வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது !

 வெடி  ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே
புஸ்வாணமாகிறது !

பட்டாசு வெடிக்கும்போது சில சமயங்களில்
இந்த வெடி மிகப் பிரமாதமாக
பட்டையைக் கிளப்பும் விதத்தில் வெடிக்கப்
போகிறது என்று உற்சாகத்தில்,
எதிர்பார்ப்பில் இருப்போம்.

நெருப்பை வைத்தவுடன் ஆவலோடு
பார்த்திருப்போம் -காத்திருப்போம்.
ஆனால் – அது
புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  என்று சீறி விட்டு
அடங்கி விடும்.

பற்ற வைத்து புஸ்வாணமானதை
பார்த்திருக்கிறோம்.

ஆனால் பற்ற வைக்கும் முன்னரே வெடி
புஸ்வாணமாவதை பார்த்திருக்க முடியாது.

இதோ – மு.க. வின் புஸ்வாணம்  !

தமிழ் நாடு பூராவும் ஏகப்பட்ட திமுக
வட்டங்கள், சதுரங்கள் எல்லாம் கைது
செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டு
இருக்கிறார்கள்.

அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளில் சில –
மோசடி, பொய்க்கையெழுத்து (போர்ஜரி),
பித்தலாட்டம் (பிராடு), கட்டப்பஞ்சாயத்து,
ஆள்கடத்தல்(கிட்னாப்பிங்),
கொலை மிரட்டல், மிரட்டி பத்திரங்களில்
கையெழுத்து வாங்குதல்,
பிறர் சொத்தை ஆக்கிரமித்தல்
(land grabing ) போன்றவை.

பொது மக்கள் இந்த கைதுகளையும்,
யார் யார் “உள்ளே” போகிறார்கள்
என்பதையும் பார்த்துக்கொண்டு தான்
இருக்கிறார்கள். பொது மக்களிடையே
எங்கும், யாரிடமும் எந்தவித எதிர்ப்பும்
இல்லை. மாறாக – அப்பாடா என்று
உள்ளூர மகிழ்ச்சியே  கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தான் போன வாரம் –
பொதுக்குழு கூடும் முன்னரே அவசர
அவசரமாக தலைவர் அறிவித்தார் –   

அதிமுக அரசால்
அபாண்டமாக,
திமுகவினர் பொய் வழக்குகளில்
கைது செய்யப்படுவதையும்,
போலீசின் அராஜகத்தையும் எதிர்த்து,
அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும்,
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
(DSP )அலுவலகம் முன்பு
ஆக்ஸ்டு 1ந்தேதி –மாபெரும் மறியல்
போராட்டம் நடக்கும் என்று.

(இதற்கிடையில் – சட்ட விரோதமாக,
மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்
அனைவரையும் மடக்கி உள்ளே போடுங்கள்.
காலையில் கைது – மாலையில் விடுதலை
என்றில்லாமல், அத்தனை பேரும்
குறைந்த பட்சம் 3 மாதமாவது
வெளியில் வராதபடி  பார்த்துக்கொள்ளுங்கள்
என்று அம்மா உத்திரவு போட்டிருப்பதாக
பரபரப்பான செய்தி (ரகசியமாக !)
வெளியாகி இருக்கிறது.)

ஏற்கெனவெ நொந்துபோன  தொண்டர்கள்
பொதுக்குழுவில் கேட்டிருக்கிறார்கள் –
இந்த சூழ்நிலையில்
மறியல் போராட்டம் தேவையா ?
– இப்போது, புகாரில் சிக்கியவர்கள்,
அடாவடி பண்ணியவர்களை மட்டும்
உள்ளே தள்ளி இருக்கிறார்கள்.
நாளை போராட்டம்,
மறியல் என்று இறங்கி மிச்சம்
மீதி உள்ளவர்களும் உள்ளே போக
வேண்டுமா ?  என்று.

விளைவு  –

பொதுக் குழு முடிந்தவுடன், தலைவர்
அறிவிக்கிறார் –

மாவட்ட காவல் துறை அலுவலகம் முன்பு
மறியல் போர் என்பது இப்போது –

மாவட்டத் ஆட்சித் தலைவர்
(கலெக்டர்) அலுவலகம் முன்பாக,  

சட்டப்படி எங்கு
அனுமதி கொடுக்கிறார்களோ,
அந்த இடத்தில்,

அனுமதிக்கப்பட்டிருக்கும்
வகையில் – ஆர்ப்பாட்டம்
( போராட்டம் அல்ல )நடை பெறும் என்று !

ஆனால் இதை எந்த வித கூச்சமும்
இல்லாமல், தலைவர் அறிவித்த விதம்
இருக்கிறதே  !(கருணை -கலைஞர் செய்திகள்)-

அடடா கவுண்டமணி –
காலில் விழுந்து கும்பிட வேண்டும்.
(அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா…..)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது !

 1. வலையகம் சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.