இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் !

இரண்டு பேரை தூக்கில்
போட வேண்டும் !

இன்றைய செய்தி இது –

லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த
இரண்டு மேயர்களை நேற்றைய தினம்
தூக்கில் போட்டது சீன அரசு.

கூடவே, சீனப்பிரதமர் ஹூ ஜின்டா,
பதவிப் பொறுப்புகளில்  இருக்கும்
கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு
கடுமையான
எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார்.

சகிக்க முடியாத அளவிற்கு
ஊழல் பெருகி விட்டது.
இனியும் ஊழலை மக்கள் பொறுத்துக்
கொள்ளாத சூழ்நிலை உருவாகி விட்டது.
எனவே ஊழல்வாதிகள் மரியாதையாகத்
திருந்த வேண்டும். இல்லையேல் இது
போன்ற கடுமையான தண்டனைகளை
எதிர்நோக்க வேண்டி இருக்கும் – என்று.

சீனாவில், மரண தண்டனை விதிக்கப்
படக்கூடிய குற்றங்கள் என்று 55 குற்றங்கள்
வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதில்
லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதும் ஒன்று.

இந்தியாவில் இந்த நிலை
உருவாகுமா ? சுதந்திரம் கிடைத்த
இத்தனை ஆண்டுகளில் எத்தனை
ஊழல் மன்னர்களை,
சக்கரவர்த்திகளை – பார்த்து விட்டோம் –
ஒருத்தராவது தண்டிக்கப்பட்டு இருக்கிறாரா ?
20 ஆண்டுகள் ஆனாலும் வழக்கே
முடிவுக்கு வருவதில்லையே ! இதில்
ஏகப்பட்ட அப்பீல் கோர்ட்டுகள் வேறு !

இன்றைய தினம் ஒவ்வொரு சராசரி
இந்திய குடிமகனின் எண்ணத்திலும்
(அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள்)
இருக்கும் ஏக்கம் இது –

உண்மையிலேயே ஊழலற்ற இந்தியாவை
நம்மால் காண முடியுமா ?

– முடியும் என்கிற நம்பிக்கையுடன்
தொடர்ந்து செயல்பட்டால் இது சாத்தியமே –
இது என் கருத்து மட்டுமல்ல –
உங்களில் பலரின் கருத்தும் இதுவாகத்தான்
இருக்கும்.

அண்மையில் சென்னையில் நிகழ்ந்த
இது குறித்த கருத்தரங்கம் ஒன்றில்
பலர் பங்கேற்றனர். அதில் சிலர் –
முன்னாள் விஜிலன்ஸ் கமிஷனர்
என்.விட்டல், பொருளாதார நிபுணர்
எஸ்.குருமூர்த்தி போன்றோர்.

அதில் முன் வைக்கப்பட்ட
கருத்துக்களில் சில –

நீதித் துறை, ( judiciary )

கணக்குத் தணிக்கைத் துறை,
(controller and auditor general )

தேர்தல் ஆணையம், (election
commission )

மத்திய கண்காணிப்பு ஆணையம்
(central vigilance commission )
ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டால்
6 மாதத்தில் நிச்சயம்
ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும்.

ஊழல்  வழக்குகளை 6 மாதங்களுக்குள்
நடத்தி முடிக்க வேண்டும்.
ஊழல் வழக்குகளில் -ஒரு மேல்முறையீடு
(அப்பீல்) மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

கிரிமினல் குற்ற  வழக்குகள் நிலுவையில்
இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட
தடை விதிக்கப்பட வேண்டும்.

அரசுப்  பொறுப்புகளுக்கு –
நேர்மையானவர்களை
வெளிப்படையான முறையில்
தேர்ந்தெடுக்க வேண்டும்.

நேர்மையான அதிகாரிகளை இட மாற்றம்,
தற்காலிக பணி நீக்கம் ஆகியவைகளிலிருந்து
பாதுகாக்க வேண்டும்.

இந்தியாவில் 1992-ல் தடையற்ற
பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட
பிறகு தான் அதிக அளவில் கருப்புப் பணம்
உருவாகியது.

இந்தியாவில் வருமான வரி விகிதம்
மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது.
எனவே -பணத்தை
வெளிநாடுகளில் பதுக்குவது,
வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக அல்ல.

சம்பாதிக்கப்பட்டது ஒழுங்கான
வழியில் அல்ல என்பதாலேயே பணம்
வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

எஸ்.குருமூர்த்தி பேசுகையில்
ஒரு விஷயத்தை வலியுறுத்தினார்.
சட்டங்களை உருவாக்குவது ஒரு பக்கம்
இருந்தாலும் –

அதை விட அதி முக்கியத்துவம் வாய்ந்தது
பொது மக்களிடையே இதுகுறித்த
விழிப்புணர்ச்சியையும், பொதுக்கருத்தையும்
உருவாக்குவது.

விழிப்புணர்வுள்ள
ஒவ்வொரு இந்தியனும் இந்த விஷயத்தை
மக்களிடையே தீவிரமாக எடுத்துச்சொல்ல
வேண்டும் என்றார்.

கீழே எழுதுவது என் கருத்து –

சாதாரணமாக குற்றவியல் சட்டங்களின்படி,
குற்றம் சாட்டப்படும் ஒருவர்
குற்றம் செய்தார் என்பதை எந்தவித
சந்தேகமும் இல்லாத அளவிற்கு நிரூபிப்பது
அரசின் பொறுப்பாக இருக்கிறது.
(to be proved beyond any
reasonable doubt )
சிறிதளவு சந்தேகம் இருந்தாலும்,
சந்தேகத்தின் பலன், குற்றம்
சாட்டப்பட்டவருக்கு போய்ச் சேருகிறது.
(the benefit of doubt
goes in favour of the accused )
இதை வைத்தே -தெரிந்த குற்றவாளிகள்
(known culprits) எல்லாரும்
தப்பி விடுகிறார்கள்.

ஒரே ஒரு விதியின் கீழ் –

தகுதிக்கு மீறி சொத்து சேர்த்ததாக
(acquiring wealth
disproportionate to the known
source of income ) ஒருவர் மீது வழக்கு
போட்டால் மட்டும் –

அந்த சொத்தை தான் எப்படி சம்பாதித்தார்
என்பதை நிரூபிக்கும் பொறுப்பை  சட்டம்
குற்றம் சாட்டப்பட்டவர் மீதே சுமத்துகிறது.

ஒருவர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு
போட்டு நிரூபிப்பதை விட இது சுலபமானது.

அளவிற்கு அதிகமாக சொத்து
வைத்திருக்கும் அரசியல்வாதிகள் அனைவரின்
மீதும் இந்த முறையில் வழக்கைப் பதிந்து –
தாங்கள் குற்றமற்றவர்கள் ( innocent ),
தங்கள் சொத்து நேர்மையான விதத்தில்
சம்பாதிக்கப்பட்டதே என்று நிரூபிக்கும்
பொறுப்பை
அவர்கள் மீதே சுமத்தலாம்.

இத்தகைய வழக்குகள் 6 மாதங்களுக்குள்ளாக
நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று
நிர்பந்திக்கலாம்.

அவர் வருவார் – இவர் வருவார் என்று
காத்திராமல் – இந்த நாடு உருப்பட வேண்டும்
என்று கருதும் ஒவ்வொருவரும் இந்த
கருத்துக்களை பரப்பிட முன் வர வேண்டும்.

ஊழலுக்கு எதிரான,  லஞ்சத்திற்கு எதிரான,
கருப்புப் பணத்திற்கு எதிரான – ஒரு சமுதாயம்
உருவாகிட இது உதவும்.

சிறுகச் சிறுக உருவாக்கப்படும் இந்த சக்தி –
உரிய நேரத்தில் ஊழிப்பேரலை போல் –
விஸ்வரூபம் எடுத்து –
ஒழுக்கக்கேடுகளை ஒழித்துக் கட்டும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், தூக்கிலே போடுங்கள், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் !

 1. Ganpat சொல்கிறார்:

  முதல் படி..

  ரூ.25000 க்கு மேல் எந்த ஒரு கொடுக்கல் வாங்கலும்
  காசோலை/கடன் அட்டை/இணையதள பரிமாற்றம்
  மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
  அதாவது CASH பரிமாற்றத்தை தடை செய்ய வேண்டும்.

  இதை செய்து விட்டு மற்ற விதிகளுக்கு வரலாம்.

  முடிவாக நாடு இவ்வளவு சீர் குலைய காரணம்
  மன்மோகன் சிங், மன்மோகன் சிங், மன்மோகன் சிங்..
  His liberalization policy opened up a Pandora box and his ineffective mgt.
  spoiled everyone.

  He is a total failure and the worst PM we have ever had.He should quit
  immediately.

 2. Bandhu சொல்கிறார்:

  ஊழலை ஒழிக்க மிக முக்கியமானதாக நான் கருதுவது தனி மனித ஒழுக்கம். கொஞ்சம் நம்மை நாமே அலசுவோம்
  திருட்டு டி வி டி யில் படம் பார்ப்பது
  இணையத்தில் இலவசமாக படம் பார்ப்பது
  பைரேடட் மென்பொருள் உபயோகப்படுத்துவது
  விவசாயிகள் என்ற பெயரில் நகை கடன் வாங்குவது, விவசாயியாக இல்லாத போதும்
  காத்திருக்க முடியாமல் / விருப்பமில்லாமல் லஞ்சம் கொடுத்து வேலையே முடித்துக்கொள்வது..
  இவை எல்லாவற்றையும் விட, இதில் எதற்கும் கொஞ்சமும் குற்ற உணர்வில்லாமல் இருப்பது.

  இதில் கொஞ்சமாவது நாம் செய்திருப்போம். (லிஸ்ட் அதிகம் உடனடியாக தோன்றவில்லை). நாம் திருந்தாத பட்ச்சத்தில், மன் மோகன் போன்றவர்கள் தான் நம்மை ஆள்வார்கள்!

 3. Lotus12 சொல்கிறார்:

  Excellent! Your thoughts are exactly what runs in the mind of every responsible citizen of India. As it goes – Arise, Awake and Stop not till the Goal is reached!
  This message should reach more and more people.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.