இத்தனைக்கும் காரணம் சோனியா
காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம்
அன்னா ஹஜாரே ஆதரவாளர்களின்
போராட்டம் இவ்வளவு தீவிரம் ஆனதற்கும்,
மத்திய அரசு இக்கட்டான சூழ்நிலையில்
தவிப்பதற்கும் காரணம் –
தங்களுக்கு வழிகாட்டவும்,
உத்திரவு இடவும் காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி இல்லாமல் போனதே
என்றும், அவர் இல்லாமல்
தாங்கள் எல்லாரும் தவிப்பதாகவும் மத்திய
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்
இன்று ஒரு
தொலைக்காட்சி பேட்டியில்
கூறி இருக்கிறார் !
மத்திய அரசில் எந்தப் பதவியிலும்
இல்லாத ஒருவர் தான்
மத்திய அரசையே ஆட்டிப்படைக்கிறார்
என்பதை சட்ட அமைச்சரே இவ்வளவு
வெளிப்படையாக கூறும் அளவில்
அமைந்திருக்கிறது மத்திய அரசும்,
காங்கிரஸ் கட்சியும்.
பிரதமர் மன்மோகன் சிங்கை விடுங்கள்.
அவர் நிலைமை அனைவரும் அறிந்ததே !
பழம் தின்று கொட்டையும் போட்ட மூத்த
தலைவர்கள் பிரனாப் முகர்ஜி, ப.சி.
ஏகே அந்தோனி என்று வரிசையாக உள்ள
அமைச்சர்கள் எல்லாரும் செல்லாக் காசுகள்
தான் என்று ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்திருக்கிறார் சல்மான் குர்ஷித்.
இது எல்லாம் கூட பரவாயில்லை.
பட்டத்து இளவரசர் ராகுல் காந்தியும்
எந்த முடிவும் எடுக்க தகுதி அற்றவர் என்று
ஒப்புக் கொள்வது தான் அற்புதம்.
125 ஆண்டுகள் பழமையான
அகில இந்திய காங்கிரஸ் கட்சி,
கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கும் மேலாக
டெல்லியில் கோலோச்சும் ஒரு கட்சி –
இரண்டாம் நிலையில் ஒரு தலைவர் கூட
இல்லாத இத்தகைய கேவலமான
ஒரு நிலையில் இருப்பதை இவர்கள்
யாரும் ஒரு அவமானமாகவே
நினைக்கவில்லையே !
பரம்பரைத் தலைமையை
அண்டி வாழ வேண்டிய அவசியமும்,
துர்பாக்கியமும்,
காங்கிரஸ்காரர்களுக்கு வேண்டுமானால்
இருக்கலாம்.
120 கோடி மக்களைக் கொண்ட இந்த
இந்தியத்திருநாட்டின் மீது இவர்கள்
அத்தகைய அவசியத்தை சுமத்த
வேண்டியது இல்லையே ?
125 ஆண்டுகளான பழைய ஸ்தாபன காங்கிரஸ் அல்ல இது! ஸ்தாபன காங்கிரசை பிளந்து, இந்திராவால் தொடங்கப்பட்ட இந்திரா காங்கிரஸ்தான் இது. நம் போதாத காலம், பழைய ஸ்தாபன காங்கிரஸ் அழிந்த்துபோனதுதான்.
ம்ம்ம்..மன்மோஹனுக்கு பன்னீர்செல்வத்தைவிட ரோஷமும்,சுயமரியாதையும் அதிகம் இருக்கும் என நினைத்தது என் தவறுதான்