கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் ?

கோடிக்கணக்கில் பணம் –
எப்படி  விடுவார்கள் ?

வெளிப்படையான, நேர்மையான,
நல்ல நிர்வாக அணுகுமுறை,

விளையாட்டு வீரர்களின் திறனை
மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள்

அவர்களது வளர்ச்சிக்கான,
நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள்,
(long term development
programme),

அனைத்து விளையாட்டு வீரர்களின்
திறனையும் ஊக்குவித்து,
உள் நாட்டிலும்,   உலக அளவிலும்
நடத்தப்படும் மதிப்பு மிக்க பந்தயங்களில்
தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்ளும்
நிலையை உருவாக்குதல்,

உண்மையான, திறமையான விளையாட்டு
வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை
ஊக்கப்படுத்துதல்,

அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும்
ஆன வாரியங்களில் (கிரிக்கெட், ஹாக்கி,
கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து,
தடகள பந்தயங்கள் போன்றவை )
(concerned sports federations)
நிர்வாகத்தில் குறைந்த பட்சம்
25 % நபர்கள் முன்னாள் விளையாட்டு
வீரர்களாக இருக்க வேண்டும்.

இன்னும் 25 % நபர்கள் உலக அளவில்
அங்கீகரிக்கப்பட்ட டூர்னமெண்ட்களில்
கலந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சியாளர்கள் பற்றிய நல்ல அனுபவ அறிவு
உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதிலும
(selection of players),
வெளிநாடுகளுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள
அனுப்புவதிலும், வெளிப்படையான அணுகுமுறை
இருக்க வேண்டும்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் –
புதிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்
அஜய் மாக்கன் இத்தனை அருமையான விதிகளை
உள்ளடக்கிய தேசிய விளையாட்டுகள் குறித்த
மசோதாவை (National Sports Bill )
நேற்றைய தினம் –

மத்திய அமைச்சரவையில்(கேபினட்)
ஒப்புதலுக்காக வைத்தபோது –

நேர் விரோதமான விளைவை அவர் எதிர்கொள்ள
வேண்டி இருந்தது.

ஐந்து கேபினட் அமைச்சர்கள் இந்த மசோதாவை
மிகக்கடுமையாக எதிர்த்ததால் பரிதாபமாக
பின்வாங்க நேர்ந்தது.

யார் யார் அந்த ஐந்து அமைச்சர்கள் ?

சரத் பவார்
ப்ரபுல் படேல்
பரூக் அப்துல்லா
கமல் நாத்
கபில் சிபல்

ஏன் எதிர்த்தார்கள்  ?

யாராவது சொந்தக் காசில்
சூன்யம் வைத்துக்கொள்வார்களா ?

அந்த மசோதாவில் நான் மேலே குறிப்பிட்டுள்ள
விஷயங்களையும் தாண்டி மேலும் இரண்டு
முக்கியமான விஷயங்கள் இருந்தது தான்.

என்ன  அவை ?

1) விளையாட்டு வாரியங்களின் தலைவர்கள்
70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் !
(அமைச்சர்களில் இருவர் ஏற்கெனவே 70 ஐ
கடந்து விட்டார்கள் !)

2) இந்த விளையாட்டு வாரியங்கள் அனைத்தும்
அரசாங்க நிதி உதவி, வரிச்சலுகைள் பெறுவதால்-
(கடந்த 3 ஆண்டுகளில் 459 கோடி ரூபாய்
இவற்றிற்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்டிருக்கிறது)

– இவை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
(Right to Information Act )
கொண்டு வரப்பட வேண்டும்.
(மற்ற 3 பேரும் இந்த காரணத்திற்காக
எதிர்த்திருக்கிறார்கள் )

பிரதமர் மன்மோகன் சிங் இந்த மசோதாவை
பரிந்துரைத்த போது,  இதற்கு மேலும் இந்த
மசோதாவை கொண்டு வருவதாக இருந்தால் –
நான் சோனியா காந்தியிடம் பேச வேண்டி இருக்கும்
என்று கூறினாராம்  சரத் பவார் !
(அம்மையார் இல்லாத போது தயாரான
முதல் மசோதா இது !)

பாவம் விளையாட்டுத் துறை அமைச்சர்.
அவருக்குத் தான் இதெல்லாம்
ஏமாற்றமாக இருக்கும் –

நமக்கு இல்லை !இல்லை !! இல்லவே இல்லை !!!

(எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம் ?)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் ?

 1. bandhu சொல்கிறார்:

  சரத் பவார் போன்ற ஊழலிலே ஊறியவர்களை எத்தனை காலம் தான் நாம் சகித்துக்கொண்டிருக்கப்போகிறோம்?

 2. Ganpat சொல்கிறார்:

  கவலைப்படேல் bandhu..
  சரத் பவார் போன்றோர்களின் ஆட்டமெல்லாம் இன்னும் ஒரு முப்பது ஆண்டு காலத்திற்குத்தான்.
  (நம்ம கருணா ஆட்டம் இன்னும் 15 ஆண்டுகளுக்குத்தான்)

 3. Ramesh சொல்கிறார்:

  உங்கள் செய்திகள் வேறு எங்கும் இல்லாத புது செய்தியாக இருக்கிறது. தவறாமல் உங்கள் நியூஸ் படிக்கிறேன். keep up the good work….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.