கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …

கேட்ரினாவும்  ராகுல் காந்தியும் …

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ
பேச்சாளர் (official
spokesperson) ஆத்திரப்படுவதற்கு
பதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து
பேசி இருக்கலாம் !இப்போது அநாவசியமாக
நம்மை யோசிக்க வைத்து விட்டார் !

கேட்ரினா கைப்,  ராகுல் காந்தியைப்
பற்றி சொன்னாரே – அதைப் பற்றி –
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு
செய்தியாளர் கேட்டதற்கு –

“யாரைப் பற்றித் தான் அபிப்பிராயம்
சொல்வது என்று ஒரு வரைமுறை
வேண்டாமா ?
விட்டால் -நாளைக்கு ஜானி லீவர்
(ஒரு கடை மட்ட இந்தி நகைச்சுவை
நடிகர் ) எதாவது சொன்னால் –
அதைப் பற்றி கூட அபிப்பிராயம்
கேட்பீர்கள் போலிருக்கிறதே” என்று
எரிந்து விழுந்திருக்கிறார் !

அவர் அப்படி கடுப்படித்தது தான் –
என்னை யோசிக்க வைத்தது.
இந்த ஆள் ஏன் இப்படி காய்கிறார் ?-
அப்படி கேட்ரினா கைப் என்ன தான்
சொல்லி இருப்பார்
ராகுல் காந்தியைப் பற்றி ?
என்று பழைய மும்பை
செய்திகளை தேடிப்பார்க்க வைத்தது.

தேடிய செய்தியும் கிடைத்தது.
சுவையான் செய்தி தான் !
4-5 நாட்களுக்கு முன்னர்
ஒரு நிருபர் கேட்ரினாவை
கேட்டிருக்கிறார் “நீங்கள்  உங்கள்
தாயைப் பற்றிய விவரங்களை ஏன்
மறைக்கிறீர்கள் ? நீங்கள் உண்மையில்
இந்தியரா இல்லையா ?” என்று.

(கேட்ரினாவின் தந்தை காஷ்மீரைச்
சேர்ந்த ஒரு இந்தியர்.தாய் ஒரு
பிரிட்டிஷ் பெண்மணி.)

சுடச்சுட திரும்பக் கொடுத்திருக்கிறார்
கேட்ரினா. “என் நாட்டைப்பற்றிச்
சொல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?
நான் அரை ஐரோப்பிய + அரை இந்தியப்
பெண் தான்.”

இத்தோடு விட்டிருந்தால் தேவலை தான்.

கூடவே  சொல்லி இருக்கிறார் –
“ஏன் ராகுல் காந்தி இல்லையா –
அரை இத்தாலிய + அரை இந்தியனாக?”
என்று.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு
கடுப்பாக இருந்தாலும் – நமக்கு இது
ஒரு புதிய கோணம் !

நம் மொழியில் நாம் யோசித்ததே
இல்லையே !-  “அரை இந்தியன்”
(half  Indian !) –பொருந்துமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …

 1. ins சொல்கிறார்:

  அரை இந்தியன் k இப்படியென்றால்? if as a full indian?

 2. Ganpat சொல்கிறார்:

  ராஹு ஒரு அரை இந்தியன் மட்டுமல்ல!
  அவர் ஒரு …
  குரை இந்தியன்;
  அறை குறை இந்தியன்;
  தப்பித்தவறி, ஏதேனும் ஒரு
  ஒரு நிறை இந்தியன்,
  பிரதமரானால்,
  ராஹு
  கறை இந்தியன் என நிரூபிக்கப்பட்டு
  சிறை இந்தியனும் ஆவார்

 3. ஸ்ரீதர் சொல்கிறார்:

  //ராஹு ஒரு அரை இந்தியன் மட்டுமல்ல!
  அவர் ஒரு …
  குரை இந்தியன்;
  அறை குறை இந்தியன்;
  தப்பித்தவறி, ஏதேனும் ஒரு
  ஒரு நிறை இந்தியன்,
  பிரதமரானால்,
  ராஹு
  கறை இந்தியன் என நிரூபிக்கப்பட்டு
  சிறை இந்தியனும் ஆவார்//

  ஆகா அகா!!!
  கவிதை!!
  கவிதை!!

  பதிவ விட பின்னூட்டம் அருமை, அதனால் அதற்க்கு மறுமொழி. 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.