மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக
ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் !
– “இந்து” ராம் சொல்லி விட்டார் !!!
தமிழிலும், ஆங்கிலத்திலும் –
நாம் நிறைய செய்தித் தாள்களைப்
பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள்
எவை – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை
என்பதை செய்திகளுக்கு
கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே
தெரியும் – புரியும்.
நடுநிலை நாளிதழ் என்று சொல்லிக்கொண்டு,
பத்திரிகை தர்மத்தைப் பற்றி அரங்கங்கள்
தோறும் பேசி வரும் “இந்து”
பத்திரிகை அதிபர் ராம் –
ராஜபக்சே என்கிற ராவணனோடு
“புரிந்துணர்வு” ஒப்பந்தம் போட்டுக்கொண்டு
ஈழத்தமிழர்களுக்கு இழைத்த அநீதி
தொடர்ந்து இந்து பத்திரிகையை
படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
அதற்காக அவர் ராஜபக்சேயிடமிருந்து
“பெற்ற பரிசுகளை” பற்றியும் –
ஓரளவு தெரியும்.
(முழுவதும் தெரிந்தவர்கள்
அவர்கள் இருவர் மட்டுமே !)
வெளியில் தன்னை ஒரு இடதுசாரி
அனுதாபியாக காட்டிக்கொண்டிருக்கும்
அவரைப்பற்றி பெரும்பாலோருக்கு
தெரியாத ஒரு விஷயம் – அவருக்கும்
“அன்னை”சோனியாவிற்கும் உள்ள
நெருக்கம். வெளிப்படையாக காட்டிக்
கொண்டால் அது பத்திரிகை விற்பனையை
கடுமையாக பாதிக்கும் என்பதால் –
அவ்வப்போது மறைமுகமாக திணிக்கப்படும்
கட்டுரைகளின் மூலமாகவும், பாஜகவை
கண்டித்து எழுதப்படும் செய்திகளின்
ஊடேயும் – சோனியா காந்திக்கு ஆதரவான
கருத்துக்கள் வெளிவருவதை
கவனித்திருக்கலாம்.
அண்மைக் காலங்களில் மத்திய அரசின்
மீது அலை அலையாகத் தொடர்ந்து
எழுந்து வரும் ஊழல் புகார்களின்
விளைவாகவும், “அன்னை”யின்
உடல்நிலை காரணமாகவும்,
அடுத்த பொது தேர்தல் வரும் வரை
காத்திராமல் மன்மோகன் சிங்கை
அகற்றி விட்டு – உடனடியாக
இளவரசர் ராகுல் காந்திக்கு “பட்டம்”
கட்ட டெல்லியில் தீவிர முயற்சிகள்
நடக்கின்றன.
அதற்கு துணையாக, இந்து பத்திரிகை
அதிபரின் முயற்சியில் ஒரு மகத்தான
“காட்சி உருவாக்கம்” (scenario )
“கருத்து கணிப்பு” என்கிற பெயரில்
துவங்கப்பட்டு இருக்கிறது.
இன்றைய “இந்து” நாளிதழில்
ஒரு முழு பக்க “கருத்து கணிப்பு செய்தி” –
(அதை செய்தி என்று கூறுவது
வடிகட்டிய அயோக்கியத்தனம் -)
அதில் தலைப்பு –
“உடனடியாக பிரதமராக ராகுல் காந்தி
வர வேண்டும்” என்று பெரும்பாலான
மக்கள் விரும்புகிறார்கள் !
அவர்கள் கொடுத்திருக்கும் புள்ளி
விவரங்களிலிருந்தே – சில பகுதிகளை
மட்டும் கீழே தொடுத்துக்
கொடுத்திருக்கிறேன்.
இது எத்தனை அயோக்கியத்தனமான
கருத்துக் கணிப்பு முடிவு என்பதை
முடிவு செய்யும் பொறுப்பை
இந்த இடுகையை படிப்பவர்களிடமே
விட்டு விடுகிறேன்.
அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி -இந்தியாவின்
மக்கள் தொகை – சுமார் 120 கோடி.
கருத்து கணிப்பு நடத்தப்பட்டது –
இவர்களே தேர்ந்தெடுத்த –
19 மாநிலங்களில் உள்ள –
325 சட்ட சபை தொகுதிகளில் –
(பாராளுமன்ற தொகுதிகள் அல்ல )
வசிக்கும் 39,000 நபர்களிடம்.
அதில் இந்த தலைப்பைப் பற்றி
கருத்து கூறியவர்கள் 20,268 பேர்
மட்டுமே !
அதில் மன்மோகன் சிங் உடனடியாக
அகற்றப்பட வேண்டும் என்று கூறி
இருப்பவர்கள் 33 %
(அதாவது சுமார் 6666 பேர் ) !
ராகுல் காந்தி உடனடியாக
பிரதமர் பதவிக்கு வர வேண்டும்
என்று கூறி இருப்பவர்கள் -34 %
(அதாவது சுமார் 6868 பேர் ) !
இவர்களே தேர்ந்தெடுத்த மக்களிலேயே –
64 % பேர் ராகுலுக்கு எதிராக
வாக்களித்திருக்கிறார்கள் ( ஆனால் –
அது பல்வேறு தலைவர்களிடையே
பிரிந்து சென்றுள்ளது )
120 கோடி மக்களிடையே –
இவர்களே தேர்ந்தெடுத்த 20,268
நபர்களில், 6868 பேர் மட்டுமே
ராகுல் காந்தி பிரதமர் ஆகலாம்
என்று வாக்களித்திருக்கும் நிலையில் –
ஏதோ ராகுல் காந்தி உடனடியாக
பிரதமர் ஆக வேண்டும் என்று
இந்தியா முழுவதும் பெருத்த
ஆதரவு அலை பொங்கி எழுந்திருப்பது
போல் ஒரு சீன் உருவாக்கி
முழுப்பக்க செய்தி போட்டு இருக்கிறாரே –
இவருக்கு என்ன சொல்லலாம் ?
நாம் சொல்வது அய்யா ராம் அவர்களே
சம்பாதிப்பது தான் உங்கள்
குறிக்கோள் என்றால் அதற்கு
இதை விட அதிகம் பலன் தரக்கூடிய
“வேறு”
தொழில்கள் இருக்கின்றனவே –
அதைச் செய்யலாம் !
இல்லை – நேரடியாக காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்து நாடு முழுவதும் பட்டத்து
இளவரசருக்கு ஆதரவாக பிரச்சாரம்
செய்யலாம்.
“இமேஜ்” போய் விடுமே என்கிற பயமா ?
இல்லை பத்திரிகை விற்பனை பாதாளத்திற்குப்
போய் விடுமே என்கிற உதறலா ?
ஒரு நாட்டின்,
மக்களின்,
சமுதாயத்தின் –
எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டிய
பத்திரிக்கை தொழிலை ஏன் இப்படி இழிவு
படுத்துகிறீர்கள் ?
பின் குறிப்பு –
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது –
“கருத்து கணிப்பு” என்கிற பெயரில் –
இவர்கள் ” கருத்து உருவாக்கம்” செய்ய
முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு
ஒரு செய்தியை போடுவதன் மூலம் –
படிப்பவர் மனதில் ராகுல் காந்திக்கு
ஏதோ ஒரு பெருத்த ஆதரவு அலை
உருவாகி இருப்பது போன்ற
ஒரு மாயத்தோற்றத்தை
உண்டு பண்ணுகிறார்கள் – அயோக்கியர்கள் !!!
இப்படி எல்லாம் கூட அரசியலா. இதிலும் கானல்நீர் தோற்றம்தான்.
இத்தனை நாள் முக மூடிக்கு பின் நின்று ஆட்சி செய்வதில் உள்ள சுகம் நேரே ஆட்சி செய்தால் போய் விடும்! அதற்காகவாவது வரட்டும்!
கவலை வேண்டாம். மக்கள் இப்போதெல்லாம் தெளிவாக இருக்கின்றனர். கருத்து கணிப்பையும், திணிப்பையும் பிரித்துப்பார்க்கத் தெரிந்திருக்கின்றனர். வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனக்குத்தானே சங்கு ஊதிக்கொள்ளும்!
மிகவும் பொறுப்புள்ள, தேவையான பதிவு,நன்றி, வாழ்த்துக்கள் காவிரிமைந்தன்!
ராம் எடுத்துக்கொண்டதிலிருந்து ஹிந்து சீரழிந்து விட்டது.
அவர் ஒரு போலி.தன மதத்தை, இனத்தை வெறுக்கும் ஒரு போலி.நீங்கள் சொன்னது போல 70 கோடி வாக்காளர்கள் இருக்கும் ஒரு நாட்டிலே 20 ஆயிரம் பேர் கருத்துக்களை வெளியிடுவது பெரிய விஷமத்தனம்.இதை பொருட்படுத்தாவிட்டாலும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது!
அதை செவ்வனே செய்துள்ள உங்களுக்கு என் நன்றி
pl.do it POONOOL:life long poonool used to BROKERAGE for British:now for itali drama troup!
ஜோக்கை படித்தால் சிரித்துவிட்டு போய்விட வேண்டும்.
அதை அறுத்து ஆராய்ச்சி செய்தால் இது போல கட்டுரை தான் போடத் தோன்றும்.
மக்களை கேனையர்கள் என்று நினைத்த எந்த ஊடகமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.