தங்கபாலுவை உடனடியாக
நாடுகடத்த வேண்டும் ….
சென்னையில் தங்கபாலு செய்தியாளர்
கூட்டத்தில் தேவை இல்லாமல்
சில விஷயங்களைப் பேசி இருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன்,
சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு
அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை
எதிர்ப்பது தவறு என்றும் தண்டனை
உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்
என்றும் கூறி இருக்கிறார்.
Law will take its own course.
சட்டம் தன் கடமையை தானே ஆற்றும் –
அதற்கு தங்கபாலுவின் ஆலோசனை
தேவை இல்லை.
பேரறிவாளவன், முருகன், சாந்தன் ஆகியோர்
கொலைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடவில்லை –
என்று பிராசிகியூஷன் தரப்பே கூறி இருக்கிறது.
கொலை நிகழப்போவது அவர்களுக்கு முன்கூட்டியே
தெரியும் என்பதும் நிரூபிக்கப்படவில்லை.
ஒரு வாதத்திற்காக – அவர்களுக்கு தொடர்பு
உண்டு என்று வைத்துக்கொண்டாலும் கூட,
அதற்கான தண்டனையை –
கடந்த 20 வருடங்களாக கடும் சிறைவாசத்தில்
அவர்கள் ஏற்கெனவே அனுபவித்து விட்டார்கள்.
மேலும் கிரிமினல் சட்டத்தில் அண்மையில்
செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி,
தண்டனையை நிறைவேற்றுவதில் அளவுகடந்த
தாமதம் ஏற்பட்டால், தூக்கு தண்டனையை
ஆயுள் தண்டனையாக மாற்ற விதிகள்
ஏற்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் ஏற்கெனவே
20 வருடங்கள் தண்டனையை அனுபவித்து
விட்டார்கள்.
எனவே, தகுந்த முறையில்,மீண்டும்
நீதிமன்றத்தில் மேல் முறையீடு
செய்யப்படும்போது, இவர்கள் மூவருக்கும்
நிவாரணம் நிச்சயம் கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் – வேண்டுமென்றே
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு
சீர்குலையும் வகையில் பேசி,
மக்களின் நிம்மதியைக் குலைத்து,
கலவரத்தை ஏற்படுத்த
முயற்சி செய்யும் தங்கபாலுவை
உடனடியாக நாடுகடத்த அரசு உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் !
முடிந்தால் காங்கிரசையே தமிழ் நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும். இத்தாலிகாரியை ‘அன்னை’ ஆக்கி அவரின் கண்ணசைவுக்கு மடிந்து நின்று சேவகம் செய்வதே கொள்கையாய் கொண்ட ஜடங்கள் தான் தமிழ் நாட்டு காங்கிரஸ் கூட்டம். தமிழர்களின் சாப கேடு!