லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள்
மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !!
ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை
லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக
பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள
அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு
தொடர அனுமதி கேட்டு, சிபிஐ அரசாங்கத்தின்
பின்னால் நடையாய் நடந்து வருகிறது.
அரசு அதிகாரிகளின் மீது லஞ்ச ஊழல்
தொடர்பான வழக்குத் தொடர
வேண்டுமானால், அரசாங்கத்தின்
முன் அனுமதியைப் பெற வேண்டும் என்பது
நடைமுறையில் உள்ள சட்டம்.
எனவே, கையும் களவுமாகப் பிடிபட்டாலும் கூட,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்.
பதிவு செய்ததற்கு மேல் வேறு எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பலமுறை சிபிஐ, அரசாங்கத்திற்கு எழுதினாலும்
இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
(அனுமதி கொடுக்க வேண்டிய இடத்தில்
இருப்பவர்களுக்கும் இந்த குற்றங்களில்
பங்கு இருந்தால் – அனுமதி
எப்படி கிடைக்கும் ? )- பாவம் சிபிஐ !!
அன்னா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தன்
அவசியம் குறித்து ஆயிரம் கேள்விகள்
எழுப்பினர் காங்கிரசின் கபில் சிபல்,
திக் விஜய் சிங், போன்ற அறிவாளிகள்.
(நமது “சோ” கூடத்தான் !)
அன்னா ஹஜாரேயின் முக்கிய
கோரிக்கைகளில் ஒன்று ஊழல் புகாரில்
சிக்கிய அரசு அதிகாரிகளின் மீது வழக்கு
தொடர யார் அனுமதியும் தேவைப்படக்கூடாது
என்பது.
மற்றொரு கோரிக்கை குற்றம் சாட்டப்பட்ட
ஒரு வருடத்திற்குள் விசாரணைகள்
முடிக்கப்பட்டு, அடுத்த ஒரு வருடத்திற்குள்
(ஆக மொத்தம் 2 வருடங்களுக்குள் )
வழக்கு தொடரப்பட்டு, வழக்கில் தீர்ப்பு
கூறி முடிக்கப்பட வேண்டும் என்பது.
ஜன் லோக் பால் ஏன் அவசியம் என்பதற்கு
இந்த ஒன்றே போதுமானது அல்லவா ?
பி.கு.
ஊழலில் சிக்கி, ஆனால்
அரசின் அனுமதி கிடைக்காததால்-
வழக்குகளில் இன்னும் சிக்காமல்,
ஜாலியாக உலா வரும் அதிகாரிகளில் சிலர் —
சென்னை துறைமுக முன்னாள் தலைவர் சுரேஷ்,
தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக
தலைவர் ராவ்,
யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் பொது
மேலாளர் சனத் குமார்,
கஸ்டம்ஸ் உதவி இயக்குனர் குமார்,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கீதா
(பெரிய்ய்ய்ய்ய லிஸ்டே இருக்கிறது போங்கள் ….)
மறந்து விட்டேனே – 4 நாட்கள் முன்னர்
50 லட்சம் வாங்கும்போது கையும்
களவுமாய் பிடிபட்டாரே, சென்னை
இன்கம்டாக்ஸ் அடிஷனல் கமிஷனர் ரவீந்திரா-
அவர் தான் இந்த லிஸ்டில் லேடஸ்ட்.
அதான் இலாகா அனுமதி இப்போதைக்கு வராதே !
இனி ஆபீசுக்கும் போக வேண்டாம் –
ஜாமீனில் வெளிவந்த பிறகு ஜாலியாக
ஊர் சுற்றிக்கொண்டிருக்க வேண்டியது தான்.
அந்த கொடுத்து வைத்த ஆசாமியை கீழே
பார்த்துக் கொள்ளுங்கள் –
(சத்யம், ஐநாக்ஸ், எக்ஸ்பிரஸ் மால்
எங்கேயாவது பார்க்க நேரிடலாம் ! )
தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா என ஒரு பெரிய விவாதம் இப்பொழுது நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.
என் கருத்து என்னவென்றால்..
குற்றம் செய்யும்
மத்திய மாநில அமைச்சர்கள்,
MP s and MLA s
IAS அதிகாரிகள்
இன்ஸ்பெக்டர் பதவிக்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரிகள்.
தாசீல்தார் பதவிக்கு மேல் உள்ள அரசு அதிகாரிகள்
election commission CBI,IT & ராணுவ அதிகாரிகள்..
இவர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை வைத்துக்கொள்ளலாம்