கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !

கையாலாகாத அரசு –
எவ்வளவு அடித்தாலும்
தாங்கிக் கொள்ளும் மக்கள் !

இடுகையின் உள்ளே போகும் முன்
நேற்று முன் தினம்
மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு
சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் –

அங்கங்களை பறிகொடுத்து விட்டு,
வலியால் துடி துடித்துக்கொண்டே –
அரசாங்கத்தின் உதவியையும்,
ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து,
பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும்
அப்பாவிகள் –

மனிதாபிமானம் கொண்ட மக்களும்,
கடைக்காரர்களும் பதறித் தவித்து –
காயம் அடைந்தவர்களை ஆட்டோ,
வேன், காய்கறி வண்டி என்று -கிடைத்த
வாகனங்களை எல்லாம் பயன்படுத்தி
மருத்துவமனைக்கு
தூக்கிச் செல்லும் காட்சிகள் –
(குற்றுயிராய்க் கிடந்த ஒருவரை
இன்னொருவர் தன் இரண்டு கைகளிலேயே
தூக்கிக் கொண்டு ஓடும் காட்சியை
ஒரு டிவியில்  நான் கண்டேன் )கையாலாகாத பிரதமரையும்,

இந்த தேசத்திற்கு சற்றும் சம்பந்தமே
இல்லாத- ஆளும்கட்சித் தலைவரையும்,
(கல்யாணம் பண்ணி குடித்தனம்
பண்ணத்தானே அவர் வந்தார் ?
இந்த தேசத்தை கட்டி ஆளவா
கல்யாணம் பண்ணிக் கொண்டார் ?)

எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம்
என்றே சதா சர்வகாலமும் யோசித்துக்
கொண்டிருக்கும்அமைச்சர்களையும் –

–  தேர்ந்தெடுத்த பாவத்திற்கு
இந்த தேசத்தின் அப்பாவி மக்கள்
பெறும் பரிசுகள் தான் இவை.

சொரணை இல்லாத –
கையாலாகாத அரசின் பிரதம மந்திரியின்
முதல்  ரீ-ஆக் ஷன் இது –

சொல்கிறார் – “இத்தகைய சூழ்நிலைகளை
கையாள்வதில் நாம் மிகவும் முன்னேறி
விட்டோம் !காயம் அடைந்த அனைவரும்
ஒரு மணி நேரத்திற்குள்ளாக மருத்துவ
மனைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டார்கள்”

(பாவிகளே -இதில் கூட சாமர்த்தியமா ?)

– புகைப்படங்களை மீண்டும் ஒரு முறை
பாருங்கள். உதவி செய்தது, மருத்துவ
மனைக்கு கொண்டு சென்றது –அரசு யந்திரமா ?

அத்தனையும் அங்கு உடன் இருந்த
பொது மக்களும் -வியாபாரிகளும் தான்.
ஆம்புலன்சுக்காக காத்திருந்தவர்களின்
கதியை முதல் படத்தில் காணலாம்.

பேசுவதில் கெட்டிக்காரரான உள்துறை
அமைச்சர் சொல்கிறார்
கடந்த 31 மாதங்களாக
ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட
நிகழாமல் பார்த்துக் கொண்டோம்”

(போன வருடம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு
மும்பையில் இல்லை – அருகில் உள்ள
புனே நகரத்தில் – எனவே அது கணக்கில்
வராது !கேட்டால் நான் மும்பையைப்பற்றி
தான் பேசிக்கொண்டிருந்தேன் என்பார் )

பட்டத்து இளவரசர் சொல்லி விட்டார் –
“99 சதவீதம் தடுத்து நிறுத்தி விட்டோம்.
100 சதவீதம் தடுத்து நிறுத்துவது என்பது
அமெரிக்காவால் கூட இயலாதது”

15 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில்
தொடர் குண்டு வெடிப்பில் கிட்டத்தட்ட
190 பேரை பலி கொடுத்தோம்.

இதற்கு காரணமானவன் தாவூத் இப்ராஹீம்
என்று கண்டு பிடித்த பிறகும்,

அவன் இன்று பாகிஸ்தானில், கராச்சியில்
கல்யாணம் – காட்சி என்று
சுகபோக வாழ்க்கை நடத்துகிறான் என்று
தெரிந்த பிறகும்,

அவன் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்
கேப்டன் குடும்பத்துடன் சம்பந்தம் பேசி
துபாயில் கோலாகலமாக திருமணம்
நடத்தியது தெரிந்திருந்தும்,

மாதம் இரண்டு தடவை அவன் துபாய்
வந்து போகிறான் என்பது தெரிந்தும்,

அவன் இப்போதும் மும்பையில் –
மறைமுகமாக ஆட்சி நடத்துகிறான்
என்பது  தெரிந்திருந்தும் –

அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது –
தூண்டி விட்டது எல்லாமே பாகிஸ்தான் தான்
என்பது தெரிந்தும்,

நாம் இன்னும் பாகிஸ்தானுக்கு கடிதம்
அனுப்பி கெஞ்சி கேட்டுக்கொண்டிருக்கிறோம் –

“தயவு செய்து தாவூத் இப்ராஹீமை
பிடித்து எங்களிடம்  கொடுங்கள்” என்று !

இந்த தாவூத் இப்ராஹீமை, கராச்சியிலோ
துபாயிலோ சுட்டுத்தள்ள  நமது
கமாண்டோக்களுக்கு
எத்தனை நேரம் பிடிக்கும் ?

ஆனால் – யார் உத்திரவு  போடுவார்கள் ?

11 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய
பாராளுமன்றத்தை தாக்குதலுக்கு உட்படுத்தி,
பல வீரர்கள் உயிரிழக்க காரணமான
அப்சல் குருவுக்கு,
உயர் நீதி மன்றமும்,
பிறகு உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனை
கொடுத்து, அவனது அப்பீலும்
உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு
பல ஆண்டுகள் ஆன பின்னரும் –

அவனை தூக்கில் போட்டால் எவ்வளவு
மைனாரிடி ஓட்டுக்களை இழக்க நேரிடும்
என்று இன்னும் கணக்கு பார்த்துக்
கொண்டிருக்கும் அரசு –

இரண்டு ஆண்டுகளுக்கு முன்
பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக
மும்பையில்  வந்திறங்கி –

விக்டோரியா டெர்மினசிலும்,
தாஜ் ஓட்டலிலும்,இஸ்ரேலிய குடியிருப்பிலும்
நூற்றுக்கணக்கான  மனித உயிர்களை –
குருவியை சுடுவது போல்
யந்திரத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய
தீவிரவாதிகளில்  எஞ்சிய   ஒரே ஒரு
கொலைகாரன்  அஜ்மல் கசாபையும் –

சிறையில் வைத்து இரண்டு வருடங்களில்
34 கோடி ரூபாய் செலவழித்து –அவனுக்கு
பிறந்த நாளும் கொண்டாடி அழகு பார்க்கும்
இந்த  அரசு –

இன்று இத்தாலிய அன்னையையும்,
எதிர்காலத்தில் “பிரேசில்” அண்ணியையும் –

தலைவராக  அமர்த்தி அழகு
பார்க்கத்  துடிக்கும்
பாரம்பரியம் மிக்க கட்சியின் ஆட்சி –

நம் மக்கள் பொறுமைசாலிகள் –
அவர்கள் எத்தனையோ பார்த்து விட்டார்கள் –
இத்தனை இழப்புக்ளையும்
குண்டு வெடிப்புகளையும்
தாங்கிக் கொண்டு
மறு நாள் காலை வழக்கம்போல் அதே
டிரெயினையும்,
பஸ்ஸையும்,
பிடிக்க அவர்கள் ஓடும் அதிசயத்தை
பாருங்கள் என்று வெட்கம் இல்லாமல் கூறும்
அரசியல்வாதிகளையும் –

தேர்ந்தெடுத்த நமக்கு இது தேவை தான்.
தவறை நாமே  செய்து விட்டு
வேறு யாரையோ நொந்து கொள்வதில்
என்ன பயன் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !

 1. Ganpat சொல்கிறார்:

  அருமையான பதிவு நண்பரே!
  நம் எல்லாருடைய உள்ளக்குமுறலை
  சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
  நாடு மோசமான நிலையிலிருந்து,
  மிக மோசமான நிலையை நோக்கி
  வேகமாக செல்கிறது.

  இனியும் நாம் ,

  நீலத்திடம் வீரத்தையும்,
  வெள்ளையிடம் அறிவையும்,
  பச்சையிடம் அடக்கத்தையும்,
  மஞ்சளிடம் நேர்மையையும்,
  கறுப்பிடம் அன்பையும்,
  சிகப்பிடம் வளமையையும்,

  எதிர்பார்த்தால்
  அது நம் முட்டாள்தனம்தான்.

  எனக்கு ஒரு வழி தோன்றுகிறது.
  பேசாமல் நம் ராகு(ல்) காலத்திற்கு
  ஒரு இஸ்ரேலிய பெண்ணாகப்பார்த்து
  மணம் முடிப்பதுதான் அது!
  அட்லீஸ்ட் அவர்களுக்கு பிறக்கும்
  கேது காந்தி யாவது
  போர்க்குணத்துடன் பிறந்து
  கி.பி.2055 இல் பயங்கரவாதத்தை
  ஒடுக்க மாட்டானா என்ன?

 2. Kalyan சொல்கிறார்:

  Sharing this on my facebook profile.

 3. ins சொல்கிறார்:

  அடுத்து பட்டத்து இளவரசி வருகிறாரா ??

 4. Vinothini Palaniswamy சொல்கிறார்:

  kutram solavadhai thavira vaaru yedhaanum vazhigal irundhaal solungal,seiyalaam……..paarkaponaal kutram solvadhai kulatholilaakavae maatrivitom.naatru vellaiyargal indru arasiyalvadhigal,naalai????????.namil pala paaruku NALAKANNU pondra arasiyalvadhigal therivadhae illai.want a scarlet pimpernal for india too,want an indian revolution.give an idea,join hands….lets work together.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் விநோதினி,

   அவசரப்படுகிறீர்கள்.
   குறை கூறுவது என் தொழில் அல்ல –
   நோக்கமும் அதுவல்ல.

   மாற வேண்டும் –
   மாற்றம் வர வேண்டும்.
   அது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

   இதில் என்னாலான சிறிய பணி –
   என் கருத்துக்களை வெளிப்படையாகவும்,
   ஆதாரபூர்வமாகவும்,
   தகுந்த காரணங்களுடன் கூறி படிப்பவர்களை
   அது குறித்து சிந்திக்கத் தூண்டுவது.

   மாற்றம் ஏற்பட இது ஒரு சிறு
   தூண்டுதலாகக் கூட இருக்கலாம்.

   என் முகப்பை படித்துப் பாருங்கள் –
   “(about)”

   “அச்சமின்றி எழுத வேண்டும்.
   ஆபாசமின்றி எழுத வேண்டும்.

   – இன்றில்லா விட்டாலும்
   நாளையாவது மாறும் அல்லவா ?

   வருகைக்கு நன்றி,

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 5. Vinothini Palaniswamy சொல்கிறார்:

  manikavum……ungalai pallisolvadhu yen nokam alla,vaarthaikallil mattum unarvai kaativitu seyalgalil maranthupogum sillarai sutri mattum irupadhinaal vandha kobam.irupinum adhu yen thavaru,adharkaga yenai manikum padi vaandukiraan.ungal anupavamum arivum samuga nalanukaga pooradum unarvum yenaipondravarkaluku valikaatiyai amaiyum yena nambukiraan.what i wish is we want people like u to be ahead of us(as leaders) rather being beside us.thoondukolai mattum allamal nalanainoki sellum padaikaana thalapathyai iruka vaandum yenpadhu yen aasai.vidhiyasam yenpadhu siriyadhuthaan aanal andha pondhinai adaika vaandukiraan.sola ninaithathai sariyaga sonnana yendru theriyadhu.thavaru irundhaal thiruthikola vaaipu alipeergal yena nambukiraan.manamaarandha nandrikaludan,vinothini palaniswamy.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.