தூக்கு தண்டனையை
நிறுத்தி வைக்க அரசால் முடியும் ….
ஜனாதிபதியால் கருணை மனுக்கள்
நிராகரிக்கப்பட்ட பிறகு,
மாநில அரசு அதில் தலையிட்டு,
தண்டனையைக் குறைக்க அதற்கு
அதிகாரம் இல்லை
என்று இன்று தமிழக அரசால்
தெரிவிக்கக்ப்பட்டது.
இது உண்மையே.
ஆனால் -தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின்
மேல்முறையீட்டு மனுக்களும் (appeals)
உயர்நீதி மன்றத்தின் பரிசீலனையில்
இருப்பதாலும்,
புதிய கருணை மனுக்கள் இன்னும்
பரிசீலிக்கப்படாததாலும்,
தூக்கு தண்டனை நிறைவேற்றலைத்
தள்ளி வைக்க, தற்காலிகமாக
நிறுத்தி வைக்க – தமிழக அரசுக்கு
அதிகாரம் உண்டு.
தமிழக அரசு அந்த அதிகாரத்தைப்
பயன்படுத்தி தண்டனையை நிறைவேற்றுவதை
ஒத்திப்போட்டால் – மக்களிடையே
ஓரளவு பதட்டம் தணியும்.
அரசு விரைவாக இது குறித்து அறிவித்தால் –
மக்கள் தற்காலிகமாகவாவது நிம்மதி பெற
அது உதவும்.
///////தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின்
மேல்முறையீட்டு மனுக்களும் (appeals)
உயர்நீதி மன்றத்தின் பரிசீலனையில்
இருப்பதாலும்,
புதிய கருணை மனுக்கள் இன்னும்
பரிசீலிக்கப்படாததாலும்,
தூக்கு தண்டனை நிறைவேற்றலைத்
தள்ளி வைக்க, தற்காலிகமாக
நிறுத்தி வைக்க – தமிழக அரசுக்கு
அதிகாரம் உண்டு./////
dear kavirimaintha sir
நீதிமன்றத்தை அணுகினால்
அரசு தலையிட தேவையில்லை …..
அதற்கான உத்தரவை
நீதிமன்றமே பிறப்பிக்கும் !
அதைவிடுத்து
தமிழர்களை-
தவறாக வழிநடத்த
”””புதிதாக கிழம்பிய தலைவர்களால் ””””
தமிழகமும்
தமிழர்களுக்கும்
தலைவலிக்கு உள்ளாவது தான் உண்மை….
இவர்களால் நல்ல உள்ளங்கள்
பலியாவது
வேதனைக்கு உரியது……………………………………
thanks & blessing all of u
rajasekhar.p
மற்ற காரணங்களை பற்றி எனக்கு அக்கறையில்லை.நம் நாட்டிலேயே ஒரு வேலையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் ஜனாதிபதிகளும்,ஆளுநர்களும்!!.
ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்கப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து அது நிராகரிக்கப்படுகிறது.இது ஒரு கேலிகூத்து!இந்த ஒரு காரணத்திற்கே இந்த மூவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.வேண்டுமென்றால் இவர்களுக்குப்பதில் திகார் சிறையிலிருக்கும் ஓரிரண்டு தமிழர்களை….after all economic murders are much more dangerous and harmful than human murders!!
நான் வழிமொழிகிறேன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்