சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …

சோனியா / ராகுல்  –
ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில்
நிலம் அபகரிப்பு !
உயர்நீதி மன்றம் கண்டனம் …

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில்,
விவசாயிகளிடமிருந்து
சட்டவிதிகளுக்குப் புறம்பாக,
விதிகளை வளைத்துப் போட்டு
நிலம் வாங்கியது குறித்து
திங்கட்கிழமை அன்று
பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம்
கடும் கண்டனம்
தெரிவித்திருக்கிறது –

இந்திரா காந்தியின் பெயரில் ஒரு
கண் மருத்துவமனை கட்டுவதற்காக என்று
சொல்லி, டெல்லி – குர்காவ்
அருகே –உலாவாஸ் என்கிற கிராமத்தில்
8 ஏக்கர் நிலத்தை ஹரியானா அரசு
கையகப்படுத்தி, ராஜீவ் காந்தி
அறக்கட்டளைக்கு கொடுத்திருக்கிறது.

நிலத்தை பறி கொடுத்த விவசாயிகளும்
மற்றும் சிலரும் – பஞ்சாப் & ஹரியானா
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
தங்கள் விருப்பத்திற்கு மாறாக,
பயமுறுத்தி தங்களில் சிலரிடம் கையெழுத்து
வாங்கப்பட்டது என்றும் அவர்கள் புகார்
கொடுத்துள்ளனர்.

விஷயம் விபரீதமாவதை தடுக்க ஹரியானா
(காங்கிரஸ்) அரசு, விவசாயிகளிடம்
சமரசம் பேச ஏதுவாக வழக்கை திரும்பப்பெற
வைக்க முயன்றது.

ஆனால் இதற்கு ஒத்துக்க்கொள்ளாத உயர்நீதி
மன்ற நீதிபதிகள் கூறிய கருத்து –

“கையும் களவுமாக பிடிபடும்போது,
வழக்கை திரும்பப்பெற வைக்க முயற்சி
மேற்கொள்ளப்படுவதை நாங்கள் அனுமதிக்க
முடியாது. சாதாரண பொது மக்களுக்கு
அநீதி இழைக்கப்படுவதை எங்களால்
பொறுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய
நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும்.
இதன் பின்னணியில் நடந்தவை
அனைத்தையும் நாங்கள் (கோர்ட்) அறிய
விரும்புகிறோம். எனவே அத்தனை
தகவல்களும்
இந்த கோர்ட் முன்பு வைக்கப்பட வேண்டும் “

இது சம்பந்தமாக செய்தியாளர்கள்
ராஜீவ் காந்தி அறக்கட்டளையை தொடர்பு
கொண்டு கேட்டபோது, அதன்
சார்பில் பேசிய அதன் நிர்வாக அதிகாரி
டாக்டர் ஒயெஸ்பி  தொராட் என்பவர் –

“நிலம் கையகப்படுத்த சட்டப்படியே
நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில் எந்த
விதிமீறலும் இல்லை. சம்பந்தப்பட்ட
கிராம பஞ்சாயத்திடம் அறக்கட்டளை
நேரடியாக தொடர்பு கொண்டு, நிலங்களை
33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு
பெற்றுள்ளது” என்று விளக்கி இருக்கிறார்.

ஆனால் சம்பந்தப்பட்ட விவசாயிகளோ –
“கிராம பஞ்சாயத்து சார்பாக
எந்தவிதமான கூட்டங்களும்
கூட்டப்படவில்லை. யாரையும்
கலந்து ஆலோசிக்கவும் இல்லை.
உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள்
சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்-
கையெழுத்து போடாவிட்டால்
விபரீதங்களை எதிர்கொள்ள நேரிடும்”என்று
பயமுறுத்தி எங்களிடம் கையெழுத்து
வாங்கினார்கள் என்று கோர்ட்டில் மனு
கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு விஷயம் நம் மர மண்டைக்கு விளங்க
மாட்டேன் என்கிறது.
கட்டப்போவதோ கோடிக்கணக்கான ரூபாய்
செலவழித்து – இந்திரா காந்தி பெயரில்
மிகப்பெரிய கண் மருத்துவ மனை.

ஆனால் நிலம் கையகப்படுத்தப்படுவது
33 ஆண்டு காலத்திற்கான குத்தகைக்கு
(lease !) தான்.

ஆமாம் – குத்தகைக்கு தான் !

அப்படியானால் 33 ஆண்டுகளுக்குப் பிறகு
மருத்துவ மனை என்ன ஆகும் ?
இடித்து விடுவார்களா ?

இல்லை என்றால் – நிலத்தை எப்படி
திரும்பக் கொடுப்பார்கள் ?

யாரைக் கேட்டால் இதற்கு பதில்
கொடுப்பார்கள் ?

1)சோனியா காந்தி
2)ப்ரியங்கா காந்தி
3)ராகுல் காந்தி  – ?

பின் குறிப்பு –

ராஜீவ் காந்தி சாரிடபுள் ட்ரஸ்ட் என்கிற
பெயரில் உள்ள தொண்டு நிறுவனம்
2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட இந்த ட்ரஸ்டின்
தலைவர் – சோனியா காந்தி அம்மையார்.
உறுப்பினர்கள் – ராகுல் காந்தியும்,
ப்ரியங்காவும் ( மட்டுமே )

இதன் நோக்கம் –  ராஜீவ் காந்தியின்
இதயத்திற்கு மிகவும் பிடித்தமான
விஷயங்களை கவனிப்பது.
( to address areas of concern
that were closest to Rajiv
Gandhi’s heart.)

–  சரி  தான் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …

 1. bandhu சொல்கிறார்:

  இந்த அறக்கட்டளையின் சொத்து மதிப்பு பல வருடங்களுக்கு முன்னேயே ஆயிரம் கோடிக்கு மேல்! இப்போது சொத்து மதிப்பை வெளியிட மறுக்கிறார்கள். இவர்கள் தான், ராம்தேவின் அறக்கட்டளைக்கு சொத்து மதிப்பு காண்பிக்க சொல்பவர்கள்!

 2. ramanans சொல்கிறார்:

  //அப்படியானால் 33 ஆண்டுகளுக்குப் பிறகு
  மருத்துவ மனை என்ன ஆகும் ?
  இடித்து விடுவார்களா ?//

  இல்லை. மீண்டும் சில வருடங்களுக்குக் குத்தகைக்கு எடுப்பார்கள். கால நேரங்கள் சரியாக இருந்தால் அதை தங்கள் உரிமைச் சொத்தாக ஆக்கிக் கொள்வார்கள். இதைச் சொல்கிறீர்களே, தமிழகத்தில் இதுமாதிரி பல ’பெரிய ஆட்களுக்கு’ 99 வருட குத்தகைக்குப் பல அரசு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள் தானே!?

  99 வருடத்திற்குப் பிறகு…??

  உழுதவனுக்கு நிலம் சொந்தம் என்பது போல, இத்தனை வருடம் நாங்கள் இந்த நிலத்தைப் பராமரித்தோம், எங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை ஆக்கிக் கொண்டு விடுவார்கள்.

  அரசியலில் அதுவும் இந்திய/தமிழக அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. 😦

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக ரமணன்,

   நீங்கள் சொல்வதும் சரி தான்.

   நேற்று காங்கிரஸ் – அபிஷெக் சிங்க்வி
   மிகத்தீவிரமாக வாதாடினார்.

   “சட்ட விதி மீறல் குற்றச்சாட்டுகள்
   எல்லாம் நிலம் கையகப்படுத்தினால் –
   அதாவது விலைக்கு வாங்கினால் தான் –
   தான் பொருந்தும்.

   இது வெறும் லீஸ் – குத்தகை – தான்.
   எனவே ஒரு விதிமீறலும் இல்லை !
   (இது குறித்து விதிகள் என்று எதாவது
   இருந்தால் தானே மீறல் பற்றி கேள்வி
   எழும் ? )
   அப்பப்பா – எஜமானிக்காக எவ்வளவு
   திறமையாக வாதாடுகிறார்கள் !

   நேற்று டெல்லி செய்திகளில்
   இது பற்றிய தகவல்களைப் பார்த்தவுடன்
   நம் தமிழ் தொலைக்காட்சிகள் எதுவுமே
   இதைப்பற்றி ஏன் போடவில்லை என்ற
   கேள்வியுடனேயே –

   மேற்கொண்டு பல விவரங்களை
   சேகரித்துக்கொண்டு இந்த இடுகையை
   நேற்றிரவு பதிவேற்றினேன்.

   அதிசயிக்கும் வண்ணம் நேற்றிரவு
   12 மணிக்கு மேல் சன் செய்திகளில்
   இதைப்பற்றி ரொம்ம்ம்ம்ம்ப விவரமாக
   காண்பித்தார்கள் – டெல்லியை விட
   அதிக தகவல்களுடன் !

   சுற்றிலும் பாதுகாப்புத் தகடுகள்
   அமைக்கப்பட்ட அந்த இடத்தை வீடியோ
   எடுத்து காட்டினார்கள்.
   8 ஏக்கர் என்றார்கள் – அடேயப்பா –
   எவ்வளவு பெரிய இடம் !
   அதுவும் டெல்லியிலிருந்து அதிக
   தூரமில்லை !

   தயாநிதியை கைவிட்டதற்கு –
   கைம்மாறு போலும் – ராஜீவ் அறக்கட்டளை
   ஊழல் பற்றிய மிக மிக விவரமான செய்தி
   சன் செய்திகளில் !!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. RAJASEKHAR.P சொல்கிறார்:

  யாழ்ப்பாண இராசதானியை
  ஆட்சி செய்த இலங்கையின் கடைசித்
  தமிழ் மன்னனான சங்கிலி மன்னனின்
  உயிரோவியமான உருவச்சிலை
  இன்று புதன்கிழமை காலை யாழ்.,
  முத்திரைச்சந்தியில் திறந்துவைக்கப்பட்டது.
  இந்நிலையில்,
  புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள
  சங்கிலி மன்னனின் உருவச்சிலையையும்,
  நிகழ்வில் கலந்துகொண்ட அகதிகளையும்
  படங்களில் காணலாம்.
  இந்த செய்தி 04/08/2011
  இன்றைய தினத்தந்தியில்
  சிலைக்கு அவமதிப்பு என்ற பெயரில்
  செய்தி வெளியாகி உள்ளது …..
  தொடர்புக்கு…..
  http://www.tamilmirror.lk/2009-08-26-06-32-39/25751-2011-08-03-05-48-17.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.