களவாணி V/s கூட்டுக்களவாணி
ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் !
சும்மா சொல்லக்கூடாது –
கலைஞரும் அவர் பெற்ற மகளும் சரியான
ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் !
கலைஞர் முன்பே இரண்டு விஷயங்கள்
சொன்னார் –
1) தகத்தகாய கதிரவனாய் விரைவில்
வெளியே வருவார் –
2) தனியே ஒத்தை ஆளாக எப்படி
இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்க
முடியும் ?
ஓட ஓட விரட்டினால் கலைஞர் எவ்வளவு
தான் பொறுப்பார் ? சிக்னல் கொடுத்தார் –
திருப்பம் வந்தது.
அந்த தகத்தகாய கதிரவனின் பிரகாசம்
தாங்காமல் இரண்டு நாட்களாக டெல்லி
சிபிஐ கோர்ட்டே திணறுகிறது !
எவர் எவருக்கோ “அட்டாக்” அடைமொழி
கொடுக்கிறார்களே –
இதுவல்லவோ “ரியல் அட்டாக்”
“நீங்களும் ஒரு நாள் இங்கு
வந்தேயாக வேண்டும் – சாட்சி
சொல்வதற்காகவாவது ! ” –
“திம்பு” போய் திரும்பியவருக்கு திகைப்பு.
திடீரென்று இந்த ஆளுக்கு எப்படி வந்தது இந்த
துணிச்சல் ? எதிர்பாராத இந்த “அட்டாக்கை”
எப்படி எடுத்துக்கொள்வது என்று கொஞ்சம்
திணறுகிறார்.
அனுபவஸ்தருக்கு சொல்லியா தர வேண்டும்.
எதற்கும் இப்போதைக்கு முறைத்துக்
கொள்ள வேண்டாம். இருக்கவே இருக்கிறது
பாஜக.
டிவி மூலம் சொல்லி சமாளித்தாகி
விட்டது – “இந்து தீவிரவாதம் குறித்து தீவிர
விசாரணை துவங்கியதால் -பாஜக இதை
பெரிது பண்ணுகிறது”
(அட்டாக் பண்ணியது தகத்தகாயம். இவர்
பதில் அட்டாக் பண்ணுவது பாஜக வை !)
அடுத்த அட்டாக் “சைலண்ட் சிங்” மீது.
“ஒவ்வொரு காரியத்தையும் சிங்கிடம்
சொல்லி விட்டு தான் செய்தேன்.எங்கே
இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள்
பார்ப்போம் “
அதிர்ச்சியில் உறைந்தவர் வாய்
இன்னும் திறக்கவே இல்லை !
ஒன்றுமே தெரியாத மகா உத்தமர் இவர்.
நல்ல வேளை – காந்திஜி காலத்தில்
இவர் இல்லை. இருந்திருந்தால்
அவருக்கு கிடைத்த மகாத்மா பட்டத்தை
இவர் பிடுங்கிக் கொண்டிருப்பார் !
அதனால் என்ன – இவருக்கும் அந்த
பட்டத்தை கொடுக்கக் கூடாது என்று
சட்டமா என்ன ? கூப்பிட்டுத் தான்
பார்ப்போமே எப்படி இருக்கிறது என்று –
“மஹாத்மா சிங் !”
அடுத்த அட்டாக் முன்னாள் தொலை
தொடர்பு துறை அமைச்சர்கள் –
தயாநிதி,
அருண்ஷோரி மீது.
(பிரமோத் மஹாஜன் தான் போய் விட்டாரே)
“நியாயமாக இவர்களும் என்னுடன்
உள்ளே இருந்திருக்க வேண்டும். ஒன்று
அவர்களையும் உள்ளே போடுங்கள் –
அல்லது என்னை வெளியே விடுங்கள்”
தயாநிதி இன்னும் வாய் திறக்கவில்லை.
ஆனால் மனிதர் மனதுள் நினைத்துக்கொள்வது
வெளியே தெரிகிறது –
“எப்படியும் உள்ளே வரத்தானே போகிறேன்.
இந்த ஆள் ஏன் இப்படி அவசரப்படுத்துகிறார்?”
அருண் ஷோரி – மடியில் கனம் இல்லாததால்
பயம் இல்லை. அறிவுபூர்வமாக யோசிக்கிறார்.
சொல்கிறார் –
“ஆம். அவர் சொல்வது
உண்மை தான். அவர் செய்த ஒவ்வொரு
தவறும் மகாத்மா சிங்கிற்கு ஏற்கெனவே
தெரியும் !”
அடுத்த அட்டாக் முன்னாள் சொலிசிடர்
ஜெனரல் வாஹன்வதி மீது.
“இந்த ஆள் சரியென்று சொன்ன பிறகு
தான் நான் செய்தேன்”
அந்த ஆள் டெல்லியில் தெருத்தெருவாக
தலையைப் பிய்த்துகொண்டு
திரிவதாகக் கேள்வி !
அடுத்த அட்டாக் CAG – குற்றம் கண்டுபிடித்து
அறிக்கை கொடுத்த தலைமை தணிக்கை
அதிகாரி மீது –
“இந்த ஆள் ஒரு படித்த முட்டாள்”
( learned illiterate !)
“வெறும் கணக்குப் பிள்ளை !”
( just an accountant !)
கடைசீ அட்டாக் தான் டாப் –
சிபிஐ நீதிபதியை பார்த்து –
“எவரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு
6 மாதமாக என்னை சட்டவிரோதமாக
உள்ளே வைத்திருக்கிறீர்கள்.
மரியாதையாக உடனே வெளியே விடுங்கள்”
காங்கிரஸ் தலைமை ஏற்கெனவேயே
யோசிக்க ஆரம்பித்திருக்கும்.
அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தாகி
விட்டது. இனியும் இந்த ஆளை உள்ளே
வைத்தால் மீதி இருப்பவரையும்
(யார் அவர் தெரிகிறதா ? )
வம்புக்கு இழுப்பார் –
விளைவு – தகத்தகாய கதிரவனை
வரவேற்க விரைவில் தமிழகம் தயார்
ஆகட்டும் !
ஜகஜாலப்ரதாபன் …………………………………………….