எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல –
நம் பிரச்சினை –
இந்த நாட்டு மக்களின் பிரச்சினை !
எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும்
இந்த கொள்ளைக்காரர்களை ..

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ?

ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில்,
ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி
ஆற்றின் கரைகளில் –
கொட்டிக் கிடக்கிறது இயற்கை இந்த நாட்டு
மக்களுக்கு அளித்துள்ள அள்ள அள்ள குறையாத
கனிம வளங்கள் / எண்ணை, இயற்கை
எரிவாயு சுரங்கங்கள்.

இவை நமக்கு வெளியே தெரியும் செல்வங்கள்.
இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள்
புதைந்து கிடக்கும் இயற்கைச் செல்வங்கள்
எத்தனை எத்தனையோ !

இந்த நாட்டின் மக்களின் வாழ்க்கைத்தரத்தை
உயர்த்துவதில்,
அவர்களின் நலன்களைப் பேணுவதில்,
உண்மையான அக்கரை உள்ள அரசாங்கங்கள்
நமக்கு அமையாதது தான் நம் சாபக்கேடு.

மக்கள்  நலனில் உண்மையான அக்கரை
கொண்ட தலைவர்கள் நம்மிடையே
எத்தனை பேர் இருக்கிறார்கள் ?
விரல் விட்டு எண்ணி விடலாம்.

நல்ல தலைவர்கள் உருவாகாததற்கு நாமும்
தானே ஒரு வகையில் காரணம்  ?

அயோக்கியர்களை அடித்து விரட்டினால்
தானே  நல்லவர்கள் தலையெடுக்க முடியும் ?

காசு பணம் இல்லாத ஒருவன்,
அடி ஆள் பலம் இல்லாத ஒருவன்,
ஜாதிக் கூட்டம் பின்னால் இல்லாத
ஒருவனை வழிகாட்டியாக,தலைவனாக
ஏற்றுக் கொள்கிறதா நம் சமூகம் ?
பிறகு நம்மிடையே நல்ல தலைவர்கள்
எப்படி உருவாக முடியும் ?

நீதிபதி சந்தோஷ் ஹெக்டெ தனது விசாரணை
அறிக்கையை கொடுத்து விட்டார்.

2006 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான
நான்கு ஆண்டு காலத்தில் மட்டும் இந்த
நாட்டின் வளத்தை சுரண்டிய வகையில் நாம்
இழந்தது 16,000 கோடி ரூபாய்.
( பதினாறு ஆயிரம் கோடி)

100 சுரங்க கம்பெனிகள், அனுமதி பெறாத
வகையில் – சட்ட விரோதமாக,
இரும்புத்தாதுவை தோண்டி எடுத்து கணக்கில்
வராத வகையில் விற்ற வகையில்
இந்த நாடு இழந்திருக்கும் தொகை இது.

இந்த சுரண்டல், இந்த கொள்ளை, நடைபெற
துணை போனவர்கள், இப்போதைய
எடியூரப்பா, முன்னாள் குமாரசுவாமி,மற்றும்
அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள்,
ஒரு காங்கிரஸ்  எம்பி மற்றும்
சுமார் 600 அரசு அதிகாரிகள் !

தமிழில் கெட்ட வார்த்தை சொல்ல
மனம் வரவில்லை எனக்கு.
ஆங்கிலத்தில் திட்டுவது சுலபம் -Bastards !

இவர்கள் கொள்ளை அடித்தது கர்னாடகாவின்
சொத்தை அல்ல. இந்த நாட்டு மக்கள்
அனைவருக்கும் சொந்தமான செல்வத்தை-
இயற்கை வளத்தை.

இதற்கு பிரதியாக எடியூரப்பா பெற்றிருப்பது –

ஒரு சுரங்க கம்பெனி முதலாளியிடமிருந்து
இவர் மகன் நடத்தும் அமைப்பிற்கு
– 10 கோடி ரூபாய் தானமாக.

இவர் மகனின் 1.40 கோடி ரூபாய்
பெறுமானமுள்ள ஒரு சொத்துக்கு
20 கோடி ரூபாய் விலையாக.

(இப்போதைக்கு வெளிவந்திருக்கும்
விவரம்  இது –இன்னும் எத்தனையோ ?)

சரி -கர்னாடகத்தின்  லோக் ஆயுக்தாவான
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி
சந்தோஷ் ஹெக்டே தனது அறிக்கையை
ஆதாரங்களுடன் கொடுத்துள்ளார்.

இதற்கு பிறகு என்ன நடக்கும் என்று
நினைக்கிறீர்கள் ?

அதிக பட்சம் – பாஜக  மேலிடம் தன்
மானம், மரியாதையை காப்பாற்றிக் கொள்ள
முதலமைச்சரை மாற்றும்.

விஷயம்  முதல் அமைச்சரை மாற்றுவதோடு
முடிந்து விடலாமா ?

சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும்
கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அவர்களது
சொத்துக்கள் முடக்கப்பட்டு,அத்தனையும்
நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு
வரப்பட வேண்டும்.

விரைவு நீதிமன்றத்தில் வழக்குகள்
பதியப்பட வேண்டும். 6 மாதங்களில்
ஆதாரங்கள் திரட்டப்பட்டு,
ஒரு வருடத்துக்குள்  விசாரணை முடிந்து,
தீர்ப்பு கூறப்பட வேண்டும்.அவர்கள்
சொத்துக்களை விற்று 16,000 கோடி
ரூபாயை வசூல் பண்ண வேண்டும்.

நடக்குமா ?

இன்றைய சூழ்நிலையில் –
இது எதுவுமே  நடக்காது. அனைத்து
அரசியல் கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டு
இருக்கின்றன. எனவே – ஆட்சியை
மாற்றுவதை தவிர, மீண்டும் தேர்தலை
நடத்தி ஆட்சியை கைப்பற்றுவதைத் தவிர,
வேறு எதிலும் இவர்கள்
யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

இந்த நிலை மாற – மக்கள் அனைவரும்
ஒன்று திரண்டால் தான் முடியும்.
துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று
விலகிப் போகும் நிலை போய் –

அவர்கள் முகத்தில் காரி உமிழும் நிலை
வர வேண்டும்.
மீண்டும் ஓட்டு கேட்டுக்கொண்டு மக்கள்
நடுவே இத்தகையோர் வர முடியாத
நிலையை உண்டு பண்ண வேண்டும்.

தனி மனிதராக ஒருவரால் இதைச்செய்ய
முடியாமல் போகலாம். ஆனால் ஒரு
சமூகமாக,  நம்மால் நிச்சயம்
செய்ய முடியும். லஞ்ச ஊழலில்
ஈடுபட்டவர்களை,  மக்கள் சொத்தை
கொள்ளை அடித்தவர்களை –
பொது மேடைகளில் ஏற விடக்கூடாது.
எல்லாரும் சேர்ந்து எழுந்து நின்று
எதிர்ப்புக்குரல்  கொடுக்க வேண்டும்.

இவர்களது கூட்டங்களுக்கு பழைய
செருப்புகளுடன் போக வேண்டும் !
(புதிய செருப்புகளை வீணடிப்பானேன் !)
செய்தியாளர்களுக்கும் இந்த ஆலோசனை
பொருந்தும் !

லஞ்ச ஊழலுக்கு எதிராக குரல்
கொடுப்பவர்கள், செயல்படுபவர்கள்,
யாராக இருந்தாலும் – அவர்களுக்கு
ஆதரவும் ஊக்கமும் கொடுக்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து முயன்றால்
அன்றி – இந்த ராட்சதர்களை
அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..

 1. RAJASEKHAR.P சொல்கிறார்:

  நாகரிகமற்ற
  வார்த்தைகளை
  உபயோகிப்பது தான்
  கோபத்தை வெளிபடுத்தும்
  முறை என்பதை
  ஏற்று கொள்ள இயலாது…………………………………………

 2. Ganpat சொல்கிறார்:

  மிகவும் நன்றி கா.மை.
  எங்கே நாய்,பன்றி,என்றெல்லாம்
  அந்த ஜென்மங்களை விளித்து ,
  இந்த மிருகங்களை
  அவமானப்படுத்தாமல்,
  மென்மையான வார்த்தைகளால்
  அவர்களை வர்ணித்ததிற்கு !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.