மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

மதுரை அண்ணனிடம் மாட்டிய
ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

ஏனோ தெரியவில்லை – இன்னும் கூட
தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை
வெளியிட தயங்குகின்றன.

தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு
விஷயம் – தமிழ் பத்திரிகைகள் எதிலும்
வரவில்லை.

இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி –

ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் விஷன்
நிறுவனத்திடமிருந்து (முதலாளி யார்
தெரியும் இல்லையா ?) மார்ச் 2008
முதல் வரவேண்டிய தொகைக்காக
(மொத்தம் ரூபாய் 6,68,80,881)
The Telecom  Disputes  Settlement
and Appellate Tribunal )
TDSAT-ல் ஒரு வழக்கு போட்டிருக்கிறது.

ராஜ் டிவியின் வேண்டுகோளை ஏற்று,
வழக்கு முடிவடையும் வரை ராயல் கேபிள்
விஷன் நிறுவனம் தனது அசையும் மற்றும்
அசையா சொத்துக்கள் எதையும்
விற்கக் கூடாது என்று ட்ரைபியூனல்
தடை உத்திரவு  பிறப்பித்திருக்கிறது.

அலைவரிசையை மார்ச் 2008 முதலே
பெற்று வந்தாலும், அண்ணன் நிறுவனம்
ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து
போடாமல் தவிர்த்து வந்ததாகவும்,
மீண்டும் மீண்டும் நினைவுறுத்தியும்
பணமும் கொடுக்கவில்லை என்றும்
மனுவில் ராஜ் டிவி தெரிவித்திருக்கிறது.

இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பது
பலருக்கும் மறந்திருக்கலாம்.
மதுரை தினகரன் அலுவலகம்
எரிக்கப்பட்டதும், மாறன் சகோதரர்களுடன்
மனஸ்தாபம் ஏற்பட்டதுமான நிகழ்வுகள்
ஏற்பட்டபோது,  ராஜ் டிவி தன்னிச்சையாக
முன்வந்து அதன் உரிமையாளர்கள் திமுகவில்
சேர்ந்து, ராஜ் டிவியை திமுக செய்திகளை
ஒளிபரப்ப உதவினார்கள்.

பின்னர் கண்கள் பனித்து,
இதயம் மலர்ந்ததும் – ராஜ் டிவி அம்போ
வென்று கைவிடப்பட்டது.

அப்போது ஏற்பட்ட உறவில் துவங்கி
இருக்கிறது இந்த பணச்சிக்கல்  !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, தடை உத்திரவு, தமிழ், தினகரன், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

 1. thumbi சொல்கிறார்:

  இந்த செய்தி ராஜ் டி.வி.யிலாவது வந்ததா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பரே,

   எனக்குத் தெரிந்த வரையில் ராஜ் டிவி யிலும்
   இந்த செய்தி வரவில்லை.
   அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.
   பணம் வந்தால் போதுமே – பகை எதற்கு ?

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 2. mahendran சொல்கிறார்:

  nalla dealing

 3. dhanusa சொல்கிறார்:

  சிக்கல்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.