சென்னையில் அண்ணா ஹஜாரே !

சென்னையில் அண்ணா ஹஜாரே  !

ஊழலை எதிர்க்கும் இந்தியா
(India Against Corruption)
அமைப்பின் சென்னை பிரிவால் –

இன்று (சனிக்கிழமை – 06/08/2011)
மாலை 5 மணி முதல் 6.30 வரை
சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு பேரணி
நடத்தப்பட்டது –

மத்திய அரசின் போலி லோக்பாலை
எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின்
“ஜன் லோக் பால்” மாதிரி
சட்ட வரைவை ஆதரித்தும் !

பேரணி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
கல்லூரி மாணவர்கள் -இளைஞர்கள்,
நடுவயதினர்,
பெண்கள்,
மூத்த குடிமக்கள்,
என்று பல்வேறு  தரப்பினரும்
ஆர்வமுடன் பங்கு கொண்டனர்.
இரண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளும்
கலந்து கொண்டனர்.

பேரணியை எந்த திரைப்பட நடிகையும்
துவக்கி வைக்கவில்லை.
எந்தவொரு அரசியல் கட்சித்தலைவரும்
கலந்து கொள்ளவில்லை -அழைப்பும்
விடவில்லை !

இந்த பின்னணியை கருத்தில்கொண்டு
பார்க்கும்போது ஓரளவு நல்ல கூட்டம் என்றே
சொல்ல வேண்டும்.

இந்த மக்கள் எந்த ஒரு அரசியல்
கட்சியையும் சேராதவர்கள்.

இவர்களிடையே –
கோபத்தைப் பார்க்க முடிகிறது.
வேகத்தைப் பார்க்க முடிகிறது.
விவேகத்தை பார்க்க முடிகிறது.

சென்னையைப் பொறுத்த வரை இது ஒரு
துவக்கம் தான். இனி இது எப்படி வடிவும்,
வேகமும் கொண்டு முன் செல்லப் போகிறது
என்பதைப் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும்
என்று மனதார விரும்புகிறேன்.

காந்தி சிலை எதிரில் ஆரம்பித்த பேரணி –
இறுதியில் மீண்டும் காந்தி சிலை எதிரிலேயே
வந்து முடிவுற்றது. இறுதியில் காந்திஜியின்
காலடியில் ஒரு கோரிக்கை மனுவும்
வைக்கப்பட்டது.(மனு படிக்க சுவையாக
இருக்கிறது – கீழே புகைப்படமாக
தந்திருக்கிறேன்).

இந்தப் பேரணியில் நான் எடுத்த சில
புகைப்படங்கள் கீழே –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திமிரி எழு, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சென்னையில் அண்ணா ஹஜாரே !

 1. Ganpat சொல்கிறார்:

  காவிரி மைந்தன் அவர்களே!

  பதிவிற்கு நன்றி.

  கூட்டத்தினர் தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என சொன்னார்களா?

  ஊழலின் மொத்த உருவான சன் டிவி,கலைஞர் டிவி குழும அலைவரிசைகளை நாங்கள் இனி பார்க்கமாட்டோம் என உறுதி எடுத்துக்கொண்டார்களா?

  சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்களை பார்க்க மாட்டோம் என உறுதி எடுத்துக்கொண்டார்களா?

  எந்த வேலைக்கும் கையூட்டு தர மாட்டோம் என உறுதி எடுத்துக்கொண்டார்களா?

  தவறாமல் ஒட்டு போடுவோம் என உறுதி எடுத்துக்கொண்டார்களா?

  அடுத்த தேர்தலுக்குள் எங்கள் இயக்கத்தை பலப்படுத்தி ஒன்றுபடுத்தி,இந்திய ரீதியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிடுவோம் என உறுதி எடுத்துக்கொண்டார்களா?

  அ ல் ல து

  மேற்கண்ட எதுவும் வேண்டாம்; நாங்கள் ஒவ்வொரு அக்டோபர் 2 ந்தேதியும் (மழை இல்லாவிட்டால்)இங்கு கூடி எங்கள் மனுவை தேசப்பிதாவின் காலடியில் வைத்து வணங்கி
  பிராத்தனை செய்து கலைவோம் என உறுதி எடுத்துக்கொண்டார்களா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பரே,

   என்ன இவ்வளவு வேகமாகப்
   போகிறீர்கள் ?

   உங்கள் வேகத்திற்கு எல்லாரும்
   கூட ஓடி வர முடியுமா கண்பத் ?

   ஏதோ இந்த அளவிற்காவது
   நடக்கிறதே (நடக்கிறார்களே ?)
   என்று நான் மகிழ்ச்சி
   அடைகிறேன்.

   அந்த மகிழ்ச்சியையும் நீங்கள் கெடுப்பது
   நியாயமா ?

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 2. Ganpat சொல்கிறார்:

  இன்று ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பு என் கருத்துக்களை உறுதி செய்கிறது.இன்னும் நம் நாட்டில் ராகு காந்தியே பிரதமராக வரவேண்டும் என விரும்புவர்கள் எண்ணிக்கை இருப்பதிலேயே மிக அதிகம்.அதேபோல சோனியா வரவேண்டும் என விரும்புவர்கள் எண்ணிக்கை அத்வானியோ,மோடியோ வரவேண்டும் என விரும்புவர்களை விட அதிகம்.இம்மாதிரியான ஒரு மக்களை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது.இந்த கருத்துகணிப்பு உண்மையோ பொய்யோ சொல்ல முடியாது. ஆனால் இவ்வளவு நிகழ்வுக்கு பிறகும் ஒரு பாரம்பரியம் மிக்க தேசீய நாளிதழ் இதை வெளியிட்டுள்ளது மிக அதிர்ச்சியைத்தருகிறது.ஒன்று நிச்சயம்;நம் நாட்டில் ஊழல நேரடியாக சிலரையும் மறைமுகமாக பலரையும் “வாழ” வைத்துக்கொண்டிருப்பது நிதர்சனம் !!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் கண்பத்,

   எல்லாம் மாயை !!!
   காற்றில் கரையப் போகும் தோற்றங்கள் !
   யாரும் நம்ப வேண்டாம். !

   இது பற்றி இன்று ஒரு இடுகை போட்டிருக்கிறேன்.
   பார்க்கவும்.

   – ( உங்களது இந்த மறுமொழியை பார்க்கும் முன்னரே
   அதை எழுதி விட்டேன்.)

   .
   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.