அய்யாவுக்கு நன்றி –
அம்மாவுக்கு வேண்டுகோள் !
இன்றைய தினம் முதல்வர் ஜெ யலலிதா
சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றினை
வெளியிட்டிருக்கிறார்.
புதிய தலைமைச்செயலகத்துக்காக
கட்டப்பட்ட கட்டடத்தில் “ஏ” பிளாக்கில்
டெல்லி (All India Institute of
Medical Science) எய்ம்ஸ்
மருத்துவமனையின் தரத்திற்கு ஈடான
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
ஒன்று அமைக்கப்படும் என்றும்
இன்னும் கட்டுமானப் பணி நிலுவையில்
உள்ள “பி” பிளாக் கட்டடத்தில் மருத்துவக்
கல்லூரி ஒன்று அமைக்கப்படும் என்றும்
– அறிவித்திருக்கிறார்.
மருத்துவ மனை திட்டத்தை அம்மா
செயல்படுத்தினாலும், நியாயமாக,
அவருக்கு “ரெடிமேடாக” ஒரு கட்டிடத்தை
கட்டி வைத்துள்ள கலைஞருக்கு தான்-
அதற்கான முதல் நன்றி போய்ச்சேர வேண்டும் !
வேறு யாரும் சொல்ல வாய்ப்பில்லை !
எனவே நானே சொலி விடுகிறேன் –
– “கலைஞர் அய்யா அவர்களே
நன்றிகள் ஆயிரம் !”
அடுத்து “அம்மா” வுக்கு இரண்டு
வேண்டுகோள்கள் –
1) கலைஞர் உங்களுக்கு உருவாக்கிக்
கொடுத்த இந்த வாய்ப்புக்காகவாவது
நீங்கள் இந்த மருத்துவ மனைக்கு
கலைஞரின் நினைவாக,
அவர் பெயரையே வைக்கலாம் !
2) பிரதமர் மன்மோகன் சிங் திறந்து
வைத்த கட்டிடம் இப்படி மாறிப்போனால்,
கட்டிடத்தை திறந்து வைக்க அவருக்கு
மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பது தான்
நியாயம்.
எனவே புதிய மருத்துவமனை (+ பழைய
கட்டிடத்தை) திறந்து வைக்க அவரையே
அழைக்க வேண்டும்.
(அது வரை அவர் பிரதமராக இருந்தால் !)
இந்தியாவின் top 10 பகல் கனவுகள்..
9 P.கஜேந்திரன் தயாரிப்பில் தமிழில் டைடானிக் திரைப்படம்
8 தி.க.தலைவர் வீரமணி சபரிமலை பயணம்
7 எதிர்கட்சிகளுக்கு மன்மோகன் பதிலடி
6 அரசின் ஆணைக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மறுப்பு
5 கசாப் தூக்குதண்டனை நிறைவேற்றம்.
4 முதல்வர் முன் அமர்ந்திருக்கும் பன்னீர்செல்வம்,
பேசும்போது கையை உயர்த்தினார்.
3 தமிழகத்தில் பா.ம.க ஆட்சி
2 ஒற்றுமையான தமிழக காங்கிரஸ் கட்சி
and the first prize goes to….திரு..காவிரிமைந்தன்….for his கனவு
“புதிய மருத்துவமனைக்கு கருணாநிதி பெயர்..
ஜெயா அறிவிப்பு!”
நன்றி நண்பர் கண்பத் !
இன்னும் ஒரு கனவு குறைகிறதே !
இதை வைத்துக்கொள்ளலாமா – ?
“கலைஞர் – திமுக தலைவர்
பதவியிலிருந்து விலகினார் ”
அது பிடிக்கவில்லை என்றால்
இதை வைத்துக்கொள்ளலாமா – ?
“கலைஞர் அரசியலில்
இருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்தார் ”
– வாழ்த்துக்களுடனும்,
இனிய கனவுகளுடனும் –
காவிரிமைந்தன்
அன்பின் கா..மை.,
இதெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒன்று தேவலோகத்தில் நடப்பதாக அறிகிறேன்!
அங்கு Logistics Head (அழித்தல்-dept) தீவிர சிந்தனையில் இருக்கிறார்!
“ஆச்சு வருடங்கள் பல ஓடிவிட்டன.”அவரை” எப்படியாவது கூடிய விரைவில்(இந்த ஆண்டாவது) இங்கு கூட்டிவந்துவிடவேண்டியதுதான்!!
அப்போ அங்கு வரும் Mr.சிவன் CEO (அழித்தல்-dept) புன்னகையுடன் தன் sub-ordinate ஐ பார்த்துகேட்கிறார்..
“என்ன எமதர்மா என்ன பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறாய்?”