“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ”
அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள்
அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை
எழுப்புகிறது.

“சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி
என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள்.
(என்  எண்ணமும் அதுவே !)

மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை”
என்று சொல்வது வேறு. தொடர்ந்து அதையே
மனதில் நிலை நிறுத்திக்கொண்டு  –
தன்னைத்தவிர  மற்றவர்கள்  அனைவரும்
வடிகட்டிய முட்டாள்கள்  நினைத்துக் கொண்டு –

உண்மை நிலையை (ground realities)
அறியாமல் தனக்கு எல்லாம் தெரியும் –
தான் சொல்வது மட்டுமே சரி என்கிற
அடிப்படையிலேயே நடந்து கொள்வது
பைத்தியக்காரத்தனத்தில் தான் முடியும்.

அது தான் இப்போது “சோ” விஷயத்தில்
நடந்து கொண்டிருக்கிறது.

அண்ணா ஹஜாரேயைப் பற்றியும்,
ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்தும்
முதலில் துக்ளக் இதழில் கேவலப்படுத்தி
வியாழனன்று தலையங்கம் எழுதினார்.
உடனேயே அதைப்பற்றி எழுத வேண்டும்
என்று  நினைத்தேன்.அதற்குள் வேறு
வேலைகள் வந்து விட்டன.

இன்று டெல்லி CNN/IBN தொலைக்காட்சியில்
பேசும்போது மிக மிக கேவலமான தொனியில்,
ஆத்திரத்துடனும், ஆங்காரத்துடனும் அவர்
பேசிய விதம் மகா  கேவலமாக இருந்தது.

நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து கொண்டு
படிப்பதும், பார்ப்பதும் – தான் மட்டுமே
புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு
எழுதுவதும் தவிர
வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது
எதையும் உணரும் நிலையில் அவர்
இல்லை என்பது தான்  வெளியாகிறது.

மிகப்பெரிய எழுச்சி உருவாகி இருக்கிறது
நாட்டில்.  நடுத்தர மக்களிடம்
ஏற்பட்டிருக்கும் இந்த உணர்ச்சிப்  பிரவாகமும்
அண்ணா ஹஜாரேயின் இயக்கத்திற்கு அவர்கள்
அளிக்கும் உணர்வு பூர்வமான ஆதரவும்
இந்த நாட்டின் சமுதாய அடிப்படையையே
மாற்றி அடுத்த கட்டத்திற்கு இழுத்துச்
செல்லப்போகிறது. வன்முறையல்லாத
மிகப்பெரிய புரட்சி, மிகப்பெரிய மாற்றம்
இந்தியாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இது “ஜன் லோக் பால்” சட்டத்துடன்
நின்று விடப்போவதில்லை.

ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில்
மக்களைப் பிரித்து கொள்ளை அடித்துக்
கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை
எதிர்த்துப் போர் செய்ய
மக்கள் துணிந்து விட்டார்கள்.

அவர்களின் நம்பிக்கைக்குரிய ஒரு
வழிகாட்டியைத் தான் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அண்ணா ஹஜாரே கிடைத்தவுடன் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டு விட்டார்கள்.
அரசியல் அபிலாஷைகள் எதுவும் இல்லாத
ஆசாமி அவர் என்பதை புரிந்து கொண்டு
விட்டார்கள்.  ஓட்டு அரசியலுக்காக
எதையும் செய்ய மாட்டார் என்பதை
உணர்கின்றார்கள். எனவே தான் இந்த பிடிப்பு.

அண்ணா ஹஜாரேயைப் பற்றி “சோ” எழுதும்
முன்னர் அவரது பின்புலத்தைப் பற்றி
தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
அண்ணா ஹஜாரே  நமக்குத் தான் புதியவர்.
கடந்த 35 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில்
அவர் ஆற்றியுள்ள பணிகளைப் பார்த்தால்
பிரமிப்பு ஏற்படுகிறது. சமூக சேவைக்காக
அவர் 1992 லேயே பத்மஸ்ரீ யும்,
1994 ல் பத்ம பூஷணும்
பெற்றவர் என்று இங்கு யாருக்காவது
தெரியுமா ? அவர் எப்போதாவது விளம்பரம்
செய்து கொண்டிருக்கிறாரா ?

சுதந்திர தினத்தன்று கூட மூவர்ணக்கொடியை
கையில் பிடிக்கும் பழக்கம் இல்லாத இந்த
நாட்டு  மக்கள் எங்கு நோக்கினும் பட்டொளி
வீசும் மூவர்ணக்கொடியை வீசிக்கொண்டே
“ஜெய் ஹிந்த்”, “பாரத் மாதா கீ ஜெய்”,
“வந்தே மாதரம்” என்று உணர்வு பொங்க
முழக்கமிட்டுக் கொண்டு வீதிகளில் அலைவதைப்
பார்க்கும்போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தை
நேரில் காணும் வாய்ப்பு பெற்றிடாத மக்களுக்கு
அதிசயமான உணர்வைத் தருகிறது.

லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட
இந்த போராட்டத்தில் எங்கேயாவது ஒரு சிறிய
அளவிலாவது வன்முறையைக் காண முடிந்ததா ?

குறை சொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிர
பாசிடிவ் ஆக எதையாவது இதுவரை
“சோ”வால் செய்ய முடிந்ததா ?

அவரும் தன் 50 ஆண்டுகளாக பொது வாழ்வில்
இருக்கிறார். தன் மனசாட்சியைத் தொட்டு
சொல்லட்டும் – இன்றைய தலைவர்களில்
யாராலாவது  அகில இந்திய அளவில் இத்தகைய
எழுச்சியையும் மக்கள் கூட்டத்தையும்
முற்றிலும் அகிம்சை வழியில் திரட்ட முடியுமா ?

ஒரு தனி மனிதனின் மனோபலத்திற்காகவும்,
சத்தியம், நேர்மைக்காகவும்
அவர் பின்னால் வரும் கூட்டம் இது.

ஷா ரூக் கானையும், அமிதாப் பச்சனையும்
அண்ணா ஹஜாரேயுடன் ஒப்பிடுபவரின்
சித்தத்தைப்  பற்றி சந்தேகப்படாமல் என்ன
செய்ய முடியும் ?

லாலு பிரசாத்தும், மாயாவதியும் தான்
அண்ணாவை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வரிசையில் “சோ” வா ?

இல்லை பிஜெபி க்கு போக வேண்டிய
பிரபல்யம்  அண்ணாவிற்கு  
போய்க்கொண்டிருக்கிறதே என்று ஆதங்கமா ?

ஒரு பக்கம் most corrupt government
என்று சோனியா/மன்மோகன் சிங் அரசை
விமரிசனம் பண்ணிக்கொண்டே –
இன்னொரு பக்கம் அண்ணா திமுகவுக்கும்
காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படுத்த முடியுமா
என்று முயற்சி செய்யும் “சோ”வை
எப்படி என்று எடுத்துக்கொள்வது ?

ஏற்கெனவே, மனதில் இரக்கமோ,
பச்சாத்தாபமோ இல்லாமல் ஈழத்தமிழர்
விவகாரத்தில் அவர் நடந்து கொள்ளும்
முறை பற்றி முன்னர் ஒரு முறை எழுதி
இருந்தேன். விடுதலைப்புலிகளைத்தான்
இவருக்கு பிடிக்காது – சரி. அவர்கள்
அத்தனை பேரும் அழிந்து போன பின்னரும்
இன்னமும் இவர் ராஜபக்சேவுக்கு வால் பிடிப்பது
ஏன் ? நடுநிலையாளராக, லட்சியவாதியாக
தன்னை உருவகப்படுத்தும் இவர் இன்னும்
ராஜபக்சே அரசை கண்டிக்காமல் இருப்பது ஏன் ?
நெஞ்சில் இரக்கமும், கருணையும் இல்லாத
ஒரு மனிதர் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும்
அவரால் சமுதாயத்திற்கு என்ன பயன் ?

இன்று டெல்லியில் நடப்பதை அவரால் உணர
முடியா விட்டாலும், அங்கிருக்கும் நண்பர்களிடம்
பேசியாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டு நடப்பை அறியாமல், உணராமல்
“சோ”தொடர்ந்து பேசினால் –
தலைப்பில் உள்ளது தான் எல்லார் மனதிலும்
தோன்றும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

25 Responses to “சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

 1. BC சொல்கிறார்:

  //விடுதலைப்புலிகளைத்தான் இவருக்கு பிடிக்காது //
  விடுதலைப்புலிகள் என்ன ஜனநாயக கட்சியா? அல்லது ஜனநாயக இயக்கமா? உங்களுக்கு விடுதலைப்புலிகளை பிடித்தது தான் ஆச்சரியம்.
  அண்ணா ஹஜாரே +சோ பற்றி தாரளாம எழுதுங்கள்.ஆனல் மோசமான காட்டுமிராண்டி இயக்கமான விடுதலைப்புலிகள் பற்றி அறிஞர் சோ வின் கணிப்பு முழுவதும் சரி.

  • Birundan சொல்கிறார்:

   ஒரு காமெடியன் காமெடியாக பேசுவது கணிப்பா. லூசில விடுங்க சார்……….

 2. k சொல்கிறார்:

  c this and add ur comments

 3. ramalingam சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது சரி. சோ தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஜெ. ஆட்சிக்கு வந்த சந்தோஷத்தில் உளறிக் கொட்டுகிறார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுகிறார்.

 4. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அன்னாஹசாரே பற்றி தெரிந்து கொள்ள ………..
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87

 5. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை அவர்களுக்கு…
  மன்னிக்கவும் ….
  துகளுக் சோவை
  எதை வைத்து
  அறிவாழி என்கிறீர்கள்
  “சராசரி மனிதனின் அறிவை கூடவும்
  அறிவுள்ளவன் அறிவாழி”
  சோவோ
  தனக்கு பிடித்தமானதை
  தனக்கு பிடித்த வழிகளில்
  மக்களிடம்
  திணிப்பதில் அறிவாழியே தவிர…………
  வேறு எந்தவழிகளில் ……அறிவாழி….???

  thanks & blessings all of u
  rajasekhar.p

 6. யோகா.எஸ் சொல்கிறார்:

  விடுங்க சார்,வயசாக,ஆக மனுஷனுக்கு புத்தி அதிகமாகும்னு சொல்லுவாங்க!மிருகங்களுக்குத் தான் பேதலிக்குமாம்!

 7. யோகா.எஸ் சொல்கிறார்:

  BC | 11:40 பிற்பகல் இல் ஆகஸ்ட் 27, 2011 | பதில்

  //விடுதலைப்புலிகளைத்தான் இவருக்கு பிடிக்காது //
  விடுதலைப்புலிகள் என்ன ஜனநாயக கட்சியா? அல்லது ஜனநாயக இயக்கமா? உங்களுக்கு விடுதலைப்புலிகளை பிடித்தது தான் ஆச்சரியம்.
  அண்ணா ஹஜாரே +சோ பற்றி தாரளாம எழுதுங்கள்.ஆனல் மோசமான காட்டுமிராண்டி இயக்கமான விடுதலைப்புலிகள் பற்றி அறிஞர் சோ வின் கணிப்பு முழுவதும் சரி.§§§§§§§தமிழில் கருத்துரைத்த “தமிழர்” வாழ்க!

 8. Agneya சொல்கிறார்:

  சோ அப்படி என்னதான் சொன்னார் ? லிங்க் கொடுத்தால் தெரியலாம். இல்லாவிட்டால் தந்திரமாக உங்கள் கருத்தைத் திணிக்கிறீர்கள் என்றுதான் வரும். U r cleverly hiding his speech from ur readers. Y?

 9. காசிம் சொல்கிறார்:

  இன்னும் எத்தனை காலம்தான் இப்படி ஏமாறப் போகிறீர்களோ
  //சாதி மதம் இனம் மறந்து….//
  மன்னிக்கவும ! இது இந்துக்களான போராட்டம் எமது இஸ்லாமியர்க்களுக்கான போராட்டம் அல்ல
  இந்தப் போராட்டத்தில் ஏதேனும் ஒரு இஸ்லாமியராவது காண கிடைத்தனரா இது எப்படி மதம் மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்த போராட்டமாகும்
  அது சரி நீங்க தான் சோவின் சீடராச்சே

 10. Jawahar சொல்கிறார்:

  சோ வின் கருத்துக்கள் முழுதுமாக ஏற்புடையன அல்ல இந்த விஷயத்தில். ஆனால் சுத்தமாக அர்த்தமில்லாதது என்று புறந்தள்ளக்கூடியதும் அல்ல. அவர் பக்கத்து வாதங்களையும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதில் தவறில்லை

  http://kgjawarlal.wordpress.com

 11. yatrigan சொல்கிறார்:

  நான் நீண்ட கால துக்ளக் வாசகன்.
  அண்ணா ஹஜாரே பற்றிய
  ஆசிரியர் “சோ”வின் தலையங்கம்
  எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.

  காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும்
  இடையே 3 மணி நேர உண்ணாவிரதம்
  இருந்து விட்டு ஆயுசு பூராவும் அதையே
  பேசிக்கொண்டிருக்கும் போலித்
  தலைவர்களிடையே,
  பொது நலன் கருதி, நம் நாட்டு மக்களின்
  நலம் கருதி 288 மணி நேரம் –
  அதுவும் கோரிக்கை நிறைவேறும் வரை
  உண்ணாவிரதம் இருந்த ஒரு 74 வயது
  பெரியவரை “சோ” இப்படி அவமானப்படுத்தியது
  மிகமிகத் தவறு.

  அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம்
  கண்டு பிடிக்கத் தெரியாத அளவிற்கா “சோ”
  போய் விட்டார் ?

  தன் தலையங்கத்துக்காக “சோ” அவர்கள்
  மன்னிப்புக் கேட்பதே முறை. இல்லையெனில்,
  அவரது வாசகர்களில் பலரின்
  நன்மதிப்பை அவர் இழந்து விடுவார்.

 12. Why Bother சொல்கிறார்:

  இன்று தமிழினம் சந்தித்துக்கொண்டிருக்கும் அநீதியான, மோசமான இனவழிப்புக்கும், சமூக அழிப்புக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கு நேரும் அவமானங்களுக்கும் காரணமாக இருப்பவர்களில் சோ முக்கியமானவர். இவர் மனசாட்சியற்ற இனவெறியர் என்பதை முதலில் தமிழர்கள் உணரவேண்டும். இவருடைய “அறிவினால்” எள்ளளவும் தமிழர்களுக்கும், மனித சமூகத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் பயனில்லை.
  அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
  தன்னோய்போல் போற்றாக் கடை
  (அடுத்தவருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பம்போல் பார்க்கத் தெரியாதவருடைய அறிவினால் ஏதேனும் பயனுண்டா?). தம்மைச் சுற்றி ஒரு நரகத்தைச் சுமந்துகொண்டே திரியும் இந்த ஈனப் பிறவிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் நிம்மதி கிடைக்காது.

 13. murthy சொல்கிறார்:

  corruption is not new to India. Anna doing social work for the pasr thirty years has suddenly started his plaight agaist corruption? does it mean that he was not interested in it ? What Cho Says is correct. there are so many law against corruption. but nobody including Anna is not interested in the Implemetation?

 14. Vijai சொல்கிறார்:

  தலைகனம்
  ஆணவம்
  தான் மட்டும் புத்திசாலி எந்த நினைப்பும் மனிதனுக்கு அழிவை தரும் என்ந்து அவருக்கு தெரியும்

 15. g varadharajan சொல்கிறார்:

  நான் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே துக்ளக் படிப்பதை நிறுத்திவிட்டேன். சித்தம் போக்கு சிவன் போக்கு என நான் எழுதும் குப்பைகள் தான் உனக்கு எப்போதும் வாக்கு அது என்றும் படித்த சோவின் அதி புத்திசாலி என நினைக்கும்மேதாவிகளுகு ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான் புதுகை ஜி வீ ஆர்

 16. Tamil Stories Blogspot சொல்கிறார்:

  மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்; மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை – உயர்நீதிமன்றம்
  http://tamilpadaipugal.blogspot.com/2011/08/blog-post_30.html

 17. SARAVANAN சொல்கிறார்:

  ஐயா ஸோ ஓரு மனிதணே இல்லை தரம் கெட்டவன் அவனை பத்தி வலை பத்திபில் போடடாதீற்கல்.

 18. buruhani சொல்கிறார்:

  அவர் ஒரு ஜோக்கர் கோமாளி என்பதை மறந்து விடாதீர்……
  அவருக்கு ஜோசியமும் பார்க்க தெரியும் போல ?

 19. Ganpat சொல்கிறார்:

  சோ ஒரு நேர்மையாளர்; தேசபக்தர்; ,அதே சமயம் அவர் மொரார்ஜி போன்ற பிடிவாதக்காரர் பத்தாம் பசலி.தான பிடித்த முயலுக்கு மூன்றே கால என சாதிப்பவர்.பெண்கள் பற்றிய இவர் எண்ணங்கள் கேலிக்குரியன.எழுத்தாளர் சிவசங்கரி கூறியது போல அவர் ஒரு நெருஞ்சி முள்.குத்துவதை தவிர எதுவும் அறியாதவர்.சுதந்திர போராட்ட இறுதி காலங்களில் இவர் சிறுவன்.இல்லையெனில் காந்தியையும் குற்றம் சொல்லியிருப்பார்.இருட்டை ஆயிரம் வார்த்தைகளில் அருமையாக குறை கூறுவதில் நிபுணர்.ஆனால் ஹசாரே செய்திருப்பது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றியிருப்பதுதான்.ஹசாரே செய்வது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்க ,அவர் சோவை விட பலமடங்கு செயல் வீரர் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை.இறுதியாக சோ ராமசாமி ஐம்பது ஆண்டுகளில் சாதித்ததை விட TRAFFIC RAMASAMI பத்தாண்டுகளில் சாதித்தது அதிகம் என்பது என் கருத்து.

 20. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வருக நண்பர் கண்பத்,

  அது தான் பிரச்சினையே !
  இவரை அப்படியே ஏற்கவும் முடியவில்லை –
  முழுவதுமாக வெறுக்கவும் முடியவில்லை !

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 21. S.M.Palaniswamy சொல்கிறார்:

  Normally, pramhins are not like Tamils. They loves and wants Tami’s money and their hard work. In this We cannot expect that they INCLUDE JJ will support Tamil. And Cho’s comment on Anna Haza, it sopposed correct. You please read Arundhathirai’s Artical in Hindu News Paper.Date I dont know

 22. kavirimainthan சொல்கிறார்:

  my dear friend palaniswamy,

  I dont accept this logic.
  I dont recognise division of people
  based on their caste.
  There are good people-
  There are bad people in every caste.

  To which caste 2 g spectrum Raja belongs ?

  I try to judge people only based on
  their thinking and action. – Hope you agree.

  Reg. Arunthathi Roy – she is a leftist and
  her comments are based on her ideology.

  with all best wishes,
  kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.