சபாஷ் கிழவா !!!

சபாஷ்  கிழவா !!!

இந்தக் கிழவரின் மனோ உறுதியை
எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள்.
கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப்
பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது.
டெல்லி தெருக்களில் அலை மோதும்
மக்கள் கூட்டம் இரவு ஆகியும்
வீடு திரும்புவதாக இல்லை.
டெல்லியில் மட்டுமில்லை –
நாடெங்கும் எதிர்ப்பு அலை.

கிழவரை விடுவிக்கா விட்டால் நிலைமை
முற்றி விடும் என்று தோன்றவே
விட்டு விடலாம் என்ற முடிவிற்கு
வந்தார்கள்இந்த முடிவையும் பட்டத்து
இளவரசருக்கு சாதகமாக ஆக்கிக்
கொள்ளப்பார்த்தார்கள். இளவரசர்
பிரதமருக்கு ஆலோசனை சொன்னதன்
பேரில் விடுவிப்பதாகச் சொன்னார்கள்.
இளவரசரின் பெருந்தன்மை என்று
அவர்களே பாராட்டிக் கொண்டார்கள்.

கூடவே குள்ள நரித்தனமும் வெளி வந்தது.
விமானம் தயாரான செய்தி வந்தது.
கிழவரை விடுதலை செய்து, நேராக
விமானத்தில் ஏற்றி, மராட்டிய மாநிலத்தில்
உள்ள அவரது கிராமத்தில் கொண்டு போய்
விட்டு விடத் தீர்மானித்தார்கள்.
போராட்டம் பிசுபிசுத்து விடும் என்று
மீண்டும் தப்புக் கணக்கு.
மீண்டும் மீண்டும் தப்புக் கணக்கு !!

மகாஆஆஆஆஆ   மகாஆஆஆஆ
சாமர்த்தியசாலிக் கிழவர்.
சிறையை விட்டு வெளியே செல்ல
மறுத்தார்.

மீண்டும் நான் அதே ஜேபி பார்க்கில்
எந்த வித கட்டுப்பாடும் இன்றி
உண்ணாவிரதம் இருக்கலாம் என்று
அரசு எழுதிக் கொடுத்தால் அன்றி,

மீண்டும் என்னை அங்கேயே
கொண்டு விடுவதாக இருந்தாலன்றி
நான் சிறையை விட்டு வெளியேற
மாட்டேன் என்று கூறி விட்டார்.

பாவம் காங்கிரஸ் கட்சி -அரசு…
கள் குடித்த குரங்கை –
தேளும் கொட்டி விட்டால்
என்ன செய்யும் ?

நள்ளிரவு தாண்டி விட்டது.
கிழவருக்கு திகார் –
ஜெயிலில் அல்ல –
அலுவலகத்தில் -ஒரு ரூம் கொடுத்து
விட்டார்கள்.
திகார் ஜெயிலில் ரூம் போட்ட முதல் ஆள்
இந்தக் கிழவர் தான் …
பலே  கிழவா பலே !!

(காலையில் குரங்கு –
புது வேகத்துடன் தாக்கக் கூடும் …
பார்ப்போம் ….)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to சபாஷ் கிழவா !!!

 1. Ganpat சொல்கிறார்:

  அனைத்தையும் மனதில் கொள்வோம்..
  அதிகபட்சம்
  மே 2014 வரை மறக்காமல் இருப்போம்!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கண்பத்,

   மே 2014 வரை காங்கிரஸ் அரசு
   தாங்கும் என்று நினைக்கிறீர்களா ?

   எனக்கு இந்தி தெரியும்.
   அன்னாவின் பேச்சுக்கள் புரிகின்றன.
   அவர் வார்த்தையில் சத்தியம்
   தெரிகிறது.அவருக்கு அரசியல்
   அபிலாஷைகள் இல்லை.
   பதவி அணுகுமுறையும் இல்லை.

   இந்தி மண்டலத்தில் கொந்தளிப்பு
   நிலவுகிறது.

   கபில் சிபல் கம்பெனிகள் இனி
   பொது மேடைகளில் எறுவதே சிரமம்.

   பார்ப்போம்.

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    நண்பரே,
    //மே 2014 வரை காங்கிரஸ் அரசு
    தாங்கும் என்று நினைக்கிறீர்களா ?//
    என் பின்னூட்டத்தில் “அதிகபட்சம்” என்ற சொல்லைப்பார்த்துவிட்டும் உங்களுக்கு என் இந்த ஐயம்?
    என் விருப்பம்: இந்த ஆட்சி 17 / 8 / 11 மதியம் 1 .30 வரைகூட நீடிக்கக் கூடாது

 2. yatrigan சொல்கிறார்:

  கிழவர் பிரமாதம் தான்.

  தமிழ் நாட்டில் இவர் புகழ் இன்னும்
  பரவவில்லை.

  காரணம் – மொழி தான்.
  இவருக்கு மராட்டியும், இந்தியும் தவிர
  வேறு எந்த மொழிகளும் தெரியவில்லை.

  அவர் பேச்சு நம் மக்களுக்குப்
  புரியவில்லை.
  மொழி புரியாவிட்டால் என்ன மக்களே
  ஆளைத்தான் புரிந்து கொண்டு விட்டோமே.

  அது போதுமே.
  சேர்ந்து கொள்ள வேண்டியது தான்.

  வாழ்க கிழவர் அன்னா !!

  • Ganpat சொல்கிறார்:

   மொழியாவது ஒன்றாவது..
   உண்மை என்னவென்றால் பொதுவாக தமிழர்கள் இம்மாதிரியான போராட்டங்களிலெல்லாம் அவ்வளவு அக்கறை
   காண்பிப்பது கிடையாது.எமெர்ஜென்சி போது இந்திராவை ஆதரித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.இதற்கு முக்கிய காரணம் 45 ஆண்டு கால கழக ஆட்சி..குறிப்பாக மு.க எனும் கபடரின் ஆட்சி!

 3. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அன்பர்களே ………….
  “கிழவர்”
  என்ற சொல்லை
  தவிர்க்கலாமே….
  படித்தவர்கள் கூட
  மரியாதை இல்லாமல் ………
  உங்களுக்கும்
  ஊழல் வாதிகளுக்கும்
  என்ன வித்தியாசம் ?
  விமர்சனங்களையும்
  கருத்துகளையும்
  எடுத்து வையுங்கள்
  தரமான வார்த்தைகளை
  உபயோகபடுத்துங்கள் ….
  வரவேற்கிறோம் .!
  தரமற்ற விமர்சனம்
  உங்களையே தரம் தாழ்த்தி விடும் ……..

  thanks & blessings all of u
  rajasekhar.p

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராஜசேகர்,

   ஆச்சரியமாக இருக்கிறது.
   எப்படி நீங்கள் இவ்வாறு
   மேலோட்டமாக எழுதுகிறீர்கள் ?

   பாராட்டுதலுடன் எழுதிய ஒரு
   இடுகையை, திட்டுவதாக
   உங்களால் எப்படி நினைத்துக் கொள்ள
   முடிந்தது.

   என் கட்டுரையை முழுவதுமாகப்
   படித்த யாருக்கும் இந்த
   வார்த்தைப் பிரயோகம் தவறாகத்
   தோன்ற வாய்ப்பே இல்லையே !

   நண்பர் கண்பத் மிகச்சரியாகச் சொன்னார்.
   அன்பும் – அன்யோன்யமும் என்று.

   அன்னா ஹஜாரே என்னும்
   அற்புதமான மனிதரை நன்றாகப்
   புரிந்து கொண்டதால் தானே இந்த
   இடுகையையே எழுதினேன்.

   இந்த கண்ணோட்டத்துடன்
   தயவுசெய்து இடுகையை மீண்டும்
   ஒரு முறை படித்துப் பாருங்கள்.
   நீங்கள் தவறாக உணர மாட்டீர்கள்.

   நண்பர் கண்பத் – மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • RAJASEKHAR.P சொல்கிறார்:

    நன்றி ….
    கா.மை சார் ,
    உங்களை
    நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை
    உங்கள்
    இடுக்கையை தொடந்து படிக்கிறேன் …..
    நீங்கள்
    எடுத்து வைக்கும் வாதங்களை
    நான்
    குறை சொல்லவில்லை
    விமர்சனங்களையும்
    கருத்துகளையும்
    எடுத்து வையுங்கள்
    “”தரமான வார்த்தைகளை
    உபயோகபடுத்துங்கள் “”…..

    thanks & blessings all of u
    rajasekhar.p

 4. Ganpat சொல்கிறார்:

  அன்புள்ள ராஜசேகர்,
  கிழவர் எனும் வார்த்தை பிரயோகம்,மேலெழுந்த வாரியாக நோக்கும்போது ஒரு மாதிரியாக இருந்தாலும்,சற்று உள்வாங்கினால் அதில் உள்ள அன்பும் அன்யோன்யமும் தெரியும்.குழந்தையை “நாய்குட்டி” எனக்கொஞ்சுவதைப்போல!
  எனவே மரியாதையை விட அன்பைக்காண்பிக்க ஏதுவாக கா.மை.இந்த சொல்லாட்சியை உபயோகப்படுத்தியிருக்கலாம் என்பது என் யூகம்.
  நிற்க! தன் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்திற்கு மட்டும் தொண்டு செய்தே தொண்டுக்கிழம் ஆகிவிட்ட ஒருவரை எப்படி அழைப்பது?
  எந்த குற்றசாட்டிற்கும் பதில் சொல்லாமல் அமுக்கமாக பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு கிழவரை என்ன சொல்லி அழைப்பது?
  நன்றி!

  • RAJASEKHAR.P சொல்கிறார்:

   நன்றி அன்பரே ….
   எந்தகுழந்தையையும்
   “செல்லகுட்டி”
   “கன்னுக்குட்டி”
   “பொன்னுகுட்டி”
   அப்படி கொஞ்சுவாங்களே தவிர
   “””””நாயகுட்டின்னு “””””கொஞ்சமாட்டங்க
   தவிர என் மறுமொழியை நன்றாக படியுங்கள் ….
   தரமான வார்த்தைகளை
   உபயோகபடுத்துங்கள் ….
   வரவேற்கிறோம் .!

   thanks & blessings all of u
   rajasekhar.p

 5. ரிஷி சொல்கிறார்:

  வினவின் பதிவை வாசித்தீர்களா?
  http://www.vinavu.com/2011/08/17/lokapal-v2/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் ரிஷி,

   அது ஒரு கட்சியின் சார்பாக
   வெளியிடப்படும் பதிவு.
   அதில் வெளிவரும் கட்டுரைகள்
   கட்சி சார்புள்ளதாகத் தானே
   இருக்க முடியும் ?

   இது அவர்களின் பார்வை
   என்பதை விட
   வேறென்ன கூற முடியும்
   தோழரே !

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. siva.saravanakumar சொல்கிறார்:

  vande matharam…..

 7. Warrant Balaw - Law Researcher, Writer, Critic சொல்கிறார்:

  உலகின் மாபெரும் குடியரசு நாடான இந்திய நாடாளுமன்றத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி வைத்து, தன் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வைத்த ஒரே இந்தியன் தாத்தா, உண்ணா ஹசாரேதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.