ராகுல் காந்தியும் – புகைப்படம்
சொல்லும் செய்தியும் !
என்ன தான் கவனித்துக்கொண்டே
இருந்தாலும், சில விஷயங்கள்
நம் பார்வையில் படுவதே இல்லை.
சில நாட்களுக்கு முன்னர்,
மஹாராஷ்டிரா மாநிலத்தில்,
புனா அருகே விவசாயிகள் நடத்திய
போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்
சூட்டின் விளைவாக 3 ஆண்களும்,
1 பெண்ணும் இறந்தது செய்திகளில்
வந்தது.
தேவையே இல்லாமல் போலீஸ்
துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும்,
திரும்பி ஓடிக்கொண்டிருந்த
போராட்டக்காரர்கள் மீது முதுகை நோக்கி
குறி பார்த்து போலீசார் சுட்டனர் என்றும் கூறி
அந்த காட்சியை டிவியில் கூட
காட்டினார்கள்.
துப்பாக்கி சூடு நிகழ்ந்து ஒரு வாரம்
ஆகியும் கூட ராகுல் காந்தி அங்கு
வராததை விமரிசித்து, கிண்டல் பண்ணி,
சிவசேனா பத்திரிக்கை “சாம்னா”
ஒரு “காணவில்லை” விளம்பரத்தை
வெளியிட்டது.
இதைப் பொறுக்க முடியாத ராகுல்
சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ரகசிய வருகை
புரிந்திருக்கிறார். அவர் வரவை ஒட்டி,
எதிர்ப்பு கிளம்புமோ என்று அஞ்சி,
கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும்
கொஞ்ச நேரத்திற்கு பாதுகாப்பு காரணம்
கூறி வெளியேற்றப்பட்ட பிறகு,
ராகுல், அங்கே குழுமி இருந்த,
சம்பந்தப்பட்ட குடும்பத்துப் பெண்களை
சந்தித்திருக்கிறார்.
அந்த காட்சியைத் தான் மேலே பார்க்கிறீர்கள்.
ராகுலின் மிக அருகில் அமர்ந்துள்ள
பெண்கள் கூட அவரை கொஞ்சமும் சட்டை
செய்யாமல் பாராமுகமாக இருப்பதை
படம் தெளிவாகக் காட்டுகிறது.
செய்திகளை மறைத்தவர்களுக்கு –
இந்த புகைப்படத்தை மறைக்கத்
தோன்றவில்லையே !