சொல்லித் தொலையுங்கள் –
எவ்வளவு கொடுத்தால் …
லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ?
இந்தியாவே அசந்து போனது இன்று.
எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை
நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார்
என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் ..
பாராளுமன்ற்த்தில் பேசியது மொத்தம்
மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி
எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த விதமும் ..
புடவை கட்டிய சகோதரி அதைக்காண
ஓடி வந்த விதமும் ..
காணக்கிடைக்காத காட்சி.
பார்க்கக் கொடுத்து வைக்காதவர்கள்
எங்காவது வீடியோ கிடைத்தால் அவசியம்
பார்க்கவும். ( கொஞ்ச நாளில் யூ ட்யூபில்
வந்து விடும் )
புறப்பட்டு விட்டது
புதிய புயல்,
புதிய சிந்தனை
என்று கர்ஜித்தாரே பார்க்கலாம்.
சொல்லிக் கொடுத்தவர் சரியாகச்
சொல்லவில்லை போலும் ..
பார்த்துப் படித்துக்கொண்டே போனவர்
கடைசியில் “தேங்க் யூ” என்பதைக் கூட
கர்ஜித்துக் கொண்டே சொன்னார்.
சின்ன வயதில் பிரெஞ்சு புரட்சி பற்றி படித்தது
நினைவிற்கு வந்தது.
மக்கள் பட்டினியால் கொந்தளித்த போது
மன்னன் 14ம் லூயியின் மனைவி சொன்னாளாம் –
“இவர்கள் என் கத்துகிறார்கள் –
ரொட்டி கிடைக்காவிட்டால் கேக் சாப்பிட
வேண்டியது தானே” என்று.
ஜன் லோக் பால் மசோதா கேட்டவர்களுக்கு
இவர் பதில் சொன்னார்.
“இது என்ன குறுகிய சிந்தனை –
நான் அரசியல் சட்டத்திலேயே திருத்தம்
கொண்டு வருவது பற்றி யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.”
(முலாயம் சிங் அல்லது மாயாவதி இருவரில்
யாராவது ஒருவர் பின் வாங்கினால் கூட
கவிழ்ந்தது இவர் அரசாங்கம் !
இந்த சொத்தை மைனாரிடி அரசாங்கத்தை
வைத்துக்கொண்டு, இவர் அரசியல் சட்ட
திருத்தம் கொண்டு வருவாராம் ! )
இன்று பட்டினியால் செத்துக்கொண்டிருப்பவரை
உடனே காப்பாற்ற வழி சொல்லுங்கள்
என்று சொன்னால் –
இவர் ஒரு மாதம் கழித்து எப்படி விருந்து
கொடுப்பது என்று யோசித்துக்
கொண்டிருக்கிறாராம்.
இரண்டு பெயர்கள்…
இரண்டு பாஸ்போர்ட் கள் …
இரண்டு வெவ்வெறு நாடுகளின் குடியுரிமை ..
எங்கெங்கோ வங்கிக் கணக்குகள் …
கடந்த ஒரு வருடத்தில் எவ்வளவு தடவை
“பாரின்” போனார் என்பது யாருக்கும்
தெரியாது. அன்னையும் சரி – பிள்ளையும் சரி
“இங்கே” இருக்கிறார்களா – “அங்கே”
இருக்கிறார்களா என்பதை டாக்டர்
சுப்ரமணியன் சுவாமி கண்டு பிடித்துச் சொன்னால்
தான் நமக்குத் தெரியும் !
வரிசையாக –
“கார்கில்”ராணுவ வீரர்கள் குடியிருப்பு
(மும்பை ஆதர்ஷ் அடுக்கு மாளிகை) ஊழல்,
1,76,000 கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்,
1000 கோடி காமன் வெல்த்
கேம்ஸ் (CWG) ஊழல் –
இவ்வளவு நடந்தும்,
இரண்டு கேபினட் மந்திரிகள் ஜெயிலுக்குப்
போயும் –
மற்றொரு மந்திரி ராஜினாமா செய்தும் –
எதைப்பற்றியும் வாயே திறந்ததில்லை இது வரை.
அண்ணா உண்ணாவிரதம் ஆரம்பித்து
11 நாளாயிற்று –
ஆள் இருந்த இடமே தெரியவில்லை.
ராம் லீலா மைதானத்தில் கோஷம்
எழுப்புகிறார்கள் 4 நாட்களாக
( Desh ki yuvatha
yahan hai – rahul gandhi
kahan hai ?)- “இந்த நாட்டின்
இளைஞர்கள் எல்லாரும் இங்கே
இருக்கிறார்கள் –
ராகுல் காந்தி எங்கே போனார் ?” என்று.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் மகனே –
கருத்து ஏதும் ஏன் சொல்லவில்லை என்று
பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்கள்
வினவியதற்கு –
கொடுத்தார் பாருங்கள் ஒரு சூப்பர் பதில்.
” I think – Before I speak” –
அதாவது பேசுவதற்கு முன்னால் இவர்
யோசிப்பாராம். அதாவது மற்ற
அத்தனை பேரும் யோசிக்காமலே
பேசுபவர்கள் என்று கூறுகிறார் !
கொள்ளுத் தாத்தா – 17 வருடம்
பாட்டி – 17 வருடம்
அப்பா – 5 வருடம்
அம்மா – கடந்த 7 வருடமாக
ஆட்சி புரிந்தது பத்தாதாம். அடுத்து இவர்
ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டிற்கு
விமோசனம் வருமாம்.
லோக்பால் சட்டம் வராமல் –
அண்ணா ஹஜாரே சாப்பிட மாட்டார்.
இவர்கள் சட்டம் கொண்டு வரட்டும்
என்று தொடர்ந்து பட்டினி கிடந்தால் –
அண்ணா செத்துப் போய் விடுவார்.
அண்ணாவை காப்பாற்ற
வேறு வழி இல்லை.
கடைசியாகக் கேட்கிறோம் –
சொல்லுங்கள் –
கொடுத்துத் தொலைகிறோம்.
எவ்வளவு கொடுத்தால் லோக்பால்
சட்டம் கொண்டு வருவீர்கள் ?
They need no more money, they have enough by robbing our nation. Now they need a secure future live, so they like to have power to protect them.
சரியான பதிலடி. ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமாம்.
கடைசியாகக் கேட்கிறோம் –
சொல்லுங்கள் –
கொடுத்துத் தொலைகிறோம்.
எவ்வளவு கொடுத்தால் லோக்பால்
சட்டம் கொண்டு வருவீர்கள் ?
அப்படியெல்லாம் சொல்லாதீங்க. குடுத்தா வாங்கி
சுவிஸ் வங்கியில் போட்டு வச்சிக்குவாங்க.