செத்துப்போனவர் கையெழுத்தை
போட்டவன், அடுத்தவர் சொத்தை
அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப்
பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி,
பொம்பளை பொறுக்கி,
கொலைகாரன், தீ வைத்து எரித்து
அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….
அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும்
அநியாயமாகப் பழி வாங்குகிறது
அம்மையாரின் அரசு.
இத்தனை நல்லவரை,
எம் உடன்பிறப்புகளை சிறையில்
தள்ளி வதைக்கிறது இந்த அரசு.
இந்த அநியாயத்தை,
அதர்மத்தை,
அக்கிரமத்தை,
தட்டிக் கேட்க வேண்டாமா ?
இந்த அக்கிரமக்கார அரசை எடுத்து
போராட முன் வாருங்கள் ..
மகத்தான அர(!)ப் போர் !
ஆகஸ்டு 1ந் தேதி.
பொறுத்தது போதும் –
பொங்கி எழுந்து வாருங்கள் !
பொது மக்களே உங்களைத் தான்
அழைக்கிறேன் –
தட்டாமல் வாருங்கள் –
தவறாமல் வாருங்கள்.
உங்கள் –
பாசக்கார மு.க.
பி.கு. அழைப்பு கழகத்தவருக்கு தான்
என்றிருந்து விடாதீர்கள்.
உடன்பிறப்புக்கள் யாரும் அன்று
தப்பித் தவறிக்கூட
எட்டிப் பார்க்க மாட்டார்கள்.
கண்ணில் பட்டால் அவர்களையும்
உள்ளே போட்டு விடுவார்கள்
என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன ?
என் உடன் பிறப்புக்களாயிற்றே !!
பி.கு.2
என்னை எப்படியும் நீங்களே
எதிர்பார்க்க மாட்டீர்கள் என்பதும்
எனக்குத் தெரியும் !!
எனவே அந்தக் கவலை எனக்கில்லை !
ம்ஹும்!!நான் நம்பமாட்டேன்! இது எங்க தலிவர் எழுதிய கடிதமே இல்லை! போலி!
நூறு சொற்களுக்கு ஒரு முறையாவது
ஆரியன்,திராவிடன்;
சூத்திரன்,பார்ப்பனன்
என்ற சொற்களை
போடவேண்டும் எனும்
நவீன இலக்கணம்
வகுத்தவராயிற்றே
எம் தொல்காப்பியர்.
அவை இந்த கடிதத்தில்
எங்கும் இல்லையே
//தட்டிக் கேட்க வேண்டாமா?//
தட்டிக் கேட்டிட வேண்டாமா ? என்றிருக்கவேண்டும்
வாருங்கள் என்ற வார்த்தையே அறியாதவர் என் தலிவர்
வந்திடுங்கள் என்பதே அவர் மொழி
முக்கியமாக பி.கு 3 தேவை:
என் குடும்பத்தினரையும் எதிர்பார்க்காதீர்கள்!
தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்து அடி “வாங்கி” காரியத்தை முடிக்க நீங்கள்!
வீடு,அலுவலகங்களில் நுழைந்து அடி “கொடுத்து”
காரியத்தை முடிக்க உடன்பிறப்புகள்!!
மேற்கண்ட இரண்டினால் வரும் நற்பயன்களை அனுபவிக்க என் குடும்பத்தினர் !!!
என்ற கொள்கையுடன் தானே நான் கடந்த 40 ஆண்டுகள் கச்சி நடத்துகிறேன்!
ம்ஹும்!!நான் நம்பமாட்டேன்! இது எங்க தலிவர் எழுதிய கடிதமே இல்லை! போலி!
(எங்க தலிவர் போல)
நண்பர் கண்பத்,
இதையே அவர் காணக்கூடிய அளவில்,
பத்திரிகைகளில் எதிலாவது நீங்கள்
எழுதி இருந்தால் –
இந்நேரம் உங்களுக்கு
“பூணூல் கல்யாணம்”
நடத்தி முடித்திருப்பார்.
இங்கு எழுதியதால் அந்த “இலவச”
வாய்ப்பை இழந்து விட்டீர்கள் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அன்பு நண்பரே,
வாய் விட்டு சிரிக்க வைத்ததிற்கு நன்றிகள் கோடி..
கழுத்தில் மாட்டி தொங்கவிட வேண்டும் என்ற அளவிற்கு ஒருவர் மீது கோபம வந்து அது இயலாதபோதேல்லாம்(!)
அந்த நபரின் தோளில் மாட்டி அழகு பார்ப்பவரன்றோ எங்க தலிவர்!
யாருக்கு இத்தனை அடுக்குமொழிகளாலும், தகுதிவிகிதிகளாலும் அர்ச்சனை என்று பார்த்தால் அத்தனையும் எங்களுக்கேயென்று சொல்லாமல் சொல்வதைக்
கேட்கும்போது சிரிப்பு மட்டும்தானா வரும். சினமும்தான் வரும்.,