ப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா?

ப.சி.இந்தியில் பேசாதது ஏன் ?

64 வயது நிரம்பியவர்.
B.Sc.,B.L. M.B.A. படித்தவர்.

தமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து
7 முறைகள் (1984, 1989, 1991, 1996,
1998, 2004 & 2009) பாராளுமன்றத்திற்கு
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1984 முதல் டெல்லியில் நிரந்தர இருப்பிடம்
வைத்திருப்பவர்.  சுப்ரீம் கோர்ட்டில்
மூத்த வழக்கறிஞராக  பதிவு செய்து
பணி புரிபவர்.

முதன் முறையாக 1984-ல் ராஜீவ் காந்தி
அமைச்சரவையில் அமைச்சராக
பொறுப்பு ஏற்றவர். பல வருடங்கள்
மத்திய அமைச்சராக பல்வேறு இலாகாக்களின்
பொறுப்புக்களை  வகித்தவர்.2004 முதல்
முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சராகவும்,
2008 முதல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த
சக்தி மிகுந்த  உள்துறை அமைச்சகத்தின்
அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பவர்.

இத்தனை இருந்தும் ………

அண்மைக் காலங்களில் அடிக்கடி
தொலைக்காட்சிகளில் நீண்ட நேரங்களுக்கு
நேரடிப் பேட்டிகளில்
கலந்து கொண்டு வரும் அவர்
தன்னுடன் கூடவே –
(அவருக்கு போட்டியாக இருக்க முடியாத,)
ஒரு இந்தி தெரிந்த அமைச்சரையும்
உடன் வைத்துக்கொள்வதைப் பார்த்திருக்கலாம்.

சாதாரணமாக, தன்னுடன் கூட
இருப்பவர்களுக்கு கூடுமான வரை
முக்கியத்துவம் கிடைக்காமல் இருக்கும்படி
பார்த்துக்கொள்வது தான் அரசியல்வாதிகளின்
வழக்கம். ஆனால், பத்திரிக்கையாளர்கள்
இந்தியில் கேள்வி கேட்கும்போது, இவர்
தன்னுடன் இருக்கும் இந்தி அமைச்சரை
பதில் சொல்ல பணிக்கிறார்.

நான் இந்தியில் -நன்கு பேச, படிக்க,
ஓரளவு எழுத – தெரிந்தவன்.
ஆனால் நான் இதை
எந்த பள்ளியிலும் கற்கவில்லை.
சொந்த முயற்சியில் நானாகவே,
வட இந்தியாவில் இருந்தபோது
கற்றுக் கொண்டேன்.

என் அனுபவத்தில் கூறுகிறேன்.
கற்றுக் கொள்வது என்று தீர்மானித்தால் –
6 மாத காலத்தில் மற்றவர் இந்தியில்
பேசினால் புரிந்து கொள்ளலாம். முயற்சி
எடுத்துக்கொண்டால்,  ஒரு வருடத்தில்
நாமே  நன்கு பேசலாம்.

7 முறை பாராளுமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு,
1984 முதல் – 27 வருடங்களாக
தொடர்ந்து டெல்லியில் இருக்கும்,
முக்கியமான பொறுப்புகளில்
தொடர்ந்து இருந்து வரும்,
நல்ல கல்வியாளரும்,
மிகவும் புத்திசாலியுமான ஒருவர்
அதுவும் மத்திய அரசில் மிக உயர்ந்த
பதவியில் இருப்பவர் – இன்னும் இந்தி
கற்கவில்லை என்று சொன்னால் –
அது நம்பும்படியாகவா இருக்கிறது ?

ப.சி. அவர்களுக்கு நன்கு இந்தி தெரியும்.
ஆனால் பேசுவதை தவிர்க்கிறார் !
காரணம்  தெரிகிறதா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to ப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா?

 1. ரிஷி சொல்கிறார்:

  காரணம் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா?
  இது ஒரு பெரிய விஷயமாகவும் எனக்குத் தெரியவில்லை.

 2. ramanans சொல்கிறார்:

  என்ன காரணம்? கருணாநிதிக்குப் பயந்து கொண்டா?, அய்யா அந்த மாதிரி சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டாரே?

 3. Ganpat சொல்கிறார்:

  எதிர்கால தமிழக முதல்வர்(என தன்னை கருதிகொண்டிருப்பவர்) ஹிந்தியில் பேசுவாரா என்ன?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Great Ganpat !

   என் மனதில் தோன்றியதும்
   அதுவே தான் !

   என்றாவது ஒரு நாள் –
   தமிழ் நாட்டின் முதலமைச்சர் –
   என்கிற இமேஜ் அவரால்
   பாதுகாக்கப்படுகிறது
   – என்றே தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 4. ரிஷி சொல்கிறார்:

  எனக்கொன்றும் தமிழன் ஒருவன் (முதல்வனோ அல்லது கடைக்குடிமகனோ) ஹிந்தியிலோ அல்லது உலகளாவிய எம்மொழியோ அதில் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. என்ன பேசுகிறார் என்பதே முக்கியம்!!! ஹிந்தி மாயையில் இருந்து பொதுஜன தமிழர்கள் எப்போதோ விலகிவிட்டனர். இவர் இன்னும் கரை சேரலியா..??!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் ரிஷி,

   பொது மக்கள் மாயையிலிருந்து வெளிவந்து விட்டது உண்மை.
   ஆனால் – அரசியல்வாதிகள் இன்னும்
   அதே நினைப்பில் இருக்கிறார்களே !

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 5. saravanan சொல்கிறார்:

  on seeing the title of the topic, i thought the author has found something interest which is not known to the people. unfortunately nothing is there other than preposterous suspect. Chidamparam is one of the less corrupted politicians we are having today. not speaking Hindi is not a crime and the same is widely accepted at least now in the northern india

 6. ரிஷி சொல்கிறார்:

  //Chidamparam is one of the less corrupted politicians we are having today. //
  What is the scale for the corruption?

 7. Annamalai சொல்கிறார்:

  “Less courrupted” There is no politician like that.In some way or other all of them are corrupted.Long back DK.Osa (election comissioner)said that politicians all over the world are same.He himself was supportive to Indrigandhi regime.Rjaji,C.Subramaniam,RV.Venkataraman everyone negotiated with M.Karunanidhi during election times to field a less important or not to contest(DMK) in a particular constituency where they are contesting.Most of them who have clean image are clever in manupulation and coruption,without any clues or proof.(fool proof!)Sometimes it is regarded as statesmenship.”Thirudana parthu thirunthavittal thiruttai olikka mudiyathu”
  The great poet Pattukottaiyar(?)has sung.

 8. senthilkumar சொல்கிறார்:

  This not big issue , i wanted to notice here Mr Pranab mugergi,lalu also do not know hindi.Pls all my friends i am requesting you hindi does not a matter, Some people are making nonsense if u do not know hindi. How many gujarati, sindis are doing business in through out india but they do not know a,b ,c d in hindi.All our guys first learn our mother lang then only can understand other language

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.