கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!

கொள்ளை அடித்தவரும்
புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் !
நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!

டெல்லி திகார் சிறையில் –
சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது
பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும்
இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் !

ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால்
இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி
சிம்பாலிக்காக  சொல்கிறது போலும் !

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில்
பேசும்போது சிங் சொல்கிறார் –
“பலமான லோக்பால் மசாதாவை உருவாக்க
அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.
ஊழலை ஒழிக்க இந்த மசோதா பயன் தரும்.
உண்ணாவிரதமோ, போராட்டமோ வலுவான
லோக்பால் மசோதாவை உருவாக்க முடியாது.”

இந்த ஆளுக்கு வெட்கம், மானம், சூடு,
சொரணை – எதுவுமே இருக்காதா ?

ஒரு சுதந்திரமான நாடு என்று
சொல்லிக்கொள்ளும்
இந்தியாவிற்கு மிக மிக மோசமான
ஒரு தலைமை  கிடைத்திருப்பது
நம் எல்லாருக்குமே ஒரு
மகா வெட்கக்கேடு.உலகில் எந்த
ஜனநாயக நாட்டிற்கும் இவ்வளவு கேவலமான
ஒரு பிரதமர் கிடைத்திருக்க மாட்டார்.
ஒரு வகையில் – மன்னிக்கவும் –
ஒரு வகையில் என்ன
இதற்கு  முழுக்காரணமும் நாம் தானே ?

புத்திசாலிகளாக இருப்பது என்பது வேறு –
இது அதல்ல –
ஆங்கிலத்தில் க்ரூக் என்று சொல்கிறோமே
அதற்கு பொருத்தமான தமிழ்ச் சொல் ?

மத்திய அமைச்சர்கள் – கபில் சிபல்,
சல்மான் குர்ஷித், பிரனாப் முகர்ஜி,
கடைசியாக ப.சி., பட்டத்து இளவரசரின்
அரசியல் குரு திக் விஜய் சிங் –
எல்லாரும் வரிசையாக ஒரு விஷயத்தை
திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள் –

“லோக்பால் மசோதா இப்போது
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டாகி
விட்டது. இனி இது பாரளுமன்றத்தின்
சொத்து. நாங்கள் எதுவும் செய்ய
முடியாது.  இதை ஏற்றுக்கொள்வதோ,
நிராகரிப்பதோ பாராளுமன்றத்தின் பொறுப்பு.
பாராளுமன்ற நிலைக்குழுவின்
(ஸ்டாண்டிங் கமிட்டி) பரிசீலனையில்
மசோதா இருக்கிறது.

எதிர்ப்பு தெரிவிக்கவோ, கருத்து சொல்லவோ
விரும்புபவர்கள் அங்கே சென்று தங்கள்
கருத்துக்களை சொல்வதை விட்டு –
தெருவில் இறங்கி போராடுவதும்,
உண்ணாவிரதம் இருப்பதும் அயோக்கியத்தனம்.
பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும்
உரிமையை தெருவில் போகிறவர்கள்
எல்லாம் பறித்துக்கொள்ள முடியாது.”

இவர்கள் முன் ஒரு முக்கியமான
வாதம் வைக்கப்பட வேண்டி இருக்கிறது.

நிலைக்குழுவில் (ஸ்டாண்டிங் கமிட்டி)
பெரும்பான்மை வகிப்பது காங்கிரஸ் கட்சி.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிப்பது
காங்கிரஸ் கூட்டணி –

இந்த நிலையில் எவ்வளவு முறையிட்டாலும்,
நிலைக்குழுவோ, பாராளுமன்றமோ,
காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பத்திற்கு
எதிராக தீர்மானம் இயற்ற எப்படி இசையும் ?
அவர்களிடம் முறையிடுவதாலோ,
விவாதம் செய்வதாலோ என்ன பலன்
இருக்க முடியும் ?

லோக்பால் கூட்டுக்குழுவின்  விவாதங்களுக்கு
பிறகு அமைச்சரவை எடுத்த முடிவு தானே
“ஜோக்”பால் மசோதா ?

மேலும் – அன்னா ஹஜாரே குழுவின்
ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு
வலுவான லோக்பால்
மசோதா நிறைவேறுமானால் – அதனால்
முதலில் பாதிக்கப்படப் போவது இன்றைய
அமைச்சர்களும், பாராளுமன்ற ஆளும் கட்சி
உறுப்பினர்களும் தான். உண்மையான மசோதா
நிறைவேறினால் இப்போதுள்ளவர்களில்
பாதி பேர் கம்பி எண்ண வேண்டி இருக்கும் !

திருட்டுக் கூட்டத்திடம் – திருட்டை ஒழிக்க
ஒரு கடுமையான சட்டம் தயார் பண்ணச்
சொன்னால் எப்படி இருக்கும் ? அது
இப்போது காங்கிரஸ் தயாரித்திருக்கும்
லோக்பால் மசோதாவைப் போல் இருக்கும் !

எனவே தான் – மக்களை  அணுகி,
மக்கள் சக்தியைத் திரட்டி, வலுவான ஒரு
லோக்பால் மசோதாவை கொண்டு வர
அன்னா ஹஜாரேயின்  ஊழல் ஒழிப்பு இயக்கம்
முயல்கிறது.

ஜனநாயகத்தில் – மக்கள் சக்தியைத் திரட்ட
வேண்டுமானால் – தெருவில் இறங்கி
அகிம்சா முறையில் போராடுவதிலும்,
உண்ணாவிரதம் இருப்பதிலும் என்ன தவறு ?
அதைத்தானே அன்னாவும் அவரது வழியில்
செல்பவர்களும் செய்கிறார்கள் ?இதில்
எந்தவிதத்திலாவது  வன்செயல் நிகழ்ந்து
விடாதா என்று காங்கிரஸ் கட்சி தான் காத்துக்
கிடைக்கிறது. அன்னாவின் பாதையில்
போகிறவர்கள் அமைதி வழியில் தான்
போகிறார்கள்.

ஏன் – ராகுல்காந்தி கடந்த மாதம் உத்திரப்
பிரதேசத்தில், பட்டா பர்சுல் கிராமத்தில்
நடந்த விவசாயிகளுடன் சேர்ந்து அரசியல்
பண்ணும்போது, 144 தடை உத்திரவை மீறி
அதிகாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிள்
பின்னால் உட்கார்ந்து கொண்டு
செல்லவில்லையா ? ஊர்வலம்
போகவில்லையா? அங்கே சட்டமீறல்
வரவில்லையா ?

காங்கிரஸ் கட்சியும் சரி, மத்திய அரசும் சரி
தப்புக் கணக்கு போட்டு விட்டது.
74 வயது கிழவருக்கு என்ன பலம் இருக்கப்
போகிறது என்று தவறான கணிப்பு செய்து
விட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு,
மீண்டும் ஒரு மிக மிக மோசமான தோல்வியை
சந்திக்கப் போகிறார்கள்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.