அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!

அழகிரியையும், அவரது மனைவியையும்
கைது செய்யத் தடை கோரி
கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!

ஒரு அதிசயமான வழக்கு சென்னை
உயர்நீதிமன்றத்தின்  மதுரை கிளை முன்பு
வந்துள்ளது.

திரு அழகிரி, அவரது மனைவி
காந்தி அழகிரி  மற்றும் மகன் தயாநிதி
அழகிரி ஆகியோரை கைது செய்வதை
தடை செய்து மதுரை காவல்
அதிகாரிகளுக்கு (டிஜிபி, கமிஷனர்,
மற்றும் சூப்பிரென்டென்ட்டெண்ட்
ஆப் போலீஸ், மதுரை)

உத்திரவு பிறப்பிக்கக் கோரி
தயா சைபர் பார்க்கின் சார்பாக ஒரு
ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தயா சைபர் பார்க்கிற்கான நிலத்தை
2010ஆம் ஆண்டு
லாட்டரி அதிபர் மார்ட்டினிடமிருந்து
சட்டபூர்வமாகவே தங்கள் நிறுவனம்
வாங்கியதாகவும் ஆனால் தங்கள்
நிறுவனத்தின் டைரெக்டர்களான
எம்.கே.அழகிரி,
அவரது மனைவி
மற்றும் மகனை –

நில அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டி
கைது செய்ய காவல் துறை
சதி செய்வதாகவும், நீதிமன்றம் இதில்
தலையிட்டு  கைதிற்கு எதிராக
தடை உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என்றும்
தயா சைபர் பார்க் ஒரு ரிட்  மனுவை
நேற்று மதியம் தாக்கல் செய்துள்ளது.

இதில்  அதிசயம் என்ன என்கிறீர்களா ?

இரண்டு அதிசயங்கள் –

1) சாதாரணமாக முன் ஜாமீன் கோரி
சம்பந்தப்பட்ட நபர் தான்-அவரது வழக்குரைஞர்
மூலம் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு
தாக்கல் செய்வது மரபு.

ஒரு கம்பெனி – தனது டைரெக்டர்களை
கைது செய்வதை தடை செய்ய வேண்டும்
என்று கோரி ரிட் மனு தாக்கல்  செய்வது
அதிசயமே !அந்த மனுவும் நீதிமன்றத்தால்
ஏற்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
விளக்கம் கேட்கப்பட்டுள்ளது !

2) இவ்வளவு பரபரப்பான ஒரு விஷயம்
நேற்றைய  தினம் மதியம் நடந்தும் –

இன்றைய தமிழ் செய்தித்தாள்கள்
எதிலும்  இந்த செய்தி
வெளி வராதது அதிசயமாக இல்லை ?
ஏன் அப்படி ?
இந்த செய்தி வெளியாகாமல் இருக்க
யாராவது விசேஷ முயற்சி எடுத்துக்
கொண்டார்களா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!

 1. krishnamoorthy சொல்கிறார்:

  இன்றைக்குத்தான் அந்த மனு டிஸ்போஸ் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இயக்குனர்கள் கைதுசெய்யப்படலாம் என்று அச்சமிருந்தால் மனுதாரர்கள், டிஜிபியிடம் மனுக் கொடுக்கலாம் என்று நீதிபதிதிரு சுதாகர் சொல்லியிருக்கிறார். அரசுத்தரப்பில் அப்படி, கைது செய்யும் உத்தேசம் இருப்பதாகத் தகவல் சொல்லப்படவில்லை.

  தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்கள் திமுகழகத்திடம், பலமுறை சூடுபட்டவை! தவிர, இந்த மனுவில் பரபரப்புச் செய்தி எதுவுமில்லையே என்று கூட விட்டிருக்கலாம்!

 2. thumbi சொல்கிறார்:

  Please give ur e-mail address. Someone has sent by e-mail, one list of Indians with accounts in Swiss banks; it includes M.K.Stalin et al. Maybe u will find it useful

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Dear friend thumbi,

  I also saw the message being mentioned by you..
  The message is fake and not the real one.

  I checked up with wikileaks official website –
  They have officially denied this message.

  Anyway – thank you for the interest/initiative
  taken by you.

  with all best wishes,
  kavirimainthan

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  sorry – forgotten

  my email id is kavirimainthan@gmail.com

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.