நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை
பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ்
அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய
பங்களா.

இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக
வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு,
பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில்
ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம்
மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது.
தொடர்ந்து இவர் ஸஸ்பெண்ட் செய்யப்பட்டு
விசாரணை நடந்தது. ஆனால் இவரை பதவி
நீக்கம் செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம்
உண்டு என்பதாலும்,வழக்கம்போல் மத்திய
அரசு இன்னும் எந்த முடிவுக்கும் வராமல்
இழுத்தடிப்பதாலும் –

லஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசாங்க
அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய,
நிதிஷ்குமார் புதிதாக 2009-ஆம் ஆண்டு
பீகார் ஸ்பெஷல் கோர்ட்ஸ் ஆக்ட் என்று
ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இந்த சட்ட பிரிவுகளின் கீழ்,
இந்த அதிகாரியின் அசையா சொத்துக்களை
கைப்பற்றி பொது உபயோகத்துக்கு கொண்டு
வர முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக
உத்திரவிட்டார்.

கடந்த செவ்வாயன்று, இந்த பங்களா அரசின்
வசம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பீகாரில்
பல பள்ளிக்கூடங்கள் சரியான கட்டிட வசதி
இன்றி திண்டாடுகின்றன. எனவே உடனடியாக
இதை பள்ளிக்கல்வித்துறை வசம் ஒப்படைக்கவும்
நிதிஷ்குமார் உத்திரவிட்டார்.

எல்லாமே உடனே -உடனே தான் !
இரண்டே நாட்களில் –
நேற்று முதலே இந்த பங்களா – தலித் சமூகத்தை
சேர்ந்த 90 சிறுவர்களின் துவக்கப்பள்ளியாக
செயல்படத்துவங்கி விட்டது. லஞ்ச ஊழல்
ஐஏஸ் அதிகாரியின் பங்களா பறிமுதல்
செய்யப்பட்டு, அதில்

“ப்ராதமிக் வித்யாலயா,
ருங்குன்புரா, முசாஹரி”

என்கிற போர்டு தொங்குகிறது.
லஞ்ச ஊழலில் பங்களா பறிமுதல்
செய்யப்படுவதும், அதில் துவக்கப்பள்ளி  ஒன்று
நடத்தப்படுவதும் இந்தியாவிலேயே இது தான்
முன் மாதிரி.

பள்ளிக்கூடமாக மாற்றப்பட்ட பங்களாவின்
புகைப்படம் கீழே –

இன்னும் இது போல் 16 அதிகாரிகள்
பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களின்
சொத்துக்களையும் பறிமுதல் செய்ய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெறும் வாய் சவடால்களிலேயே
காலம் கடத்தும் மத்திய அரசைப்போலன்றி
செயலில் தன் திறனைக் காட்டும்
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு
பாராட்டுகள்.

இந்தியா முழுதும் விழிப்புணர்வு வர
இதுவே ஒரு துவக்கமாக இருக்கட்டுமே !

இந்தியாவில் இது போல் பறிமுதல்
செய்யப்பட தகுதியுள்ள சொத்துக்கள்
ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் –
நிதிஷ்குமார்கள் ??

கொசுறு – இத்துடன் நிற்கவில்லை
நிதீஷ்குமார். பீகாரில் லஞ்சம் வாங்கும்
அதிகாரிகளைப் பற்றிய சரியான  
தகவல்களைத் தரும் பொதுமக்களுக்கு,
பிடிபடும் மதிப்பைப் பொறுத்து –
ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று வேறு
அறிவித்திருக்கிறார். அலறுகிறார்கள்
அரசு அதிகாரிகள் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், சாட்டையடி, தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

 1. Ganpat சொல்கிறார்:

  இதனால் தெரிவது என்னவென்றால் நமக்குத்தேவை…

  A) இப்போ உள்ள சட்ட திட்டங்களையே சரிவர பயன் படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய வல்ல சேஷன்,மோடி,நிதீஷ்குமார் போன்ற சான்றோர்கள்.

  அல்லது

  B) மீதி உள்ள அனைத்து “சான்றோர்”களையும் சமாளிக்க தக்க வல்ல புதிய சட்ட திட்டங்கள்…
  மேற்கண்டவற்றில் (A) நிகழ்வதற்கான சாத்தியகூறு கோடியில் ஒரு பங்கு.எனவே தான் (B) க்காக அனனாஹசாரே முயற்சி செய்கிறார்

 2. கோவை எம் தங்கவேல் சொல்கிறார்:

  இது மாதிரியெல்லாம் தமிழகத்தில் நடக்குமா? என்று ஏங்க வைத்து விட்டார் நிதிஷ்குமார்

 3. Ganpat சொல்கிறார்:

  Good Morning Sir!
  புது layout அருமையாக உள்ளது
  வாழ்க! வளர்க!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் கண்பத்,

   இதைச் செய்வது எப்படி என்பதை இப்போது தான்
   (நானாகவே முயற்சி செய்து ) தெரிந்து கொண்டேன்.

   படிப்பவர்களுக்கு வசதியாக இருந்தால் தொடரலாம் .

   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 4. rengaraj சொல்கிறார்:

  idhu pol ingu nadanthal tamil nattil niraya pallikoodam kattalaam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.