுக்கும் சேர்த்து தான் நான் செய்தேன்.//

  ஹர்வீந்தர் சிங் வாழ்க !

  அண்ணே எங்க ஊருக்கும் கொஞ்சம் வந்திட்டு போங்க புண்ணியமா போகும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.