சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !

சொல்வதும் –
சொல்லாமல் தெரிவதும் !

இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும்
தலைப்புகளைப் பார்த்தவுடனேயே  –
நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே
உருவாவதை  தவிர்க்க முடியவில்லை !

உதாரணத்திற்கு –  இன்றைக்கு வந்துள்ள
சில செய்தி தலைப்புகளையும்
உடனடியாக மனதில்  
தோன்றுவதையும்  பாருங்களேன்  –

கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு
அதிகாரம் இல்லை : யுவராஜா

(ரொம்ப சரி – ஆனால் இதைச்சொல்ல
உங்களுக்கு அதிகாரம் உண்டா ? )

தி.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்:
ஏராளமானோர் கைது !

( தி.க. ஆர்ப்பாட்டம் என்கிறீர்கள்.
பிறகு ஏராளமானோர்  என்று வேறு
சொல்கிறீர்களே !)

(பின்னர் புகைப்படத்தை பார்த்தேன்
13 முழு டிக்கெட்டும்,
3 அரை டிக்கெட்டும்
தான் அந்த ஏராளமானோர் ! )

மாநில, தேசிய அரசியல் குறித்து
கருணாநிதி, பிரணாப் பேசிக்
கொண்டனர்: தங்கபாலு

(ஏன் – ஹிலாரி க்ளிண்டன்,
ஏஞ்சலினா ஜூலி
பற்றி எல்லாம் பேசவில்லையா ?
இன்னும் தெளிவாக “கனிமொழி”
பற்றியோ, “திகார் சிறை”
பற்றியோ  பேசவில்லை
என்று தங்கபாலு
சொல்லி இருக்கலாமே !)

வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்:
ஸ்டாலின் திருச்சி, ஜூலை 8:

(சட்டப்படி கூட சில காரியங்களை
செய்யலாம் என்பது இப்போது
எங்கள்  நினைவிற்கு வந்து விட்டது !)

தயாநிதி மாறனுக்கு மாற்றாக வேறு
யாருக்கும் மந்திரி பதவி
கேட்க மாட்டோம்: டி.ஆர்.பாலு

(ஏனென்றால் அவருக்கு இணையாக
இன்னும் ஒருவரை எங்களால்
கண்டு பிடிக்க முடியாது !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், காமெடி, குடும்பம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.