அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ……

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ….

உண்ணாவிரதம் இருந்த அண்ணா
ஹஜாரேக்கு ஆதரவாக கிளம்பிய
ஆவேச அலையைப்
பார்த்து பயந்து நடுங்கிய சோனியா
உத்தமர் போல் –

“அடடா இதுக்கு போய் உண்ணாவிரதம்
ஏன் ? வாங்க கலந்து பேசலாம் “-

என்று அழைத்து, அண்ணாவின்
உண்ணாவிரதத்தை முறித்து,
மக்களிடையே கிளம்பி இருந்த உத்வேகத்தை
நீர்த்துப் போகச் செய்தார்.

பேச்சு வார்த்தை நடத்துவது போல்
போக்கு காட்டி, சிவில் சொஸைடி
உறுப்பினர்கள்
ஒவ்வொருவரையும் திட்டமிட்டு
இயன்ற விதங்களில் எல்லாம்
அவமானப்படுத்தினார்கள்.
ஏளனம் செய்தார்கள்.

வீரப்ப மொய்லி ஒரு பக்கம்.
கபில் சிபல் இன்னொரு பக்கம்.
பிரனாப் முகர்ஜி ஒரு பக்கம்.
சிவகங்கைச் சிங்கம் இன்னொரு பக்கம்.

“சட்டம் இயற்றுவது அரசாங்கத்தின் வேலை.
பாராளுமன்றத்தின் வேலை.
ஏதோ போகிறவர்கள் -வருகிறவர்கள்
சொல்வது போல் எல்லாம் சட்டம்
இயற்ற முடியுமா என்ன ?

சட்டம் இயற்ற ஆசை இருந்தால்
தேர்தலில் நின்று பாராளுமன்றத்தின்
உள்ளே  வந்து முயன்று
பாருங்கள். அரசியல் சட்டத்தின்
அடிப்படையே தெரியாமல் பேசாதீர்கள் !”

– இப்போது இவ்வளவு சட்டம்
பேசும் இவர்கள் –
அப்போது ஏன் கூப்பிட வேண்டும்
பேச்சு வார்த்தைக்கு ?

அப்பப்பா – எவ்வளவு ஏளனங்கள்.
எல்லாரையும் ஏவி விட்டு “அன்னை”
மௌனமாக வேடிக்கை பார்த்தார்.

இறுதியாக இப்போது –
தங்கள் எண்ணப்படியே
பேருக்கு ஒரு மசோதாவை
அறிமுகப்படுத்துகிறார்கள்.

கடுமையான ஒரு சட்டம் கொண்டு
வரப்படுவதாக இவ்வளவு நாட்கள்
“ஷோ” காட்டிவிட்டு,
ஒன்றுக்கும் உதவாத ஒரு உதவாக்கரை
மசோதாவை
கொண்டு வந்திருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் எப்படியும் அடித்துக்
கொள்வார்கள் – இந்த மசோதாவும்
நிறைவேறாது என்பதை உறுதி செய்து
கொண்ட பிறகு தான் கொண்டு இதுவே
கொண்டு வரப்படுகிறது.

அடிப்படையே  தகர்ந்து விட்டது.
சுயேச்சையான லோக்பால் என்பதே இதில்
அடிபட்டு விட்டது.

லோக்பால் உறுப்பினர்களை ஆளும்கட்சியே
நியமிக்கப்போகிறது (பிரதமர்
தலைமையிலான குழு !)

மொத்தம் 9 பேரில்,5 பேர் ஆளும்கட்சி
தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள்.
பிறகு அதில் சுயேச்சைத் தன்மை
எப்படி வரும் ?
அவர்கள் சிவிஜி தாமஸின்
அண்ணனாகவோ,
தம்பியாகவோ தானே இருப்பார்கள் !

கால வரையறை 7 ஆண்டுகளாம்.

ஒரு ஆண்டுக்குள் ஆதாரங்களைத் திரட்டி,
வழக்கைப் பதிவு செய்து,
அடுத்த ஒரு ஆண்டுக்குள்
(ஆக மொத்தம் 2 ஆண்டுகளுக்குள்)
வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு
வழங்கப்பட வேண்டும்.

ஊழல் வழக்குகள், விரைவாக முடிக்கப்பட
வேண்டும் என்பது தான் அண்ணா
குழுவினரின் அடிப்படையே.
இதுவும் காற்றில் போய் விட்டது.
2 ஆண்டுகள் எங்கே – 7 ஆண்டுகள் எங்கே ?

எல்லா வழக்குகளும் போபர்ஸ்
போன வழியிலேயே போக வேண்டியது தான்.

வழக்கை நடத்தி தீர்ப்பு சொல்லத்தான்
அதிகாரம் இல்லை என்றால் –

வழக்கு தொடரும் அதிகாரமே லோக்பாலுக்கு
இல்லையாம். விசாரித்து விட்டு அறிக்கை
சமர்ப்பிப்பதுடன் அதன் வேலை முடிகிறது !
வழக்கமான  விசாரணை கமிஷன்கள் போல.

பிரதமரை விசாரிக்க முடியாதாம்.
ஊழலின் ஊற்றுக்கண்ணை  கண்டறியாமல்,
விசாரணை எப்படி நடத்துவது ?

மத்தியில் பிரதமர் லோக்பால் வரம்பிற்குள்
இல்லை என்றால் –
மாநிலங்களில்  முதல் அமைச்சரும்
வரம்பிற்குள்  வர மாட்டார்.

பிறகு லோக்பால் எதற்கு ?
கார்பரேஷன் கவுன்சிலர்களை விசாரிக்கவா ?

கடந்த 42 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட
8 மசோதாக்களின் கதியையே  தான்
இதுவும் அடையப்போகிறது என்பது
உறுதியாகி விட்டது.

ஏமாற்றி உண்ணாவிரதத்தை நிறுத்தியதன்
மூலமும்,
இப்படி ஒரு போலி சட்ட மசோதாவை
கொண்டு வந்ததன் மூலமும்,
மக்களின் ஆவேசத்தை நீர்த்துப்போகச் செய்து
விட்டோம் என்று சோனியா காந்தியும்
அவரைச் சுற்றியுள்ள கூட்டமும்
கணக்கு போடுகிறார்கள்.

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு
தான் இருக்கிறார்கள்.

மக்களுக்கு எல்லாம் புரிகிறது –
முன்பெல்லாம் நம்மால் என்ன
ஆகப் போகிறது என்று இருந்தார்கள்.

ஆனால் – காலம் முன்பு போல இல்லை.
ஒரு சிறு பொறி போதும்.
24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள்
மூலம் தீயை விட வேகமாக செய்தி பரவுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் கூட புரட்சி
வெடிப்பதைக் கண்டு –
என்று கிளம்பும் பொறி இந்த நாட்டில் –
ஊழலை வேரோடு அழித்துக் கொளுத்துவோம்
என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்  மக்கள்.

இந்த நாட்டு மக்களையும்,
இந்த நாட்டின் வளங்களையும், சுரண்டி,
கொள்ளை அடித்து அடங்காப்பிடாரிகளாக
ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த
அரசியல்வாதிகள் ஆடிக்காற்றில் பறக்கும்
பஞ்சுப் பொதியைப் போல் அடித்துச்
செல்லப்படும் நாட்கள் தொலைவில் இல்லை.

நல்ல ஒரு முடிவு பிறக்க – இவர்களே
அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மடத்தனம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ……

 1. barathiyinkannamma@gmail.com சொல்கிறார்:

  கபில் சிபல்,
  வீரப்ப மொய்லி,
  பிரனாப் முகர்ஜி,
  ப.சிதம்பரம்,
  எல்லாருக்கும் மேலாக
  இந்த கூட்டத்தின் தலைவர் சோனியா –
  இவர்கள் எல்லாரும் அடுத்த தேர்தலில்
  எப்படி ஜெயித்து
  எப்படி பாராளுமன்றத்திற்கு
  போகப்போகிறார்கள் பார்ப்போமே.

 2. ramanans சொல்கிறார்:

  ஹா.. ஹா… ஹா.. பாரதியின் கண்ணம்மா!

  நாங்க ஜெயிக்கிறோமோ இல்லையோ ‘அவங்கள’ வர விட மாட்டோம். அதுதானே எங்க லட்சியம். அவங்களால வர முடியலைன்னா கடைசில நாங்க கீ கொடுக்குற பொம்மை தானா வந்திரும். நாங்க சொன்ன படி ஆடும். பாவம், உங்களை மாதிரி ஆளுங்க ஏமாறப் போறாங்க.

  இந்தியாவை ஒருவழி பண்ணாம விட மாட்டோம்.

  “பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் ; இனி பணம் பண்ணுவார், தினம் பகை எண்ணுவார்”

  லட்சியத்தை நோக்கி..

  மேற்படி உருப்படிகள் 😉

 3. Ganpat சொல்கிறார்:

  திரு.காவிரிமைந்தன்:
  நண்பரே உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது..
  ஆனால் நம்மை இப்பொழுது ஆள்வது டச்சு காரர்களோ,பிரெஞ்ச்காரர்களோ ஆங்கிலேயர்களோ அல்லர்.
  நம்மை நாமே ஆண்டு, சீரழிந்துகொண்டு இருக்கிறோம்.
  இந்நிலை மாற பற்பல ஆண்டுகள் ஆகும்.இதெல்லாம் தெரிந்துதான் நம் அரசியல்வாதிகள் கொட்டம் அடிக்கிறார்கள்.
  இவ்வளவு சொல்கிறோமே! இந்த காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்திலேயே பா.ஜ க பெற்ற அளவிற்கு(15) கிட்டத்தட்ட சமமான MP seat களை(11) கடந்த தேர்தலில் பெற்றுள்ளது.இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
  இந்த ஊழல் போராட்டத்தைப்பொருத்தவரை இப்போதானே சிப்பாய் கலகமே துவங்கி உள்ளது!!!
  இனிமேல் காந்தி பிறந்து அவருக்கு 75 வயது ஆகி….
  ம்ஹூம் ம்ம்ம்

  பி.கு:

  இவ்வளவு எதற்கு?

  இவ்வளவு சமூக அக்கறை கொண்ட நேர்மையான பதிவுகளுக்கு ஒரு நான்கு பேர் கூட பின்னூட்டம் இடுவதில்லை!
  ஆனால் காக்கை வளர்ப்பதைப்பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கு 50 பேர் பின்னூட்டம் இடுகிறார்கள்.

  போராட்டம் என்பது ஒரு வகை தியாகம்..
  தினம் ஒரு குவளை கஞ்சி மட்டும் குடிக்கும் இந்தியர்களே அதை(க்கூட) தியாகம் செய்ய தயாராக இல்லை.
  வலைதளத்திற்கு வரும் இந்தியர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுபவர்கள்.இவர்களா தியாகம் செய்வார்கள்?

  சோனியாவிற்கு மகாத்மா பாட்டனார் என்று நம்பிக்கொண்டு ஒரு 40 கோடி பேர் வாழும் நாடு இது!

  முடிந்தால் பா.ஜ.க, நடிகை காந்திமதியை தன கட்சியில் சேர்த்துக்கொண்டு,மதியை மறைத்து,சோனியாவிற்கு எதிராக களத்தில் இறக்கலாம்.இப்போதைக்கு அதுதான் முடியும்.

 4. Viswa சொல்கிறார்:

  காவிரி மைந்தன் அவர்களே

  அண்ணா ஹசாரேக்கு சட்டம் இயற்ற அறிவுரை கூற உரிமையில்லை என்று சொல்லும் அதே காங்கிரஸ் எந்த அடிப்படையில் சோனியா தலைமையிலான என் ஏ சி பரிந்துரைக்கும் மத வன்முறை சட்டத்தை அமுல் படுத்த முயல்கிறது? அவளுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவள் மந்திரி அல்லவே? அவளது குழுவில் இருப்போர் பாராளுமன்ற உறுப்பினர் கிடையாதே? நாடு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது, முழுக்க போண்டியாவதற்கு முன்பு இந்த இத்தாலிக்காரியை நாட்டை விட்டே துரத்த வேண்டும். அதற்கு முன்பாக இந்தக் கொள்ளைக்காரி கொள்ளையடித்த சொத்துக்களைப் பிடுங்க வேண்டும். இன்னமும் இவளுக்கு ஆதரவு கொடுக்கும் கேவலமான பிறவிகள் நம்மில் இருக்கும் வரை இந்தியாவை எவராலும் காப்பாற்றவே முடியாது

 5. Ganpat சொல்கிறார்:

  Viswa ji,

  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்கள் சுமார் 70 கோடி பேர்.இதில் 30 கோடி பேர் வாக்களிக்க வரவில்லை.
  மீதி இருந்த 40 கோடி பேரில் சுமார் 12 கோடி பேர் எங்களை இத்தாலிக்காரி தான் ஆளவேண்டும் என வாக்களித்துள்ளனர்.
  இதற்கு அடுத்தபடியாக 8 கோடி பேர் அத்வானி தலைமைக்கு வாக்களித்துள்ளனர்.

  நம் அரசாணை,இ.பி.கோ, தேர்தல் முறை இவைகள் உளுத்துப்போனவை.ஒசாமா பின் லேடன் கூட நமக்கு பிரதம
  மந்திரியாக வரலாம்!
  என்ன செய்யப்போகிறோம்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர்களே,

   120 கோடி இந்தியர்களில் –
   வெறும் 12 கோடி பேர் தான் இவருக்கு
   ஓட்டளித்திருக்கிறார்கள் என்பதே –

   மிகப்பெரிய ஆறுதலாக இல்லை ?

   காலம் மாறும் – மாற்றுவோம் !
   நம்பிக்கையோடு முயற்சி செய்வோம் !

   – வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 6. Ganpat சொல்கிறார்:

  அன்பின் கா.மை.
  வெறும் பிரச்சினையை விளக்கிகொண்டிருக்க சோ ராமசாமி மட்டுமே போதுமே!அவர் கடந்த 40 ஆண்டுகளாக துக்ளக் பத்திரிக்கையில் எழுதாததா?
  தீர்வு என்ன என ஆராய்வதே நம் வேலை.ஜனநாயக நாடான இந்தியாவில் புரட்சி வரவேண்டும் என சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது.முதலில் 40 சதவீத மக்கள் ஓட்டுப்போட வரவேண்டும்.அதுவே பெரிய புரட்சி!
  சுதந்திரம் பெற்று இந்த 65 ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன?
  இவர் ஊழல பேர்வழி ,இவர் கொள்ளைக்காரர்,இவர் வெளிநாட்டவர்,இவர் தேசபக்தியற்றவர் என பலரை அடையாளம் தெரிந்ததுதான் .யாரேனும் ஒருவரை காண்பித்து இவர் நல்லவர் இவரை ஓட்டுப்போட்டு தலைவராக்குங்கள் நாட்டிற்கு நல்லது என நம்மால் சொல்ல முடியுமா?
  இருக்கும் 30 மாநிலங்களில் ஒன்று கூட சரியில்லை.
  எங்கும் சுயநலம் ஊழல் திருட்டு கொள்ளை
  என்ன ஆயிற்று நமக்கு?
  தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள்,ஒரு களத்தில் இந்தியாவிற்கே உதாரணமான மாகாணமாக இருந்த இதை குட்டிசுவராக்கினோம்.
  பெரியார் எனும் ஒரு துவேஷ விற்பனையாளரிடம் துவேஷம் எனும் விதை வாங்கி பயிரிட்டு அதற்கு அண்ணா,கருணா ஜெயா,ராமதாஸ்,திருமா போன்ற தோட்டக்காரர்களை நியமித்து பயிர் வளர்த்தோம். இன்று துவேஷம் ஒரு பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.கடவுளை ஒழிப்போம்.பார்பனர்களை ஒழிப்போம்,வடக்கத்திகாரர்களை ஒழிப்போம்,ஹிந்தியை ஒழிப்போம்,என்று மக்களை மூளைசலவை செய்து அழித்தது,நேர்மை,கலாச்சாரம்,பண்பாடு,பாரம்பரியம் ஆகியவை.வளர்த்தது தோட்டகாரர்கள்,அவர்கள் குடும்பம்,ஊழல,கொலை கொள்ளை,ஆகியவை.
  எரிகின்ற வீட்டில் அனைவரும் திருடிக்கொண்டிருக்கின்றனர்.
  கருணா குடும்பத்தினர் காளஹஸ்தி கோவிலுக்கும்,சங்கராச்சாரியார்கள் புதுச்சேரி நீதிமன்றத்திற்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள்!
  எங்கே இவர்களை கூட்டிக்கொண்டால் மேல்லோகத்திலும் வந்து குழப்பி துன்பம் விளவிப்பார்களோ என இறைவனே பயந்து எண்பதுகளிலும்,தொண்ணூறு களிலும் ஆரோக்கியத்துடன் விட்டுவைக்கப்பட்டு, நம் கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கும் நல்ல ஜென்மங்கள்!!!
  இவ்வளவு இன்னலிலும் ,நான் இத்தனை டைப் செய்யும் வரை மின்சாரமோ,வலை இணைப்போ தடைபடாமல் இருந்ததே என மகிழும் அளவிற்கு தள்ளப்பட்ட ஒரு சாதாரண இந்தியன்!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   OM SHANTHI

   OM SHANTHI

   OM SHANTHIHI

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Ganpat சொல்கிறார்:

  நேர்மை,விவேகம்,அன்பு,மனமுதிர்ச்சி,மற்றும் தெய்வநம்பிக்கை சரியான விகிதத்தில் கலந்துள்ள
  ஒரு தூய உள்ளத்திலிருந்துதான் இம்மாதிரியான பதில்
  (Om Shanthi…)வரமுடியும் காவிரி மைந்தன் அவர்களே!
  நன்றி வணக்கம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.