குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன ….

குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ?
கழுதைகள்  கேட்கின்றன ….

இந்த தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு
வேறு எதாவது தோன்றலாம் …
நியாயம் தான் …
அந்த தலைப்பில் ஒரு கட்டுரை அவசியம்
தேவைப்படுகிறது.
ஆனால்  அதை தனியே பிறகு பார்க்கலாமே !

இப்போதைக்கு இது ஒரு காமெடி சீன் –
இந்த புகைப்படத்தை பாருங்கள் –

தேனி மாவட்டம் தேவாரத்தில் போலீசாரால்
“கைது” செய்யப்பட்டு காவல் நிலைய
வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும்
கழுதைகளை தான் மேலே பார்க்கிறீர்கள் !

இந்த கழுதைகள் அப்படி
என்ன குற்றம் செய்தன ?

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு,
மலைப்பாதை வழியாக அரிசி
கடத்தப்படுவதாக போலீசுக்கு “துப்பு”
கிடைத்திருக்கிறது. நடுப்பாதையில்
செக் போஸ்ட் போட்டு மடக்கிய போலீசாரிடம்
மாட்டியவை இந்தக் கழுதைகள் தான்.

சரி “பொதி”யில் இருப்பவை அரிசி மூட்டைகள்
தான் என்று நினைத்த போலீசார் ஆவலுடன்
பிரித்துப் பார்த்தால் அவை மணல் பொதிகள் !

இருந்தாலும் தோல்வியை ஜீரணிக்கும் மனம்
இல்லாத போலீசார் கேரளாவிற்கு
சட்டவிரோதமாக “மணல்” கடத்தியதாக
இந்த கழுதைகளை “கைது” செய்து
காவல்நிலைய வளாகத்தில் அடைத்து
வைத்திருக்கிறார்கள் !

கழுதைகளைத் தேடி சொந்தக்காரர்கள்
வருவார்கள் – அவர்களை மாட்டலாம் என்ற
உத்தேசத்தில்.

ஆனால் கழுதைக்காரர்கள்
என்ன இளிச்சவாயர்களா ?
எவ்வளவு நேரம் போலீஸ்காரர்களால்
கழுதை மேய்க்க முடியும். நேரம் போனால்
தானாகவே விட்டு விடுவார்கள்  என்று
கழுதைகளை சொந்தம் கொண்டாடாமல்
ஒதுங்கி நின்று காத்துக்கொண்டு
இருக்கிறார்கள்.

விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம்
கேட்பது போல் ஒரு கேள்வி –

இதில் பாவப்பட்டவர்கள்  யார் –

பிடிபட்ட கழுதைகளா ?
கழுதைகளின் சொந்தக்காரரா ?
– இல்லை
கழுதைகளைப் பிடித்த போலீஸ்காரர்களா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரக்கம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன ….

  1. Ganpat சொல்கிறார்:

    முதலில் என் கண்ணுக்கு தென்பட்டது இந்த புகைப்படம்தான்.
    புதிய மத்திய மந்திரிசபையையும் இதையும் இணைத்து சிறிது நேரம் குழம்பியேபோய்விட்டேன்.
    அருமையான பதிவு.ஆனால் பிரச்சினை ஒன்றும் பெரிதில்லை.
    இலவச ஆடு மாடு வழங்கும் திட்டத்துடன் ,கழுதையும் சேர்த்துக்கொண்டால் போயிற்று.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.